search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதி"

    வேலூர் ஜெயிலில் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கைதி உடல்நலக்குறைவால் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என சுமார் 800 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. கடந்த வாரங்களில் 2 கைதிகள் திடீரென இறந்தனர்.

    இந்த நிலையில், கடந்த மாதம் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த சவுகத்அலி (வயது 51) சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் திடீரென பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயில் அதிகாரிகளும், பாகாயம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கமுதி அருகே வீடு புகுந்து 5 பவுன் நகைகளை திருடிய கொள்ளையனை சிறையில் அடைக்க அழைத்து செல்லும் வழியில் தப்பி ஓடிய கைதியை போலீசார் மடக்கிப்பிடித்தார்.
    கமுதி:

    கமுதி அருகே அபிராமம் போலீஸ் சரகம் தீர்த்தான் அச்சங்குளம் கிராமத்தில் வீடு புகுந்து 5 பவுன் நகைகளை திருடியதாக ஏனாதி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரை போலீசார் கைது செய்து முதுகுளத்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    வழக்கு விசாரணைக்காக மகாலிங்கத்தை போலீசார் கமுதி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். பின்னர் முதுகுளத்தூர் சிறையில் அடைக்க கமுதி கோட்டைமேடு பஸ் நிறுத்தத்தில் காத்திருந்போது போலீசாரை ஏமாற்றி விட்டு மகாலிங்கம் தப்பி ஓடினார். போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மகாலிங்கத்தை விரட்டி பசும்பொன் விலக்கு சாலை அருகே மடக்கிப்பிடித்தனர். பின்னர் முதுகுளத்தூர் கிளை சிறையில் அடைத்தனர். இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    பீகாரில் கோர்ட்டு வளாகத்தில் கைதி அபிஷேக் ஜாவுக்கு உதவ வந்த 2 கூட்டாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், குறி தவறி, அபிஷேக் ஜா மீது பட்டதில் கைதி பலியானார்.
    பாட்னா:

    பீகார் மாநிலம் சியோகர் மாவட்டத்தை சேர்ந்தவன் அபிஷேக் ஜா (வயது 30). ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட இவன், ஒரு வழிப்பறி வழக்கில் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான்.

    அந்த வழக்கில், அபிஷேக் ஜாவை சிகாரனாவில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நேற்று அழைத்து சென்றனர். அதே சமயத்தில், அவனை தப்பிக்க வைப்பதற்காக, அவனுடைய கூட்டாளிகள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    கோர்ட்டு வளாகத்தில், தன்னுடன் வந்த போலீசாரின் கண்களில் அபிஷேக் ஜா திடீரென மிளகாய் பொடியை தூவினான். அவன் தப்பிக்க முயன்றபோது, போலீசார் சுதாரித்து தடுக்க முனைந்தனர்.

    அப்போது, அபிஷேக் ஜாவுக்கு உதவ வந்த 2 கூட்டாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், குறி தவறி, அபிஷேக் ஜா மீது பட்டது. உடனே கூட்டாளிகள் தப்பி ஓடி விட்டனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில், அபிஷேக் ஜா இறந்தான். சம்பவ இடத்தில், ஒரு கைத்துப்பாக்கியும், 3 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. 
    புழல் ஜெயில் வாசலில் போலீசாரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓடியது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்.
    செங்குன்றம்:

    சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27), கூலி வேலை செய்து வருகிறார்.

    ஆதம்பாக்கம் பகுதியில் நடந்த அடிதடி தகராறு தொடர்பாக கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை புழல் ஜெயிலில் அடைக்க அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் ஏட்டுகள் 2 பேர் கார்த்திக்கை ஆட்டோவில் ஏற்றி புழல் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர். இரவு 8.30 மணி அளவில் ஆட்டோ புழல் ஜெயில் வாசலை சென்றடைந்தது.

    அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கிய கார்த்திக் போலீஸ் ஏட்டுகள் இருவரையும் தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்.

    கொலை வழக்கில் கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர், தொண்டையில் ஏற்பட்ட கேன்சரையும் குணப்படுத்தி, 6 டிப்ளமோ மற்றும் 1 டிகிரி படித்து முடித்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 வருடங்களுக்கு மேலாக தண்டனை பெற்று வரும் ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் உத்தரவிட்டார்.

