search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98579"

    • வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், ட்ரோன் கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர்.
    • நாய் கட்டியிருந்த இடத்தில் சிறுத்தையின் கால்தடங்கள் பதிவாகி இருந்தது.

    காங்கயம்:

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊதியூர் வனப்பகுதிக்கு வந்த ஒரு சிறுத்தை பதுங்கி மலையடிவார பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், ட்ரோன்கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர்.ஆனால் சிறுத்தை போக்கு காட்டும் விதமாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகாமலும், கூண்டுகளில் சிக்காமலும், வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மலையடிவார பகுதியில் கடந்த 30 நாட்களுக்கு பின் சிறுத்தை மீண்டும் தன் வேட்டையை தொடங்கியது. ஊதியூர் - காசிலிங்கம் பாளையம் சாலை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கட்டியிருந்த நாயை சிறுத்தை தூக்கி சென்றது. நாய் கட்டியிருந்த இடத்தில் சிறுத்தையின் கால்தடங்கள் பதிவாகி இருந்தது. இதையடுத்து ஊதியூர் வனப்பகுதியில் இன்னும் சிறுத்தை பதுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதை தொடர்ந்து வனப்பகுதிகளில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள 4 கூண்டுகளை தயார் படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அதன்படி கூண்டுக்குள் மாட்டு இறைச்சி மற்றும் உயிருடன் நாயை பாதுகாப்பான முறையில் வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.மேலும் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

    • மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளது.
    • மாநில தலைமை வனப் பாதுகாவலர் (சிசிஎப்) ஜே.எஸ். சவுகான் நேற்று அறிவித்தார்.

    பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதியில் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடியபோது நமீபியா நாட்டின் 8 சிறுத்தை புலிகளை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார்.

    தென் ஆப்பிரிக்காவில் இருந்து 5 பெண், 3 ஆண் சிறுத்தைகளை விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன.

    தொடர்ந்து பிப்ரவரி 18ம் தேதி தென்ஆப்பிரிக்காவில் இருந்து விமானம் மூலம் 12 சிறுத்தைகள் குவாலியருக்கு வரவழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட உதய் என்ற மற்றொரு சிறுத்தை, மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளது.

    இதுதொர்பாக மாநில தலைமை வனப் பாதுகாவலர் (சிசிஎப்) ஜே.எஸ். சவுகான் நேற்று தெரிவித்தார்.

    • சிறுத்தை சிக்காமல், வனத்துறையினருக்கு போக்கு காட்டியது.
    • கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஊதியூர் வனப்பகுதியில் சிறுத்தை குறித்த கால் தடங்கள் எதுவும் தென்படவில்லை.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஊதியூர் வனப்பகுதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வந்த சிறுத்தை மலையடிவாரப்பகுதியில் பதுங்கியதுடன், அங்குள்ள தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் வைத்து, பொதுமக்கள் மாலை , இரவு நேரங்களில் தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்தனர்.

    மேலும் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், டிரோன் கேமராக்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சிறுத்தை சிக்காமல், வனத்துறையினருக்கு போக்கு காட்டியது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஊதியூர் வனப்பகுதியில் சிறுத்தை குறித்த கால் தடங்கள் எதுவும் தென்படவில்லை.

    இதனால் சிறுத்தை வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்ததா? அல்லது வேறு எங்கேயும் வனப்பகுதியில் உள்ள குகைகளில் பதுங்கி இருக்கிறதா? என்ற குழப்பத்தில் வனத்துறையினர் இருந்து வந்தனர்.

    இந்தநிலையில் மலையடிவார பகுதியில் கடந்த 30 நாட்களுக்கு பின் நேற்று ஊதியூர் - காசிலிங்கம் பாளையம் சாலை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கட்டி இருந்த நாயை சிறுத்தை தூக்கி சென்றது.

    நாயை சிறுத்தை தூக்கிச்சென்றதை ஊதியூர் பகுதியை சேர்ந்த ராஜா(வயது40) என்பவர் நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ராஜா கூறும் போது, நேற்று ஊதியூர் - காசிலிங்கம் பாளையம் சாலை பகுதியில் வந்த போது சிறிது தொலைவில் அப்பகுதியில் உள்ள ஒரு பாறை மீது சிறுத்தை உட்கார்ந்திருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் சிறுத்தையை பார்த்துக்கொண்டிருந்தேன். சுமார் 10 நிமிடங்கள் அமைதியாக பாறை மீது உட்கார்ந்திருந்த சிறுத்தை பின்னர் மெதுவாக எழுந்து அவ்விடத்தை விட்டு வனப்பகுதிக்குள் சென்றது.இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தேன் என்றார்.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் மீண்டும் ஊதியூர் வனப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்து காங்கயம் வனத்துறை அலுவலர் தனபாலன் கூறுகையில்,ஊதியூர் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கிடைத்த தகவல் அறிந்து அப்பகுதிக்கு சென்று சிறுத்தையின் கால்தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இதன் மூலம் சிறுத்தை ஊதியூர் வனப்பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்.

