search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98643"

    • ஒரு கிலோ ரூ.510-க்கு விற்பனை
    • 27 எண்ணம் கொண்ட இறால் மீன்கள் 1 கிலோ எடையிருந்தது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கடல் பகுதியில் கடந்த 1ந் தேதி முதல் 6 ந் தேதி வரை பலத்த காற்று வீசும் என மீன் துறை மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து குமரி மாவட்ட கட்டுமர மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    கடந்த ஒரு வாரமாக குமரி மாவட்டத்தில் மீன்பிடித்தொழில் பாதி க்கப்பட்டது.இந்நிலையில் மழை சற்று குறைந்த நிலையில் நேற்று குறும்ப னை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மாலை 6 மணியளவில் அவர்கள் கரை திரும்பினர். கரை திரும்பிய மீனவர்களின் வலையில் ஏராளமான இறால் மீன்கள் கிடைத்தது. 27 எண்ணம் கொண்ட இறால் மீன்கள் 1கிலோ எடையிருந்தது.

    ஒரு கிலோ இறால் மீன் ரூ.490 முதல் ரூ.510 வரை விலை போனது.இதை மீன் வியாபாரிகள் போட்டிப் போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.ஒரு வாரமாக மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று குறும்ப னையில் இறால் மீன் கிடைத்த தால் குறும்பனை யில் மீனவர்கள் மகிழ்ச்சி யடைந்தனர்.

    • வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
    • ராமேசுவரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் 1500 விசைப்படகுகள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பாக் ஜலசந்தி மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் 50 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.

    இதனால கடல் சீற்றமாக உள்ளது. இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று திடீர் தடை விதித்தனர்.

    இதைத் தொடர்ந்து ராமேசுவரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் 1500 விசைப்படகுகள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த தடை காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள், 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாததால் ரூ. 3 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • சுமார் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறது
    • வானிலை எச்சரிக்கையை அடுத்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் அனைத்தும் நேற்று கரை திரும்பி உள்ளன என்பது குறிப்பிட்டத்தக்கது

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் தொடரும் சூறைக்காற்று காரணமாக கட்டுமரங்கள் இன்று 4 வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறது.குளச்சல் பகுதியில் கடந்த 4 நாட்களாக பலத்த காற்று வீசுகிறது. கடல் பகுதியில் சூறைக் காற்று வீசுகிறது.இதனால் கடலில் ராட்சத அலைகள் எழுந்து கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    கட்டுமரங்கள் மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. 1 ம் தேதி முதல் 4 ம் தேதிவரை (இன்று) மீன்வளத்துறை மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என கடந்த 1ம் தேதி வானிலை எச்சரிக்கை அறிவித்திருந்தது.மழை விட்டுவிட்டு பெய்து வந்தாலும் கடலில் காற்று தொடர்ந்து வீசி வருகிறது.

    தொடர்ந்து கடல் சீற்றமாக இருந்து வருகிறது. இதனால் இன்று 4 வது நாளாக குளச்சலில் பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.இதனால் குளச்சலில் 4 வது நாளாக மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

    வானிலை எச்சரிக்கையை அடுத்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் அனைத்தும் நேற்று கரை திரும்பி உள்ளன என்பது குறிப்பிட்டத்தக்கது.அவை குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • விசைப்படகுகள் குளச்சல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.

    கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் நேற்று முதலே கடல் சீற்றமாக காணப்பட்டது. இன்று 2-வது நாளாக கடல் சீற்றமாக இருந்தது. குளச்சல் பகுதியில் மீன்பிடி தடைகாலம் முடிந்து நேற்று பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பாதி தூரம் சென்றதும் கடல் சீற்றத்தின் காரணமாக கரை திரும்பினார்கள். இதையடுத்து விசைப்படகுகள் குளச்சல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    மார்த்தாண்டம் துறை, வள்ளவிளை, நீரோடி, இறையுமன்துறை, பூத்துறை, ராஜாக்கமங்கலம் துறை, கோவளம், கன்னியாகுமரி பகுதிகளிலும் கடல் சீற்ற மாக இருந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசைப்படகுகள், கட்டுமரங்கள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. குளச்சல், சின்னமுட்டம் துறைமுகங்கள் வெறிச் சோடி காணப்பட் டது.

