என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 98721
நீங்கள் தேடியது "கிளாஸ்கோ"
நிலையான வேளாண்மைக்கு மாறுவதற்கான நிலையான விவசாயக் கொள்கை மற்றும் விவசாயத்தில் புதுமைக்கான உலகளாவிய செயல்திட்டம் ஆகியவை முக்கியமான உறுதி மொழிகள் ஆகும்.
லண்டன்:
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் ஒரு வார நிகழ்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நிலையான வேளாண்மை குறித்த செயல்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
விவசாயத்தை இன்னும் நிலையானதாகவும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாததாகவும் மாற்றுவதற்கான புதிய உறுதிமொழிகளை வகுப்பதற்கான இந்த செயல்திட்டத்தில் இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, உகாண்டா, வியட்நாம், ஜெர்மனி, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகள் கையெழுத்திட உள்ளன.
நிலையான வேளாண்மைக்கு மாறுவதற்கான நிலையான வேளாண் கொள்கை மற்றும் வேளாண்மையில் புதுமைக்கான உலகளாவிய செயல்திட்டம் ஆகியவை முக்கியமான உறுதி மொழிகள் ஆகும்.
இந்த செயல்திட்டத்தில் கையெழுத்திடும் நாடுகள் தங்கள் நாடுகளில் வேளாண் கொள்கைகளை மிகவும் நிலையானதாகவும், மிக குறைவாக மாசுபடுத்துவதாகவும் மாற்றுவதற்கு புதிய உறுதிமொழிகளை வகுத்துள்ளன. நிலையான வேளாண்மைக்குத் தேவையான அறிவியலில் முதலீடு செய்வதற்கும், பருவநிலை மாற்றத்தில் இருந்து உணவுப் பொருட்களைப் பாதுகாப்பதற்கும் உறுதிமொழிகளை வகுத்துள்ளன.
இதையும் படியுங்கள்... ஆர்யன் கான் வழக்கு கடத்தல், பணம் பறித்தல் பற்றியது: நவாப் மாலிக் குற்றச்சாட்டு
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா. பருவநிலை மாநாடு கடந்த 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கிளாஸ்கோ:
கிளாஸ்கோவில் பருவநிலை மாநாடு நடக்கும் இடத்திற்கு வெளியே சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் ஒரு பேரணியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
கிளாஸ்கோவில் நடந்த ஐ.நா. பருவநிலை மாநாடு தோல்வி அடைந்துள்ளது. விதிகளில் ஓட்டைகளை தீவிரமாக உருவாக்கி அங்குள்ள தலைவர்கள் தங்கள் நாட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மாசுபடுத்துபவர்களைக் கட்டுப்படுத்த கடுமையான விதிகளை உருவாக்க வேண்டும்.
உலகத் தலைவர்கள் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவர்களால் தப்பிக்க முடியாது.
அவர்களிடம் பருவநிலை மாற்றம் குறித்து பேசி பேசி நாம்தான் சோர்வாகிவிட்டோம். ஆகவே இனி அவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, மாற்றத்துக்கான முன்னெடுப்பை நாமே எடுப்போம். ஒருமித்த கருத்தைப் புறக்கணிக்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களால் நம்மைப் புறக்கணிக்க முடியாது என தெரிவித்தார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
புதுடெல்லி:
இத்தாலி தலைநகர் ரோமில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். ஜி20 மாநாட்டைத் தொடர்ந்து வாடிகன் சிட்டி சென்ற பிரதமர் மோடி, போப் பிரான்சிசை சந்தித்து பேசினார்.
பின்னர் அங்கிருந்து பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகருக்கு புறப்பட்டுச் சென்றார். கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். மேலும், பல்வேறு நாட்டு தலைவர்கள், தொழிலதிபர்களை சந்தித்தார்.
இந்நிலையில், கிளாஸ்கோவில் பருவநிலை மாநாட்டை முடித்துக் கொண்டு நேற்று இரவு தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று இந்தியா வந்து சேர்ந்தார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... ஷிகர் தவான், பவானி தேவி உள்பட 35 பேருக்கு அர்ஜூனா விருது
கிளாஸ்கோவில் நடந்த பருவநிலை மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளது என தெரிவித்தார்.
கிளாஸ்கோ:
இத்தாலி தலைநகர் ரோமில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.
ஜி20 மாநாடு முடிந்து பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகருக்கு புறப்பட்டுச் சென்றார். கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட பங்கேற்று உரையாற்றினார். மேலும், பல்வேறு நாட்டு தலைவர்கள், தொழிலதிபர்களை சந்தித்தார்.
இந்நிலையில், கிளாஸ்கோவில் பருவநிலை மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்.
இதையும் படியுங்கள்...மக்களவை, சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் விவரம்
நமது பருவநிலை மாற்ற தழுவல் கொள்கைகளில், பாரம்பரிய நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.
கிளாஸ்கோ:
பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
சர்வதேச பருவநிலை மாற்ற விவாதத்தில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம், நமது செயல்பாடுகள் மற்றும் அமைப்புகளை மாற்றும் பருவநிலை மாற்ற தழுவலுக்கு அளிக்கவில்லை. பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளுக்கு இது அநீதி ஆகும்.
பல பாரம்பரிய சமூகங்கள் இயற்கையோடு இயைந்து வாழும் அறிவு பெற்றுள்ளன. நமது தழுவல் கொள்கைகளில், பாரம்பரிய நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இந்த அறிவு அடுத்த தலைமுறைக்கு சென்றடைவதை உறுதி செய்ய, பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் விவசாயிகளுக்கு பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளது. பயிர் செய்யும் முறை மாறுகிறது. சரியான பருவத்தில் பெய்யாத மழை, வெள்ளம் மற்றும் தொடர் புயல் பயிர்களை அழிகின்றன. குடிநீர் ஆதாரங்கள் முதல் மலிவு விலை வீடுகள் வரை அனைத்தும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான தன்மை கொண்டதாக மாற்றப்பட வேண்டும்.
