search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கங்குலி"

    ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பந்து வீச்சை இந்திய வீரர்கள் சமாளிக்க முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார். #AUSvIND #SouravGanguly #NathanLyon
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    3-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறி வருகிறார்கள். 2 டெஸ்டிலும் சேர்த்து நாதன் லயன் 16 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

    இந்த நிலையில் நாதன் லயன் பந்து வீச்சை இந்திய வீரர்கள் சமாளிக்க முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நாதன் லயன் பந்து வீச்சு தொடர்பாக கேப்டன் விராட்கோலிக்கு தகவல் அனுப்ப நினைத்து இருந்தேன். ஆனால் இன்னும் அனுப்பவில்லை. அவரிடம் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் வெளிநாட்டு மண்ணில் சுழற்பந்து வீச்சுக்கு அதிக விக்கெட்டுகளை பறிகொடுக்கக்கூடாது.



    லயன் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் ஸ்டெம்புக்கு வெளியே சென்ற பந்துகளை தடுத்து ஆடினார்கள். அதற்கு பதிலாக அவரது பந்துவீச்சை தாக்குதல் தொடுத்து விளையாட வேண்டும். அப்போழுது தான் 300-ல் இருந்து 350 ரன் வரை எடுக்க முடியும்.

    லயன் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஷேன் வார்னே, முரளீதரன், சுவான் ஆகியோர் போல் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #AUSvIND #SouravGanguly #NathanLyon
    வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளத்திலேயே நாதன் லயன் 8 விக்கெட் வீழ்த்தியதால், டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்புள்ளதாக வாகன் கணித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தில் நாதன் லயன் சிறப்பாக பந்து வீசி 8 விக்கெட்டுக்கள் சாய்த்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். அடிலெய்டு டெஸ்டில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்திய நாதன் லயன், வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான பெர்த் ஆடுகளத்திலும் 8 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளார்.

    மெல்போர்ன் மற்றும் சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து கேப்டனும், இத்தொடரின் தொலைக்காட்சி வர்ணனையாளரும் ஆன மைக்கேல் வாகன் கணித்துள்ளார்.



    அதேவேளையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரங் கங்குலி, இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. ‘‘மீடியாக்களில் குறிப்பாக, ஆஸ்திரேலியா மீடியாக்களில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா தோற்றுவிட்டதாக பெரிய அளவில் பேசப்படுகிறது. இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. இரண்டையும் இந்தியாவால் வெல்ல முடியும்’’ என்றார்.
    விவிஎஸ் லட்சுமண் 2001-ம் ஆண்டு கொல்கத்தா டெஸ்டில் சிறப்பாக ஆடி இருக்காவிட்டால் எனது கேப்டன் பதவி பறிபோய் இருக்கும் என கங்குலி கூறியுள்ளார். #Ganguly #VVSLaxman
    கொல்கத்தா:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் 2001-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் மோதிய டெஸ்ட் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.

    இந்த டெஸ்டில் ‘பாலோ’ ஆன் ஆகி கங்குலி தலைமையிலான இந்திய அணி 171 ரன் விததியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு வி.வி.எஸ். லட்சுமண் முக்கிய பங்கு வகித்தார். அவர் 631 நிமிடங்கள் களத்தில் நின்று 452 பந்துகளை சந்தித்து 281 ரன் (44 பவுண்டரி) குவித்தார்.



    ராகுல் டிராவிட் 446 நிமிடம் களத்தில் நின்று 353 பற்துகளை சந்தித்து 180 ரன் (20 பவுண்டரி) எடுத்தார். இருவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 376 ரன் எடுத்து அணியை தோல்வியில் இருந்து தவிர்த்து வெற்றி பெற வைத்தனர்.

    281 ரன் குவித்த இந்த டெஸ்ட் குறித்து லட்சுமண் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தகம் வெளியிட்டு விழா கொல்கத்தாவில் நடந்தது. இதில் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலி, ஜாகீர்கான் பங்கேற்றனர்.

    வி.வி.எஸ்.லட்சுமண் 2001-ம் ஆண்டு கொல்கத்தா டெஸ்டில் சிறப்பாக ஆடி இருக்காவிட்டால் நாங்கள் தொடரை இழந்து இருப்போம்.



