என் மலர்
நீங்கள் தேடியது "டாஸ்மாக் கடை"
- கடந்த 24-ந்தேதி சென்னை மத்திய மேற்கு மாவட்ட த.வெ.க சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
- த.வெ.க.வினர் சுமார் 300 பேரை போலீசார் கைது செய்து அமைந்தகரையில் உள்ள அய்யாவு திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
அண்ணா நகர்:
அமைந்தகரை செனாய் நகரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் பின்புறம் டாஸ்மாக் மது பான கடை செயல்பட்டு வருகிறது.
கடைக்கு எதிர்ப்புறம் ரேஷன் கடை, அரசு மருத்துவமனை, சுமார் 2000 பள்ளி மாணவிகள் படித்து வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நூலகம் அமைந்துள்ளது.
இதன் அருகே அமைந்து உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு வரும் குடிமகன்கள் தினந்தோறும் சாலையில் இருந்தபடி மதுபானங்களை குடித்து கும்மாளமிட்டு வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி இந்த மது கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 24-ந்தேதி சென்னை மத்திய மேற்கு மாவட்ட த.வெ.க சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் செனாய் நகர் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.பழனி தலைமையில் த.வெ.க.வினர் இன்று போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட த.வெ.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து வலுக்கட்டாயமாக த.வெ.க.வினர் சுமார் 300 பேரை போலீசார் கைது செய்து அமைந்தகரையில் உள்ள அய்யாவு திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் பற்றி மாவட்ட செயலாளர் பழனி கூறியதாவது:-
பொது மக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் அரசு மதுபான கடையை மூட வேண்டும் என முறைப்படி மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் கொடுத்து இருந்தோம். எங்கள் மனுவிற்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று போராட்டம் நடத்தப்போவதாக போலீசாரிடமும் உரிய அனுமதியை பெற்று இருந்தோம். ஆனால் திடீரென போராட்டம் நடத்துவதற்கு எங்களை போலீசார் அனுமதிக்காமல் கைது செய்து உள்ளனர். வேண்டுமென்றே த.வெ.க.வினரை மக்கள் பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நகரச்செயலாளர் வக்கீல் கிருஷ்ணராஜ்தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
- கௌதம்,பிரபு, இள சுந்தர்,கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர்:
பண்ருட்டி பஸ் நிலையம் மற்றும் ெரயில் நிலையம் செல்லும் வழியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிசெல்லும்மாணவ,மாணவியர்களுக்கு இடையூறாக இருந்து வரும் அரசு மதுபான கடையை (டாஸ்மாக்) அகற்றக்கோரி நகரச்செயலாளர் வக்கீல் கிருஷ்ணராஜ்தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இதில் நகர இணை செயலாளர் ராஜி,இளையராஜா,புஷ்பராஜ்,ராஜவேல்,பென்னி,கௌதம்,பிரபு, இள சுந்தர்,கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புஅழை ப்பாளர்களாக பிரகாஷ்,கலியபெருமாள், அருள்செல்வன் இளஞ்சி றுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பா ளர்வெங்கடசாமி, விவசாய அணி மாநில துணைச் செயலாளர்தமிழ்மாறன் நகர பொருளாளர் பக லவன், வாசன்,சந்தானம்,சவுந்தர், சுப்பு ராய லு,ரமேஷ் ,பிரகாஷ் பாலூர்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பல்வேறு புகார் சென்றனர்.
- சுமார் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுமார்4 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலம் கீழ்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அதிக விலையில் மதுபானங்கள் விற்கப்படுவதாகவும்,போலி மதுபானங்கள்,மற்றும் புதுவை மதுபானங்கள் விற்கப்படுவதாகவும்,விற்பனையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், போன்ற பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பல்வேறு புகார் சென்றனர். இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து மாவட்ட மேலாளர் சத்தியன் தலைமையிலானசுமார் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுமார்4 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.இதனால் திண்டிவனத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மாவட்ட மேலாளர்கள் அனைவரும் கடைப்பணியாளர்களின் தினசரி வருகை பதிவேட்டினை அவ்வப்பொழுது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
- மேற்பார்வையாளர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சரக்கு தேவைப்பட்டியல் சமர்ப்பிக்க வரும் போது மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் தங்களது வருகையை தவறாது பதிய வேண்டும்.
