search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

    புதுக்கோட்டை:

    அறந்தாங்கி தாலுகா பெருங்காடு கிராமத்தில் அமைந்து அருள்பாளித்துவரும் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று அப்பகுதி கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி யாகசாலை அமைத்து கடந்த 11ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 2 நாட்களாக மூன்று கால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று நான்காம்காலயாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.

    கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி அய்யர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்கான திரண்டிருந்த அப்பகுதியைச்சுற்றியுள்ள பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அம்மன் அருள்பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 50க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • 2018ல் கும்பாபிசேகபணிகளுக்காக பாலாலயபூஜை போடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றுவந்தது.
    • இருதரப்பு ஒத்துழைப்போடு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்ததனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி, அல்லாளபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக்கோவிலில் கடந்த 2.6.1995ல் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. இதற்கிடையே 12 ஆண்டுகள் இடைவெளியில் கோவில்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடத்தப்படவேண்டும் என்று ஆகம விதிகள் உள்ளதாக ஆன்மிக பெரியோர்க் கூறுகின்றனர். இந்த நிலையில், பல ஆண்டுகளாக திருக்குட நன்னீராட்டு விழா நடத்தப்படாமல் இருப்பதால், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2018ல் கும்பாபிசேகபணிகளுக்காக பாலாலயபூஜை போடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றுவந்தன.

    பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்பொழுது திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த நிலையில், வரும் 8-9-2022 ஆவணி 23ந்தேதி வியாழக்கிழமை அன்று உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் திருக்கோயில், மற்றும் கரியகாளியம்மன் கோவில் ஆகிய 2 கோயில்களுக்கும் திருக்குட நன்னீராட்டு நடத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், திருக்குட நன்னீராட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு தரப்பினர், ஆகம விதிகளுக்கு மாறாக அம்மன் சிலை உள்ளதாகவும், அதனை சரியான முறையில் வைத்து, கோவிலின் பழமையான முறைகள் மாறாமல் திருக்குட நன்னீராட்டு விழா நடத்த வேண்டுமென கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அல்லாளபுரம் கோவிலில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது:- தொல்லியல் துறையின் கணக்குப்படி 400 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலில் முன்பு உலகேஸ்வரருக்கு வலதுபுறம் கிழக்குப் பார்த்து உண்ணாமுலையம்மன் சன்னதி அமைந்திருந்தது. கடந்த 1982 ம் ஆண்டு அம்மன் சன்னதி உலகேஸ்வரருக்கு இடதுபுறம் தெற்கு பார்த்து மாற்றி அமைத்து விட்டனர். இது ஆகம குறைபாடு, எனவே மீண்டும் அம்மன் சந்நிதி உலகேஸ்வரருக்கு வலதுபுறம் கிழக்கு பார்த்து அமைக்க வேண்டும். மேலும் திருப்பூர் மாவட்ட திருக்கோவில்களின் ஸ்தபதி கார்த்திக் சுட்டிக்காட்டியுள்ள கோவிலில் இருக்கும் ஆகம குறைபாடுகளை சரி செய்து திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இந்து அறநிலையத்துறை திருப்பூர் இணை ஆணையர் அலுவலகத்திற்கு இருதரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இது குறித்து அமைதி குழு ஒன்று ஏற்பாடு செய்து மீண்டும் ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பு ஒத்துழைப்போடு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    • பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    கரூர்:

    கடவூர் வட்டம், மணக்காட்டு நாயக்கனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாம்பலம்மன், முத்தாலம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனிதநீரை எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்தனர். பின்னர் புனிதநீரை யாகசாலையில் வைத்து முதல் காலபூஜை, இரண்டாம் காலபூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் மாரியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. தொடந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஊர் மக்கள் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள வடகரை கிராமத்தில் முத்தையா, அய்யனார் சுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

    இந்த கோவிலில் பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 2 நாட்களாக சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது.

    அருப்புக்கோட்டை பட்டர் பரந்தாமன் குருக்கள் தலைமையில் வேத விற்பனர்கள் தீப, தூப ஆராதனை நடத்தினர்.

    பெரிய பூசாரி செல்வராஜ், டாக்டர் அய்யம்பெருமாள் ஜெயபிரகாஷ்,குமார், ராஜாமணி. முத்துக்குமார். உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஊர் மக்கள் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.

    • மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை தங்கவேல் ஜோதிடர் மற்றும் கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மாலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. 2 நாள் நடைபெற்ற பூஜையில் முதல் நாள் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, விக்னேஸ்வர பூஜை, சுதர்சன ஹோமம், பூர்ணாஹுதி தீபாராத னையும் நடைபெற்றது.

