search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    தீபாவளியன்று (6-ந் தேதி) காலை, மாலை இரு வேளைகளிலும் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்க கவசமும், சொக்கநாத பெருமானுக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டு சிறப்பு தரிசனம் செய்விக்கப்படும்.
    மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கோவிலில் ஐப்பசி மாதம் நடைபெறும் திருவிழாக்கள் விவரம் வருமாறு:-

    நாளை (3-ந் தேதி) ஐப்பசி பூரத்தையொட்டி காலை 10 மணியளவில் மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கும், உற்சவர் அம்பாளுக்கும் ஏத்தி இறக்குதல் சடங்குகள் நடந்து தீபாராதனை நடை பெறும்.

    உச்சிகாலத்தில் ஆலவட் டத்துடன் உற்சவர்-அம்மன் இருப்பிடம் வந்து சேரும்.

    தீபாவளியன்று (6-ந் தேதி) காலை, மாலை இரு வேளைகளிலும் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்க கவசமும், சொக்கநாத பெருமானுக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டு சிறப்பு தரிசனம் செய்விக்கப்படும்.

    வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 13-ந் தேதி வரை கோலாட்ட உற்சவம் நடைபெறுகிறது. 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை மாலை 6 மணியளவில் மீனாட்சி அம்மன் ஆடி வீதிகளில் எழுந்தருளுகிறார். பின்னர் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பக்தியுலாத்தி, கொலுச்சாவடி வந்து சேருகிறார்.

    12-ந் தேதி மாலை 6 மணியளவில் வெள்ளி கோ ரதத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி சித்திரை வீதிகளில் திருவீதி உலா நடைபெறும்.

    13-ந்தேதி மாலை 6 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்தி களுடன் வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் அலங்காரமாகி ஆடி வீதிகளில் புறப்பாடு நடைபெறும்.

    வருகிற 8-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை கந்தசஷ்டி விழா நடக்கிறது. 14-ந் தேதி காலை 7 மணியளவில் கூடல் குமாரருக்கு வெள்ளி கவசம் (பாவாடை) சாத்துப்படியும் விசே‌ஷ அபிசேகம், அலங்காரம், சண்முகார்ச்சனையும் நடைபெறும்.

    எனவே திருவிழா நடைபெறும் 6-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை உபயதாரர்கள் சார்பில் திருக்கல்யாணம், தங்கரத உலா ஆகிய சேவைகள் நடைபெறாது.

    மேற்கண்ட தகவலை கோவில் செயல் அதிகாரி நடராஜன் தெரிவித்துள்ளார்.
    தீபாவளி பண்டிகையையொட்டி குந்தாரப்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனையில் ரூ.7 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். #Diwali
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் உள்ளது குந்தாரப்பள்ளி கிராமம்.

    இந்த கிராமத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காய்கறி, ஆடுகள், மாடுகள் விற்பனை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், வருகிற 6-ந் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனால் இன்று குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் வழக்கத்தைவிட ஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

    ஆந்திரா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கவும், விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்யவும் வந்திருந்தனர்.

    ஆடுகள் எடைக்கு தகுந்தவாறு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறும்போது, வழக்கத்தைவிட சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது.

    இதன் மூலம் குறைந்தது சுமார் ரூ.7 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று இருக்கும் என்றனர்.  #Diwali

    எனக்கு தீபாவளி பண்டிகை கோயம்பேட்டில் தான் என்றும், சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்களின் சேவையை கண்காணிக்க உள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். #Diwali #Vijayabhaskar
    கரூர்:

    போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை கேட்டு பெறுவதில் எந்த தவறும் இல்லை. இதற்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய நினைத்தால் எந்த மாநிலத்திலும் ஆட்சி நடக்காது.

    தீபாவளி கால கட்டங்களில் சென்னையில் இருந்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அது போல் இந்த ஆண்டும் பஸ்கள் இயக்கப்படுகிறது.



