search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98096"

    ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. அந்த வகையில் இந்த மாதம் ஐப்பசியில் வரும் ஏகாதசிக்கு பாபாங்குசா ஏகாதசி என்று பெயர்.
    ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு, ‘பாபாங்குசா ஏகாதசி’ என்று பெயர். ஒருவருடைய பாவத்தை அகற்றும் அங்குசம் போன்றது என்பதால், இந்தப் பெயர் வந்தது. இந்த ஆண்டு பாபாங்குசா ஏகாதசி, 14.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.41 மணி முதல் மறுநாள் காலை 9.41 மணி வரை உள்ளது.

    நாளை விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, கங்கை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால், யாகங்கள், உயர்ந்த தான - தர்மங்கள் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன்கள் அனைத்தும் கைவரப்பெறும்.

    இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், நரக வேதனையை அனுபவிக்க மாட்டார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. ஐப்பசி ஏகாதசி நாளில், ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கும் வழிமுறை தெரியாமலோ, அல்லது மற்றவர்கள் வியந்து பார்க்க வேண்டும் என்றோ, எப்படிச் செய்தாலும், இந்த விரதத்திற்கான பலன் கிடைக்கப்பெறும் என்பதே, பாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மேன்மையாகும்.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஐப்பசி மாத சர்வ ஏகாதசி பூஜையை பக்தர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
    மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஐப்பசி மாத சர்வ ஏகாதசி பூஜைகள் நடந்தது. மூலவர் சுவாமிக்கும், உற்சவர் கள்ளழகர் பெருமாள், தேவியர்களுக்கும் சிறப்பு பூஜைகள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.

    அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். மேலும் இக்கோவிலின் உபசன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    மகத்துவம் வாய்ந்த நாளான மாசி மாத தேய்பிறை ஏகாதசி தினத்தன்று, உணவேதும் அருந்தாமல் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் உங்களின் சகல பாவங்கள் நீங்கும்.
    பெருமாளை வழிபடுவதற்கு ஒரு அற்புதமான நாளாக ஷட்திலா ஏகாதசி விரத தினம் வருகிறது. இந்த ஏகாதசி விரத தினத்தின் முக்கியத்துவம் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    பூலோகத்தில் வாழ்ந்த பெண் ஒருத்தி தான் செய்த புண்ணிய பலன் காரணமாக மனித உடலோடு சொர்க்கம் செல்லும் பாக்கியம் பெற்றால். சொர்க்க லோகத்தில் தனக்கு அத்தனை வசதிகள் இருந்தாலும் தன்னால் நேரத்திற்கு தான் விரும்பிய உணவு கிடைக்காமல் அவதியுற்றார். அப்போது அங்கே ஒரு துறவி உருவத்தில் வந்த பெருமாளிடம் தனது இந்த நிலை குறித்து கூறி, அதற்கான காரணம் என்ன என்று கேட்டாள்

    அதற்கு துறவி உருவில் இருந்த பெருமாள் அந்த பெண்ணிடம் அவள் பூலோகத்தில் அனைவருக்கும் அவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு தான தர்மங்களை செய்திருந்தாலும், ஒரு மனிதனுக்கு வாழ்நாள் முழுக்க இருக்கும் பிணியான பசி பிணியினை போக்கும் அன்னதானம் செய்ய மறந்து விட்டதாகவும், மேலும் ஒரு முறை துறவி ஒருவர் சாப்பிட உணவு கேட்டு பாத்திரத்துடன் அவள் வீட்டின் முன்பாக வந்த போது, அந்த பாத்திரத்தில் மண்ணை கொட்டி அவரை அவமதித்த பாவமே அந்த பெண் சொர்க்கலோகத்தில் இருந்தாலும் உணவு கிடைக்காமல் அவதியுற நேரிட்டதாக கூறினார் துறவி உருவத்தில் இருந்த பெருமாள்.

