search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • விருதுநகர் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன், அய்யனார் ஆகிய தெய்வங்களுக்கு உச்சிகால பூஜைகள் நடந்தன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் அருகே உள்ள இனாம் கரிசல்குளம் பொன் இருளப்ப சுவாமி கோவில் வளாகத்தில், புதிதாக பொன் விநாயகர் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக, நூர்சாகிபுரத்தில் பொன் இருளப்ப சுவாமி சாமியாடி அழைப்பு, வைத்தியலிங்காபுரம் கோவில் வீட்டில் இருந்து பொங்கல்பானை அழைத்தல், இரவு சாமி அலங்காரம், அன்னதானம் நடந்தது. கோவில்பட்டி பாலகணேஷ் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும் நடந்தது. 'பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன், அய்யனார் ஆகிய தெய்வங்களுக்கு உச்சிகால பூஜைகள் நடந்தன. இன்று (3-ந் தேதி) அதிகாலை பொங்கல் வைத்தல், அன்னதானம், கிடா வெட்டு நிகழ்வோடு ஆவணித்திருவிழா நிறைவடைந்தது.

    • ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.
    • 8-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    ஈரோடு கோட்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரர் (ஈஸ்வரன்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து வருகிற 8-ந்தேதி கோட்டை ஈஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    இதையொட்டி கடந்த மாதம் 31-ந் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. அதன்படி நேற்று கோபூஜை மற்றும் கஜ பூஜை நடந்தது. இதற்காக பசு மாடு, குதிரை, ஒட்டகம், யானை அலங்கரிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கோ மற்றும் கஜ பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு முதல் கால யாக பூஜையும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், அன்று மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும் நடக்கிறது.

    மேலும் வருகிற 6-ந்தேதி காலை 9 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு 5-ம் கால யாக பூஜையும், 7-ந்தேதி காலை 7 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு 7-ம் கால யாக பூஜையும், 8-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு 8-ம் கால யாக பூஜையும் நடைபெறுகிறது. அன்று காலை 10.35 மணிக்கு உடனமர் ஆருத்ர கபாலீஸ்வர சாமிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்.

    • நாளை (ஞாயிற்றுக்கிழமை) 4, 5-ம் கால யாக பூஜையும் நடக்கிறது.
    • 5-ந்தேதி (திங்கட்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது.

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், அவரது தந்தை ஜெயராமன் குடும்பத்தினரின் குலதெய்வ கோவிலாகும். துர்கா ஸ்டாலினின் ஏற்பாட்டின்படி இந்த கோவிலில் புதிய ராஜகோபுரம், புஷ்கரணி, கொடிமரம் மற்றும் கோவில் திருப்பணிகள் முடிவடைந்தன.

    அதனைத்தொடர்ந்து இந்த கோவிலில் வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது. இதனையொட்டி நேற்று காலை விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, கிரக பிரீத்தி உள்ளிட்ட பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதில், பிள்ளையார்பட்டி தலைமை சிவாச்சாரியார் பிச்சை குருக்கள் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து மாலை முதல்கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி நடந்தது. இதில், துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இன்று (சனிக்கிழமை) 2 மற்றும் 3-ம் கால யாக பூஜையும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 4, 5-ம் கால யாக பூஜையும் நடக்கிறது. 5-ந் தேதி காலை கோமாதா பூஜை, லட்சுமி பூஜை, சுமங்கலி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.

    இதனையடுத்து 6-ம் கால யாக பூஜையும், மகா பூர்ணாகுதியும் நடக்கிறது. பின்னர் கடங்கள் புறப்பட்டு காலை 9.25 மணி முதல் 10.25 மணி வரை ராஜகோபுரம், மூலவர் விமான கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நிவேதா முருகன் எம்.எல்.ஏ., ஞானவேலன், முத்து தேவேந்திரன், வீரசுந்தர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • இளையாத்தங்குடி கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • இந்த கோவில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை 5 முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை 

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள இளையாத்தங்குடியில் கைலாசநாதர் சமேத நித்திய கல்யாணி கோவில் 7 குளங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. நகரத்தார்களின் 9 கோவில்களில் முக்கியமானது இளையாத்தங்குடி கைலாசநாதர் கோவில் ஆகும். இந்த கோவிலில் 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடைந்தன. இதையடுத்து கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் 3 காலபூஜைகளும் பூர்ணாகுதியும் நடந்தது.

    பிள்ளையார்பட்டி பிச்சைகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் புனிதநீர் நிரம்பிய குடத்தை சுமந்து வந்து மேளதாளம் முழங்க யாகசாலையில் இருந்து புறப்பட்டு கோபுரங்களை அடைந்தனர். பின்னர் கோபுரகலசங்களுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் பிரமுகர்கள், சுற்றுபுற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்த கோவில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை 5 முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிலம்பு அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
    • சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிலம்பாவயல் ஸ்ரீ சிலம்பு அய்யனார் கோவிலில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அறந்தாங்கி தாலுகா சிலம்பாவயல் கிராமத்தில் அமைந்து அருள்பாளித்துவரும் ஸ்ரீ சிலம்பு அய்யனார் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று, அப்பகுதி மக்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக யாகசாலை அமைத்து கடந்த 30ம் தேதி முதல் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 2நாட்களாக இரண்டுகால யாகபூஜை நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து அப்புக்காளை கண்ணன் சாஸ்திரிகள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை காண பொதுமக்கள் மற்றும் ஆன்மீக மெய்யன்பர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிலம்பு அய்யனார் அருள்பெற்று சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர் வட்டம் காயாமொழி அருகே உள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து பல்ேவறு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    நேற்று முன்தினம் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.