    2- நாள் நடைபெற்ற பூஜையில் அனுக்ஞை பூஜை, ரக்ஷாபந்தனம் கலச பூஜை, தன்வந்திரி ஹோமம், குபேரலெட்சுமி ஹோமம் முடிந்து தீபா ராதனை நடைபெற்றது. தொடர்ந்து ராமேசுவரம், அழகர்கோவில் உள்ளிட்ட புனித தீர்த்தங்களை சிவாச்சாரியார்கள் எடுத்து மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பூஜை பொருட்களும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை தங்கவேல் ஜோதிடர் மற்றும் கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பாலக்காடு பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
    • 36 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது

    திருச்சி:

    திருச்சி காஜாபேட்டை, கிருஷ்ணர் கோவில் தெருவில் அமைந்துள்ள பாலக்காடு பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 36 வருடங்களுக்கு பிறகு இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    முன்னதாக கடந்த 9-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், மகாபூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு காவேரியில் இருந்து திருமஞ்சனம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    10-ந்தேதி இரண்டாம் கால யாக பூஜையும், வேத பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து மகா கும்பாபிஷேக நாளான இன்று காலை 4.30 மணி அளவில் நான்காம் கால பூஜையுடன் வேத விற்பன்னர்கள் யாக சாலையிலிருந்து யாத்திரா தானம் கடத்துடன் புறப்பட்டன. தொடர்ந்து கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்று முழங்கினர்.

    வேத விற்பன்னர்கள் பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர். அதன் பின்னர் கோவிலில் விசேஷ பூஜைகளும், நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாமன்ற உறுப்பினர் மண்டிசேகர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

    • காலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது.
    • நண்பகலில் சிறப்பு அலங்காரபூஜை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி வடக்கு காலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோவிலில் ஊர் மக்கள் சார்பில் வருஷாபிஷேக விழா மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி காலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. பல்வேறு மந்திரங்கள் ஒதப்பட்டது.

    தொடர்ந்து யாகசாலையில் இருந்துபுனித நீர் எடுத்து முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், கோபுர கலசங்களுக்கும் ஊற்றப்பட்டது.

    நண்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜை நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. ஊர் மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

    • ஊர் பொதுமக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் தலைமையில் அமைச்சர் மெய்யநாதனுக்கு பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.
    • அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்லத்துரை ஆகியோர் சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி தூசிமாடன் கோவிலில் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை ஆகியோருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் அழைப்பு விடுக்க ப்பட்டிருந்தது. ஆனால் கும்பாபிஷேகத்தன்று அமைச்சர் அலுவலகப் பணி காரணமாக பங்கேற்க முடியவில்லை.

    இந்நிலையில் நேற்று இரவில் அமைச்சர் மெய்ய நாதன், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தூசிமாடன் கோவிலுக்கு வந்தனர். அங்கு அவருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் தலைமையில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்லத்துரை ஆகியோர் சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.

    விழாவில் சொக்கம்பட்டி வலையர் குடியிருப்பு மூத்தகுடி வளரி வளையல் முத்தரையர் உறவின்முறை தூசிமாடன் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூசைப்பாண்டியன், நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், ஊராட்சி மன்ற தலைவர் பச்சைமால், யூனியன் துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் அருணாசல பாண்டியன், சிங்கிலி பட்டி மணிகண்டன்,கிளை செய லாளர்கள் மணிகண்டன் கருப் பண்ணன், சுப்பிரமணியன், சுரேஷ், கவுன்சிலர்கள் முருகன், முகைதீன்கனி, திவான்மைதீன், கார்த்திக், மைதீன் ஒலி, வக்கீல்கள் அருணாசலம், சசிகுமார், நகர்மன்ற துணைத் தலைவர் அந்தோணிசாமி, வேலுச்சாமி பாண்டியன், வெங்கட்ராமன், முதலியான்கான், இலத்தூர் பரமசிவன், பூரண சந்திரன், பிள்ளையார்பாண்டியன், தங்கபாண்டியன், முத்துராஜ், பாலாஜி, முருகானந்தம், ஞான பண்டிதன், மாரித்துரை, ராஜ், சேகர், செல்லச்சாமி, ரத்தினம், முருகேஷ் , பிச்சையா, கதிரேசன், செல்லச்சாமி, பகவதிபாண்டியன், ராஜா, மணிமாறன், மருதப்பன், ஆனந்தராஜ், விக்ரம் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நாளை முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
    • 11-ந்தேதி காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.

    சென்னை செனாய்நகர் சுப்புராயன் தெருவில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தையொட்டி நாளை (10-ந்தேதி) விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகாசங்கல்பம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை ஆகியவை நடக்கிறது.

    11-ந்தேதி காலையில் 2-ம் கால யாக பூஜை நடக்கிறது. பின்னர் யாக சாலையில் இருந்து புனிதநீர் எடுத்துச்செல்லப்படுகிறது.

    காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.

