search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • கயத்தாறு- கடம்பூர் சாலையில் அமைந்துள்ள கண்டி கதிர்காம மூர்த்தி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே கயத்தாறு- கடம்பூர் சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கண்டி கதிர்காம மூர்த்தி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு புண்யாவாசனம், கணபதி பூஜை, சங்கல்பம், ஸபர்ஸாகுதி, மூலமந்திர ஜெபம், யாகசாலை பூஜைகளும், பூர்ணகுதி நடைபெற்றது. பின்னர் கும்ப குடம் புறப்பட்டு கோபுரம் மற்றும் கண்டி கதிர்காம மூர்த்தி கதிர்வேலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து 10 மணிக்கு மூலவருக்கு மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், விபூதி சந்தனம், கும்பாபி ஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை பூமாதேவி ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் தலைமையில் வெங்கடேசன் பூஜைகளை செய்தார். இதில் குத்தாலிங்கம், திரவியம், கண்டி கதிர்காம மூர்த்தி, சுவாமிநாதன், சங்கரநாராயணன், மாரிஸ்வரன், காந்திமதி, மாரித்தாய், செல்வராணி, சங்கரி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ கண்டி கதிர்காம மூர்த்தி கோவில் குழுவினர் செய்திருந்தனர்.

    • ஏராளமானோர் தரிசனம்
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    சோளிங்கர்

    சோளிங்கர் அடுத்த எரும்பி கிராமத்தில் ஸ்ரீ சவுந்தரநாயகி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதை முன்னிட்டு கோ பூஜை கலசபூஜை யாக பூஜை பூர்ணாஹீதி நடைப்பெற்றது.தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் கோவில் கோபுர கலசத்திற்கும் மூலவர் சுந்தரேஸ்வரர், சவுந்தரநாயகி சாமிக்கு பூஜை செய்யப்பட்ட கலச புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, தொழிலதிபர் பூபாலன், சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத் மற்றும் கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கும்பாபிஷேக விழா நாளை 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு மேல் 6 மணிக்குள் நடைபெறுகிறது.
    • அலங்காரம், தசதானம், தச தரிசனம், மகா தீபாரதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் காதர் பேட்டை நேரு வீதியில் உள்ள ஸ்ரீ கருப்பண்ண பிள்ளையார், ஸ்ரீ குபேர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு மேல் 6 மணிக்குள் நடைபெறுகிறது.இதையொட்டி இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு மகா கணபதி, மகாலட்சுமி யாகம் நடக்கிறது. தொடர்ந்து முதலாம் கால யாக பூஜைகள், விமான கலசம் பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெறுகிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு மேல் ஸ்ரீ குபேர விநாயகருக்கு இரண்டாம் கால யாக பூஜை, சூர்ய சந்திர பூஜை, நாடி சந்தானம், மகாபூர்ணாகுதி, தீப ஆராதனை, 5 மணிக்கு மேல் யாத்ரா தானம், கடம் புறப்பாடு, 5:30 மணிக்கு கோபுர கலசங்கள், கும்பாபிஷேகம், மூர்த்தி மற்றும் பரிவார மும்மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தை தொங்குட்டிபாளையம் ஸ்ரீ சுயம்பு காரண பெருமாள் கோவில் அர்ச்சகர் விஷ்ணு ஸ்ரீ மணிவண்ண பட்டர் நடத்துகிறார். தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம், தசதானம், தச தரிசனம், மகா தீபாரதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடைபெறுகிறது.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் எம்.பி. குப்புசாமி, திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகர மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி (ஓய்வு) ஆறுமுகம், மாஸ் கார்மெண்ட்ஸ் சரவணன், கேண்டி கார்மெண்ட்ஸ் வடிவேலு மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி முத்துலட்சுமி தண்டபாணி, சுப்பிரமணி, கந்தராஜ், கஜேந்திரன், கார்த்தி, திருமூர்த்தி, .சிவசந்திரன் மற்றும் கே. சீனிவாசன் ஆகியோர் செய்துள்ளனர்.  

