search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜராஜசோழன்"

    மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும். வழக்கமாக 2 நாட்கள் சதய விழா கொண்டாடப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் 1 நாள் விழாவாக நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா பரவலால் 1 நாள் விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழன் 1036-வது சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    விழாவில் முதல் நிகழ்ச்சியாக காலை 6:30 மணிக்கு பெரிய கோவிலில் டி.கே.எஸ். பத்மநாபன் குழுவினரின் மங்கள இசை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 7 மணிக்கு கோவில் ஊழியர்களுக்கு புத்தாடைகளை கட்டளை தம்பிரான் சுவாமிகள் வழங்கினார்.

    பின்னர் தேவாரம் நூலுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து கோவிலின் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து நந்தி மண்டபம் அருகே அமர்ந்து தமிழில் பாராயணத்தை பாடினர். முன்னதாக கோவில் வளாகத்தில் யானையில் வைத்து திருமுறை வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தமிழில் பாடிய பாராயணத்தை கேட்டு ரசித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    சதயவிழாவையொட்டி யானை மீது திருமுறை வீதிஉலா நடந்ததை காணலாம்

    இதையடுத்து பெருவுடையார், பெரியநாயகி திருமேனிகளுக்கு கட்டளை தம்பிரான் சுவாமிகள் தலைமையில் சந்தனம், மஞ்சள், மூலிகைகள், வில்வஇலை, விபூதி, இளநீர், பசும்பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம், அன்னம் உள்ளிட்ட 48 வகையான திரவியங்களால் பேரபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் பெருவுடையார் பெரியநாயகி திருமேனிகளுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் மனம் உருகி தரிசனம் செய்தனர்.

    விழாவில் இன்று மாலை 6 மணிக்கு கலைமாமணி பண்ணிசை பேரறிஞர்கள் திருமுறைக் கலாநிதிகள் பழனி சண்முகசுந்தர தேசிகர், கரூர் குமார சாமிநாத தேசிகர் குழுவினர்களின் தேவார இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது . அதனைத் தொடர்ந்து கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.


    குஜராத்தில் இருந்து மீட்கப்பட்டு தஞ்சை வந்தடைந்த ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகளுக்கு பெரிய கோவிலில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    தஞ்சாவூர்:
        
    தஞ்சை பெரிய கோவிலில் இருந்த ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஐம்பொன் சிலைகள் 60 ஆண்டுக்கு முன்பு திருடு போனது. அந்த சிலைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் டி.எஸ்.பி. ராஜாராமன் மற்றும் போலீசார் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்டனர். இதையடுத்து அந்த சிலைகள் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

    இதற்கிடையே, மீட்கப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஐம்பொன் சிலைகள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தடைந்தது. அங்கு அந்த சிலைகளுக்கு கோவில் தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    இந்நிலையில், குஜராத்தில் இருந்து மீட்கப்பட்டு தஞ்சை வந்தடைந்த ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகளுக்கு பெரிய கோவிலில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த சிலைகளுடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் டி.எஸ்.பி. ராஜாராமன் மற்றும் போலீசாரும் வந்தனர்.

    ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் தஞ்சை பெரிய கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்கு பின் தஞ்சைக்கு வந்த சிலைகளுக்கு பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும்  போடப்பட்டுள்ளது. #Tamilnew
    ×