search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜனதா"

    பன்றிக் காய்ச்சல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பா.ஜனதா தலைவர் அமித் ஷா இன்று டிஸ்சார்ஜ் ஆனார். #Amitshah
    பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ‌ஷா நாடாளுமன்ற தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். மாநிலம் மாநிலமாக சென்று அவர் தேர்தலை எதிர்கொள்ள கட்சியினரை சந்தித்து வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டது. அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் நலமாக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

    இதுகுறித்து பா.ஜனதா மாநிலங்களவை உறுப்பினரும், ஊடகப் பிரிவுத் தலைவருமான அனில் பலூனி ‘‘பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், அவர் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். அமித் ஷாவுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    பூரண குணம் அடைந்து விட்டதால் அமித் ‌ஷா நாடாளுமன்ற தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட உள்ளார்.
    தனிக்கட்சி தொடங்கும் அளவிற்கு எனக்கு தகுதியில்லை என மக்களவை சபாநாயகரும், அதிமுக எம்பி-யும் ஆன தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ThambiDurai
    மக்களவை சபாநாயகரும், அதிமுக எம்பி-யும் ஆன தம்பிதுரை இன்று திருவிடைமருதூரில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘பா.ஜனதாவும், அதிமுகவும் கூட்டணி கட்சி அல்ல. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பொதுக்குழு, செயற்குழு கூடி கூட்டணி குறித்து முடிவு செய்யும்.

    தமிழகத்திற்கு வர வேண்டிய 16 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு தர மறுக்கிறது. தமிழகத்திற்கான பல்வேறு சலுகைகள் வழங்க மத்திய அரசு மறுப்பதால் உரிமையுடன் கேட்டு வருகிறேன். தனிக்கட்சி தொடங்கும அளவுக்கு எனக்கு தகுதியில்லை’’ என்றார்.
    ஓடும் ரெயிலில் மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயந்தி பனுசாலி பரிதாபமாக உயிர் இழந்தார். #FormerBJPMLA #JayantiBhanushali #ShotDead
    ஆமதாபாத்:

    குஜராத் மாநில பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயந்தி பனுசாலி (வயது 53). இவர் நேற்று அதிகாலை 2 மணி அளவில் புஜ்-தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆமதாபாத் நகருக்கு வந்து கொண்டிருந்தார். ரெயில் காந்திதாம்-சுரஜ்பாரி இடையே வந்த போது, ரெயிலில் இருந்த மர்ம நபர் ஒருவர், திடீரென ஜெயந்தி பனுசாலியை துப்பாக்கியால் சுட்டார். இதனால் நிலைகுலைந்த அவர், அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினார்கள். மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட ஜெயந்தி பனுசாலி மீது பெண் ஒருவர் கற்பழிப்பு வழக்கு தொடர்ந்து இருந்தார். அவர் அந்த வழக்கை கடந்த ஆண்டு வாபஸ் பெற்றதை தொடர்ந்து, கோர்ட்டு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. #FormerBJPMLA #JayantiBhanushali #ShotDead 
    மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜிதான் என்று அம்மாநில பா.ஜனதா தலைவர் தெரிவித்துள்ளார். #Mamata
    மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய அம்மாநில பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ், மேற்கொண்டு கூறுகையில் ‘‘திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பிரதமராக நல்ல வாய்ப்புள்ளது. நாட்டின் முதல் பெங்காலி பிரதமர் என்ற பெருமையை பெறவும் அவருக்கு வாய்ப்புள்ளது.

    அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்பதால்தான் சிறப்பாக பணியாற்றுகிறார். பெங்காலி ஒருவர் பிரதமாக முடியும் என்றால் அந்த பட்டியலில் மம்தா பானர்ஜிதான் முதலிடத்தில் இருப்பார்.

    மம்தாவின் வெற்றியை பொருத்தே மேற்கு வங்கத்தின் தலைவிதி உள்ளது. ஜோதி பாசுவை முதல் பெங்காலி பிரதமராக எங்களால் ஆக்க முடியவில்லை. ஏனென்றால், அவரின் கட்சி அவரை பிரதமராக விடவில்லை. முதல் பெங்காலி ஜனாதிபதி என்ற பெருமையை பிரணாப் முகர்ஜி பெற்று விட்டார். அதனால் இது பெங்காலி பிரதமரை தேர்வு செய்வதற்கான நேரம்’’ என்றார்.

    மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பா.ஜனதா கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில் மம்தாவை பிரதமராக ஆக்குவது தொடர்பாக பா.ஜனதா தலைவர் பேசியிருப்பது அக்கட்சியில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிராக திருவனந்தபுரம் அருகே நடந்த போராட்டத்தில் பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் போலீஸ் இடையே மோதல் ஏற்பட்டது. #Sabarimala #BJP
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசு ஸ்திரமாக இருந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு பின்னர் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை. பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் கேரளாவை சேர்ந்த பிந்து, கனகதுர்கா இரு பெண்கள்  சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று அய்யப்பனை தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.



    சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிராக திருவனந்தபுரத்தில் பா.ஜனதாவினர் தரப்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் போலீஸ் இடையே மோதல் நேரிட்டது. #Sabarimala #BJP
    குஜராத் மாநிலம், ஜஸ்டன் சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். #Jasdan #KunvarjiBavaliya #BJP
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம், ஜஸ்டன் சட்டசபை தொகுதிக்கு கடந்த 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அம்மாநிலத்தில் ஆளும் பாஜக சார்பில் தற்போது மந்திரியாக இருக்கும் கன்வர்ஜி பவாலியா போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் அவ்சார் நாக்கியா வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடந்த இந்த இடைத்தேர்தல் அம்மாநிலத்தையும் மத்தியிலும் ஆளும் பாஜகவின் கவுரவ பிரச்சனையாகவும், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கான முன்னோட்டமாகவும் அரசியல் நோக்கர்களால் பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், கடந்த 20-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் அந்த தொகுதியில் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்த 2.32 லட்சம் பேரில் 72 சதவீதத்தினர் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

    அன்று பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. எண்னிக்கையின் ஆரம்பச் சுற்றில் இருந்தே பாஜக வேட்பாளர் கன்வர்ஜி பவாலியா முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில், 17 சுற்று எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ளது.

    கன்வர்ஜி பவாலியா 19 ஆயிரத்து 979 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அவ்சார் நாக்கியாவை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.


    அமைச்சராக பதிவி ஏற்றுக்  கொண்டபோது எடுத்த படம்

    முன்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்த கன்வர்ஜி பவாலியா இதே ஜஸ்டன் சட்டசபை தொகுதியில் 1995, 1998, 2002, 2007 மற்றும் 2017-ம் ஆண்டில் காங்கிரஸ் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றவர். கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் இவர் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    பின்னர், காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் திடீரென பாஜகவில் இணைந்தார். இணைந்தவுடன் அன்றைய தினமே அம்மாநில மந்திரிசபையிலும் கன்வர்ஜி பவாலியா இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகர் ரஜினியால் அதிமுக-வின் ஓட்டுகள் பிரியாது, மற்ற கட்சிகளின் வாக்குகள்தான் பிரியும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #MinisterJayakumar #Rajinikanth
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரஜினியால் அதிமுக-வின் வாக்குகளை பிரிக்க முடியாது. திமுக, மற்ற கட்சிகளின் வாக்குகளை அவர் பிரிப்பார். ரஜினி தொலைக்காட்சி தொடங்கினால் திமுக-வுக்குத்தான் பாதிப்பு. கணினி தகவல்கள் கண்காணிப்பு என்பது கொலைகாரன் கையில் இருக்கும் கத்திபோல் மாறிவிடக்கூடாது.

    புயல் பாதிப்பை பார்வையிடாத பிரதமர், பிரசாரத்திற்கு மட்டும் தமிழகத்திற்கு வருகிறார் என்றால் இதற்கு பா.ஜனதாதான் பதில் சொல்ல வேண்டும். நாளைக்கே தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    குஜராத் மாநில ஜஸ்டன் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா வேட்பாளர் கன்வார்ஜி பவாலியா முன்னிலை வகிக்கிறார். #Jasdan #KunvarjiBavaliya #BJP
    குஜராத் மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கன்வார்ஜி பவாலியா. இவர் கடந்த குஜராத் தேர்தலின்போது ஜஸ்டன் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இவர் ஐந்து முறை எம்எல்ஏ-ஆகவும், ஒருமுறை நாடாளுமன்ற மக்களவை எம்பி-யாகவும் இருந்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் தன்னைப்போன்ற மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை. அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டி காங்கிரஸில் இருந்து விலகினார். அத்துடன் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.

    காங்கிரஸில் இருந்து விலகிய அன்றைய தினமே பா.ஜனதாவில் இணைந்தார். இதனால் ஜஸ்டன் தொகுதிக்கு கடந்த 20-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    பா.ஜனதா சார்பில் கன்வார்ஜி பவாலியா நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் சார்பில் அவ்சார் நஹியா போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 19 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் முதல் மூன்று சுற்றுகள் முடிவில் கன்வார்ஜி பவாலியா 2700 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார்.

    மொத்த வாக்குகளும் எண்ணப்பட்டு மதியம் 12.30 மணியளவில் அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கன்வார்ஜி பவாலியா 84,321 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் 75,044 வாக்குகள் பெற்றிருந்தார்.
    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது எப்போது என்று பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. #RajnathSingh #RamTemple #BJP
    புதுடெல்லி:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது எப்போது என்று பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. பொறுமை காக்குமாறு ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார்.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமானது என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அடுத்த ஆண்டுதான் இது விசாரணைக்கு வருகிறது.

    ஆனால் அயோத்தியில் மிகப்பெரிய அளவில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்கள் சட்டம் இயற்றி, ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.

    இந்துத்துவா அமைப்புகளின் உணர்வுகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு உடன்பாடு இருந்தாலும்கூட, சட்டம் இயற்றும் முடிவுக்கு அந்தக் கட்சி வரவில்லை.