சென்னை:
தமிழகத்தில் மதுபான கடைகளை அரசே நடத்தி வருகிறது. இந்த கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர் பலர் வெளியில் சென்று விடுவதாகவும் அவர்களுக்கு பதில் வெளியாட்கள் வேலை செய்து வருவதாகவும் அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது.
இதனால் மதுக்கடைகளை நடத்தும் 'டாஸ்மாக்' நிறுவனம் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சமீப காலமாக டாஸ்மாக் கடைப் பணியாளர்கள் தலைமை அலுவலகத்தில் உள்ள அலுவலர்களை சந்திக்க அடிக்கடி தலைமை அலுவலகம் வருவதும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு சென்று தங்கள் அலுவலகம் வருவதும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு சென்று தங்கள் சங்கங்களின் சார்பாக பணி மேற்கொள்ளுதல், மண்டல மேலாளர் அலுவலகம் செல்லுதல், கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் கடைப்பணியில் இருப்பதில்லை என்பது தெரியவருகிறது. இதனை தலைமை அலுவலக ஆய்வு குழு மதுபான சில்லரை விற்பனை கடைகளை ஆய்வு செய்த பொழுது பெரும்பாலான கடைப்பணியாளர்கள் கடை பணிகளில் இருப்பது இல்லை என்பதும், வெளிநபர்களை கடை பணிகளில் ஈடுபடுத்துவதும் தெரிய வருகிறது.
எனவே, அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களும் கீழ்கண்ட அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.
அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் நியமிக்கப்பட்ட கடைப் பணியாளர்கள் (மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள்) அனைவரும் பணி நேரத்தில் பணியில் உள்ளார்களா என்பதை கண்டறிய வேண்டும். மாவட்ட மேலாளர்கள் அனைவரும் கடைப்பணியாளர்களின் தினசரி வருகை பதிவேட்டினை அவ்வப்பொழுது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இது தவிர மேற்பார்வையாளர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சரக்கு தேவைப்பட்டியல் சமர்ப்பிக்க வரும் போது மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் தங்களது வருகையை தவறாது பதிய வேண்டும்.
தலைமை அலுவலகத்தில் உள்ள அலுவலர்களை சந்திக்க வருகை புரியும் கடைப்பணியாளர்கள் அந்தந்த மாவட்ட மேலாளரிடம் அனுமதி ரசீதில் மாவட்ட மேலாளரின் அனுமதி மற்றும் கையொப்பத்துடன் மாவட்ட மேலாளரின் அலுவலக முத்திரை பெற்றே வரவேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மேலாளர்கள் கடைக்கு ஆய்வுக்கு செல்லும் பொழுது அனைத்து கடை பணியாளர்களும் கடைப்பணியில் உள்ளார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். வங்கி பணி மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு செல்லும் பணியாளர்கள் நகர்வு பதிவேடுகளில் கையொப்பமிட்டுள்ளார்களா என்பதை கண்காணித்து அவ்வாறு பதிவேடுகளில் பதியவில்லையெனில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டாஸ்மாக் கடை அருகில் உள்ள பாரில் அதிகாலை முதல் மதுபாட்டில் பதுக்கி விற்பனை நடப்பதாக வடபழனி இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபுவுக்கு தகவல் கிடைத்தது.
- ரூ.20ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
போரூர்:
வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் டாஸ்மாக் கடை அருகில் உள்ள பாரில் அதிகாலை முதல் மதுபாட்டில் பதுக்கி விற்பனை நடப்பதாக வடபழனி இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபுவுக்கு தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக மது விற்பனையில் ஈடுபட்ட பார் ஊழியர்களான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மதியரசன், செல்வம், பெரம்பலூரை சேர்ந்த ராஜா, காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரகாஷ், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுனில், பிரகாஷ் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- நாள் ஒன்றுக்கு ரூ.80 கோடி முதல் ரூ.90 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகிறது.
- ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகையின்போது டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிக்கும்.