    குறிப்பாக தொழிலாளர்கள் அதிகம் நிறைந்துள்ள கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    தீபாவளியன்று குழந்தைகள் பட்டாசு வெடிக்க ஆர்வமாக இருப்பார்கள். பெற்றோர்கள் அவர்களுடன் இருந்து பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். எனக்கு தீபாவளி பண்டிகை கோயம்பேட்டில் தான்.

    நான் நாளை முதல் சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்களின் சேவையை கண்காணிக்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Diwali #Vijayabhaskar
    தீபாவளி பண்டிகை அன்று நாம் புத்தாடை அணிந்து கொண்டாடுவதுபோல, திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிகிறார். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    திருச்செந்தூரில் செந்திலாண்டவரை தினமும் உச்சிக் காலத்தில் கங்காதேவி வழிபடு வதாக ஐதீகம். இந்த வேளையில் இங்குள்ள கடல் தீர்த்தத்தில், ‘கங்கா பூஜை’ நடைபெறும்.

    முருகனுக்குப் பூஜை முடிந்ததும், ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் நைவேத்திய அன்னத்தை எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க கடற்கரைக்குச் செல்லும் அர்ச்சகர்கள், அன்னத்தைக் கடலில் கரைத்து விட்டு சந்நிதி திரும்புவர். கடல் தீர்த்தத்தில் ஆவிர் பவித்திருக்கும் கங்காதேவிக்கு முருகப்பெருமானே இவ்வாறு பிரசாதம் கொடுத்து அனுப்புவதாகச் சொல்கிறார்கள்.

    தீபாவளி பண்டிகை அன்று நாம் புத்தாடை அணிந்து கொண்டாடுவதுபோல, திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிகிறார். தீபாவளி அன்று காலையில் முருகனுக்கும், கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தனக்காப்பு இடுவார்கள். ஸ்ரீகிருஷ்ணர் நரகாசுரனை அழித்த நாளில் உடலும்-உள்ளமும் குளிர வேண்டும் என்பதாலும், தீபாவளிக்கு மறுநாள் சஷ்டி விரதம் துவங்குவதாலும் இவ்வாறு சந்தனக்காப்பு இடுகிறார்களாம்.

    இந்த நாளில், முருகன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான புத்தாடைகளை வெள்ளிப் பல்லாக்கில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அணிவிக்கிறார்கள். பக்தர்கள் தாராளமாக புத்தாடைகள் எடுத்து கொடுக்கலாம்.

    தீபாவளியன்று ஸ்ரீசாரங்கபாணி ஆலயத்தில் சாரங்கபாணியின் திருக்கரங்களில் தர்ப்பை பவித்ரம் கொடுத்து, சிராத்த சமையல் செய்து வைணவர்களுக்கு அன்னம் கொடுப்பது வழக்கமாக உள்ளது. அதற்கான காரணத்தை அறிந்து கெள்ளலாம்.
    கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி சந்நிதித் தெருவில் பிரம்மச்சாரி ஒருவர் இருந்தார். ஸ்ரீசாரங்கபாணி பெருமாளிடம் அதீத பக்தி கொண்டவர் இவர். தினமும் ஆராவமுதனை சேவிப்பதுடன், சதாசர்வ காலமும் அவரையே சிந்தையில வைத்து ஆராதித்து வந்தார்.

    வயதாகி, உடல் தளர்ந்த நிலையிலும் ஸ்ரீசாரங்கபாணியை தரிசிப்பதை அந்த பிரம்மச்சாரி விடாமல் தொடர்ந்தார். அவரைச் சுற்றி இருந்தவர்கள் ‘சுவாமி, தாங்கள் இப்படித் தனியாக இருக்கிறீர்களே... கடைசி காலத்தில் உங்களுக்கு அந்திமக் கிரியைகளை யார் செய்வார்கள்? என்று கேட்டனர். அப்போதும் ‘என் ஆராவமுதன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான். அவன் தான் எனக்கு குழந்தை’ என்றார் அவர்.

