search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98195"

    கந்தசஷ்டி விழாவின் போது சூரசம்ஹாரம் முடிந்ததும், முருகப்பெருமானுக்கு எதிரே கண்ணாடி ஒன்று வைக்கப்படும். அந்த கண்ணாடிக்கே அபிஷேகம் செய்யப்படும். அதற்கு ‘சாயா அபிஷேகம்’ என்று பெயர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழ்கிறது. மேலும் கடல் அலைகள் தவழும் திருத்தலமாகவும் இது விளங்குகிறது. சூரபத்மனை முருகப்பெருமான் அழித்த திருதலம் இதுவாகும்.

    இந்த ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு 9 கால பூஜைகள் செய்யப்படுகின்றன. மூலவருக்கு சாத்தப்பட்ட மாலைகள் அனைத்தும், அதன் பின்னர் சண்டிகேஸ்வரருக்கு அணிவிக்கப்படுகிறது. திருச்செந்தூர் திருத்தலத்தில் ஏராளமான தீர்த்தங்கள் உள்ளன.

    காயத்ரி மந்திரங்களே இங்கு 24 தீர்த்தங்களாக இருப்பதாக நம்பப்படுகிறது. கந்தசஷ்டி விழாவின் போது சூரசம்ஹாரம் வெகு சிறப்பாக நடைபெறும். சூரசம்ஹாரம் முடிந்ததும், முருகப்பெருமானுக்கு எதிரே கண்ணாடி ஒன்று வைக்கப்படும். அந்த கண்ணாடிக்கே அபிஷேகம் செய்யப்படும். அதற்கு ‘சாயா அபிஷேகம்’ என்று பெயர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி இன்றுஅதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடந்தது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் தங்க சப்பரத்தில் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை சேர்கிறார்.

    13 அடி நீள அலகு குத்தியபடி திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த சிவகாசி திருத்தாங்கள் பக்தர்.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்திருந்த திரளான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற உடை அணிந்து, பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர்.

    பல்வேறு ஊர்களில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருக பெருமானின் உருவ படத்தை வைத்து, அரோகரா கோ‌ஷம் எழுப்பியபடி வந்தனர். கோவில் வளாகம், விடுதிகள், மண்டபங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடற்கரையிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்து நின்று சாமி கும்பிட்டனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

    திருச்செந்தூர் டி.எஸ்.பி. பாரத் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் உச்சிகால அபிஷேகம், மதியம் உச்சிகால தீபாராதனை நடந்தது.

    மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தை சென்றடைந்தார். அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் ரத வீதிகள், சன்னதி தெரு வழியாக வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் கோவிலை சேர்ந்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். 
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். கடலில் புனித நீராடிய அவர்கள், நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    காலையில் தை மாத உத்திராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு, சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவில் ராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    நாளை (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கிறது.

    மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் பரிவேட்டைக்காக வெள்ளி குதிரையில் எழுந்தருளி, பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமி ரத வீதிகள், சன்னதி தெரு வழியாக கோவிலை சேர்கிறார்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் புனித நீராடிய பக்தர்களை படத்தில் காணலாம்.

    தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பஸ், வேன், கார் போன்றவற்றில் திருச்செந்தூருக்கு வந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பச்சை, காவி நிற ஆடை அணிந்து, குழுக்களாக பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர்.

    அலங்கரிக்கப்பட்ட மினி லாரி, லோடு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் முருக பெருமானின் உருவப்படத்தை வைத்து, அவரது புகழை பாடியவாறு பக்தர்கள் பாத யாத்திரையாக அணிவகுத்து வந்தனர். பெரும்பாலான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர்.

    கோவில் கடலில் திரளான பக்தர்கள் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் கிரிப்பிரகாரத்தில் ஆண்கள் அங்கபிரதட்சணம் செய்தும், பெண்கள் அடிபிரதட்சணம் செய்தும் வழிபட்டனர். கோவில் வளாகம், கடற்கரை, மண்டபங்கள், விடுதிகளில் பக்தர்கள் தங்கியிருந்து வழிபட்டனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

    திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பரத் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    நெல்லை மாவட்டத்தில் இருந்து முருக பக்தர்கள் முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக சென்றனர்.
    முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் மாசி தேரோட்டம், கந்தசஷ்டி விழா, தைப்பூச திருவிழா ஆகியன சிறப்பு பெற்றதாகும். தைப்பொங்கல் திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    பொங்கல் அன்று முருகனை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்து குவிந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதியான செங்கோட்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையம், அம்பை, தென்காசி, தாழையூத்து, தென்கலம், தென்கலம்புதூர் ஆகிய பகுதிகளை பக்தர்கள் கடந்த ஒரு மாதமாக மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள்.