    எனது கேப்டன் பதவியும் பறிபோய் இருக்கும். லட்சுமண் 281 ரன் குவித்தது எனது கேப்டன் பதவியை காப்பாற்றினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    2001-ம் ஆண்டு நடந்த இந்த தொடரில் இந்திய அணி மும்பையில் நடந்த முதல் டெஸ்டில் தோற்றது. கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்டிலும், சென்னையில் நடந்த 3-வது டெஸ்டிலும் வென்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. #Ganguly #VVSLaxman
    மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் மிதாலி ராஜ் நீக்கப்பட்டது போல, தன்னையும் நீக்கியதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். #SouravGanguly #MithaliRaj

    கடந்த சில வாரங்களாக மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில், இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    இதில் பங்குபெற்ற இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து பரிதாபமாக வெளியேறியது. இந்தப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான மிதாலி ராஜை அணியில் சேர்க்காதது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மிதாலியின் மேனேஜரும், "இந்திய கேப்டன் பிரீத் கவூரை கேப்டன் பதவிக்கு தகுதியற்றவர்" என்று விமர்சித்தார். இந்நிலையில், இந்திய ஆண்கள் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இது குறித்த தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

    "உலகின் தலைசிறந்தவர்கள் சில நேரங்களில் இதனை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் " என்று கூறினார். மேலும் "நான் கேப்டனாக இருந்து பின்னர் அணியில் வீரராக தொடர்ந்த போதும் இது இருந்தது. நான் அணியிலிருந்து நீக்கப்பட்டேன். இப்போது மிதாலியை பார்க்கும்போது, அதேதான் தோன்றுகிறது. வெல்கம் டு த குரூப் மிதாலி" என்று கூறியுள்ளார்.



    ‘மிதாலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள். வாய்ப்பு தானாக வரும். அதனால் மிதாலியின் நீக்கத்துக்கு நான் வருந்தவில்லை. ஆனால் இந்தியா இவ்வளவு தூரம் உலகக் கோப்பையில் தோற்காமல் வந்து, கோப்பையை நூலிழையில் தோற்றதுக்கு வருந்துகிறேன்" என்றும் கங்குலி கூறியுள்ளார்.

    கிரேக் சேப்பல் காலத்தில் ஒருநாள் போட்டியின் சிறந்த வீரராக விளங்கிய கங்குலி 15 மாதங்கள் அணியில் இடம்பெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. #SouravGanguly #MithaliRaj
    இலங்கைக்கு எதிராக சதம் அடித்த ஜோ ரூட்டை கங்குலி வெகுவாக பாராட்டினார். இதனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பார்வையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. #IPL2019
    இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக டி20 போட்டியில் அதிக அளவில் விளையாடியது கிடையாது.

    இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் ஜோ ரூட் 2018 ஐபிஎல் சீசனில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் ஜோ ரூட் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தார்.

    தற்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். பல்லேகெலேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஜோ ரூட்டின் ஆட்டத்தை கங்குலி டுவிட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டினார்.

    அப்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஜோ ரூட் மற்றும் ஜிண்டால் ஆகியோருக்கு ‘டேக்’ செய்திருந்தார். ஜிண்டால் சவுத்  வெஸ்ட் ஸ்போர்ட்ஸ்-தான் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் 50 சதவீதம் பங்குகளை வாங்கியுள்ளது. மேலும், கங்குலி அவரின் ஆலோசகராக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஜோ ரூட் அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெறும் ஐபிஎல் தொடரின்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. 2018 ஏலத்தில் ஜோ ரூட்டின் அடிப்படை விலை 1.5 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
    பல ஆண்டுகள் கடின உழைப்பு, சிறந்த நிர்வாகம் போன்றவற்றால் கட்டமைக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகம் தற்போது அழிவுப்பாதையை நோக்கி செல்வதாக கங்குலி எச்சரிக்கை விடுத்துள்ளார். #BCCI #Ganguly
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) நிர்வாகத்தை வினோத்ராய் தலைமையிலான குழு நடத்தி வருகிறது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்த குழு கடந்த ஜனவரி மாதம் முதல் நிர்வாகம் செய்து வருகிறது.

    இந்த குழு இந்திய கிரிக்கெட்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

    இதற்கிடையே கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சி.,இ.ஓ.) ராகுல் ஜோரி மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. ராகுல் ஜோரியும் விடுப்பில் சென்று விட்டார்.

