search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • ஊராட்சி கோட்டை வேதகிரி மலை அடிவார பகுதியில் உள்ள ஜீவா நகர் பால தண்டாயுதபாணி கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
    • இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள ஊராட்சி கோட்டை வேதகிரி மலை அடிவார பகுதியில் உள்ள ஜீவா நகர் பால தண்டாயுதபாணி கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

    முன்னதாக கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. 10-ந் தேதி மகா கணபதி ஓமம் நடைபெற்றது. பின்னர் கூடுதுறையில் இருந்து ஏராளமான பக்தர்கள் புனித தீர்த்த குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவில் வந்து அடைந்தனர்.

    தொடர்ந்து முதல் கால யாக பூஜை மற்றும் நான்கு கால யாக பூஜை வேள்வி பால தண்டாயுதபாணி சுவாமிக்கு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு மேல் கோவிலில் உள்ள ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் பவானி, ஊராட்சிகோட்டை, குருப்ப நாயக்கன் பாளையம், தொட்டி பாளையம், சேர்வராயன் பாளையம், காடையம்பட்டி உள்பட பல்வேறு கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • புனித நீர் குடங்களுடன் ஊர்வலம் சென்றனர்
    • பொதுமக்களுக்கு அன்னதானம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுக்கா தர்மபுரி மெயின் ரோடு பல்லலப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி கணபதி பூஜை, முதல் கால பூஜை, பூர்ணஹுதி, தீபாராதனை, தொடர்ந்து இரண்டாம் கால பூஜை, கலச பூஜை, தீபாரதனை தொடர்ந்து தம்பதி சங்கல்பம், புனிதநீர் கலசங்களுக்கு பூஜை செய்து முக்கிய நிகழ்வாக புனித நீர் உள்ள குடங்களுடன் மேளதாளம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பெண்கள் பலர் சாமி வந்து ஆடினார்கள் பின்னர் பட்டாளம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    தொடர்ந்து அன்னதானம், சாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நல்லதம்பி எம்.எல்.ஏ., முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜமாணிக்கம், திமுக ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் சி.கே.சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றிய குழு துணை தலைவர் ஜி.மோகன்குமார், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • ஆதிரத்தினேசுவரா் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இன்று மாலை 4 மணிக்கு திருக்கல்யாணமும், சுவாமி மற்றும் பஞ்சமூா்த்திகளின் வீதி உலாவும் நடைபெறுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் வெளிப்பட்டணம் சவுபாக்கிய நாயகி சமேத ஆதிரத்தினேசுவரர் கோவில் உள்ளது. மஞ்சப்புத்தூா் ஆயிர வைசிய சமுதாய மக்களுக்கு பாத்தியமான இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 9-ந் தேதி தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து 3 யாக சாலை பூஜைகள் நடைபெற்று நிறைவடைந்தது.

    இன்று (12-ந் தேதி) அதிகாலை 4-ம் கால யாகசாலை பூஜைக்கு பின் பூர்ணாஹுதி, தீபாராதனையை தொடர்ந்து விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று மாலை 4 மணிக்கு திருக்கல்யாணமும், சுவாமி மற்றும் பஞ்சமூா்த்திகளின் வீதி உலாவும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலா்கள் ஞானசேகரன், சாந்த மூர்த்தி, சரவணன், ஆயிர வைசிய மகாஜனசபை தலைவா் மோகன் மற்றும் நிர்வாகிகள், கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிக் கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • அத்தனூர் அம்மன் கோவில் புராண கால சிறப்பு கொண்டதாகும்.
    • செவ்வாய்க்கிழமை 48 நாட்களுக்கான முழு மண்டலாபிஷேகம் நடக்கிறது.

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே பிரசித்தி பெற்ற அத்தனூர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புராண கால சிறப்பு கொண்டதாகும். கொங்கண சித்தர் மலை சாரலில் அமைந்துள்ள அத்தனூர் அம்மன் கோவில் மன்னர்கள் வழிபட்டதாகவும், இதனால் கோவிலுக்கு சுகவனம் என்ற பெயர் பெற்றதாக நம்பப்படுகிறது. இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவுபெற்று நாளை (திங்கட்கிழமை) மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி கடந்த 7-ந் தேதி விக்னேஸ்வரா பூஜை, மகா கணபதி ஹோமம், கோ பூஜை நடந்தது. 8-ந் தேதி மங்கள இசையுடன் தீர்த்தக்குடங்கள், முளைபாலிகைகள் எடுத்து வருதல், புண்யாகம், பஞ்சகவ்யம், தீபாராதனை நடைபெற்றது. 9-ந் தேதி மகாலட்சுமி, சரஸ்வதி ஹோமம், கலசாபிஷேகம், விநாயகர் பூஜை மற்றும் நேற்று திருமுறை பாராயணம், பூதசுத்தி புண்யாகம், யாகபூஜை, தீபாராதனை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) மங்கள இசை, திருமுறை பாராயணமும், விமானம் கண் திறப்பு, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அத்தனூர் அம்மன், ஸ்ரீ அத்தாயி அம்மன், மூலவர் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம், மருந்து சாத்துதல், பரிவார தெய்வங்கள் அஷ்ட மருந்து சாத்துதல் நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு லமல் புண்யாகம், மண்டபார்ச்சனை, யாகபூஜை, தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.