    கூண்டுகளை தயார்படுத்தி மீண்டும் சிறுத்தையை பிடிக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த உள்ளோம். பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். சிறுத்தை எங்காவது தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

    சிறுத்தையை பிடிக்க ஊதியூர் வனப்பகுதியில் ஏற்கனவே 3 கூண்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. கூண்டுக்குள்ளும், அதனை சுற்றியும் இறைச்சிகள் போடப்பட்டு இருந்தது. ஆனால் கூண்டு அருகே வரை வந்த சிறுத்தை இறைச்சியை மட்டும் தூக்கி கொண்டு சென்று விட்டது.சில நாட்களாக சிறுத்தை தென்படாத நிலையில் தற்போது மீண்டும் வேட்டையை தொடங்கி உள்ளதால் கூண்டுகளை வேறு இடங்களில் மாற்றி வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 20 இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை பணியாளர்கள் 16 பேர் ஊதியூரில் முகாமிட்டு வனப்பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    10 நாட்களாக சிறுத்தை தென்படாததால் வேறு பகுதிக்கு நகர்ந்து சென்று இருக்கும் என்று எண்ணி அப்பகுதி பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். தற்போது மீண்டும் வேட்டையை தொடங்கியுள்ளதால் அச்சமடைந்துள்ளனர். எனவே சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேவாலா வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து பார்த்தனர்.
    • சிறுத்தை புலியின் உடலை தீ மூட்டி எரித்தனர்.

    ஊட்டி,

    கூடலூர் தாலுகா தேவாலா அருகே கோட்ட வயல் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி.

    இவரது தோட்டத்தில் குடிநீர் தரைக்கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து தான் தினமும் தண்ணீர் எடுத்து அந்த குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், சம்பவத் தன்றும் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்கு சென்றனர்.

    அப்போது கிணற்றுக்குள் எட்டி பார்த்த போது, சிறுத்தை ஒன்று உள்ளே இறந்த நிலையில் கிடந்தது.

    சிறுத்தை கிணற்றுக்குள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் தேவாலா வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போ து கிணற்றுக்குள் கிடந்தது பெண் சிறுத்தை என்பதும், வனத்தை விட்டு வெளியே றிய சிறுத்தை தண்ணீர் குடிப்பதற்காக வந்த போது கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என சந்தே கிக்கின்றனர்.

    மேலும் கிணற்றுக்குள் பிடித்து கொள்ள வேறு வழி இல்லாததால் தண்ணீ ரில் தத்தளித்தவாறு திரிந்த சிறுத்தை சிறிது நேரத்தில், மூச்சு திணறி உயிரிழந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கிணற் றுக்குள் விழுந்து இறந்த சிறுத்தையை மீட்கும் பணி யில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் வனத்துறையினர் அங்கி ருந்து சென்றனர்.

    நேற்று காலை முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேரில் வந்து கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த பெண் சிறுத்தை யின் உடலை கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர்.

    தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் முக்கிய உடற்பா கங்களை சேகரித்து விட்டு சிறுத்தை புலியின் உடலை தீ மூட்டி எரித்தனர்.

    இது குறித்து வனத்து றையினர் கூறும் போது, சுமார் 2 வயது பெண் சிறுத்தை தண்ணீர் அல்லது இரையை தேடி வந்த போது கிணற்றுக்குள் விழுந்து மூச்சு திணறி இறந்தது தெரிய வந்தது.

    • கடந்த சில மாதங்களாக சிறுத்தையின் நடமாட்டம் இல்லாததால் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது என விவசாயிகள் நிம்மதி அடைந்து வந்தனர்.
    • வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர் பகுதியில் கடந்த 2 வருடங்களாக அங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி உள்ள சிறுத்தை ஆடு, மாடு, நாய்களை தாக்கி கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். தொடர்ந்து ஆடு மற்றும் நாய்களை வேட்டையாடிய சிறுத்தை அங்கு உள்ள கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும் வாடிக்கையாகி விட்டது. கடந்த சில மாதங்களாக சிறுத்தையின் நடமாட்டம் இல்லாததால் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது என விவசாயிகள் நிம்மதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பொன்னுசாமி (50) . இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று மாடுகளை வீட்டின் முன் கட்டி வைத்து விட்டு இரவு தூங்க சென்று விட்டார். காலையில் எழுந்து பார்த்த போது தனது மாடு ஒன்று கடிபட்டு பாதி தின்ற நிலையில் இறந்து கிடந்தது. இது பற்றி அருகில் இருந்த விவசாயிகள் தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து சம்பவயிடத்திக்கு வந்த வனத்துறையினர் இறந்த மாட்டை ஆய்வு செய்தனர். இதில் சிறுத்தை தாக்கி மாடு இறந்தது தெரியவந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து சென்றது.
    • வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவதும், சாலையை கடப்பதும் தொடர்கதையாகி வருகின்றன.