    • காரைக்குடி அருகே 126 ஆண்டுகளுக்கு பிறகு கைலாச விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா புதுவயல் அருகில் உள்ள சின்ன வேங்காவயல் மற்றும் வலயன்வயலில் கைலாச விநாயகர் கோவில் உள்ளது. கடைசியாக 1897ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் 126 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேகத்திற்கான பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. கண்டனூர் வேங்காவயலார் வீடு அழகப்ப செட்டியார் குடும்பத்தார் மற்றும் மணிகண்டன் செட்டியாரால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் சிறப்புபூைஜகள் நடைபெற்றன. நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    காலை 7.30 மணிக்கு கும்ப ஸ்தாபனம், , யாகசாலை பிரவேசம், வேத பாராயணம், முதற்கால பூஜை ,ஹோமங்கள் நடைபெற்றது.

    உடுமலை:

    உடுமலை வக்கீல் நாகராஜன் வீதியில் சீனிவாசா ஆஞ்சயே பெருமாள் கோவில் உள்ளது .இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று தொடங்கியது.

    இன்று காலை 5:45 மணிக்கு மேல் கணபதி பூஜை, புண்யாஹவாசனம் உள்ளிட்ட பூஜைகளும், காலை 7.30 மணிக்கு கும்ப ஸ்தாபனம், , யாகசாலை பிரவேசம், வேத பாராயணம், முதற்கால பூஜை ,ஹோமங்கள் நடைபெற்றது.

    மாலை 5.30 மணிக்கு அனைத்து மகி ளாபஜனாமண்டலியினரின் விசேஷ பஜனை நடக்கிறது. நாளை 3 ம் தேதி காலை 5 மணிக்கு பிரதிஷ்ட ஹோமங்கள், காலை 7.30 மணிக்கு யாத்திரா தானம், கடம் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து 7.30 மணிக்கு மேல் 8:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு மேல் பிரசாத வினியோகம் நடக்கிறது.  

    காலை 7-30மணிக்கு விமான கும்பாபிஷேகம், விநாயகர் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம், ஸ்ரீ காமாட்சியம்மன் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    அவினாசி அருகே சொக்கனூரில் அமைந்துள்ள செங்குந்தர்களின் குல தெய்வமான தேவி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று 1 -ந்தேதி கணபதியாகம், நவகிரகஹோமம், கோபூஜை, தீர்த்தம் எடுக்க ஆற்றுக்கு செல்லுதல், விநாயகர் வழிபாடு, வாஸ்துசாந்தி, திருமண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், காப்பு அணிவித்தல், கும்பஸ்தாபனம், யாகசாலை பிரவேசம்,திரவ்யாகம், முதற்கால யாகபூஜை, தீபாரதனை ஆகியவை நடைபெற்றன.

    இன்று காலை சிவாச்சரியார் வழிபாடு, இரண்டாம் கால யாகபூஜை, திரவ்ய யாகம், 3-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. இரவு 10மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.

    நாளை 3ந்தேதி கும்பாபிஷேகத்தையொட்டி காலை 5மணிக்கு யாகசாலை பூஜை துவக்கம், திரவியயாகம், நான்காம் கால பூஜை, நாடிசந்தானம், மஹாபூர்ணஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்படுதல் நடக்கிறது.

    காலை 7-30மணிக்கு விமான கும்பாபிஷேகம், விநாயகர் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம், ஸ்ரீ காமாட்சியம்மன் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையடுத்து காலை 10மணிக்கு மேல் தசதரிசனம், மஹா அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை ,பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை நாட்டாமைக்காரர் கந்தசாமி, பெரிய தனக்காரர் கொண்டப்பன், நிர்வாக குழு தலைவர் ரமேஷ் மற்றும் கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

    கும்பாபிஷேகம் மகா சந்நிதானம் வேதசிவாகம சிரோன்மணி ஸ்ரீலஸ்ரீ ராஜ. சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமையில் சண்முக சிவாச்சாரியார் சுவாமிகள், ஐராவதீஸ்வரர் சிவம் ஆகியோரின் சர்வசாதக சிறப்போடு நடைபெற உள்ளது.