    இதையறிந்து வருந்திய அந்த பெண்ணிடம் பெருமாள் மண்ணுலகில் வாழும் மனிதர்கள் நன்மைகளை பெற பல விரதங்களை கடைபிடிக்கின்றனர். அதில் ஒன்று தான் மாசி மாத தேய்பிறை காலத்தில் வரும் ஷட்திலா ஏகாதசி விரதம் ஆகும். இந்த விரதத்தை மேற்கொள்ளவர்கள் வாழ்வில் பசிப்பிணி தீர்ந்து அன்னம் எனப்படும் உணவிற்கு பஞ்சமிருக்காது என்றும், உன்னை இங்கு தரிசிக்க வரும் தேவலோக பெண்களிடம் இந்த ஷட்திலா விரதத்தின் பலன்களை பெற்றால் உனது பசிப்பிணி தீரும் என்று கூறி மறைந்தார்.

    வந்தது நாராயணனே என்றறிந்த பெண் தேவலோக பெண்கள் அவளின் தரிசனம் பெற வந்த போது ஒரு அறைக்குள் சென்று மறைந்துகொண்டாள். வந்த தேவலோக பெண்கள் அப்பெண் தங்களுக்கு தரிசனம் தருமாறு கெஞ்ஜினர். அதற்கு அந்த பெண், தேவலோக பெண்கள் கடைபிடித்த ஷட்திலா விரதத்தின் பலனை தனக்கு தந்தால் தான் அவர்களுக்கு தரிசனம் தருவதாக கூறினாள். அதற்கு அவர்களும் ஒப்புக்கொள்ள, விரதத்தின் பலனை பெற்ற பெண் தனது பசிப்பிணி நீங்க பெற்றாள்.

    மகத்துவம் வாய்ந்த நாளான இந்த மாசி மாத தேய்பிறை ஏகாதசி தினத்தன்று, உணவேதும் அருந்தாமல் விரதம் இருந்து மகாவிஷ்ணுவான பெருமாளை விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் இதர பெருமாள் மந்திரங்கள் துதித்து வழிப்பட்டு உங்களால் முடிந்த அளவிற்கு ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், உங்களின் சகல பாவங்கள் நீங்குவதோடு, உங்கள் வாழ்நாளில் உணவிற்கு ஏங்கும் உணவு பஞ்சம், வறுமை போன்ற நிலை ஏற்படாமல் பெருமாள் காத்தருள்வார்.
    மாதம் தோறும் வரும் ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள் சகல சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.
    தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

    அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, 'முரன்' பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

    விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம். 
    ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன் கொண்டது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்கள் அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும்.
    1. மனித வாழ்காலத்தை பிரம்மசர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்று நான்கு நிலைகளாகப் பகுப்பது இந்த மரபு. இந்த நான்கு நிலையோரும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

    2. சாதி வித்தியாசமின்றி அனைத்து குலத்தவரும் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

    3. ஆதியில், உற்பத்தி ஏகாதசி (மார்கழி மாதத்தில்) முதலில் வந்ததால், எல்லா வருடமும், எல்லா மாதமும் தேய்பிறை ஏகாதசியே முதலில் வருவதில்லை. வளர்பிறை ஏகாதசியும் முன்பாக வரலாம்.

    4. வளர்பிறை/தேய்பிறை ஏகாதசி விரதத்திற்கு இடையே ஏற்றத் தாழ்வு இருப்பதாக கருதக்கூடாது.

    5. நெருங்கிய உறவினரின் பிறப்பு - இறப்பின் போதும், பெண்களின் மாதவிடாய்க் காலத்தும் பல்லோருடன், பழகிடாமல் ஒதுங்கி இருக்கும் காலங்களிலும் கூட ஏகாதசி விரதம் போன்ற நித்ய விரதங்களை மேற்கொள்ள வேண்டும்.

    6. திங்கள்/ சனிப் பிரதோஷங்கள் சிறப்பு கொண்டிருப்பது போல, பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்களில் வரும் ஏகாதசிகள் அதி சிறப்பு கொண்டது.

    7. வெவ்வேறு மாதங்களில், தினங்களில் வரும் ஏகாதசிகளுக்கும் தனித்தன்மைகள் உள்ளன.

    8. ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன் கொண்டது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்கள் அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும்.