    இந்நிலையில் இரவு திம்பம் மலைப்பாதை 24-வது கொண்டை ஊசி வளைவு அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து சென்றது.

    பின்னர் சிறிது தூரம் சாலையில் நடந்து சென்ற சிறுத்தை அருகே உள்ள வனப்பகுதிக்குள் தாவி சென்று மறைந்தது.

    இந்த காட்சியை அவ்வழியாக வாகனத்தில் பயணித்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். சாலையில் உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

    தற்போது திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் எனவும்,

    திம்பம் மலைப்பாதை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    • ஒரு மாதம் கடந்த நிலையில் சிறுத்தை சிக்கவில்லை.
    • மலையடிவாரப்பகுதியில் ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது.

    காங்கயம் :

    காங்கயம் ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தை மலையடிவார பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்கள் ஆகிவற்றை இழுத்து சென்று கொன்று தின்றது. இந்த சம்பவம் தொடர்கதையானதால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். ஊதியூர் மலையடிவார பகுதிக்கு செல்லவே அஞ்சினர். எனவே சிறுத்தையை பிடித்துவனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கடந்த 30 நாட்களுக்கு மேலாக ஊதியூர் வனப்பகுதியில் 30 கண்காணிப்பு கேமராக்கள், 4 கூண்டுகள் ஆகிவற்றை வைத்து கண்காணித்து வந்தனர். ஆனால் இதுவரை சிறுத்தை குறித்த எந்தவித காட்சிகளும் கேமராக்களில் பதிவாகவில்லை. சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டிலும் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வந்தது. மேலும் சிறுத்தை ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி சுமார் 1 மாத காலம் ஆனநிலையில் ஊதியூர் மலையடிவார பகுதியில் வசிக்கும் மக்கள் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமோ? என்று அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது :- ஒரு மாதம்கடந்த நிலையில் சிறுத்தை சிக்கவில்லை. அவ்வப்போது மலையடிவாரப்பகுதியில் ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. மாறாக சிறுத்தையின் கால்தடங்கள் மட்டுமே கிடைத்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் வனத்துறை வீரர்கள் சிலர் சிறுத்தையை நேரில் பார்த்ததாக தெரிவித்தனர்.

    இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிறுத்தை வனப்பகுதியை விட்டு வந்து ஆடு மாடுகளை வேட்டையாடவில்லை. சமீபத்திய கால்தடங்களும் கிடைக்க வில்லை. இதனால் எங்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இரவு நேரங்களில் வழக்கம் போல் இதுவரை வெளியே நடமாட முடியவில்லை. தற்போது ஊதியூர் வனப்பகுதியில் சிறுத்தை பதுங்கி உள்ளதா? எனவும் சந்தேகம் உள்ளது. இதனால் பெரும் குழப்பம் அடைந்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது :- வனப்பகுதிக்குள்ளேயே சிறுத்தை பதுங்கி இருந்து அங்குள்ள மான்களை வேட்டையாடி சாப்பிட்டு வரலாம். வனப்பகுதியில் அதற்கு உணவு கிடைக்காமல் போனால் வெளியே வந்து வேட்டையாடலாம். ஆனால் இதுவரை சிறுத்தை வேட்டையாடி சென்றதாக எந்த தகவலும் வரவில்லை. ஒருவேளை வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்ததா? என தெரியவில்லை. அப்படி சிறுத்தை இடம் பெயர்ந்தால் கண்டிப்பாக உணவிற்காக வெளியிடங்களில் வேட்டையாடி இருக்கும். இதுபோன்ற எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை. இதனால் எங்களுக்கே குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. எனவே மேலும் 2 அல்லது 3 நாட்கள் பொறுத்திருந்து சிறுத்தை குறித்த ஏதாவது தகவல் கிடைக்கிறதா? என்று பார்க்க வேண்டும். நாங்கள் தொடர்ந்து சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். பொதுமக்கள் யாராவது சிறுத்தையை பார்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் என தெரிவித்துள்ளனர்.

    • பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன.
    • சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, சுற்றிதிரிந்தது.

    கோத்தகிரி

    கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது.

    இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலை விளங்குகிறது. இங்குள்ள பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன.

    இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதி என்பதால், இங்குள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலைகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, அங்குள்ள சாலை வழியாக நடந்து சென்றது. பின்னர் அந்த அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து மறைந்தது. இந்த காட்சிகள் அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்த தகவல் வெளியே பரவியதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் கரடிகள் மற்றும் சிறுத்தைகள் அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் முகாமிட்டுள்ளதால், பச்சை தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் பணிக்கு செல்ல தயக்கம் காண்பித்து வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே இதே பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 சிறுத்தைகள் மற்றும் 2 கருஞ்சிறுத்தைகள் உலா வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிறுத்தை ஒன்று அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த வளர்ப்பு நாயை கவ்வி சென்றது.

    இது தவிர அங்குள்ள சாலையில் தினமும் கரடிகள், முள்ளம் பன்றிகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே வனவிலங்குகள் பொதுமக்களை தாக்கி அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன் வனத்துறையினர் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஊதியூர் வனப்பகுதியில் 30 கண்காணிப்பு கேமராக்கள், 4 கூண்டுகள் ஆகியவற்றை வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சித்து வந்தனர்.
    • மக்கள் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே ஊதியூர் வனப்பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக பதுங்கி இருக்கும் சிறுத்தை மலையடிவார பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்கள் ஆகியவற்றை கொன்று வனப்பகுதிக்குள் கொண்டு சென்று சாப்பிட்டு வருகிறது. இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஊதியூர் வனப்பகுதியில் 30 கண்காணிப்பு கேமராக்கள், 4 கூண்டுகள் ஆகியவற்றை வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சித்து வந்தனர். ஆனால் இதுவரை சிறுத்தை குறித்த எந்தவித காட்சிகளும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகவில்லை. சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டுள்ள எந்த கூண்டிலும் சிறுத்தை சிக்கவில்லை.

    இருப்பினும் வனத்துறையினர் இடைவிடாது இரவு - பகலாக சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து வனத்துறை வீரர்கள் வனப்பகுதியில் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் சிறுத்தை அடிக்கடி வந்து செல்லும் இடத்தை கண்டுபிடித்து அப்பகுதியில் கூண்டுகள் வைத்து பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். மேலும் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு மாற்றி பொருத்தி கண்காணித்து வருகின்றனர். ஆனால் சிறுத்தை கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும் இடத்தை விடுத்து மற்ற இடங்களில் சுற்றி வருகிறது. இதனால் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் உள்ளனர்.

    மேலும் சிறுத்தை ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி சுமார் 1 மாத காலம் ஆன நிலையில் ஊதியூர் மலையடிவார பகுதியில் வசிக்கும் மக்கள் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து காங்கயம் வனத்துறை அலுவலர் தனபாலன் கூறுகையில் "சிறுத்தை வந்து போகும் இடங்களை ஆராய்ந்து கண்டறிந்து அப்பகுதியில் சுற்றிலும் கண்காணிப்பு வளையம் போடப்பட்டு, கூண்டு வைத்து அதில் உயிருடன் ஆடு மற்றும் நாயை பாதுகாப்பான முறையில் அடைத்து வைத்து பிடிக்க முயற்சி செய்து வருகிறோம்.

    மேலும் கூண்டை சுற்றி வீசப்பட்ட இறைச்சி துண்டுகளை மட்டும் இரவு நேரத்தில் சிறுத்தை வந்து சாப்பிட்டு சென்றுள்ள கால்தடம் பதிந்துள்ளது. ஆனால் கூண்டுக்குள் இருக்கும் இறைச்சி துண்டுகளை சாப்பிடாமல் சென்றுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது விரைவில் கூண்டுக்குள் இருக்கும் இறைச்சியை சிறுத்தை சாப்பிட வரும் போது கூண்டுக்குள் சிக்க வாய்ப்புள்ளது. இதை வைத்து பார்க்கும்போது சிறுத்தை இன்னும் சில நாட்களில் சிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுத்தையின் செயல்பாடுகள் வனவிலங்கு ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
    • சூரிய நமஸ்காரம் செய்வதில் சிறுத்தைக்கும் இத்தனை ஆர்வமா? என கேள்வி கேட்ட இணையதளவாசிகள், அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

    வனவிலங்குகள் காட்டுக்குள் சுற்றிவருவதையும், எதிரிகளை வேட்டையாடுவதையும் வனவிலங்கு ஆர்வலர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம்.