பருவநிலை மாற்ற தழுவலை நமது கொள்கைகளின் மிக முக்கியமான பகுதியாக மாற்ற வேண்டும். இந்தியாவில், அனைவருக்கும் குழாய் நீர், தூய்மை இந்தியா திட்டம் மற்றும் அனைவருக்கும் சுத்தமான சமையல் எரிபொருள் போன்ற கொள்கைகள், தேவைப்படுபவர்களுக்கு பருவநிலை மாற்ற தழுவலின் நன்மைகளை வழங்குவதோடு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து வெப்பமடையும் பூமியின் நிலையை, கற்பனையான ரகசிய ஏஜென்ட் ஜேம்ஸ் பாண்டுடன் ஒப்பிட்டு பேசி எச்சரித்தார் போரிஸ் ஜான்சன்.
கிளாஸ்கோ:
பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டை துவக்கி வைத்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உரையாற்றினார். அப்போது, உலகமானது, மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவை முன்கூட்டியே எச்சரிக்கும் டூம்ஸ்டே சாதனத்துடன் பிணைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து வெப்பமடையும் பூமியின் நிலையை, கற்பனையான ரகசிய ஏஜென்ட் ஜேம்ஸ் பாண்டுடன் ஒப்பிட்டு பேசிய போரிஸ் ஜான்சன், கிரகத்தை அழிக்கும் ஒரு வெடிகுண்டுடன் கட்டப்பட்ட ஜேம்ஸ் பாண்ட், அதை செயலிழக்க வைக்க முயற்சிப்பதாகவும், தற்போது நாமும் தோராயமாக அதே நிலையில் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.
‘இப்போது டூம்ஸ்டே கடிகாரம் ஓடத் தொடங்கியது உண்மைதான், கற்பனையல்ல. நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எரிப்பதால் ஏற்படும் பருவநிலை மாற்றம் அச்சுறுத்தலாக இருக்கிறது. மேலும் இவை அனைத்தும் கிளாஸ்கோவில் நிலக்கரி மூலம் இயங்கும் ஜேம்ஸ் வாட்டின் நீராவி இயந்திரத்தில் தொடங்கியது. பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது’ என்று உலக நாடுகளின் தலைவர்களை கேட்டுக்கொண்டார் போரிஸ் ஜான்சன்.
கிளாஸ்கோ நகரில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை பருவநிலை மாற்றம் பிரச்சினை தொடர்பான ஐ.நா. உச்சி மாநாடு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கிளாஸ்கோ:
இத்தாலி தலைநகர் ரோமில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு நேற்று முடிவுக்கு வந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.
இதற்கிடையே, ஜி20 மாநாடு முடிந்து பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகருக்கு புறப்பட்டுச் சென்றார்.
கிளாஸ்கோ நகரில் நவம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் பருவநிலை மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
இந்நிலையில், ரோமில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி கிளாஸ்கோ சென்றடைந்தார். அங்கு அவருக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் இருந்து ஓட்டல் சென்றடைந்த பிரதமர் மோடி, அங்கு காத்திருந்த இந்தியர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
இதையும் படியுங்கள்...புவியின் வெப்ப நிலையை 1.5 டிகிரியாக குறைக்க வேண்டும் - ஜி20 மாநாட்டில் முடிவு
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரத்தில் உலக பிரசித்தி பெற்ற ‘ஸ்கூல் ஆப் ஆர்ட்’ என்னும் கலைப்பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் கட்டிடம் பெரும் சேதம் அடைந்தது. #Glasgow #SchoolofArt
லண்டன்:
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரத்தில் உலக பிரசித்தி பெற்ற ‘ஸ்கூல் ஆப் ஆர்ட்’ என்னும் கலைப்பள்ளி உள்ளது. இந்த கலைப்பள்ளியில் மாகிந்தோஷ் கட்டிடத்தில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 11.15 மணிக்கு தீப்பிடித்தது. இந்த தீ அந்த கட்டிடம் முழுவதும் பரவியதுடன், அதையொட்டி அமைந்து உள்ள இரவு விடுதி வளாகம், இசை அரங்கத்துக்கும் பரவியது.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 120 தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். தீ வானளாவ கொழுந்து விட்டு எரிந்ததால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே தீயணைப்பு படையினர் போராட வேண்டியது ஆயிற்று.
இது பற்றி ஸ்காட்லாந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படை துணை தலைவர் பீட்டர் ஹெத் கூறும்போது, “இந்த தீ விபத்தினால் கலைப்பள்ளியின் கட்டிடம் நாசமாகி விட்டது. தீயணைப்பு பணி பெரும் சவாலாக அமைந்தது” என்று குறிப்பிட்டார். ஏற்கனவே 2014-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் மாகிந்தோஷ் கட்டிடம் பெரும் சேதம் அடைந்தது. பெரும் செலவில் அந்தக் கட்டிடத்தை சீரமைக்கும் பணி நடந்தது வந்தது. அடுத்த ஆண்டு இந்த கட்டிடத்தை திறக்க இருந்த நிலையில் மறுபடியும் அந்தக் கட்டிடம் தீ விபத்துக்கு உள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலைப்பள்ளி தீ விபத்தையொட்டி உடனடியாக அக்கம்பக்கத்தினர் கட்டிடங்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி விட்டனர். இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இந்த தீ விபத்து, கலைப்பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Glasgow #SchoolofArt #Tamilnews

×

X