search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு
    X

    சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க கோரி எஸ்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு

    • வாணகிரி உள்ளிட்ட 8 கிராமங்கள் சுருக்குமடி வலை தொழில் செய்யாமல் நிறுத்திகொண்டு ஒரு சில வருத்தங்களின் காரணமாக எங்களையும் தொழில் செய்யவிடாமல் தடுக்கின்றனர்.
    • கடற்பகுதியில் வந்து மீன்பிடிப்பதை அனுமதிக்கும் தரங்கம்பாடி வாணகிரி கிராமமும், மாவட்ட நிர்வாகமும், நாங்கள் இத்தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    தமிழகத்தில் பாண்டி ச்சேரி உள்ளிட்ட அனைத்து கடலோர மாவட்டங்களிலும் சுருக்குமடி வலை தொழில்' நடைபெறுவதாகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலை தொழிலை அனுமதிக்க மீனவர்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பூம்புகார் மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா மற்றும் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் மீனவ கிராமத்தினர் மனு அளித்தனர்.

    மீனவர்கள் அளித்த மனுவில், 2004ம் ஆண்டு முதல் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்துவந்தோம். மயிலாடுதுறை மாவட்ட த்தில் உள்ள 28 மீனவ கிராமங்களில் சின்னூர்பேட்டை முதல் கொடியம்பாளையம் வரை 25 கிராமங்களில் இத்தொழில் நடந்தது.

    கடந்த 2020ம் ஆண்டு தரங்கம்பாடி, வாணகிரி உள்ளிட்ட 8 கிராமங்கள் சுருக்குமடி வலை தொழில் செய்யாமல் நிறுத்திகொண்டு ஒரு சில வருத்தங்களின் காரணமாக எங்களையும் தொழில் செய்ய விடாமல் தடுக்கின்றனர்.

    சுருக்குமடி வலை தொழில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி உட்பட அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நடைபெ றுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் சுருக்குமடிவலை தொழில் நடைபெறவில்லை.

    இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 கிராமங்களில் உள்ள மீனவர்கள் வறுமையாலும், பொருளா தார ரீதியாகவும் மனஉ ளைச்சலுக்கு உட்பட்டு வாழ வழியில்லாமல் உள்ளோம். மற்ற மாவட்டங்களில் உள்ள சுருக்குவலை பயன்படுத்தும் மீனவர்கள் நமது மாவட்ட கடற்பகுதியில் வந்து மீன்பிடிப்பதை அனுமதிக்கும் தரங்கம்பாடி வாணகிரி கிராமமும், மாவட்ட நிர்வாகமும், நாங்கள் இத்தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    ஆழ்கடல் சென்று மீன்பிடிப்பதால் அருகில் உள்ள மீனவ கிராமங்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாது. மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறைகளுக்கு உட்பட்டு சட்டம் ஒழுங்கு கெடாத வகையில் மீன்பிடி தொழில் செய்வோம். சுருக்குமடி வலை பயன்படுத்துவது குறித்து இருதரப்பு மீனவர்களையும் அழைத்து பேசி சுமூக தீர்வுகான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×