    9. ஏகாதசி போன்ற விரதங்களின் போது, விரத உண்ணாமையின் முழுப் பயனை அடையவும், விரத நாளில் முழுவதும் உண்ணாதிருப்பது சிரமமாகத் தோன்றாமல் இருக்கவும், முதல் நாளான தசமியன்று ஒரு வேளை மட்டுமே உண்கிறோம். மேலும், வெகு நேரம் உணவின்றியிருந்ததற்குப் பின்பு, படிப்படியாகவே உணவு அளவைக் கூட்ட வேண்டும் என்பதற்காக துவாதசியிலும் ஒரு வேளை உணவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    10. ஏகாதசி தினத்தன்று உணவு அளவு குறைவாயிருந்தாலும் அது எளிதாக ஜீரணிக்கப்பட்டு, அதிக ஊட்டச்சத்தும் அளிக்க வேண்டும் என்பதற்காக, நெல்லிக்காய், அகத்திக்கீரை போன்றவற்றை உபயோகிக்கிறோம்.

    11. ஒவ்வொரு ஏகாதசி விரதமும் குறிப்பிட்ட, தவறான செயல்பாடுகளால் விளைந்த அல்லல்களைத் தீர்ப்பதாகக் கூறப்படுகிறது.

    12. ஒவ்வொரு ஏகாதசியின் பெருமையையும், வழிபாட்டு முறையையும், வெவ்வேறு தெய்வங்களோ, முனிவர்களோ வெவ்வேறு அன்பர்க்கு தெரிவித்ததாக கூறியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, கூறியவர் அல்லது கேட்டவரின் காலத்திலிருந்து தான் குறிப்பிட்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுவதாக கருதக்கூடாது.

    13. ஏகாதசி விரதத்தன்று, விரிவாக பூஜை செய்வது நல்லது என்றாலும், பலருக்கும் பசி சோர்வினால் பூஜை செய்வது இயல்வதில்லை.

    14. வீட்டுச் சூழ்நிலைகளால் இறைச் சிந்தனை தடைப்படுமாயின் அன்று முழுவதும் ஆலயத்திலேயே தங்கி வழிபாடுகளை தரிசித்தல் மேலும் சிறப்பு. அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி அரங்கனையே நினைக்கச் செய்திட விஷ்ணு புராணம், பாகவதம், ராமாயணம் போன்ற இறைத் திருவிளையாடல் நூல்களையோ விஷ்ணு சகஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற துதிகளையோ தொடர்ந்து பாராயணம் செய்யலாம்.

    15. ஏகாதசி உண்ணாமை விரதத்திற்குப் பிறகு துவாதசியில் உணவு ஏற்பதை பாரணை என்று கூறுவர். பல சமயங்களில், துவாதசி திதி நாள் முழுவதும் இருப்பதில்லை. இதனால், துவாதசியில் ஏற்கப்பட வேண்டிய ஒரே வேளை உணவையும் வெவ்வேறு துவாதசி தினங்களிலும், அத்திதி இருக்கும் போதே முன்பின்னாக ஏற்க நேரிடும்.

    16. துவாதசி திதி காலையில் மிகக் குறுகிய நேரமே இருப்பின் மதியம் வரை செய்ய வேண்டிய சந்தியாவந்தனம், முக்கிய பூஜை போன்றவற்றை சீக்கிரமாகவே முடிப்பதில் தவறில்லை.

    17. துவாதசி திதி மிக, மிக குறைவான நேரமே இருப்பின், முதலில், பெருமாளை நினைத்து துளசி கலந்த நீரைப்பருகி பாரணை முடித்துவிட்டு, பின்னர் உணவை ஏற்கலாம்.

    18. ஏகாதசி விரதம் இருந்த அம்பரீச சக்கரவர்த்தி துருவாச முனிவரின் கோபத்தில் இருந்து கூட பாதுகாக்கப்பட்டதை பல புராணங்கள் தெரிவிக்கின்றன.
    19. வளர்பிறை தேய்பிறை துவாதசியன்று திருவோண நட்சத்திரம் வந்தால் அன்றும் உண்ணா நோன்பு இருந்து திரயோதசி திதியிலேயே பாரணை செய்ய வேண்டும்.

    20. ஏகாதசி, துவாதசி இரண்டு நாட்களிலும் முழுவதுமாக உண்ணாமை இயலாவிட்டால், ஏகாதசியன்று முன் இரவில் சிறிதளவு பலகாரம் ஏற்கலாம். சிரவண துவாதசி அன்று கண்டிப்பாக உண்ணாதிருக்க வேண்டும்.