    ஒரு தீபாவளி தினத்தில் இறைவனடி சேர்ந்தார் அந்த பிரம்மச்சாரி. ‘தீபாவளி புண்ணிய நாளில், துக்கம் அனுஷ்டிக்க முடியுமா? என்ற எண்ணத்தில் அக்கம் பக்கத்தவர்கள் அவர் வீட்டுக்குச் செல்லவோ, எதுவும் செய்யவோ முற்படவில்லை. சற்று நேரத்தில் அழகான இளைஞன் ஒருவன். பிரம்மச்சாரியின் வீட்டுக்கு வந்தான்.

    அவரது உடலைத் தன் மடியில் கிடத்திக் கொண்டு அழுதவன், ஆக வேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்து முடித்தான். இதைக்கண்டு அக்கம் பக்கத்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள் சாப்பிடுவதற்காக அவனை அழைக்கச் சென்ற போது அந்த இளைஞன் மாயமாக மறைந்தான்!

    மறுநாள் ஸ்ரீசாரங்கபாணி ஆலயத்தில் பூஜை செய்யும் அர்ச்சகருக்கு அருள் வந்தது. ‘சந்நிதித் தெருவில் இருந்த பிரச்சச்சாரிக்கு அந்திம கிரியைகளைச் செய்தது சாட்சாத் ஸ்ரீஆராவமுதனே! என்றார் அவர்.

    அன்று முதல்.. தீபாவளித் திருநாளில், ஸ்ரீசாரங்கபாணியின் திருக்கரங்களில் தர்ப்பை பவித்ரம் கொடுத்து, சிராத்த சமையல் செய்து வைணவர்களுக்கு அன்னம் பாலிப்பது வழக்கமாக உள்ளது.

    தமிழக அரசு பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான அறிவிப்பில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டதாக ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகைக்கு- பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தற்போதைய தீர்ப்பில் உள்ள விதிமுறைகள் மாற்றப்பட்டு கடந்த காலங்களில் இருந்த நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் அல்லது காலை, மாலை ஆகிய நேரங்களில் கூடுதலான நேரங்களில் பட்டாசு வெடிப்பதற்காக விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

    திடீரென்று புதிய விதிமுறைகளை திணித்து, மக்கள் காலம் காலமாக வழக்கத்தில் கொண்டுள்ள கலாச்சாரத்தை மாற்ற நினைப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    மாசுக்கட்டுப்பாடு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, படிப்படியாக விதிமுறைகளை கொண்டு வந்து, மக்களின் மனநிலைக்கு ஏற்ப இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டுமே தவிர திடீரென்று கட்டாயப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட முன்வரக் கூடாது.

    தமிழக அரசும் பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான அறிவிப்பில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டது.

    இச்சூழலில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து பொது மக்கள் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அதிகப்படுத்திட வேண்டும். குறிப்பாக பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரின் நலன் காக்கவும், பண்டிகையின் கலாச்சாரத்தை பாதுகாக்கவும், பொது மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவும் உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #TamilMaanilaCongress #GKVasan
    தீபாவளி பண்டிகைக்காக திறக்கப்பட்ட சிறப்பு முன்பதிவு மையங்களில் 2 நாட்களில் மட்டும் 7187 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்றும் ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். #Diwali #SpecialBuses
    சென்னை:

    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக, பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழகம் முழுவதும் 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த பஸ்கள் இன்று முதல் 5-ந்தேதிவரை இயக்கப்படுகிறது. இதில் சென்னையில் இருந்து மட்டும் 11,367 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மற்ற நகரங்களில் இருந்து 9,200 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இதேபோல் தீபாவளி முடிந்து மீண்டும் சென்னை உள்பட பல ஊர்களுக்கு திரும்பி வர வசதியாக நவம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


    தீபாவளி சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு செய்வதற்காக கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்கள் செயல்படுகிறது. இது தவிர தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் 2, மாதவரம், பூந்தமல்லி பஸ் நிலையங்களில் தலா 1 என்ற அளவில் மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டன.