    இருப்பினும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்று பாரதீய ஜனதா கட்சிக்குள் கருத்து எழுந்துள்ளது.

    இந்த நிலையில் டெல்லியில் நேற்று பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது.

    இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், கட்சியின் தலைவர் அமித் ஷாவும் கலந்து கொள்ளவில்லை.

    இதில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் ரவீந்திர குஷ்வாகா, ஹரி நாராயண் ராஜ்பார் ஆகியோர் அயோத்தி பிரச்சினையை எழுப்பி பேசினார்கள். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது எப்போது என அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    அவர்களின் பேச்சுக்கு பிற எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

    ஆனால் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங், “அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது எல்லோரின் விருப்பமும் ஆகும். அதே நேரத்தில் உறுப்பினர்கள் பொறுமை காக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது, “பிரதமர் மோடியின் செல்வாக்குக்கு சமமாக எதிர்க்கட்சியில் ஒரு தலைவர் கிடையாது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எம்.பி.க்கள் கடுமையாக உழைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். #RajnathSingh #RamTemple #BJP


    தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை அமைந்தால் சந்திரசேகர ராவ் கட்சிக்கு ஆதரவு கொடுப்போம் என்று பா.ஜனதா அறிவித்துள்ளது. #TRS #BJP
    ஐதராபாத்:

    5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 11-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி (டிஆர்எஸ்) மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    119 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 60 உறுப்பினர்கள் தேவை. இந்தியா டுடே, டைம்ஸ் நவ் உள்ளிட்ட 3 கருத்து கணிப்பில் டிஆர்எஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக பா.ஜனதா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில பா.ஜனதா தலைவர் கே.லட்சுமண் கூறியதாவது:-

    தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்போம். காங்கிரஸ், எம்.ஐ.எம். ஆகியவைதான் எங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆகும். அவர்களை ஆட்சி அமைக்க விடமாட்டோம். இதனால் எங்களது ஆதரவு டிஆர்எஸ் கட்சிக்கு இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கு பின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கட்சி வரிசையில் தான் இருக்கும் என படேல் இன தலைவரான ஹர்திக் படேல் கூறியுள்ளார். #HardikPatel #RajasthanElection #BJP
    உதய்பூர்:

    படேல் இன தலைவரான ஹர்திக் படேல் ராஜஸ்தான் மாநிலம் கோடா மற்றும் ஜகல்வார் மாவட்டங்களில் கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார்.

    இதுபற்றி அவர் கூறுகையில் ‘கிராமங்களில் நான் மக்களை சந்தித்த போது மக்கள் அனைவரும் பாரதீய ஜனதாவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருப்பதை உணர முடிந்தது. இதனால் 7-ந் தேதி நடைபெறும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கு பின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கட்சி வரிசையில் தான் இருக்கும். இப்போது உள்ள நிலையில் அதுதான் பாரதீய ஜனதாவுக்கு சரியான இடம் தான். மக்கள் அந்த கட்சிக்கு எதிராக ஓட்டு போடும் மனநிலையில் உள்ளனர்.



    குறிப்பாக வேலை வாய்ப்பை உருவாக்காத பாரதீய ஜனதாவுக்கு பாடம் புகட்ட இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நான் பிரசாரத்தில் ஈடுபடமாட்டேன். ஆனால் எனது அமைப்பான கிஷான் கிராந்தி சேனா சார்பில் விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளை விளக்குவதற்கு மக்களை சந்திப்பேன்’ என்றார். #HardikPatel #RajasthanElection #BJP
    அயோத்தியில் ராமர்கோவில் கட்ட பா.ஜனதாவுக்கு ஆர்வம் இல்லை என சிவசேனா கட்சி எம்.பி.யும், அதன் மூத்த தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். #ShivSena #SanjayRaut #RamTemple
    புதுடெல்லி:

    சிவசேனா கட்சி எம்.பி.யும், அதன் மூத்த தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் ராவத் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கோ, உத்தரபிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசுக்கோ எந்த ஆர்வமும் இல்லை. அதற்கான அறிகுறியும் அவர்களிடம் தென்படவில்லை. எனவேதான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை மோடி அரசு தாமதப்படுத்தி வருகிறது.

    முத்தலாக் விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டுவர முடியும் என்கிறபோது, அதே வழியில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உள்ள தடைகளை நீக்குவதற்கு ஒரு அவசர சட்டத்தை மத்திய அரசால் ஏன் பிறப்பிக்க முடியாது?

    அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதை நாங்கள் ஒருபோதும் தேர்தல் பிரசாரமாக வைக்கவில்லை. ஆனால் அதை முன்னிறுத்தி பிரசாரம் செய்தவர்களிடம் கோவில் கட்டும் எண்ணம் இல்லை. 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவதற்கு ஆர்.எஸ்.எஸ். பெரிதும் உதவியது. எனவே அவசர சட்டம் பிறப்பிக்க தவறினால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை ஆர்.எஸ்.எஸ். கவிழ்க்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ShivSena #SanjayRaut #RamTemple 
    ×