    21. ஆடி மாத வளர்பிறை சயனி ஏகாதசி முதல், கார்த்திகை மாதம் வளர்பிறை ப்ரபோதினி ஏகாதசி முடிய, 9 ஏகாதசிகளிலும் அனைவரும் விரதம் இருக்க வேண்டியது கட்டாயமாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    22. பிற மாதங்களில் வரும் தேய்பிறை ஏகாதசிகளில் மட்டும் பகலில் உண்ணாதிருந்து, இரவில் குறைந்த பட்சமாக, அதுவும், திட உணவையும், பக்குவப்படுத்திய உணவையும் ஒதுக்கி, பால், பழம் போன்றவற்றை ஏற்பதில் தவறில்லை.

    23. நீர், கிழங்கு, பால், நெய், மருந்து போன்ற சிலவற்றை ஏற்பது விரதநியதிகளை மீறுவது ஆகாது என்பதற்காக, விரத நாட்களில் நினைத்த போதெல்லாம், பசித்த போதெல்லாம் இவற்றை உண்ணுவதை வழக்கமாகக் கொள்ளக்கூடாது.

    24. ஆடிமாதம் வளர்பிறை ஏகாதசியில் அனுஷ்டிக்கப்படுவது கோபத்மவிரதம். பல்வகையிலும் நமக்கு நன்மை பயக்கும் பசுக்களைக் கட்டும் இடத்தில், தாமரை வடிவ கோலம் இட்டு, அதனுள், திருமாலை வழிபட்டு கோதானம் அளிப்பது மிகச் சிறப்பு.

    25. கார்த்திகை வளர்பிறை ஏகாதசியன்று பீஷ்மர் அம்புப்படுக்கையிலிருந்தே மகாபாரதப் போர் நிகழ்ச்சிகளைக் கண்ட நாள் என்பதால் அன்று பீஷ்ம பஞ்சக விரதம் அனுஷ்டிப்பது வழக்கம்.

    26. முக்கோடி தேவர்களின் துன்பத்தை பகவான் போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது.

    27. ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேசமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்னுவை அதிதேவதையாக கொண்ட புத கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும்.

    28. ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு நீடித்த புகழ்,நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுமையில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

    29. சீதையை பிரிந்த ராமர், பக்தாப்யர் என்ற முனிவரின் ஆலோசனைப்படி பங்குனி மாதத்தில் வரும் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தார். அதன் பலனாக வானர சேனைகளின் துணைக்கொண்டு கடலை கடந்து இலங்கேஸ்வரனை அழித்து இலங்கையை வென்றார். விஜயா என்னும் இந்த ஏகாதசி விரதம் நாம் கேட்ட பலன்களை கொடுக்கக்கூடியது.

    30. வைகுண்ட ஏகாதசி அன்று தான், குருக்ஷேத்ரப் போரில் அர்ஜுனனுக்குக் கீதையை கிருஷ்ண பரமாத்மா உபதேசம் செய்ததால், இந்தநாள் ‘கீதா ஜயந்தி’ எனவும் கொண்டாடப்படுகிறது.

    சித்திரை மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘பாப மோசனிகா ஏகாதசி’ என்று கூறுவர். இந்நாளில் பெருமாளுக்கு விரதம் இருந்து மனம் உருகி வேண்டினால், நாம் செய்த பாவங்கள் தொலையும்.
    எல்லாவிரதங்களில் சிறந்ததாகப் போற்றப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. சித்திரை மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘பாப மோசனிகா ஏகாதசி’ என்று கூறுவர். இந்நாளில் பெருமாளுக்கு விரதம் இருந்து மனம் உருகி வேண்டினால், நாம் செய்த பாவங்கள் தொலையும். வளர்பிறையில் வருவது ‘காமதா ஏகாதசி’ எனப்படும். அன்றைய தினத்தில் விரதம் இருந்து, இறைவனை வணங்க விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.

    ஏகாதசி விரதம் இருக்கும் முறை :

    ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, காலைக் கடன்களை முடித்துவிட வேண்டும். பூஜை அறைய சுத்தம் செய்து, அலங்காரப் பிரியனான மகா விஷ்ணு படத்திற்கு  மலர்களைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும். ( பூஜைக்கு தேவையான துளசியை முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்வது சிறப்பு) பால், பழங்கள், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைப் படைத்து, பக்தியுடன் பூஜை செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள், ஸ்வாமிக்குப் பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம்.

    ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. இரவில் பஜனை அல்லது மகாவிஷ்ணுவின் கதைகளைக் கேட்பது முதலியவற்றில் ஈடுபட்டு கண் விழிக்க வேண்டும்.

    கோபம், கவலை, வீண்பேச்சு, சண்டை, புறம்பேசுவதைத் தவிர்த்து, இறைவனை வழிபட உங்கள் பாவங்கள் தொலைந்து நன்மை பிறக்கும்.

    ஏகாதசி நாளில் எதுவும் உண்ணாமல் விரதம் இருந்து, மறுநாள் துவாதசியன்று விரதத்தை பூர்த்தி செய்து உணவு உண்பது உடல்நலனுக்கு மிகவும் நல்லது என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது.
    நம் முன்னோர்கள் ஏகாதசி தினத்தன்று விரதம் இருக்கும் அருமையான முறையை கொண்டு வந்து அதை ஆன்மீகத்துடன் ஐக்கியப்படுத்தி உள்ளனர்.
    அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு பிறகு சந்திரன் பூமியை சுற்றி வரும்போது ஒரு நாளைக்கு 12 டிகிரி என்ற அளவில் விலகிச் சென்று ஏகாதசியன்று சுமார் 120 டிகிரிலியிருந்து 132 டிகிரியில் இருக்கும். அப்போது பூமி, சூரியன் சந்திரன் ஆகியவை ஒரு முக்கோண நிலையை அடைகிறது. அப்போது மற்ற நாட்களை விட அதிக அளவு பூமியின் மீதும், பூமியில் உள்ள தண்ணீர் மீதும், சந்திரனின் ஈர்ப்பு சக்தியால் பாதிப்பு உண்டாகிறது.

    மனித உடலிலும் 70 சதவீதம் நீர் நிறைந்திருப்பதால் ஏகாதசி தினத்தன்று மனித உடலும் சந்திரனின் ஆகர்ஷண சக்தியால் பாதிக்கப்படும். அதன் காரணமாக நமது உடம்பில் உள்ள ஜீரண உறுப்புகள் சரிவர வேலை செய்யாது. அத்தகைய சூழ்நிலையில் நாம் உணவருந்தினால் சரியாக ஜீரணமாவது கடினம்.

    சந்திரனின் ஆகர்ஷண சக்தியால் கடல் நீர் பொங்கி எழுந்து அலைக்கழிக்கப்படுவதைப் போல மனித உடலிலும் உள்ள தண்ணீரிலும் பாதிப்பு உண்டாகி, ஜீரண சக்தியை இழந்து விடுகிறது. மாதம் இருமுறை வரும் ஏகாதசி நாட்களில் தொடர்ந்து உணவை உட்கொண்டு வருபவர்களுக்கு அஜீரணம் உண்டாகலாம்.

    அஜீரணமானவுடன் மருந்து உட்கொள்வதும், சாப்பிட்ட உணவை பலவந்தமாக ஜீரணிக்க முயற்சி செய்வதும் இயற்கைக்கு விரோதமான செயலாகும். இதன் விளைவாகத்தான் சிறிய சிறிய நோய்கள் உண்டாகிறது. அந்த நோய்கள் பெரிய நோய்களாக மாறி விடக்கூடாது என தடுக்கவே நம் முன்னோர்கள் ஏகாதசி தினத்தன்று விரதம் இருக்கும் அருமையான முறையை கொண்டு வந்து அதை ஆன்மீகத்துடன் ஐக்கியப்படுத்தி உள்ளனர்.
    ஏகாதசிகள் ஒவ்வொன்றின் சிறப்பையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் இரண்டு ஏகாதசிகளுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
    ஏகாதசிகள் ஒவ்வொன்றின் சிறப்பையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள் வரும். கமலா என்ற ஏகாதசி அதிகமாக வரும். இதையும் சேர்த்து மொத்தம் இருபத்தைந்தாகும்.

    சித்திரை மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘பாப மோசனிகா’ என்று பெயர் கொண்டது. இதில் விரதம் இருப்பவர்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெறுவார்கள். இதே மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்குக் ‘காமதா’ என்று பெயராகும். இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் கணவனின் பாவங்கள் நீங்கப் பெறுவார்கள்.