    மின்னல் வேகத்தில் ஓடும் மான், வேட்டையை துரத்தி செல்லும் சிங்கம், புலி, சிறுத்தை, இவற்றிடம் இருந்து தப்பிக்க முயலும் சிறு விலங்குகள் போன்றவற்றை வீடியோவாக பார்க்கும் பலரும் வனவிலங்குகளை கண்டு மிரண்டுபோவார்கள்.

    அந்த வகையில் இந்திய வனத்துறை அதிகாரி சாகேத் படேலா என்பவர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ, சிறுத்தைகள் பற்றிய சிந்தனையை மாற்றும் விதத்தில் அமைந்துள்ளது. அந்த வீடியோவில் சிறுத்தை ஒன்று அதிகாலை பொழுதில் எழுந்து காட்டுக்குள் நடைபோடுகிறது. பின்னர் சூரியனை பார்த்தபடி கால்களை நீட்டுகிறது.

    பின்னர் சூரியநமஸ்காரம் செய்வது போல செயல்படுகிறது. சிறுத்தையின் இந்த செயல்பாடுகள் வனவிலங்கு ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த வீடியோ ரஷிய தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. சூரிய நமஸ்காரம் செய்வதில் சிறுத்தைக்கும் இத்தனை ஆர்வமா? என கேள்வி கேட்ட இணையதளவாசிகள், அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

    யோகா ஆசிரியர் இல்லாமல் இந்த சிறுத்தைக்கு யோக கற்று கொடுத்தது யார்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    • சிறுத்தை ஒன்று சாலையில் உலா வந்தது.
    • செல்போன்களில் படம் பிடித்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    திம்பம் மலைப்பாதையில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம்-கர்நாடகம் இடையே முக்கிய பாதையாக திம்பம் மலைப்பாதை உள்ளது.

    இதனால் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் வனப்பகுதி களில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வெளியேறும் வன விலங்கு கள் சாலையோ ரங்களுக்கு வந்து நின்று கொள்கின்றன.

    சில சமயங்களில் வனப்பகு தியையொட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடுகின்றன.

    இந்த நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி 4 பேர் காரில் சென்று கொண்டு இருந்தனர்.

    மலைப்பாதையின் 24-வது கொண்டை ஊசி வளைவில் கார் திரும்பியபோது சிறுத்தை ஒன்று சாலையில் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டி அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் காரில் இருந்தவர்கள் சிறுத்தையை தங்களுடைய செல்போன்களில் படம் பிடித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று சிறுத்தை மறைந்து கொண்டது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனப்பகுதி களில் இரவு நேரங்களில் சிறுத்தையின் நடமாட்டம் அடிக்கடி நடைபெறுகிறது.

    இதனால் மலைப்பாதைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும் என்றும், வாகனங்களை மலைப்பாதையில் நிறுத்த கூடாது என்றும் எச்சரித்த னர்.

    • கன்றுக்குட்டி, ஆடு என 3 கால்நடைகளை சிறுத்தை தாக்கி கொன்றது
    • கூண்டு வைத்தும், 15 இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்தும் கண்காணித்து வருகின்றனர்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் - ஊதியூர் பகுதியில் கடந்த 3ந் தேதி துவங்கி 7ந் தேதி வரை குறிப்பிட்ட நாள் இடைவெ ளியில் கன்றுக்குட்டி, ஆடு என 3 கால்நடைகளை சிறுத்தை தாக்கி கொன்றது. இதனை உறுதி செய்த வனத்துறையினர் 4 இடங்களில் கூண்டு வைத்தும், 15 இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்தும் கண்காணித்து வருகின்றனர்.

    இருப்பினும் சிறுத்தை கேமராவில் சிக்கவில்லை. இந்நிலையில் காசிகவுண்ட ம்பாளையம் பகுதியில், அகஸ்டின் என்பவரது வளர்ப்பு நாயை சிறுத்தை இழுத்து சென்றதாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வனத்துறையினர் கூறுகையில், செடி, கொடி, மரங்கள் அடர்ந்து படர்ந்துள்ள நிலையில் மலையின் மேல் பகுதியில் சமதள பரப்பை காண முடிகிறது. மலைத்தொடரில் ஆங்காங்கே குகைகளும் உள்ளன. இவை சிறுத்தைகள் வாழ்வதற்கான கட்டமைப்பு டன் தான் உள்ளன.எனவே அங்கு சுற்றித்திரியும் சிறுத்தை அந்த மலைத்தொ டரை தனது வாழ்விடமாக்கி கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. இருப்பினும் சிறுத்தையை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

    ×