    இதையடுத்து, முதற்கட்டமாக சுமார் 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் ஒருவரின் தன்னம்பிகை ஊட்டும் சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

    1989-ம் ஆண்டு கொலை வழக்கில் கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட கைதி சந்திரசேகரன். இவருக்கு சில ஆண்டுகள் முன்பு தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டது. இந்த புற்றுநோயை எதிர்த்து மன உறுதியுடன் போராடியுள்ளார் சந்திரசேகரன்.

    சிறைத்துறை அதிகாரிகளின் உதவியுடனும் மருத்துவர்களின் உதவியுடனும், மன உறுதியுடனும் தனக்கு வந்த உயிர்க்கொல்லி நோயை கடந்து புதுவாழ்வு பெற்றார். அதன்பின்னர் சிறையில் இருந்தபடியே, கல்வியின் மீது தனது கவனத்தை செலுத்தினார்.

    சிறையில் காலத்தை வீணாக்காமல், 50 வயதை கடந்த சந்திரசேகரன், 6 டிப்ளமோ படிப்புகளையும், ஒரு டிகிரியையும் படித்து முடித்து பட்டதாரியாக சுதந்திரம் பெற்றுள்ளார். இதுகுறித்து சந்திரசேகர் கூறும்போது, ‘சிறையில் எனது காலத்தை இனிமையானதாகவும், என்னை சுற்றி இருந்த பகுதிகளை சுவர்க்கம் போலவும் மாற்றிக்கொண்டேன்’ என கூறியுள்ளார்.



    தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை அடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு சந்திரசேகரனை பரிந்துரை செய்துள்ளனர். அவரது நன்னடத்தை மற்றும் உடல்நிலையை கருத்தில் கொள்ளுமாறு அளிக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு, அவர் விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    சந்திரசேகரன் மட்டுமன்றி, சிறையில் இருந்த பலரும் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளதாக கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு நொடியில் உணர்ச்சிவசப்பட்டு செய்த தவறுக்கு பல வருடங்களாக சிறை தண்டனை பெற்ற கைதிகள் தற்போது மனம் திருந்தி, குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

    சிறையிலும் கல்வி கற்கும் இவர்கள், உலகின் பலதரப்பினருக்கும் உதாரணமாக திகழ்வர் என்பதில் ஐயமில்லை. அதேசமயம் சிறைவாசிகள் என்பதனால் மட்டுமே இவர்களுக்கு பணி வழங்க மறுக்கும் சில நிறுவனங்களும் தங்களின் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஓசூர் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைதி தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக சிறை வார்டன் சஸ்பெண்டு செய்யப்பட உள்ளார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கிளைச் சிறையில் தற்போது 32 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இதில் அடிதடி வழக்கில் கைதான கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் ஜீவா நகரை சேர்ந்த தனஞ்ஜெய் (வயது 40) என்ற கைதியும் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று காலை 7.30 மணிக்கு தப்பி ஓடி விட்டார். அவர் வாசல் வழியாக சென்றாரா அல்லது கழிவறை வழியாக சென்றாரா என்று தெரியவில்லை.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்கள்.

    கைதி தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக சிறை வார்டன் சஸ்பெண்டு செய்யப்பட உள்ளார்.

    போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடி விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்த கைதி சந்துருவை போலீசார் கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே தனியார் செங்கல் சூளை உள்ளது.

    இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்கு வேலை பார்த்து வந்த திருக்கோவிலூரை அடுத்த தினிக்கலம்பட்டு கிராமத்தை சேர்ந்த சந்துருவை வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர். போலீஸ் நிலையத்தில் இருந்த போது சந்துரு கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றார். அப்போது திடீரென அவர் சுவர் ஏறிக் குதித்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்த சந்துருவை போலீசார் கைது செய்தனர்.

    இன்று காலை அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய கைதியை இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் தேடி வருகிறார்கள்
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு பகுதியில் தனியார் செங்கல்சூளை உள்ளது. இங்கு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தணிக்கலாம் பட்டு கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் தனியாக இருந்த 7 வயது சிறுமிக்கு தொழிலாளி சந்துரு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுபற்றி சிறுமியின் பெற்றோர் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துருவை கைது செய்து அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறி சந்துரு சென்றார். சிறிது நேரத்தில் அவர் போலீஸ் நிலைய காம்பவுண்டு சுவரை ஏறிக் குதித்து தப்பி ஓடிவிட்டார்.

    இதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுபற்றி போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் தப்பி ஓடிய சந்துருவை தேடி வருகிறார்கள்.


    ×