search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98766"

    • ஆக்டிங் டிரைவர் மூலமும் கார்களை வெளிவாடகைக்கு விடுகின்றனர்.
    • வாடகை கார் டிரைவர்களுக்கு வருவாய் பாதிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    தங்களது சொந்த கார்களை வாடகைக்கு இயக்குவோர் மீது எடுக்க ப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து, ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போக்குவரத்துதுறை உத்தரவிட்டுள்ளது.

    பலரும் தங்கள் சொந்த கார்களை வாடகைக்கு பயன்படுத்துகின்றனர். நேரடியாக உரிமையாளரே இயக்கியும் அல்லது ஆக்டிங் டிரைவர் மூலமும் கார்களை வெளிவாடகைக்கு விடுகின்றனர். இதனால் வாடகை கார் டிரைவர்களுக்கு வருவாய் பாதிக்கப்படுகிறது.

    இது குறித்து அவ்வப்போது புகார்கள் வந்தாலும், வட்டார போக்குவரத்து துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது இல்லை.இதனால், விதிமீறல் தொடர்கிறது. இதை தடுக்க சொந்த வாகனங்களை பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது தொடர்பாக சிறப்பு சோதனை, தணிக்கை நடத்த வேண்டும். சோதனை மூலம் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போக்குவரத்து கமிஷனர் நிர்மல்ராஜ், அனைத்து போக்குவரத்து மண்டல அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியு ள்ளார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ.,க்களுக்கும் விரிவான உத்தரவு அடுத்தடுத்து வர உள்ளது.

    திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் கூறுகையில், வாடகைக்கு இயக்கும் சொந்த வாகனங்கள் குறித்து அவ்வப்போது கண்காணிக்க ப்படுகிறது.பொதுமக்கள் முன்வந்து புகார் தெரிவி த்தால், உடனடி நடவடிக்கை எடுக்க முடியும். போக்கு வரத்து ஆய்வாளர்கள் சிறப்பு தணிக்கையில் கவனம் செலுத்தி அபராதம் விதிக்க அறிவுறுத்தப்படும் என்றார்.

    • மகாவீர் ஜெயந்தி தினம் வருகிற 4- ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள்(டாஸ்மாக்), அரசு மதுபானக்கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும்

     கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    மகாவீர் ஜெயந்தி தினம் வருகிற 4- ந்தேதி கொண்டாடப்படுகிறது. எனவே அன்று ஒரு நாள் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள்(டாஸ்மாக்), அரசு மதுபானக்கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும். அன்று மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலோ, அரசு மதுபானக்கூடங்கள் மற்றும் மதுபானக்கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் பார்உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேவ மணிக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் (32) என்பவருக்கும் இட பிரச்ச னை கடந்த பல மாதங்க ளாக இருந்து வந்தது.
    • தேவமணியை அவரது வீட்டின் அருகே, மணிமாறன் கூலிப்படையினரை வைத்து வெட்டி கொலை செய்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாள ராக இருந்தவர் தேவமணி (வயது52). இவர் திருநள்ளாறு -சுரக்குடி சந்திப்பில் வசித்து வந்தார். தேவ மணிக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் (32) என்பவருக்கும் இட பிரச்ச னை கடந்த பல மாதங்க ளாக இருந்து வந்தது.இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி இரவு, தேவமணியை அவரது வீட்டின் அருகே, மணிமாறன் கூலிப்படையினரை வைத்து வெட்டி கொலை செய்தார். இக்கொலை வழக்கில் மணிமாறன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிமாறன், புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் மணிமாறன் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்து கடந்த 21-ந் தேதி, நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனில் வெளியே வந்தார்.