    சின்ன முட்டம் துறைமுகப் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் விசைப்படகு நடுக்கடலில் பழுதானதால் 18 மீனவர்கள் நடுக்கடலில் தவித்தனர். இதையடுத்து சக மீனவர்கள் நடுக்கடலில் தவித்த 18 மீனவர்களையும், பழுதான விசைப்படகையும் மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர். குளச்சல் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக கடற்கரையை ஒட்டி உள்ள வீடுகள் வரை கடல அலைகள் வந்து செல்கிறது.

    அழிக்கால், பிள்ளை தோப்பு பகுதிகளிலும் கடல் சீற்றமாக உள்ளது. ராட்சத அலைகள் 15 அடி முதல் 20 அடி வரை உயரத்திற்கு எழும்பிய வண்ணம் உள்ளது. இதனால் கடற்கரை ஓரத்தில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • நேற்று காலை முதல் மேற்கு கடற்கரை பகுதி விசைப்படகினர் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்
    • 75 படகுகள் கரை திரும்பி குளச்சல் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட் டுள்ளது

    கன்னியாகுமரி :

    மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் விசைப்படகுகள் மீன் பிடிக்க மத்தியரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது.

    இந்த தடைக்காலம் குமரி மாவட்டத்தில் 2 பருவ காலமாக உள்ளது. கன்னியாகுமரி சின்னமுட்டம் கடல் பகுதிகள் கிழக்கு கடற்கரையில் உள்ளதால் அங்கு கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் வரை தடைக்காலம் அமலில் இருந்தது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்கள் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

    இந்த கடற்கரையில் கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி (நேற்று முன்தினம்) நள்ளிரவு வரை தடைக்காலம் அமலில் இருந்தது. இதையடுத்து நேற்று காலை முதல் மேற்கு கடற்கரை பகுதி விசைப்படகினர் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதற்காக விசைப்படகினர் கடந்த சில நாட்களாக தயாராகி வந்தனர்.

    இந்நிலையில் கடலில் நேற்று முதல் 3 ம் தேதிவரை மணிக்கு 50 கி.மீ.வேகம்வரை சூறைக்காற்று வீசும் என மீன்துறை மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இந்த தகவல் வருவதற்கு முன்பே விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று விட்டன.மீன் பிடிப்பதற்கு சென்ற படகுகள் கடலில் வீசிய காற்றில் தொடர்ந்து படகை செலுத்த முடியாததால் அவை பாதியிலேயே கரை திரும்பின. நேற்று இரவு வரை சுமார் 75 படகுகள் கரை திரும்பி குளச்சல் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட் டுள்ளது. மீதி படகுகள் கரையை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்றன என மீனவர்கள் தெரிவித்தனர். 2 மாத தடைக்காலத்திற்கு பின்பு மீண்டும் மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் முதல் நாளிலேயே நேற்று பாதியிலேயே கரை திரும்பியதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். அவர்களது வலைகளில் குறைந்த அளவிலான கணவாய் மீன்கள் மட்டுமே சிக்கி இருந்தன. இன்றும் கடலுக்கு செல்ல முடியாததால் விசைப் படகுகள், பைபர் வல்லங்கள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.

    • சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த ஆலன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 18 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • படகு கடல் சீற்றத்தில் சிக்கி பழுதடைந்தது. இதனால் அவர்கள் படகை தொடர்ந்து ஓட்ட முடியாமல் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன் பிடித்துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு 350- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த துறைமுகத்தில் இருந்து சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த ஆலன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 18 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நடுக்கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது படகு கடல் சீற்றத்தில் சிக்கி பழுதடைந்தது. இதனால் அவர்கள் படகை தொடர்ந்து ஓட்ட முடியாமல் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

    இதற்கிடையில் நடுக் கடலில் வீசிய பயங்கர சூறாவளிகாற்றில் இவர் களது விசைப்படகு சிக்கி 22 நாட்டிக்கல் மைல் தொலைவில் தென்கிழக்கு திசையை நோக்கி படகு அடித்து செல்லப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து இன்னொரு விசைப்படகில் மீனவர்கள் விரைந்து சென்று நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 18 மீனவர்ளையும் அவர்களது விசைப் படகையும் மீட்டு கரைக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தனர்.

    • ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

    இதேபோல் கடந்த 20-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். சில மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்தனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரத்ைத சேர்ந்த அந்தோணி, மடகு பிச்சை, பாலமுருகன், தங்க பாண்டி, அர்ஜூனன், ராஜா ஆகிய 6 மீனவர்களையும், அவர்கள் சென்ற விசைப்படகையும் சிறைபிடித்தனர்.எல்லை தாண்டி மீன்பிடித்த தாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அந்த மீனவர்கள் 6 பேரையும், அவர்களது விசைப்படகையும் விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.