    இந்த நிலையில் பி.சி.சி.ஐ.யின் தற்காலிக நிர்வாகிகள் சி.கே.கண்ணா, அமிதாப் சவுத்ரி உள்ளிட்டோருக்கு முன்னாள் கேப்டனும், பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவருமான கங்குலி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் நிர்வாக குழுவால் பி.சி.சி.ஐ.யின் பெயர் சரிந்து வருகிறது. ராகுல்ஜோரி மீதான பாலியல் குற்றச்சாட்டால் பி.சி.சி.ஐ.யின் நன்மதிப்பு மீது கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை நிர்வாகக்குழு கையாண்ட விதம் வேதனை அளிக்கிறது.

    நிர்வாக குழுவில் முதலில் 4 பேர் இருந்தனர். தற்போது 2 பேர் மட்டுமே உள்ளனர். அவர்கள் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தொழில்நுட்ப குழுவை (கங்குலி, தெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமணன்) மீறி நிர்வாகக்குழு எடுக்கிறது.



    தங்களது விருப்பத்துக்கு ஏற்ப விதிகளை நிர்வாகக்குழு மாற்றி வருகிறது. பல்வேறு கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட முடிவுகளை மாற்றி உள்ளனர்.

    பயிற்சியாளர் நியமனம் போன்ற நிர்வாக முடிவுகளில் தன்னிச்சையாக செயல்படுகிறது. பல ஆண்டுகள் கடின உழைப்பு, சிறந்த நிர்வாகம் போன்றவற்றால் கட்டமைக்கப்பட்ட பி.சி.சி.ஐ. நிர்வாகம் தற்போது அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது. உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் எங்கே செல்கிறது என்ற கவலை எழுந்துள்ளது. நீண்ட நாட்கள் விளையாடியவன் என்ற வகையில் இந்திய கிரிக்கெட்டின் நிலை முக்கியமாகும். பாரம்பரிய மிக்க இந்திய கிரிக்கெட்டை மீட்டெடுக்க வேண்டும்.

    இவ்வாறு கங்குலி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். #BCCI #Ganguly
    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஜோடி அதிக ரன்கள் குவித்ததில் சச்சின் தெண்டுல்கர் - சேவாக் ஜோடியை முந்தியது தவான் - ரோகித் சர்மா ஜோடி.
    இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க ஜோடி என்றாலே நமக்கு ஞாபகம் வருவது சச்சின் தெண்டுல்கர் - சவுரவ் கங்குலிதான். இந்த ஜோடி நீண்ட காலமாக தொடக்கத்தில் களம் இறங்கியது. இருவரும் தொடக்க ஜோடியாக களம் இறங்கி 6609 ரன்கள் குவித்துள்ளனர். இதுதான் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். அதன்பின் சச்சின் தெண்டுல்கர் - விரேந்தர் சேவாக் ஜோடி 3916 ரன்கள் குவித்து 2-வது இடத்தில் இருந்தது.



    சமீப காலமாக ரோகித் சர்மா - தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கி விளையாடி வருகிறார்கள். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.



    ரோகித் சர்மா - தவான் ஜோடி இந்த போட்டிக்கு முன் 3916 ரன்கள் அடித்திருந்தது. முதல் ஓவரை ரோச் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார். இதன்மூலம் தவான் - ரோகித் சர்மா ஜோடி 3920 ரன்களை எட்டு சச்சின் - சேவாக் ஜோடி அடித்த ரன்களை முந்தி 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    கவுதம் காம்பீர் - சேவாக் ஜோடி 1870 ரன்களுடன் 4-வது இடத்திலும், கவாஸ்கர் ஸ்ரீகாந்த் ஜோடி1680 ரன்களுடன் 5-வது இடத்திலும் உள்ளது.
    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலியை வாழ்த்த வார்த்தைகள் இல்லை என்று கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார். #ViratKohli #INDvWI
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அசத்தி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டு ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

    நேற்றைய விசாகப்பட்டினம் போட்டியில் 157 ரன்கள் குவித்தார். 81 ரன்கள் எடுத்திருந்தபோது 205 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை கடந்து அதிகவேகமாக அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    சாதனைப் படைத்துள்ள விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத் தலைவரும் ஆன சவுரவ் கங்குலி, விராட் கோலி ஆட்டத்தை பற்றிக்கூற வார்த்தைகள் இல்லை என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