    மேலும் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் திங்கள் மற்றும் வெள்ளி என 2 நாட்கள் காலை 10.30 மணியளவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என ஜாமீனில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி மணிமாறன் நேற்று திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு சென்றுள்ளார்.   மணிமாறன் அடிக்கடி திருநள்ளாறு வந்தால் சட்ட ம்-ஒழுங்கில் பிரச்சனை ஏற்படும் என்பதால், திருநள்ளாறு ேபாலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன், மணிமாறன் காரைக்காலில் நுழைய தடை விதிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.  அதன் பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியுள்ள மணிமாறன், 144 பிரிவின் கீழ் கோர்ட் உத்தரவுப்படி குறிப்பிட்ட நேரத்தை தவிர, காரைக்காலில் நுழைய கலெக்டர் தடை விதித்துள்ளார். மேலும் மணிமாறன் 2மாதத்திற்கு காரைக்கால் மாவட்டத்திற்குள் முழுமையாக வர தடை விதிக்க வேண்டும். அல்லது வேறு போலீஸ் நிலையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் கையெழுத்திட அனுமதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டுக்கு திருநள்ளாறு ேபாலீஸ் நிலைய போலீசார் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    • சேவை குறைபாடு காரணமாக நஷ்டஈடு வழங்க உத்தரவு
    • பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவு

    பெரம்பலூர்

     வேப்பந்தட்டை தாலுகா கைகளத்தூர் ராஜவீதியை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகன் ஜோதிவேல் (வயது 46). இவர் கடந்த 14.11.2013 அன்று வி.களத்தூரில் உள்ள துணை தபால் நிலையத்தில் ரூ.30 ஆயிரத்திற்கு தேசிய சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்து அதற்குரிய சான்றிதழ்கள் பெற்றிருந்தார். ஆனால் அந்த சான்றிதழ்களை ஜோதிவேல் தொலைத்துவிட்டார். இதுதொடர்பாக அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் மனு தந்து, துணை தபால் நிலையத்தில் சேமிப்பு பத்திரத்தின் நகல் சான்றிதழ்கள் பெறும் வகையில் தடையின்மை சான்றிதழ் பெற்றிருந்தார். அதனைக்கொண்டு துணை தபால் நிலையத்தில் ஜோதிவேல் தனது தேசிய சேமிப்பு பத்திரத்திற்கான முதிர்வுத்தொகையை வழங்குமாறு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார். ஆனால் சேமிப்பு பத்திரங்களின் அசல் சான்றுகள் இருந்தால்தான் முதிர்வுத்தொகையை தரமுடியும் என்று துணை தபால் அதிகாரி தெரிவித்து முதிர்வுத்தொகையை வழங்க மறுத்துவிட்டார்.மேலும் அங்குள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தேசிய சேமிப்பு பத்திரத்தை அடமானம் வைத்து கடன் ஏதும் பெறவில்லை என்று சான்றிதழ் வாங்கி வருமாறு கூறி அவரை திருப்பி அனுப்பிவிட்டார். அதனைத்தொடர்ந்து ஜோதிவேல் அந்த வங்கியில் இருந்து இதுதொடர்பாக சான்றிதழும் வாங்கி துணை தபால் நிலையத்தில் தாக்கல் செய்தார். இருப்பினும் முதிர்வுத்தொகையை ஜோதிவேலுக்கு வழங்காமல் தபால் துறையினர் அலையவிட்டதால், மன உளைச்சல் அடைந்த ஜோதிவேல், ஸ்ரீரங்கம் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர், பெரம்பலூர் துணை கோட்ட கண்காணிப்பாளர், வி.களத்தூர் துணை தபால் அதிகாரி ஆகிய 3 பேர் மீதும், பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 5.4.2021 அன்று வக்கீல் மூலம் வழக்கு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி ஜவகர், நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர், மனுதாரர் ஜோதிவேலுக்கு முதிர்வுத்தொகையை உடனே வழங்க வேண்டும். சேவை குறைபாடு மற்றும் ஜோதிவேலுவை அலையவிட்டு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு நஷ்டஈடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.5 ஆயிரமும் தபால் துறையினர் 3 பேரும் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.



    https://www.dailythanthi.com/News/State/postal-authorities-should-pay-rs15-thousand-as-compensation-924935


    • ரூ.8 கோடி மதிப்பிலான நடராஜர் சிலையை விற்க முயன்ற வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    • கைதான சரவணனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மதுரை

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள சுமார் 2 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலையை விற்பதற்காக சரவணன், ராமச்சந்திரன், பெரியசாமி ஆகியோர் கடந்த 11.2.2023 அன்று முயற்சி செய்தனர்.