சேலம்:
தமிழக முழுவதும் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.80 கோடி முதல் ரூ.90 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகையின்போது டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிக்கும். அதற்கு ஏற்ப டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக சரக்குகள் விற்பனைக்கு குவிக்கப்படும்.
வருகிற ஞாயிற்றுக்கி–ழமை ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. ஆங்கில புத்தாண்டு முதல் நாளில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை அதிகரிக்கும். இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை நடைபெறும். வரும் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில புத்தாண்டு ஒட்டி மதுபானங்கள் விற்பனை அதிகரிக்கும் என்பதால் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 30 சதவீதம் மதுபானங்கள் குவிக்கப்பட்டு வருகிறது.
ஆங்கில புத்தாண்டை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வருகிறது .பொங்கல் பண்டிகையின் போது 3 நாட்கள் மதுபானங்கள் விற்பனை களைகட்டும். இதையொட்டி–யும் அதிக அளவில் டாஸ்மாக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது.
- திருமங்கலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம மக்கள்-மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிந்துப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தும்மக்குண்டு கரிசல்பட்டி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.
அரசு பள்ளி அருகே டாஸ்மாக் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு அந்தப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பள்ளி அருகில் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை கண்டுகொள்ளா மல் கடந்த மாதம் 26-ந் தேதி தும்மக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட கடையை அக்றறக்கோரி சிந்துப்பட்டி பொதுமக்கள் சார்பில் போலீஸ் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.
மேலும் மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளி அருகே டாஸ்மாக் கடை திறந்திருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். அதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு பள்ளி நிர்வாகம் சார்பிலும் அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனை கண்டித்தும், டாஸ்மாக் கடையை அகற்ற கோரியும் இன்று காலை திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் அமர்ந்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில் பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர். 200-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் அந்தப்ப குதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருமங்கலம் போலீஸ் டி.எஸ்.பி. வசந்தகுமார் மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடை அகற்றப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து ஒரு மணிநேரத்துக்கு பின் மறியல் கைவிடப்பட்டது.
- ஊழியர்களிடம் முறையிட்டும் பதில் அளிக்கவில்லை என புகார்
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வாணியம்பாடி:
வாணி யம்பாடியை அடுத்த திம்மாம் பேட்டை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் நேற்று குடிமகன் ஒருவர் மதுபான பாட்டில் களை வாங்கி உள்ளார்.
அவர் வாங்கிய மதுபாட்டிலில் இறந்த நிலையில் பூச்சிகள், புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார். ஆனால் ஊழியர்கள் இது குறித்து எவ்வித பதிலும் அளிக்கவில்லையென கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அமர் குஷ்வாஹாவுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.
அரசு டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் பூச் சிகள் இருந்தது குடிமகன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- திருப்புல்லாணி டாஸ்மாக் கடை 2 மாதத்துக்குள் அகற்றப்படும் என சமாதான கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
- 2 மாத காலத்திற்குள் கடையை அகற்றவில்லையெனில் நாங்கள் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கூறி பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சமூக நல அமைப்பு சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்
இந்த நிலையில் டாஸ்மாக் கடை முன்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதையடுத்து கீழக்கரை தாசில்தார் சரவணன் ஏற்பாட்டில் சமாதான கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் திருப்பு ல்லாணி கோவில் அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் ஏற்படும் சிரமங்கள் குறித்து எஸ்.டி. பி.ஐ. கட்சி நிர்வாகிகள் விளக்கினர். இறைத்தொடர்ந்து 2மாத காலத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள் வதாக டாஸ்மாக் தாசில் தார் சேதுராமன் உறுதி அளித்தார். இது குறித்து எழுத்துப் பூர்வமாக எழுதி கையெழுத்திட்டு வழங்கினர்.