    • திருமங்கலம் அருகே மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கருடன் வானத்தில் வட்டமிட்டு அருள் பாலித்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நாராயணசாமி நகர் பகுதியில் அமைந்துள்ள மகா கணபதி கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 30-ந் தேதி அனுக்கை பூஜை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. வேத விற்பனர்கள் 9 யாக குண்டத்தில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். 2-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. 3-ம் கால யாக பூஜையுடன் கடம் புறப்பாடு நடந்தது. நாட்டின் பல்வேறு புனித நதிகளில் இருந்து புனித நீர் குடங்களில் கொண்டு வந்து கோபுர கலசங்களில் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தினை நடத்தினர். அப்போது கருடன் வானத்தில் வட்டமிட்டு அருள் பாலித்தார். சிறப்பு அழைப்பாளராக மதுரை ஆதீனம் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார்கள் சங்கரநாராயணன் சீனிவாசன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • இன்று மாலை ஸ்ரீநாகசாயி உற்சவமூர்த்தி திருவீதி உலா நடக்கிறது.
    • 2-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது.

    கோவை மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீநாகசாயி மந்திர் ஆலயம் உள்ளது.

    கோவை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் சாய்பாபா பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியவர். இந்த ஆலயத்திலும் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளது.

    இத்தகைய சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 27-ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    ராமலிங்கம் காலனி ஐயப்பன் கோவிலில் இருந்து நாகசாயி கோவிலுக்கு தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அன்று மாலை விக்னேஸ்வர பூஜை, நாகசாயி அர்ச்சனை நடந்தது.

    28-ந் தேதி மாலை முதற்கால யாக சாலை பூஜைகள் நடந்தது. 29-ந் தேதி இரண்டாம் கால யாக சாலை பூஜை, 30-ந் தேதி மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.

    நேற்று காலை 4-ம் கால யாக சாலை பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. மாலையில் 5-ம் கால யாக சாலை பூஜைகள், வேதபாராயணம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று நடந்தது. முன்னதாக காலை 5 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாகுதி பூஜை நடைபெற்றது.

    8.45 மணிக்கு யாகசாலை யில் இருந்து கலசங்கள் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 9.05 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அனைத்து சன்னதிகளுக்கும் சமகால மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.அனைத்து மூர்த்திகளுக்கும் காலை 11.30 மணிக்கு மேல் மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.

    கும்பாபிஷேகத்தையொட்டி அதிகாலையிலேயே சாய்பாபா கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர்.

    அவர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று சாய்பாபாவை தரிசனம் செய்து சென்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மகா அன்னதானமும் நடை பெற்றது.

    இன்று மாலை 5 மணிக்கு ஸ்ரீநாகசாயி உற்சவமூர்த்தி திருவீதி உலா நடக்கிறது. 6.45 மணிக்கு மதுரை முத்து குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சி நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று கோவையில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    2-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. காலை 11 மணிக்கு நாகசாயி அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. மாலை 7.45 மணிக்கு தங்கரதம் பவனி வருகிறது. 3-ந் தேதி மாலை 6.45 மணிக்கு மகா திருவிளக்கு பூஜை நடைபெறும்.

    • பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற திரிபுர சுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் விழா கடந்த 27-ந் தேதி காலை கணபதி ஹோமம், லஷ்மிஹோமம், நவகிரக ஹோமத்துடன் தொடங்கியது.