    • வெங்கமேடு காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    கரூர்:

    கரூர் வெங்கமேடு ஸ்ரீகாமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி விநாயகர் பூஜை, திருக்கலசம் புறபபாடு, அனைத்து கோபுர கும்பாபிஷேகம், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீகாமாட்சியம்மன், ஸ்ரீகருப்பண்ண சாமிகளுக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தச தானம், தச தரிசனம், மஹாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.முன்னதாக, கடந்த 4ம் தேதி விநாயகர் பூஜையுடன் யாகசாலை தொடங்கியது. மஹா கணபதி மற்றும் நவக்கிரக யாகங்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் மண்டபார்ச்சனை, அக்னி கார்யம், கோபுரம் கண் திறத்தல், 2ம் கால பூர்ணாஹுதி, மூலஸ்தானம், அம்பாள் பிரதிஷ்டை நடைபெற்றது. இன்று (ஜூலை 7) தொடங்கி 48 நாட்களுக்கு மாலை 6 மணி முதல் 8 மணி வரை மண்டல பூஜை நடைபெறும்.

    • சென்னிமலை அருகேயுள்ள, முருங்கத் தொழுவு, மயிலாடி மாகாளி–யம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது.
    • தொடர்ந்து, தச தானம், மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகேயுள்ள, முருங்கத் தொழுவு, மயிலாடி மாகாளி–யம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது.

    சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சி, மயிலாடி யில், பழமையான செல்வ விநாயகர் மற்றும் மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மகா கும்பாபிேஷக விழா, 5-ந் தேதி, மங்கள இசையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு, இரண்டாகாம் கால யாக பூஜை, நிறைவேள்வி, தீபாராதனை நடந்தது. காலை, 6.45 மணிக்கு விமான கலசங்களுக்கு சம கால கும்பாபிேஷகமும், பின்னர், செல்வ விநாயகர், மாகாளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, தச தானம், மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது.

    இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிேஷகத்தினை முருங்கத்தொழுவு கிராம பிரலிங்கேஸ்வரர் கோவில் பரம்பரை அர்ச்சகர் சிவாகம ரத்னம் சிவஸ்ரீ. அமிர்தலிங்க சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரி–யார்கள் நடத்தி வைத்தனர். விழாவில் அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ஊஞ்சலூர் அருகில் கிளாம்பாடிகிராமம் கருமாண்டாம் பாளையத்தில் பழமையான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் கற்பக விநாயகர், கருப்பண்ணசாமி, பொட்டுசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிசேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து அனைத்து சுவாமிகளுக்கும் மஹா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிசேக நிகழ்ச்சிகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    • கோயில் திருப்பணி மேற்கொள்ள அரசு ஒப்புதல் கிடைத்துள்ளதால் அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கொரோனா ஊரடங்கு காலத்தில், கோயில்கள் வருவாய் பெரிதும் பாதித்தது.

    பல்லடம் :

    பல்லடம் வட்டாரத்தில் இந்து அறநிலைய துறைக்குட்பட்ட 40க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணி செய்து கும்பாபிசேகம் நடத்திட அரசு அனுமதி அளித்துள்ளது. அதில் பல்லடம் பொன்காளிஅம்மன் கோயிலும் இடம் பெற்றுள்ளது. இந்த கோயில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். நீண்ட காலமாக, இந்த கோயில் கும்பாபிசேகம் நடத்தப்படவில்லை. தற்போது, கோயில் திருப்பணி மேற்கொள்ள அரசு ஒப்புதல் கிடைத்துள்ளதால் அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் இந்து அறநிலையத்துறை செயல்அலுவலர் பிரேமா பேசுகையில், கோயிலுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலம் பல்லடம் நகர பகுதியில் இருந்தும்,கோயிலுக்கு போதிய வருவாய் இல்லை. நிலத்தை குத்தகைக்கு விடுவதால் கூடுதல் வருவாய் கிடைக்கும் இதனால்,கோயில் வருமானம் உயர வாய்ப்பு உள்ளது.கொரோனா ஊரடங்கு காலத்தில், கோயில்கள் வருவாய் பெரிதும் பாதித்தது. அந்தந்த கோயில் வருவாயை அந்த கோயில்களுக்கு மட்டுமே செலவிட முடியும். வங்கி மூலம் கிடைக்கும் வைப்பு தொகை வட்டி கொண்டு தான் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் செய்யப்படுகிறது என்று கூறினார். கோயில் வளாகத்தில் அலுவலக கட்டடம், குடிநீர் வசதி, சுற்றுச்சுவர்உள்ளிட்ட வேலைகள் உள்ளன. முதலில் மதிப்பீடு செய்த பிறகு பணிகள் துவங்கினால் நன்றாக இருக்கும். அதன் பின்னர் செலவு கூடினால் நிதி திரட்டுவதில் சிக்கல் ஏற்படும்.

    எனவே கோயில் வளாகத்தில் போதிய வசதிகளை செய்த பின்னர் கோயில் திருப்பணி மேற்கொள்வது நல்லதாக இருக்கும். மேலும் அடுத்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    ×