    வைகாசி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘வரூதிதீ’ என்று பெயராகும். இந்த நாளில் விரதம் இருந்தால் எந்த விதமான குறையுமின்றி வாழ்நாள் முழுவதும் செல்வச் செழிப்புடன் வாழலாம்.

    கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘மோகினி’ என்று பெயரைக் கொண்டது. இந்த ஏகாதசி விரதம் மோகத்தை அகற்றி முக்தியைத் தருவதாகும்.
    ஆனி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘அபரா’ என்ற பெயரைக் கொண்டது. இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் பாவங்கள் அனைத்தும் விலகும்.

    சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘நிர்ஜலா’ என்பது பெயராகும். துன்பங்கள் அனைத்தையும் போக்கிவிடும் ஆற்றல் கொண்டது. ஆடி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘யோகிநீ’ என்ற பெயரைக் கொண்டது. இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் தொழுநோய் போன்ற கொடிய நோய்கள் குணமாகும்.
    இந்த மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘சயிநீ’ என்பது பெயராகும். அகங்காஇரத்தையும், ஆணவத்தையும் அழித்து ஆனந்தத்தை அளிப்பதாகும்.
    ஆவணி கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘காமிகா’ என்று பெயர். இந்த நாளில் துளசித்தளத்தால் இறைவனை அர்ச்சனை செய்து வந்தால் மோட்சம் கிடைக்கும்.

    இந்த மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘புத்ரதா’ என்று பெயர். புத்திர பாக்கியத்தை விரும்புபவர்கள் இந்த நாளில் விரதம் மேற்கொள்ள வேண்டும்.
    புரட்டாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘அஜா’ என்று பெயர். உயர்ந்த செல்வ வளத்தையும், சிறப்பையும் தரும். இதே மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி ‘பத்மநாபா’ என்ற பெயரைக் கொண்டதாகும். இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் செல்வச் செழிப்பும், நாட்டு வளமும் பெருகும்.

    ஐப்பசி கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘இந்திரா’ அன்று விரதம் இருந்து வந்தால் அவர்களின் முன்னோர் நற்கதியை அடைவார்கள். இந்த மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி ‘பாபாங்குசா’ என்ற பெயரைக் கொண்டது. எல்லா நன்மைகளும்-செல்வ வளம் கல்வி வளம் அனைத்தும் கிடைக்கும். கார்த்திகை மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘ரமா’ என்று பெயராகும். இந்த ஏகாதசியன்று முறைப்படி விரதம் இருப்பவர்கள் நிலையான இன்பங் களை பெறுவார்கள்.

    கார்த்திகை மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி ‘ப்ரபோதினி’ என்ற பெயரைக் கொண்டதாகும். இந்த ஏகாதசி விரதம் மேற் கொள்பவர்கள் மேலு லகத்தில் நற்கதியை அடைவார்கள்.

    மார்கழி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘உற்பத்தி ஏகாதசி’ என்று பெயராகும். இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள் விண் ணுலகில் நற்கதியை அடைவார்கள்.

    இதே மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘வைகுண்ட ஏகாதசி’ என்று பெயர். மோட்சம் அடைவதற்கு இந்த வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருக்க வேண்டும். இந்த நாளில் தான் எல்லாரும் விரதமிருந்து வருகிறார்கள். வைகுண்ட ஏகாதசி எல்லா வைணவ ஆலயங்களிலும் கொண்டாடப்படுகிறது. சிறப்பாக, ஸ்ரீரங்கம், திருப்பதி மற்றும் சென்னை பார்த்தசாரதி ஆலயங்களில் வெகு நன்றாக கொண்டாடுவதுண்டு. ஏராளமான பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்ய ஆவலுடன் திரண்டு வருகிறார்கள்.

    தை மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியை ‘பைலா’ என்று அழைப்பார்கள். முறைப்படி விரதம் மேற்கொண்டு இறைவனை வழிபடுபவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் வடுதலை பெறுவார்கள்.

    இந்த மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘புத்ரதா’ என்பது பெயராகும். இந்த ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு நல்ல பிள்ளைகள் பிறப்பார்கள். இதுவேதான் ‘பீஷ்ம ஏகாதசி’ என்று கூறப்படுவது. அதாவது பாரத யுத்தத்தில் ‘சரசயனத்தில்’ படுத்திருக்கும் பீஷ்ம பிதாமகர் சுக்பை ஏகாதசி அன்று தன் உயிரை உடலை விட்டு வேர்பட்ட ஏகாதசியாகும்.