    28-ந் தேதி காலை மூர்த்தி ஹோமம், சாந்தி ஹோமமும், திசா ஹோமமும், 29-ந் தேதி காலை அக்னி சங்கிரஹணம், தீர்த்த ஹங்கி ரஹணம், பிரசன்னாபிஷேகம், தீபாராதனை, யாக அலங்கா ரமும், மாலை கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை நடைபெற்றது 30-ந் தேதி காலை விசேஷ சந்தி, பாவனா பிஷேகம், இரண்டாம் கால யாகம், அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல், மாலை முதல் விஷேச சந்தி, பாவனா பிஷேகம், மூன்றாம் கால யாகம், பூர்ணாஹுதி, தீபாரா தனையும் நடந்தது.

    நேற்று காலை விசேஷ சந்தி, நான்காம் கால யாகம், தத்வார்ச்சனை, திரவி யாஹூதி, தீபாராதனையும், மாலை ஐந்தாம் கால யாகம், ஸ்பரிஸாஹூதி, தீபாராதனையும் நடந்தது. இன்று காலை 6 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், 8.30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, சண்டேச யாகமும் 9 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடும் நடந்தது.

    இதனைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் ராஜ கோபுரம், மூலவர் விமான கோபுரம் மற்றும் அனைத்து விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். இதில் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    கும்பாபிஷேக விழாவை யொட்டி கோவிலை சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு தீர்த்தீஸ்வரர் திருக்கல்யாணம், ரிஷப வாகன சேவை, பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீதீர்த்தீஸ்வரர் கோவில் பரம்பரை தர்ம கத்தா ஆர்.ரவி குருக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

    • அலங்காநல்லூர் அருகே காளியம்மன்-மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை விட்டங்குளம் மேற்கு தெரு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வைரவநத்தம் ஊராட்சி விட்டங்குளம் மேற்கு தெருவில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கடந்த 2 நாட்களாக 3 கால யாக பூஜையுடன் மங்கள இசை முழங்க கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாவதி தீபாராதனை நடைபெற்றது. இன்று காலையில் யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்தது.

    பின்னர் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பா பிஷேத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப் பட்டது.

    விழா ஏற்பாடுகளை விட்டங்குளம் மேற்கு தெரு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • சோமநாத சுவாமி கோவிலில் வருடாந்திர கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெற்றது.
    • சுவாமி, அம்பாளுக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் வருடாந்திர கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாள் காலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து லட்சார்ச்சனை தொடங்கியது. 2-வது நாளிலும் லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு அலங்கார பூஜை நடந்தன. நிறைவு நாளான இன்று காலை விநாயகர் பூஜை, வேதபாராயணம், திருமுறை பாராயணம். பூரண ஆஹூதி தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

    பின்னர் சுவாமி மற்றும் அம்பாள் கோபுர விமானங்களில் கும்பாபிஷேகம் நடந்தது.அப்போது பக்தர்கள் 'அரகர மகாதேவா' என்று முழக்கம் எழுப்பினர்.இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன.இதன் பின்னர் லட்சார்ச்சனை நிறைவுக்கு பின் சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தன.

    இதில் பக்த ஜனசபை சார்பில் சண்முக வெங்கடேசன், தெரிசை அய்யப்பன், தங்கமணி, கற்பக விநாயகம், சங்கரலிங்கம், இளைய பெருமாள், தொழிலதிபர் பெருமாள், பேராசிரியர் அசோக்குமார் மற்றும் திருமுறை பன்னிசை குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.

    ஆலய பூஜகர் அய்யப்ப சிவாச்சாரியார் குழுவினர் கும்பாபிஷேக நிகழ்வுகளை நடத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா மற்றும் பக்தஜன சபையினர் செய்துள்ளனர்.

    • கருட பகவான் கோவிலை வலம்வர கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • சுப்ரமணியருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் புகழ்பெற்ற எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23-ந் தேதி கணபதிஹோமம் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

    நேற்று லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்தனர்.

    கருட பகவான் கோயிலை வலம் வர ஆலய கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    தொடர்ந்து சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபட்டனர்.

    ×