    விராட் கோலி குறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘விராட் கோலியின் ஆட்டத்தை வாழ்த்த எனக்கு வார்த்தைகளே இல்லை. விசாகப்பட்டினம் ஆடுகளம் வித்தியாசமானதாக இருந்தது. சூழ்நிலையிலும் மாறுபட்டிருந்தது. ஆனால், விராட் கோலி ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்விட்டார். விராட் கோலியின் சதம் மிகவும் சிறப்பான ஆட்டம்’’ என்றார்.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் அணிக்கு பாதிப்பு இல்லை என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். #AsiaCup2108 #ViratKohli
    கொல்கத்தா:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், ஆங்காங் அணிகள் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி இன்று ஆங்காங்கையும், நாளை பாகிஸ்தானையும் சந்திக்கிறது. கேப்டன் விராட் கோலிக்கு இந்தப் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

    கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒளிபரப்பு நிறுவனம் இது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று புகார் அளித்தது.

    அணி தேர்வு தொடர்பான வி‌ஷயத்தில் யாரும் தலையிட முடியாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பதிலடி கொடுத்து இருந்தது.

    ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோலி இல்லாததால் பாதகமாக அமையலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் விராட் கோலி இல்லாததால் அணிக்கு பாதிப்பு இல்லை என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கங்குலி தெரிவித்துள்ளார்.


    விராட் கோலி அணியில் இல்லாதது பாதிப்பு இல்லை. அவர் இல்லாவிட்டாலும் இந்திய அணி சிறப்பானது தான். இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதற்கிடையே ஆசிய கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரரும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். #AsiaCup2108 #ViratKohli #Ganguly
    இந்திய கிரிக்கெட் அணி முன்னேற்றம் காண வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் விராட்கோலிக்கு கங்குலி அறிவுரை கூறி உள்ளார். #SouravGanguly #ViratKohli
    கொல்கத்தா:

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கேப்டன் விராட்கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. இருப்பினும் முன்னாள் வீரர்கள் பலரும் விராட்கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, கேப்டன் விராட்கோலிக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். இது தொடர்பாக கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியில் உள்ள திறமையான வீரர்களை அங்கீகரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். எந்தவொரு அணியும் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் இதனை செய்ய வேண்டியது அவசியமானதாகும். புஜாரா, ரஹானே, லோகேஷ் ராகுல் ஆகியோர் இங்கிலாந்து போட்டி தொடரில் வெளிப்படுத்திய பேட்டிங் திறன் 10 மடங்கு சிறந்ததாக இருந்தது.

    இந்திய அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக ரிஷாப் பான்ட் ஆட்டத்தை குறிப்பிடலாம். திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து சிறந்த திறனை வெளிக்கொணர வேண்டியது கேப்டனின் முக்கிய பொறுப்பாகும். கேப்டன் வீரர்களின் தோளில் கை போட்டு அரவணைத்து பேசினால் அணி தானாகவே முன்னேற்றம் காணும்’ என்று தெரிவித்தார்.  #SouravGanguly #ViratKohli
    ரவி சாஸ்திரியுடன் பேசிய பிறகே பேட்டிங் ஆலோசகரில் இருந்து ராகுல் டிராவிட் விலகினார் என்று கங்குலி அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு உள்ளார். #RaviShastri #Ganguly #Dravid
    மும்பை:

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்ததால் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

    ஷேவாக், முன்னாள் கேப்டன் கங்குலி ஆகியோர் அவரை நேரிடையாகவே விமர்சனம் செய்தனர்.

    இந்திய அணியின் பேட்டிங் சீர்குலைவுக்கு ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய்பாங்கர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்று கங்குலி சாடி இருந்தார்.

    இந்த நிலையில் ரவி சாஸ்திரியுடன் பேசிய பிறகே பேட்டிங் ஆலோசகரில் இருந்து ராகுல் டிராவிட் விலகினார் என்று கங்குலி அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு உள்ளார்.

    கிரிக்கெட் ஆலோசனை குழுவில் இடம் பெற்று இருந்த தெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் ரவிசாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்தனர். பின்னர் வெளிநாட்டு பயணங்களில் டிராவிட்டை பேட்டிங் ஆலோசகராகவும், ஜாகீர்கானை பந்து வீச்சு ஆலோசகர்களாகவும் நியமிக்க பரிந்துரை செய்தனர். ஆனால் கிரிக்கெட் வாரியத்தை நிர்வகித்து வரும் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட குழுவானது ரவி சாஸ்திரி நியமனத்தை மட்டுமே உறுதி செய்தது.