    இதை தொடர்ந்து இன்று ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு மீனவர் சங்கங்கள் சார்பில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கைது செய்யப்பட்ட 6 மீன வர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் சங்க தலைவர் சகாயம் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு இலங்கை கடற்படையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர் சங்கத்தினர் கூறும்போது, இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலங்ைக கடற்படை பறிமுதல் செய்த விசைப்படகுகளையும் மீட்டு தர வேண்டும்,

    இலங்கை கடற்படை தாக்குதலில் சேதமான படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • பேராலயத்திலிருந்து எழுந்தருளிய புனித உத்திரிய மாதா தேரினை மகாராஷ்டிர மாநிலம் மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவ பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்.
    • தேர் நிலையை வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித உத்திரிய மாதா ஆலய ஆண்டு திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாலமாக துவங்கியது. மாதா கோவிலின் முக்கிய திருவிழாவான தேர்பவனி நடைபெற்றது.

    பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் புனிதம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து பேராலயத்திலிருந்து எழுந்தருளிய புனித உத்திரிய மாதா தேரினை மகாராஷ்டிர மாநிலம் மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவப் பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்.

    தேரானது வேளாங்க ண்ணி கடற்கரை, உத்திரிய மாதா, ஆரியநாட்டு தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றபோது இருபுறமும் நின்றிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித உத்திரிய மாதா, செபஸ்தியர், அந்தோணியார் தேர் மீது மலர்களை தூவி தங்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினர்.

    தேர் நிலையை வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர். வேளாங்கண்ணி புனித உத்திரிய மாதா ஆலய ஆண்டு திருவிழா நாளை காலை கொங்கனி மொழியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு கொடியிறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.

    • வாணகிரி உள்ளிட்ட 8 கிராமங்கள் சுருக்குமடி வலை தொழில் செய்யாமல் நிறுத்திகொண்டு ஒரு சில வருத்தங்களின் காரணமாக எங்களையும் தொழில் செய்யவிடாமல் தடுக்கின்றனர்.
    • கடற்பகுதியில் வந்து மீன்பிடிப்பதை அனுமதிக்கும் தரங்கம்பாடி வாணகிரி கிராமமும், மாவட்ட நிர்வாகமும், நாங்கள் இத்தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    தமிழகத்தில் பாண்டி ச்சேரி உள்ளிட்ட அனைத்து கடலோர மாவட்டங்களிலும் சுருக்குமடி வலை தொழில்' நடைபெறுவதாகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலை தொழிலை அனுமதிக்க மீனவர்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பூம்புகார் மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா மற்றும் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் மீனவ கிராமத்தினர் மனு அளித்தனர்.

    மீனவர்கள் அளித்த மனுவில், 2004ம் ஆண்டு முதல் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்துவந்தோம். மயிலாடுதுறை மாவட்ட த்தில் உள்ள 28 மீனவ கிராமங்களில் சின்னூர்பேட்டை முதல் கொடியம்பாளையம் வரை 25 கிராமங்களில் இத்தொழில் நடந்தது.

    கடந்த 2020ம் ஆண்டு தரங்கம்பாடி, வாணகிரி உள்ளிட்ட 8 கிராமங்கள் சுருக்குமடி வலை தொழில் செய்யாமல் நிறுத்திகொண்டு ஒரு சில வருத்தங்களின் காரணமாக எங்களையும் தொழில் செய்ய விடாமல் தடுக்கின்றனர்.

    சுருக்குமடி வலை தொழில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி உட்பட அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நடைபெ றுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் சுருக்குமடிவலை தொழில் நடைபெறவில்லை.

    இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 கிராமங்களில் உள்ள மீனவர்கள் வறுமையாலும், பொருளா தார ரீதியாகவும் மனஉ ளைச்சலுக்கு உட்பட்டு வாழ வழியில்லாமல் உள்ளோம். மற்ற மாவட்டங்களில் உள்ள சுருக்குவலை பயன்படுத்தும் மீனவர்கள் நமது மாவட்ட கடற்பகுதியில் வந்து மீன்பிடிப்பதை அனுமதிக்கும் தரங்கம்பாடி வாணகிரி கிராமமும், மாவட்ட நிர்வாகமும், நாங்கள் இத்தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    ஆழ்கடல் சென்று மீன்பிடிப்பதால் அருகில் உள்ள மீனவ கிராமங்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாது. மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறைகளுக்கு உட்பட்டு சட்டம் ஒழுங்கு கெடாத வகையில் மீன்பிடி தொழில் செய்வோம். சுருக்குமடி வலை பயன்படுத்துவது குறித்து இருதரப்பு மீனவர்களையும் அழைத்து பேசி சுமூக தீர்வுகான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • அரங்க குப்பம் லைட் ஹவுஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
    • 16 கிராம மீனவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கூணங்குப்பத்தில் நடைபெற்றது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியை சுற்றி 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள், கட்டுமரங்களில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    பழவேற்காட்டில் பிடிக்கப்படும் மீன், இறால், நண்டு அதிகமாக ஆந்திரா, கர்நாடகா, பெங்களூர், அசாம் மற்றும் தமிழ கத்தின்பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் மாவட்ட மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் பழவேற்காட்டில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கருத்து கேட்பு கூட்டம் கடந்த மாதம் 16-ந் தேதி பழவேற்காட்டில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

    இதில் மீன்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, அரங்க குப்பம் லைட் ஹவுஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 கிராம மீனவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கூணங்குப்பத்தில் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் தெரிவித்த இடத்தில் சிறிய துறைமுகம் அமைத்தால் கடல் அரிப்பு ஏற்படும் எனவும் இதனால் பத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் அதிகாரிகள் மீனவர்களிடம் ஆலோசனை கேட்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

    எனவே கூனங்குப்பம் வடக்கு பகுதியில் மீன்பிடி துறைமுகத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று மீனவகிராமமக்கள் தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் கடல் அரிப்பு ஏற்படாது எந்த கிராமத்திற்கும் பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இதுபற்றி அமைச்சர், எம். எல்.ஏ மற்றும் அதிகாரிகளை சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவிக்க திட்டமிட்டு உள்ளனர்.

    • சூறாவளி காற்றுக்கு இடையே மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது சிக்கியது.
    • ரூ.1 லட்சத்து10ஆயிரத்துக்கு ஏலம் போனது

    கன்னியாகுமரி:

    சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று சூறாளி காற்று வீசியதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில்இருந்து குறைந்த அளவு விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

    இந்த சூறாவளி காற்றுக்கிடையே கன்னியா குமரியைச்சேர்ந்த விசை ப்படகு மீன வர்கள்வீசிய வலையில் 300 கிலோ எடைகொண்ட ராட்சத சுறாமீன் ஒன்று சிக்கியது.

    அதேபோல 200 கிலோ எடை கொண்ட இன்னொரு சுறா மீனும் சிக்கியது. உடனே அவர்கள் அவசர அவசரமாக சின்ன முட்டம் துறைமுகத்துக்கு கரைதிரும்பினர்.

    அதன் பிறகு அந்த 2 ராட்சத சுறா மீனை அவர்கள் படகில் இருந்து ராட்சத கிரேன் மூலம் இறக்கினர்.

    அந்த ராட்சத மீனை மீன் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். 300 கிலோ எடை கொண்ட சுறா மீன் ரூ.60 ஆயிரத்துக்கும் 200கிலோ எடை கொண்ட சுறாமீன்ரூ.50ஆயிரத்துக்கும் ஏலம் போனது.

    பின்னர் அந்த 2 ராட்சத சுறா மீனையும் கிரேன் மூலம் தூக்கி லாரியில் வைத்து எடுத்து சென்றனர். மீன்பிடி தடைகாலம் முடிந்த பிறகு இப்போதுதான் இவ்வளவு பெரிய ராட்சத சுறாமீன் சிக்கி உள்ளது என்று மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • இன்று குளச்சல், முட்டம் மண்டைக்காடு, குறும்பனை உள்ளிட்ட கடல் பகுதிகளில் சூரை காற்றுடன் மழை பெய்வதோடு கடல் சீற்றமாகவே காணப்பட்டது.
    • குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் 3000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் தங்கள் படகுகளை கரையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

    குளச்சல், ஜூன்.30-

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 3000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது தமிழகத்தில் நிலவி வரும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மீனவர்கள் வரும் மூன்று நாட்களுக்கு லட்சதீவு மற்றும் கேரளா கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியது.

    இந்த நிலையில் இன்று குளச்சல், முட்டம் மண்டைக்காடு, குறும்பனை உள்ளிட்ட கடல் பகுதிகளில் சூரை காற்றுடன் மழை பெய்வதோடு கடல் சீற்றமாகவே காணப்படு வதால் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் 3000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் தங்கள் படகுகளை கரையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

    ×