இதில் கீழக்கரை துணை தாசில்தார் பழனிக்குமார், கோட்ட ஆய அலுவலர் கல்யாண குமார் கீழக்கரை இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ராஜா, வருவாய் ஆய்வாளர் சரவணகுமார் உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சி தொகுதி தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் பெரியபட்டினம் தலைவர் முகமது மீராசா, பொரு ளாளர் சையது இப்ராம்ஷா, கீழக்கரை நிர்வாகிகள் சுல்தான் சிக்கந்தர், சாதிக் அலி ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். 2 மாத காலத்திற்குள் கடையை அகற்றவில்லையெனில் நாங்கள் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- ஆள் மாறாட்டத்தில் வியாபாரிக்கு கத்திகுத்து
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி ஏரியூரைச் சேர்ந்த சந்துரு, பாஸ்கர், மற்றும் புது வசூரை சேர்ந்த அசோகன் அலமேலு மங்காபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் ஆகியோர் பெருமுகை டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் மது குடித்தனர்.
மது குடித்தும் தகராறு
அப்போது அவர்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த இரு தரப்பினர் சரமாரியாக தாக்கினர். மேலும் அவர்கள் மது பாட்டில்களை தூக்கி வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மது வாங்க வந்தவர்களும் அங்கிருந்து மது குடித்தவர்களும் நாலாபுறம் சிதறி ஓடினர்.
இது குறித்த தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதற்குள் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதற்கிடையே சந்துரு பாஸ்கர் அசோகன் சக்திவேல் ஆகியோர் இரவு 11 மணிக்கு மீண்டும் பெருமுகை பகுதிக்கு வெட்டு கத்தியுடன் சென்றனர்.
பெருமுகை வ.உ.சி. நகரை சேர்ந்த வியாபாரி யுவராஜ் (வயது 41) அங்குள்ள தெருவில் நின்று கொண்டிருந்தார்.
அவரை தங்களுடன் மோதிய கும்பல் என நினைத்த சந்துரு தரப்பினர் யுவராஜை தாக்கினர்.மேலும் கத்தியால் அவரை வெட்டினர். சத்துவாச்சாரி போலீசார் கத்தி வெட்டில் படுகாயமடைந்த யுவராஜை மீட்டு பூட்டுத் தாக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். மற்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- இரணியல் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் உள்ள டி.வி.ஆர். பாக்ஸ் எடுத்து கொண்டு சென்றது தெரிய வந்தது.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே காற்றாடிமூடு என்ற இடத்தில் இருந்து ஆழ்வார் கோவில் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இன்று காலை கடையில் காம்பவுண்ட் வாசல் பூட்டு உடைக்க பட்டு திறந்து கிடப்பதாக கடை மேற்பார்வையாளர் மைக்கேலுக்கு தகவல் வந்தது.
இதனை அடுத்து அவர் கடைக்கு வந்து பார்த்த போது காம்பவுண்ட் வாசல் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் இரும்பு சட்டம் உடைக்க பட்டு திறந்து கிடந்தது. கடையில் இருந்து மது பாட்டில்கள் பெட்டிகள் கடையில் வெளியே எடுத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. மேலும் மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து மைக்கேல் இரணியல் போலீஸ் நிலையத்திற்கும் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தார். இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் விசாரணையில் சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் உள்ள டி.வி.ஆர். பாக்ஸ் எடுத்து கொண்டு சென்றது தெரிய வந்தது.
முழுமையாக சோதனை செய்த பிறகு தான் எத்தனை மது பாட்டில்கள் திருட்டு போயிருப்பது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதியில் உள்ள காமிரா பதிவுகளை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதே கடையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுவரை துளைத்து கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது
- கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை
- சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் ஆய்வு
கன்னியாகுமரி:
இரணியல் அருகே ஆழ்வார் கோவில் பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக மைக்கேல் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலை கடையின் ஷட்டர்கள் திறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் கடையின் மேற்பார்வையாளர் மைக்கேலுக்கு தகவல் தெரிவித்தனர்.உடனே அவர் அங்கு விரைந்து வந்தார்.
அப்போது கடையில் இருந்து மது பாட்டில்கள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து இரணியல் போலீ சுக்கும் டாஸ்மார்க் மேலதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கடையில் இருந்த 2074 மது பாட்டில்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
கொள்ளை போன மது பாட்டில்களின் மதிப்பு ரூ4.5 இலட்சம் ஆகும். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து பழைய கொள்ளையர்களின் பட்டியலை தயாரித்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஏற்கனவே குமரி மாவட்டத்தில் டாஸ்மார்க் கடையில் கொள்ளையடித்து கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை தயாரித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.