    மாசி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘ஷட்திலா’ என்று பெயரைக் கொண்டதாகும். இந்த விரதத்தை பெரும்பாலும் அனேகர் மேற்கொள்வார்கள். வறுமையற்ற நிலையைத் தருவதற்கு இந்த ஷட்திலா என்ற ஏகாதசி உதவுகிறது. எனவே, இதைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

    இதே மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர் ‘ஜயா’ என்பதாகும். எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெறுவதற்கும் எதிரிகளை முறியடிப்பதற்கும் இந்த ஏகாதசி விரதம் துணை செய்யும்.

    பங்குனி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘விஜயா’ என்ற பெயராகும். துன்பம் எவ்வளவு தான் ஏற்பட்டாலும் அவைகளை முறியடித்து வாழ்வில் வெற்றி பெறுவதற்கு இந்த விரதத்தைக் கொள்ள வேண்டும்.

    சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி ‘ஆமலகீ’ என்ற பெயரைக் கொண்டது. இந்த விரதம் மேற்கொள்பவர்கள் பெரிய பெரிய புண்ணியங்களைப் பெறுவார்கள்.

    இறந்தவர்க்கு, ஒவ்வொரு வருடமும் செய்யப்படும் சிரார்த்தம், திதியை அனுசரித்தே செய்யப்பட வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திதியிலும் எண்ணிலாக் குழந்தைகள் பிறப்பது போல, எண்ணிலார், எல்லா திதிகளிலும், இறைபதம் அடைவதும் இயற்கை நிகழ்வே ஏகாதசியில் மரணமும், துவாதசியில் தகனமும் மாமுனிவர்க்கும் கிடைத்தற்கரியது. இறந்தவர்க்கு, ஒவ்வொரு வருடமும் செய்யப்படும் சிரார்த்தம், திதியை அனுசரித்தே செய்யப்பட வேண்டும்.

    ஏகாதசி அன்று சிரார்த்தம் நடத்திடும் குடும்பத்தினரும், சிரார்த்தத்தில் நம்முடைய முன்னோர்களின் பிரதிநிதியாக ஏற்கப்படுபவர்களும் நெருங்கிய பங்காளிகளும், சிரார்த்தத்திற்காக சமைக்கும் உணவை ஏற்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் சிரார்த்த உணவை ஏற்பது விரதநியதிகளை மீறியதாக கருதப்படுவதில்லை.

    சில பகுதி மக்கள், ஏகாதசிகளில், தாம் சாப்பிட்ட தவறுக்கோ, பிறரை உண்ணச் செய்த தவறுக்கோ, ஆளாகக் கூடாது என்பதால், ஏகாதசியில் வரும் சிரார்த்தத்தை துவாதசி திதியில் செய்வதை, வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது, தேசாசாரம் என்று, நெடுங்காலமாக பெரியோர்களால் ஒத்துக் கொள்ளப்பட்டும் வந்திருக்கிறது.
    மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம் என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர்.
    மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்ப டுகிறது. இந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம் என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர்.

    கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்ப டும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கம், இருவேளை சாப்பிடுதல், உடலுறவு என்பவற்றை தவிர்த்து விரதம் மேற்கொள்கின்றனர். ஏகாதசியன்று இந்து சமயத்தவர்கள் திரு மண நிகழ்வுகளையும் தவிர்க்கின்றனர்.
    ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும்.
    ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் ‘திதி’ என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும்.

    ஏகாதச எனும் வடமொழிச்சொல் பதினொன்று என்று பொருள்படும். 15 நாட்களை கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாத மொன்றில், அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினோராம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருஷ்ணபட்சம் எனப்படும் தேய்பிறை காலத்தின் பதினோராம் நாளுமாக இரண்டு முறை ஏகாதசி ‘திதி’ வரும். அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியைச் சுக்கிலபட்ச ஏகாதசி என்றும், பூரணையை அடுத்த ஏகாதசியை கிருஷ்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.
    விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற தவறான கருத்து உள்ளது. இது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

    தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

    விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

    ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. 
    ×