search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுமிதா"

    இணையத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும். அதன்படி நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, சுருதி ஆகியோர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    மதுமிதா
    மதுமிதா

    இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக மதுமிதா வெளியேற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வெகுளித்தனமான பேச்சால் ரசிகர்களை கவர்ந்து வந்த மதுமிதா, திடீரென வெளியேற்றப்பட்டுள்ளது பிக்பாஸ் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் மிகவும் பிரபலமான மதுமிதா, அவரது உறவினர் மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். #MadhuMitha
    பிரபல காமெடி நடிகை மதுமிதா. இவர் உதயநிதி நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் ஜாங்கிரி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் பொங்கலை முன்னிட்டு அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்தில் நடித்திருந்தார். 



    மதுமிதாவிற்கும் அவரது உறவினர் மோசஸ் ஜோயல் என்பவருக்கும் வருகிற 15 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. மோசஸ் ஜோயல் தமிழ் திரையுலகில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.
    மார்டின் இயக்கத்தில் மா.கா.பா.ஆனந்த் - சூசா குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் `மாணிக்' படத்தின் விமர்சனம். #MaaniikReview #Maaniik #MaKaPaAnand #SuzaKumar
    மா.கா.பா. ஆனந்த் பிறக்கும்போதே சர்ச்சைக்குரிய குழந்தையாக பிறக்கிறார். பிறந்த உடனே அவரை கொன்றுவிடும்படி சாமியார் ஒருவர் கூறுகிறார். ஆனால் தனது குழந்தை மீதான பாசத்தால் மா.கா.பா.வின் அம்மா உயிர் தப்ப வைக்கிறார்.

    இதையடுத்து பாட்டியின் அரவணைப்பில் வளர்க்கிறார் மா.கா.பா.ஆனந்த். பாட்டி இறந்த பிறகு, தனது நண்பன் வஸ்தவனுடன் சென்னை வரும் மா.கா.பா. தடைவிதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல். போட்டியில் திரும்பவும் விளையாட வைத்து கோப்பையை வெல்ல வைக்க வேண்டும் என்ற சபதம் கொள்கிறார்.



    இந்த நிலையில், மா.கா.பா. சாமியார் ஒருவரை சந்திக்க, அவர் மா.கா.பா.வுக்கு தெரியாமல் அவருக்குள் இருக்கும் சக்தி பற்றி சொல்கிறார். அதை பரிசோதித்து பார்க்கும் மா.கா.பா., தாதாவான அருள்தாசிடம் மாட்டிக் கொள்கிறார். அருள்தாஸ், தான் சொல்வதை செய்யாவிட்டால் மா.கா.பா.வின் காதலி, குடும்பத்தை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்.

    கடைசியில் தனது சக்தியை வைத்து மா.கா.பா. பணம் சம்பாதித்தாரா? தனது கனவை நிறைவேற்றினாரா? தனது காதலியை காப்பாற்றினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    மா.கா.பா. ஆனந்த் வழக்கமான தனது துறுதுறு நடிப்பால் கவர்கிறார். சூசா குமார் படம் முழுக்க அழகு தேவதையாக வருகிறார். நடிப்பிலும் தேறியிருக்கிறார். மனோபாலா, மதுமிதா ஆகியோரும் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வரும் யோகி பாபு சிரிக்க வைக்கிறார். வில்லன் அருள்தாஸ் அறிமுக காட்சியும் அவர் செய்யும் அலப்பறைகளும் காமெடி கலந்த பயத்தை உண்டு பண்ணுகிறது.

    முழு காமெடி படத்தை எடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் மார்டின் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரு சில இடங்களில் மட்டுமே காமெடி எடுபடுகிறது. மற்றபடி வழக்கமான கதையாகவே காட்சிகள் நகர்கிறது.



    சி.தரண்குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். எம்.ஆர்.பழனிகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `மாணிக்' வீரியமில்லா டானிக். #MaaniikReview #Maaniik #MaKaPaAnand #SuzaKumar

    கே.எஸ்.பழனி இயக்கத்தில் ஷாரூக் - காயத்ரி ரெமா நடிப்பில் வெளியாகி இருக்கும் `காசு மேலே காசு' படத்தின் விமர்சனம். #KasuMelaKasu
    மயில்சாமியின் மகன் நாயகன் ஷாரூக். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மயில்சாமி தனது மகனை பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்க வைத்து எளிதில் பணக்காரராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்காக அவர்கள் பகுதியில் இருக்கும் பணக்கார வீட்டு பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து தனது மகனை காதலிக்க சொல்கிறார். 

    இதுஒருபுறம் இருக்க தனது அப்பாவும், அம்மாவும் பிச்சை எடுப்பதை விரும்பாத நாயகி காயத்ரி ரீமா, தான் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதில் திடமாக இருக்கிறாள். அதன்படி அவர்களது பகுதியில் இருக்கும் ஒரு பெரிய பங்களாவில் வேலைக்கும் சேர்கிறாள்.



    இந்த நிலையில் அந்த பங்களாவில் இருந்து வரும் காயத்ரி ரீமாவை அந்த பங்களாவுக்கு சொந்தக்காரி என்று நினைத்து, தனது மகனை காதலிக்க சொல்கிறார் மயில்சாமி. இதையடுத்து காயத்ரியிடம் தனது காதலை சொல்லும் ஷாரூக், காயத்ரியிடம் சம்மதமும் வாங்குகிறார். 

    இந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் காயத்ரி ரீமாவை கடத்தி செல்கின்றனர். ரூ.10 லட்சம் கொடுத்தால் தான் அவளை உயிருடன் அனுப்புவதாக கூற, சொத்து ஆசையால், தனது வீட்டை அடமானம் வைத்து பணத்தை தயார் செய்கிறார் மயில்சாமி. 



    கடைசியில், காயத்ரி ரெமாவை மீட்டார்களா? காயத்ரி ரெமா பணக்கார வீட்டுப் பெண் இல்லை என்பது மயில்சாமிக்கு தெரிந்ததா? ஷாரூக் - காயத்ரி ரெமா இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை. 

    நாயகனாக நடித்திருக்கும் ஷாரூக், பாடல், சண்டைக் காட்சி, காதல் காட்சிகளில் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நாயகி காயத்ரி ரெமா சாதாரண பக்கத்து வீட்டுப் பெண்ணாக வந்து செல்கிறார். படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு மயில்சாமி முக்கிய காரணமாக இருந்துள்ளார். நாயகியின் அப்பாவாக பிச்சைக்காரராக நடித்திருப்பவர் மயில்சாமியுடன் இணைந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். கோவை சரளா, ஜாங்கிரி மதுமிதா கதையின் ஓட்டத்திற்கு துணையாக இருந்திருக்கிறார். 



    பேராசை பெருநஷ்டம் என்ற கருத்தை மையப்படுத்தி வழக்கமான கதையுடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.பழனி. தற்போதைய அரசியல், சினிமா என அனைத்தையும் பிச்சைக்காரர் ஒருவரின் கண்ணோட்டத்தில் எப்படி இருக்கிறது என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார். வசனங்களுக்கு சிரிப்பு மழை கேட்கிறது. காமெடியுடம், சுறுசுறுப்பாக ரசிக்கும்படியாக படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். 

    எம்.எஸ்.பாண்டியன் இசையில் பின்னணி இசை படத்திற்கு பலம் தான். சுரேஷ் தேவன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `காசு மேல காசு' சிரிப்பு விருந்து. #KasuMelaKasu

    ×