    நேற்று அதிகாலை 5 மணிக்கு பூர்ணாகுதி, யாகசாலை பூஜை, காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையில் இருந்து புனித நீர் எடுத்துச் சென்று விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து 11 மணிக்கு மகா அபிஷேகம், 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, மகேஸ்வரபூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு மாவிளக்கு பூஜை, 8 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பவனி வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

    இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சிவகாசி, விருதுநகர் போன்ற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்திருந்தனர்.

    ஏற்பாடுகளை கோவில் தக்கார் அஜித், ஆய்வாளர் பகவதி, செயல் அலுவலர் காந்திமதி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • செந்தில் விநாயகா் கோவில் கட்டுவதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
    • காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த இடுவாய் பாரதிபுரம் பிரிவில் உள்ள செந்தில் விநாயகா் கோவில் கட்டுவதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன.இந்தப் பணிகள் அனைத்து நிறைவடைந்ததைத் தொடா்ந்து கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 5-ந் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது.

    முன்னதாக 4-ந்தேதிஅதிகாலை 5 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதலும், காலை 9 மணி முதல் 10 மணிக்குள் தீா்த்தக்குடம் எடுத்தலும், இரவு 9 மணிக்கு விமான கோபுர கலசம் நிறுவுதலும் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

    • காயாமொழி அருகே உள்ளது தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில்.
    • இன்று காலை 9 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயாமொழி அருகே உள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதையொட்டி மங்கள இசை, மகா கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மாலை 4 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், பிரவேசபலி தீபாராதனை நடந்தது.

    நேற்று காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நவக்கிரகசாந்தி ஹோமம், சுதர்சன ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், தனபூஜை, கோபூஜை, மாலை 5 மணிக்கு ரக்‌ஷாபந்தனம், முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

    நேற்று (புதன்கிழமை 2-ம் கால பூஜை தொடர்ந்து மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலை 4 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

    இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பூர்ணாகுதி, 4-ம் கால யாகசாலை பூஜை, காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையில் இருந்து புனித நீர் எடுத்துச் சென்று விமானம் மற்றும் மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அஜித், ஆய்வாளர் பகவதி, செயல்அலுவலர் காந்திமதி மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    • அலங்காநல்லூர் அருகே கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • அன்னதானமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை குமாரம் கிராம மரியாதைகாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் கிராமத்தில் சக்தி விநாயகர், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 2 நாள் யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

    யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    அன்னதானமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை குமாரம் கிராம மரியாதைகாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • 31-ந்தேதி பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.
    • வருகிற 1-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயாமொழி அருகே உள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

    இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, மகா கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், பிரவேசபலி தீபாராதனை நடக்கிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு விக்னேஸ்வரபூஜை, நவகிரகசாந்தி ஹோமம், சுதர்சன ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், தனபூஜை, கோபூஜை, மாலை 5 மணிக்கு ரக்‌ஷாபந்தனம், முதல்கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.

    31-ந் தேதி காலை 9 மணிக்கு 2-ம் கால பூஜை தொடர்ந்து மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலை 4 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

    வருகிற 1-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பூர்ணாகுதி, 4-ம் கால யாகசாலை பூஜை, காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையில் இருந்து புனித நீர் எடுத்துச் சென்று விமானம் மற்றும் மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அஜித், ஆய்வாளர் பகவதி, செயல்அலுவலர் காந்திமதி மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    • பவுர்ணமி தேர் வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
    • தேர் கோவிலை வந்தடைந்ததும் தேர் கும்பாபிஷேகம் நடந்தது.

    நாகர்கோவில் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவிலும் ஒன்று. இந்த கோவிலின் வடிவீஸ்வரம் அழகம்மன் சுந்தரேஸ்வரர் வழிபாட்டு அறக்கட்டளை சார்பில் நேற்று பவுர்ணமி தேர் கும்பாபிஷேக விழா நடந்தது.

    இதையொட்டி நேற்று காலை கோவிலின் கிழக்கு வாயிலில் இருந்து பவுர்ணமி தேர் வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு வழிபாட்டு அறக்கட்டளை தலைவர் சரண்யா நாகராஜன், செயலாளர் சீனிவாச சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பவுர்ணமி தேர் வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியை வடம் பிடித்து இழுத்துதொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, பழவிளை காமராஜர் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி தலைவர் மற்றும் செயலாளர் சுரேந்திரகுமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் கோபாலசுப்பிரமணியம், அக்‌ஷயா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாதஸ்வரம், சிங்காரி மேளம் முழங்க தேர் வீதி உலா நடந்தது. தேர் கோவிலை வந்தடைந்ததும் தேர் கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து மதியம் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் வடிவீஸ்வரம் அழகம்மனின் பெருமை குறித்த சமய சொற்பொழிவு நடந்தது. மாலை 6.30 மணிக்கு பவுர்ணமி தேர் கோவிலின் உட்பிரகாரத்தில் மும்முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7.30 மணிக்குப்பிறகு கோவில் கலையரங்கத்தில் இசை நிகழ்ச்சி நடந்தது.

    • சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.

    புதுக்கோட்டை:

    அறந்தாங்கி தாலுகா வல்லவாரி கிராமத்தில் அமைந்து அருள்பாளித்து வரும் ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று, அப்பகுதி கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 22-ந் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனைத்தொடர்ந்து 2 நாட்களாக மூன்றுகால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று நான்காம்காலயாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து பாலசுப்பிரமணிய குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்கான திரண்டிருந்த அப்பகுதியைச்சு ற்றியுள்ள பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீ சித்திவிநாயகர் அருள்பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×