    இது தொடர்பாக கங்குலி தற்போது கூறியதாவது:-

    பேட்டிங் ஆலோசகராக இருக்குமாறு ராகுல் டிராவிட்டை கேட்டுக் கொண்டோம். அவரும் அதை ஒப்புக் கொண்டார். ஆனால் ரவிசாஸ்திரியிடம் பேசிய பிறகு அவர் பேட்டிங் ஆலோசகரில் இருந்து விலகினார். என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை.



    பி.சி.சி.ஐ.யின் நிர்வாக குழுவும் பயிற்சியாளர் தேர்வில் குழப்பத்தை விளைவித்தது. இதனால் நாங்கள் சோர்வடைந்தோம். அதன் பின்னர் நாங்கள் அதில் இருந்து வெளியே வந்துவிட்டோம்.

    பேட்டிங் ஆலோசகராக டிராவிட் வராததற்கு நான் காரணம் சொல்வது கடினம்.

    இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.  #RaviShastri #Ganguly #Dravid
    இந்தியாவின் தலைசிறந்த டெஸ்ட் அணி வீரரான விவிஎஸ் லட்சுமணன், கடந்த 25 ஆண்டு கால இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணியை வெளியிட்டுள்ளார்.
    இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் விவிஎஸ் லட்சுமண். இவர் கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை இந்திய டெஸ்ட் அணியில் பல்வேறு காலங்களில் விளையாடிய வீரர்களைத் தேர்வு செய்து 11 பேர் கொண்ட டெஸ்ட் அணியை வடிவமைத்துள்ளார்.

    டெஸ்ட் போட்டிகளைப் பொருத்தவரை இந்திய கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே அதாவது, கங்குலி தலைமையில் இருந்து இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணி 15 டெஸ்ட் போட்டிகளுக்கு மேலாகத் தோல்வியை சந்திக்காமல் பயணித்து வந்த நிலையில், அவர்களின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது கங்குலி தலைமையிலான இந்திய அணிதான்.

    அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்துக்கும் இந்திய அணி முன்னேறியது. கங்குலி தலைமைக்குப்பின் வந்த தோனி தலைமையிலும், தற்போது விராட் கோலி தலைமையிலும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகவே இந்திய அணி செயல்பட்டு வருகிறது.

    இந்த 25 ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கங்குலி, விராட் கோலி, தோனி என எண்ணற்ற பேட்ஸ்மேன்கள், ஸ்ரீநாத், ஜாகீர்கான், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், அஸ்வின் போன்ற பந்து வீச்சாளர்கள் வந்து சென்றுள்ளனர். விவிஎஸ் லட்சுமண் இவர்களில் இருந்து சிறந்த 11 பேர் கொண்ட டெஸ்ட் அணியைத் தேர்வு செய்துள்ளார்.



    இதில் வீரேந்திர சேவாக், முரளி விஜய் ஆகியோரைச் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாகத் தேர்வு செய்துள்ளார். 3-வது வீரராக ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் டிராவிட் டெஸ்ட் போட்டியில் மிகச்சிறந்த வீரர் என்று அழைக்கப்படக்கூடியவர். 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டிராவிட், 13, ஆயிரத்து 288 ரன்கள் சேர்த்துள்ளார். இவரின் சராசரி 52.31 ரன்களாகும்.

    4-வது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் வழக்கம்போல் களமிறங்க லட்சுமண் ஆசைப்பட்டுள்ளார். கிரிக்கெட்டில் லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் 51 சதங்களுடன் 15921 ரன்கள் குவித்தவர். நடுவரிசையில் கங்குலி, விராட் கோலி, விக்கெட் கீப்பராக மகேந்திரசிங் தோனி ஆகிய சிறந்த வீரர்களை தேர்வுசெய்துள்ளார்.



    பந்து வீச்சாளர்களில் தற்போதுள்ள இந்திய அணியில் இருந்து புவனேஷ்வர் குமாரை மட்டுமே தேர்வு செய்துள்ளார். அணியில் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சில் ஸ்ரீநாத், ஜாகீர்கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கங்குலியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.

    அணி வீரர்கள் விவரம்:-

    வீரேந்திர சேவாக், முரளி விஜய், ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி (கேப்டன்), எம்எஸ் டோனி, விராட் கோலி, அனில் கும்ப்ளே, புவனேஸ்வர் குமார், ஸ்ரீநாத், ஜாகீர்கான்.
    ×