    இதனை தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, புண்யாகம், பிம்பசுத்தி, ரக்‌ஷாபந்தனம், நாடி சந்தானம், வஸ்திர சமர்பணம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இதையடுத்து காலை 6.30 மணிக்கு மேல் ராஜகோபுரம் மற்றும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அத்தாயி அம்மன், உறும்பிக்காரன், ஸ்ரீ முத்து முனியப்பன், ஸ்ரீ மகா முனியப்பன், ஸ்ரீ ராஜ முனியப்பன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ ஆதிமூலவர் மற்றும் பரிவார தெய்வகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    பின்னர் காலை 9 மணிக்கு மேல் மகா அபிஷேகம், தசதரிசனம், அலங்காரம், உச்சிகால பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) 48 நாட்களுக்கான முழு மண்டலாபிஷேகம் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர் முத்துசாமி, இணை ஆணையர் பரஞ்சோதி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். கும்பாபிஷேக விழாவையொட்டி அம்மனுக்கு சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    • விநாயகர்-அழகு சவுந்தரி அம்பாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டம ங்கலம் நாட்டார்கள் மற்றும் நகரத்தார்கள் ஸ்தாணிகர்கள், திருப்பணி குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் பட்டமங்கலத்தில் மதியாத கண்ட விநாயகர்-அழகு சவுந்தரி அம்பாள் கோவில் உள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    3 நாட்கள் 4 கால பூஜைகள், கணபதி ஹோமத்துடன் தொடங்கப்பட்டு யாக பூஜைகள் நடந்தன. இந்த நிறைவு பெற்று பூர்ணகுதி நடைபெற்று, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    விழாவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தக நாச்சியார் பங்கேற்றார். விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டமங்கலம் நாட்டார்கள் மற்றும் நகரத்தார்கள் ஸ்தாணிகர்கள், திருப்பணி குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • செண்பகவள்ளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பேரூராட்சி கவுன்சிலர் ரேகா ராமசந்திரன் சுதாரம் மற்றும் குடிநீர் வசதி செய்திருந்தார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தான் மேலரதவீதி, கிண்ணி மடத்தெருவில் குருநாதர் அருளானந்த சுவாமிகள் மடலாய வளாகத்தில் அமைந்துள்ள செண்பகவள்ளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

    விழாவை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி மாலை பிரசாத் சர்மா, தியாகராஜ தீட்ஷிதர், பட்டாச்சாரியார்கள் குழுவினர் விக்னேஷ்வரா பூஜையுடன் யாகசாலை பூஜைகள் முடிந்து நேற்று காலை யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய குடங்களுடன் கடம் புறப்பாடாகி மங்கள வாத்தியங்கள் முழுங்க புனித தீர்த்தங்கள் கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானில் கருட பகவான் வட்டமிட்டது.

    இதையடுத்து அம்மனுக்கு 18 வகையான வாசனை திரவியம் கொண்டு அபிஷேகம் செய்தனர். பின்னர் மலர் அலங்காரம் செய்து அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர் மற்றும் செண்பகம் பிள்ளை, முத்து பிள்ளை வகையறா பங்காளிகள் செய்திருந்தனர். பேரூராட்சி கவுன்சிலர் ரேகா ராமசந்திரன் சுதாரம் மற்றும் குடிநீர் வசதி செய்திருந்தார். பாதுகாப்பு பணியில் சோழவந்தான் போலீசார் ஈடுபட்டனர்.

    • பாலமேடு அருகே கரந்தமலை, செல்லாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை அய்யூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    பாலமேடு அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்வவிநாயகர், கரந்தமலை, செல்லாயி அம்மன், மண்டுக்கருப்பு, அய்யனார், சப்தகண்ணிமார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

    3 நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் 4 கால யாக பூஜையுடன் கடம் புறப்பாடாகி அழகர்கோவில், ராமேசுவரம் உள்ளிட்ட தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்தது. பின்னர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அய்யூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • அம்மன்களுக்கு சிருறப்பு பூஜை நடந்தது
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா சுந்தரம் பள்ளி அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன், குண்டி மாரியம்மன், முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக நடை பெற்றது.