    சிறப்பு முன்பதிவு மையம் திறக்கப்பட்ட 2 நாட்களில் மட்டும் 7187 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்றும் ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    முன்பதிவு செய்ய வரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பயணச் சீட்டுகளை விரைந்து வழங்கும் வகையில் ஊழியர்கள் போதிய அளவில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  #Diwali #SpecialBuses
    தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ள தமிழக அரசு, தொடர்ந்து வெடிக்கும் சரவெடிகளை வெடிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. #Diwali #CrackersBurstingTime #TNGovernment
    சென்னை:

    தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த 2 மணி நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் கூறியிருந்தது. அதன்படி, இன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவித்தது. காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என கூறியுள்ளது.



    மேலும், வெடி வெடிப்பதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களையும் தமிழக அரசு வழங்கி உள்ளது. அவை வருமாறு:-

    • அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்

    • குறைந்த ஒலி எழுப்பும், குறைந்த அளவில் மாசுபடுதல் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும்

    • மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்

    • குடிசைப் பகுதி மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் வெடி வெடிப்பதை தவிர்க்க வேண்டும்

    • உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற்று திறந்தவெளியில் மக்கள் ஒன்றுகூடி கூட்டாக வெடி வெடிக்கலாம்

    • திறந்த வெளியில் கூட்டாக வெடி வெடிப்பற்கு அந்தந்த பகுதியில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். #Diwali #CrackersBurstingTime #TNGovernment
    தமிழகத்தில் தீபாவளி நாளில் காலையில் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை தமிழக அரசு இறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #Diwali #CrackersBurstingTime
    சென்னை:

    பட்டாசு தயாரிப்பு, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 23ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீபாவளி மற்றும் பிற விழாக்களில் நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை 35 நிமிடங்களுக்கு மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

    இந்த தீர்ப்பு தீபாவளி கொண்டாடும் இந்துக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீர்ப்பை எதிர்த்து பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கக்கோரி தமிழக அரசும் மனுதாக்கல் செய்தது. ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியும் என்றும், அந்த 2 மணி நேரம் எது என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம் என்றும் கூறியது.

    அதன்பின்னர், நேற்று முன்தினம் புதிய அறிவுரை ஒன்றை உத்தரவாக வெளியிட்டது. அதில், தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிகாலையில் 4 மணி முதல் 5 மணி வரை, இரவில் 9 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என கூறியிருந்தது. இந்த நேரத்தில் மாநில அரசு மாற்றம் செய்யலாம் என்றும் கூறியிருந்தது.



    அதன்படி மாநில அரசு ஆலோசனை நடத்தி பட்டாசு வெடிக்கும் நேரத்தை இன்று அறிவித்துள்ளது. அதாவது, காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என கூறியுள்ளது.

    மேலும் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களையும், எந்தெந்த இடங்களில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது. #Diwali #CrackersBurstingTime
    தீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது. முதல்-மந்திரி குமாரசாமி இன்று (வெள்ளிக் கிழமை) சாமி தரிசனம் செய்கிறார்.
    ஹாசன் டவுனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி மட்டும் திறக்கப்படுவது இந்த கோவிலின் சிறப்பம்சமாகும். கோவில் நடை அடைக்கும்போது, அம்மன் கருவறையில் விளக்கு ஏற்றி வைக்கப்படும். மேலும் பூவும் வைக்கப்படும். அந்த பூ அடுத்த ஆண்டு கோவில் நடை திறக்கும் வரை வாடாமல் இருக்கும். மேலும், கோவிலில் ஏற்றப்படும் விளக்கும் அடுத்த ஆண்டு நடை திறக்கும்வரை தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். நடை திறக்கும்போது தான் அந்த விளக்கும் அணையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் இந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங் களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அரசியல்வாதிகளும், முக்கிய பிரமுகர்களும் இங்கு வந்து ஹாசனாம்பாவை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

    அத்தகைய சிறப்புமிக்க ஹாசனாம்பா கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. நேற்று மதியம் 12 மணி அளவில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த நஞ்சராஜ அர்ஸ் வாழை மரத்தை வெட்டி, பாரம்பரிய முறைப்படி கோவில் நடையை திறந்தார். பின்னர் மன்னர் குடும்பத்தினர் சார்பில், ஹாசனாம்பா கோவிலுக்கு முதலில் சிறப்பு பூஜை செய்யப்படும். அதன்பின்னர், அரசு கருவூலத்தில் உள்ள நகைகள் பாதுகாப்பாக எடுத்து வந்து, ஹாசனாம்பா சிலைக்கு அணிவிக்கப்படும். இதில், தர்மஸ்தலா கோவில் தர்ம அதிகாரி வீரேந்திர ஹெக்டே, மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    மன்னர் குடும்பத்தை சேர்ந்த நஞ்சராஜ அர்ஸ், வாழை மரத்தை வெட்டியபோது எடுத்தபடம்.