    இந்த பக்தர்கள் தங்களுடைய ஊரில் இருந்து குழுவாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்று வருகின்றனர். தங்கள் ஊரில் இருந்தே முருகன் படத்தை சப்பரத்தில் அலங்காரம் செய்து லோடு ஆட்டோவில் வைத்து கொண்டு வருகிறார்கள். மேலும் சில பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஆடி வந்தனர். பாளையங்கோட்டையை சேர்ந்த தாமோதரன் என்பவர், நெல்லை தாமிரபரணி ஆற்றில் உள்ள ஒத்தப்பனை சுடலை மாடசாமி கோவிலில் வைத்து 6 அடி நீளத்துக்கு வேல் குத்தி திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்றார்.

    நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் முருக பக்தர்கள் கூட்டம், கூட்டமாக செல்கிறார்கள். சில பக்தர்கள் 15 அடி நீளமுள்ள அலகு குத்தி சென்றனர்.

    நெல்லை மாநகரத்தில் சாலைகளில் எங்கு பார்த்தாலும் முருக பக்தர்களின் கூட்டத்தை பார்க்கவும், பக்தி கோஷத்தை கேட்கவும் முடிகிறது.

    நெல்லை சந்திப்பு மேம்பாலத்தை கடந்து செல்லும் பக்தர்கள், சாலைக்குமார சுவாமி கோவில் இருக்கும் பகுதியில் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து செல்கிறார்கள்.

    நெல்லை வழியாக செல்லும் முருக பக்தர்கள் நெல்லை தாமிரபரணி ஆற்றில் காலையிலும், மாலையிலும் புனித நீராடினார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றில் முருக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. 
    முருகப்பெருமான் சிவந்த நிறம் கொண்டவர். அவர் வீற்றிருக்கும் தலம் என்பதால் ‘செந்தூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. முருகனின் திருநாமமும் செந்தில் என்றானது.
    முருகப்பெருமான் சிவந்த நிறம் கொண்டவர். அவர் வீற்றிருக்கும் தலம் என்பதால் ‘செந்தூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. முருகனின் திருநாமமும் செந்தில் என்றானது.

    திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் சிலர் கருதுகிறார்கள்.

    திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும், தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.

    திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில், விசுவரூப தரிசனம் என்னும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.

    திருச்செந்தூர் முருகப்பெருமான், தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.

    இத்தலத்தில் கோவில் வெளிப் பிரகார தூண்களில் கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல உள்பிரகாரங்களில் தல வரலாற்றை கூறும் வரை படங்களை அமைத்துள்ளனர்.

    திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்ததும் ஒலிக்கப்படும் மணிஓசைக்கு பிறகே, வீரபாண்டிய கட்டபொம்மன் உணவருந்துவார் என்று ஒரு செய்தி உண்டு. 250 ஆண்டு பழமையான, அந்த 100 கிலோ எடை கொண்ட பிரமாண்ட மணி, தற்போது ராஜகோபுரத்தின் 9-ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.

    சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, முருகப்பெருமான் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில், இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது.

    திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணி திருவிழாவின்போது, சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாக முருகப்பெருமான் காட்சி தருகிறார்.

    திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு. ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு ‘கங்கை பூஜை’ என்று பெயர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதத்தில் நடை திறப்பு, பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மார்கழி மாதம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, அடுத்த மாதம் 14-ந்தேதி நிறைவு பெறுகிறது. இதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    அதிகாலை 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 3.30 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனைக்கு பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

    வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, அதிகாலை 2 மணிக்கு நடை திறப்பு, 2.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 3 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும்.

    அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆங்கில புத்தாண்டு மற்றும் அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தைப்பொங்கல் திருநாளில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும். அதிகாலை 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார். 
    திருச்செந்தூர் அருகே மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலியான சம்பவத்தையடுத்து புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையை சேர்ந்த ஞானமுத்து மனைவி பஞ்சவர்ணம் (வயது35). இவருக்கு சொந்தமாக 10 மாடுகள் உள்ளன. இந்த மாடுகளை காலையில் மேய்ச்சலுக்கு விட்டால் மாலையில் அவைகள் வீடு திரும்பி விடுமாம்.

    இந்நிலையில் கடந்த 6-ந் தேதி மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளில் 2 மாடுகள் மாலையில் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து மறுநாள் ஆலந்தலை காட்டுப் பகுதியில் தேடி பார்த்தபோது இரண்டு மாடுகள் இறந்து கிடந்தது. இதன் அருகில் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி இரண்டு மாடுகள் இறந்தது தெரியவந்தது.