    விழா நிகழ்ச்சியை ஒட்டி கணபதி ஹோமம், முதல் கால பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை தொடர்ந்து இரண்டாம் கால பூஜை, கலச பூஜை, தம்பதியர்கள் சங்கல்பம், தொடர்ந்து முக்கிய நிகழ்வாக கலசங்களில் உள்ள புனித நீர் பூஜை செய்து ஊர்வ லமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றினர்.

    தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதேபோல திருப்பத்தூர் தாலுகா பேராம்பட்டு அடுத்த சகாதேவன் கொட்டாய் பகுதியில் உள்ள ஸ்ரீ விநாயகர் மூலவர் பாலமுருகன் உற்சவர் சுப்பிரமணிய வள்ளி தேவசேனா நவகிரக கோவில் மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    கோபுர கலச பிரதிஷ்டை தொடர்ந்து ஸ்ரீ கணபதி பூஜை பூர்ணக்க்ஹுதி, தீபாரதனை இரண்டாம் கால பூஜை தம்பதி சங்கல்பம் நடைபெற்றது

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, திமுக மாவட்ட செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ, நல்லதம்பி எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே எஸ் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தா சண்முகம் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆவல்நா யக்கன்பட்டி கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர் சுகுமார் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தன.

    • கோவில் கும்பாபிஷேகத்தில் 3 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது.
    • மேலூர் போலீஸ் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சுக்காம்பட்டியில் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலூர் பகுதியை சேர்ந்த தங்கமலர் என்பவர் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்த போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் அணிந்திருந்த 2 பவுன் 4 கிராம் நகையை மர்ம நபர் திருடி சென்றார்.

    இதே போல் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற மனோரஞ்சிதம் (62) என்பவரிடம் 2 பவுன் நகையும், பாண்டியம்மாள் (45) என்பவரிடம் 3 1/2 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மேலூர் போலீஸ் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • கல்லல் அருகே பழமை வாய்ந்த சிவன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • தொடர்ந்து மாலையில் மாட்டு வண்டி பந்தயமும், இரவில் வள்ளி திருமணம் நாடகமும் நடந்தது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள கீழப்பூங்குடி கிராமத்தில் உள்ள 100 ஆண்டுக்கும் மேற்பட்ட பழமையான பசு ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

    கீழப்பூங்குடி சிவாச்சாரியார் நேரு தலைமையில் யாக பூஜை தொடங்கி நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜையுடன் 3-ம் கால பூஜை தொடங்கியது. யாக சாலை பூஜைகளுடன் கும்ப கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது, ஊர் பொதுமக்கள் சார்பில் கும்ப மரியாதை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதைத் தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    இந்த விழாவில் கீழப் பூங்குடி, மேலப்பூங்குடி, புதுவட்டி, கொடுங்குளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று வழிபாடு செய்னர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் மாட்டு வண்டி பந்தயமும், இரவில் வள்ளி திருமணம் நாடகமும் நடந்தது.கும்பாபிஷேகம் நடந்த சிவன்கோவில்

    • பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 19-ந்தேதி யாகசாலை கால்கோள் விழாவுடன் தொடங்கியது.
    • விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம், 2 நாட்கள் யாகசாலை பூஜைகள், காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தம்மண்ணன் வீதி பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 19-ந்தேதி யாகசாலை கால்கோள் விழாவுடன் தொடங்கியது. விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம், 2 நாட்கள் யாகசாலை பூஜைகள், காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    நேற்று காலை 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா ஓம் சக்தி சரண கோஷத்துடன் நடைபெற்றது. கோபுர கலசங்கள் மீது சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றினார்கள். பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. 2 கருட பகவான்கள் கோயில் மேல் பகுதியில் வட்டமிட்டது பக்தர்களை பரவசமடைய செய்தது.

    பெரிய மாரியம்மன் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை சாந்த மல்லிகார்ஜுன சுவாமிகள், சாலுரு புருஹன் மாதா, நகரமன்ற சேர்மன் விஜய்கண்ணன், முன்னாள் நகரமன்ற தலைவர் தனசேகரன், நாட்டாண்மைக்காரர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • மானாமதுரை அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • 4-ம் கால பூஜை நிறைவடைந்து பூர்ணஹூதியாகி கடம் புறப்பாடு நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வடக்கு சந்தனூரில் அழகிய திருவேட்டை அய்யனார், கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜை மேடை அமைத்து அதில் புனிதநீர் கலசங்கள் வைத்து யாகசாலை பூஜைகள் நடந்தன.

    4-ம் கால பூஜை நிறைவடைந்து பூர்ணஹூதியாகி கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை சுமந்து கோவிலைச் சுற்றி வலம் வந்தனர். பின்னர் பூர்ண புஷ்கலா சமேத அழகிய திருவேட்டை அய்யனார் சன்னதி விமான கலசத்திற்கு புனித நீர்ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பு வழிபாடு செய்தனர்.

    கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×