    இன்று கோவில் நடை திறந்ததும், கருவறை உள்பட கோவில் முழுவதும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனால் முதல் நாளான நேற்று பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பக்தர்கள் ஹாசனாம்பாவை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    நாளை முதல் 9-ந்தேதி வரை 24 மணி நேரமும் ஹாசனாம்பாவை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஹாசனாம்பா கோவிலில் பொது தரிசனம், கட்டண தரிசனம் என தனித்தனியாக வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹாசனாம்பா கோவில் மற்றும் ஹாசன் டவுன் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹாசனாம்பா கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    நேற்று முதல் 9-ந்தேதி மதியம் 2 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் பக்தர்கள் 24 மணி நேரமும் ஹாசனாம்பாவை தரிசனம் செய்யலாம். முதல்-மந்திரி குமாரசாமி இன்று (வெள்ளிக்கிழமை) ஹாசனாம்பா கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜை செய்ய உள்ளார். ஹாசனாம்பா கோவில் உள்ளே பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
    தீபாவளி கூட்ட நெரிசலை குறைக்க தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படும் என் தெற்கு ரெயில்வே அறிவித்தது. #SouthernRailway
    தீபாவளி பண்டிகை வருகிற செவ்வாய்க்கிழமை (நவம்பர் 6-ந்தேதி) கொண்டாடப்பட இருக்கிறது. திங்கட்கிழமை விடுமுறை விட்டால், சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறையாகி, மக்கள் சொந்த ஊர் சென்று தீபாவளி கொண்டாடுவார்கள் என்பதால், தமிழக அரசு திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.

    இதனால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் குடும்பத்தோடு சொந்த ஊர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசு ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

    தெற்கு ரெயில்வேயும் பல்வேறு சிறப்பு சலுகைகளை அளித்துள்ளது. சிறப்பு ரெயில்களையும் இயக்குகிறது. இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயிலை இயக்குவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    இந்த சிறப்பு ரெயில் சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு வருகிற 3-ந்தேதி மற்றும் 5-ந்தேதிகளில் காலை 9.30 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு 4-ந்தேதி மற்றும் 7-ந்தேதிகளில் காலை 7.10-க்கு புறப்படுகிறது.
    தீபாவளி அன்று காவேரியில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன்களைப் பெறலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இந்தியாவில் உள்ள புண்ணிய நதிகளில் முதலிடத்தைப் பெறுகிறது கங்கை. கங்கை நதியை தெய்வமாகப் போற்றுவது நமது மரபு. கங்கை நதியில் நீராடுவது எல்லோராலும் இயலாது. எனவே, கங்காதேவியே தீபாவளி நாளில் அனைத்து நீர்நிலைகளிலும் எழுந்தருள்வதாக ‘துலாக் காவேரி மகாத்மியம்‘ கூறுகிறது.

    மயிலாடுதுறை வள்ளலார் கோவிலில் கங்காதேவிக்கு தனிசந்நிதி உள்ளது. தீபாவளித் திருநாளில் கங்காதேவி, மயிலாடுதுறை துலாக்கட்டத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்கும் வைபவம் நடைபெறும். அப்பொழுது பக்தர்கள் நீராடுவது வழக்கம். இது ஆண்டுதோறும் நடைபெறும்.

    இது கங்கைக்கும் தீபாவளிக்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் தான் காவேரி நதியை தட்சிண கங்கை என்று போற்றுகிறார்கள்.

    தீபாவளி அன்று காவேரியில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன்களைப் பெறலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

    ×