    இது குறித்து பஞ்சவர்ணம் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தச‌ஷ்டி திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தச‌ஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. 6-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. 7-ம் திருநாளான நேற்று இரவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

    இதனை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள், தெப்பக்குளம் அருகில் உள்ள நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    மதியம் 3.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் கோவிலில் எழுந்தருளி, சன்னதி தெரு, பள்ளத்தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்கு ரத வீதி வழியாக நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்துக்கு வந்தார். அங்கு தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுத்த பின்னர் சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, கீழ ரத வீதி மற்றும் நான்கு உள்மாட வீதிகளிலும் உலா வந்து, சன்னதி தெரு வழியாக கோவிலை சேர்ந்தனர். இரவில் ராஜகோபுர திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாத பை வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் அரோகரா கோஷங்கள் விண்ணைப் பிளக்க, கந்தச‌ஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது. #Soorasamharam #ThiruchendurMurugan
    தூத்துக்குடி:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான‌ கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிலில் விரதம் இருந்து வழிபட்டனர். விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலைக்கு புறப்பாடு, உச்சிகால தீபாராதனை ஆகியவை நடந்தது.
     
    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூர‌சம்ஹாரம் 6-ம் திருநாளான இன்று மாலை நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    இதன்பிறகு காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடந்த‌து. இதையடுத்து யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளிதெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

    மதியம் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.

    முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்தார். அதன்பின்னர் சிங்கமுகமாகவும், தன்முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை சுவாமி வதம் செய்தார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி அருள் செய்தார்.

    ஒவ்வொரு உருவமாக மாறி வந்த சூரனை ஜெயந்திநாதர் வதம் செய்தபோது, லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது. கடல் எங்கும் மனித தலைகளாக காணப்பட்டன. 

    சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோ‌ஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலை சேர்ந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் ராஜேந்திர பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர். 



    சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

    சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப‌ட்டது. சுமார் 3 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு வசதியாக 10 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டன.

    தூத்துக்குடி, நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோன்று தற்காலிக வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்காக 15 மினி பஸ்களும் இயக்கப்பட்டன.

    சூரசம்ஹாரம் முடிந்ததும் ஊர் திரும்பும் பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு மாலை 6.30 மணி, இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். 

    இன்று இரவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயாபிஷேகம் (கண்ணாடி யில் தெரியும் சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம்) நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Soorasamharam #ThiruchendurMurugan
    சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தச‌ஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதை காண்பதற்காக திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். #Soorasamharam #ThiruchendurMurugan
    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான‌ கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிலில் விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர். விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலைக்கு புறப் பாடு, உச்சிகால தீபாராதனை ஆகியவை நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூர‌சம்ஹாரம் 6-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    இதன்பிறகு காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடந்த‌து. இதையடுத்து யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளிதெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.


    கோவில் முன் திரண்ட பக்தர்கள்.

    மதியம் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்கிறார்.

    பின்னர் சிங்கமுகமாகவும், தன்முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை சுவாமி வதம் செய்கிறார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி அருள்கிறார். சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோ‌ஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமிஅம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலை சேர்கின்றனர். இரவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயாபிஷேகம் (கண்ணாடி யில் தெரியும் சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம்) நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப் பட்டு உள்ளது. சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்த வந்த வண்ணம் உள்ளனர்.

    கடலில் புனித நீராட கடற்கரையில் திரண்ட பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

    சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப‌ட்டுள்ளது. சுமார் 3 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பக்தர்கள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு வசதியாக 10 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 300 துப்புரவு பணியாளர்கள் பணியில் உள்ளனர். 100 தற்காலிக கழிப்பறைகள், 8 தற்காலிக தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தூத்துக்குடி, நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோன்று தற்காலிக வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்காக 15 மினி பஸ்கள் இயக்கப்படுகின்றது. சூரசம்ஹாரம் முடிந்ததும் ஊர் திரும்பும் பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு மாலை 6.30 மணி, இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றது.

    கோவில் கிரிபிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள்.

    சூரசம்ஹார நிகழ்ச்சியை பக்தர்கள் எளிதில் காணும் வகையில், கடற்கரை முழுவதும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் நகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து, அதில் இருந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    திருச்செந்தூர் - பாளையங்கோட்டை ரோடு, தூத்துக்குடிரோடு, கன்னியாகுமரி ரோடு, சாத்தான்குளம் ரோடு ஆகியவற்றில் புறநகர் பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். #Soorasamharam #ThiruchendurMurugan
    ×