    இந்த தகவலின் பேரில் திட்டக்குடி போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சரவணன் மதுரை ஐகோர்்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதிலளிக்கையில், இவர் தமிழ்நாடு பழங்கால கலைப் பொக்கி ஷங்கள் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.8 கோடி மதிப்புள்ள 2 அடி மதிப்பிலான நடராஜர் உலோகச் சிலையை தனது வீட்டில் விற்பதற்காக முயற்சி செய்துள்ளனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

    மனுதாரர் தரப்பில் கூறுகையில், இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மனுதாரர் சரவணன் 2-வது குற்றவாளி. சிலையை விற்பது தொடர்பாக மனுதாரருக்கு எதுவும் தெரியாது. அப்போது அவர் வீட்டில் இருந்ததால் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில் தொடர்பு டையவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே கைதான சரவணனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் மனுதாரர் சரவணன் தினமும் காலை 10.30 மணிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    • டேப்லெட் சர்வீஸ் செய்யாமல் இழுத்தடித்ததால் அபராதம்
    • நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் உத்தரவு

    பெரம்பலூர்,

    பெரம்பலூரை அடுத்த ஆலத்தூர் தாலுகா பாடாலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் பவித்ரா. இவர் பாடாலூரில் தியேட்டர் பஸ்நிறுத்தம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் கடந்த 4.8.2017 அன்று டேப்லெட் ஒன்றை வாங்கினார். அந்த டேப்லெட்டிற்கு ஒரு வருடம் வாரண்டி இருந்தது. இந்தநிலையில் அதில் சார்ஜ் நீண்டநேரம் நிற்காததால், இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளார். அப்போது பெரம்பலூர் பூசாரித்தெருவில் உள்ள செல்போன் கடைக்கு சென்று பில்லை காண்பித்து டேப்லெட்டில் உள்ள பழுதை சரிசெய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். இதனைத்தொடர்ந்து பவித்ரா, பூசாரித்தெருவில் உள்ள மொபைல் விற்பனை ஷோரூமில் தனது டேப்லெட்டை கொடுத்து பழுதுநீக்கித்தருமாறு கேட்டதற்கு அந்த நிறுவனத்தினர் பவித்ராவை பலமுறை அலையவிட்டனர். உத்தரவு இதனால் மனஉளைச்சல் அடைந்த பவித்ரா, இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் தனது வக்கீல் மூலம், பாடாலூர் தியேட்டர் பஸ்நிறுத்தத்தில் உள்ள மொபைல் கடையின் உரிமையாளர், பெரம்பலூர் பூசாரித்தெருவில் உள்ள மொபைல்கடை உரிமையாளர், பெங்களூருவில் இந்திராநகரில் உள்ள கன்ஸ்யூமர் கேர் எக்சிகியூட்டிவ், யுனைடெட் டெலி லிங்க்ஸ் உரிமையாளர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து, வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி ஜவகர், நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர், பவித்ராவிற்கு டேப்லெட் விற்பனை செய்தவகையில் அதனை பழுதுநீக்கித்தருவதில் சேவை குறைபாடு, அவரை அலையவிட்டு மனஉளைச்சல் ஏற்படுத்தியமைக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுத்தொகையாக ரூ.5 ஆயிரமும் எதிர்மனுதாரர்கள் தனி ஒருவராகவோ அல்லது கூட்டாகவோ 45 நாட்களுக்குள் பவித்ராவிற்கு வழங்கவேண்டும். இல்லாவிட்டால் தீர்ப்பு வழங்கிய தேதியில் இருந்து 8 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    • உடுமலைப்பேட்டை நகராட்சியில் குடிநீர் பொதுமக்களுக்கு தேவையான அளவு வழங்கப்பட்டுள்ளது.
    • எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும்இந்த ஆய்வுக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

    உடுமலை:

    உடுமலைப்பேட்டை நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், கலெக்டர் வினீத் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    உடுமலைப்பேட்டை நகராட்சியில் குடிநீர் பொதுமக்களுக்கு தேவையான அளவு வழங்கப்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் மேல்நிலைத்தொட்டி அமைக்க அரசுக்குபரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதை நகராட்சி நிர்வாகம் மூலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருமூர்த்தி அணையிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம்குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும்இந்த ஆய்வுக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

    2022-2023 ம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து செய்துமுடித்தால் தான் அடுத்த பணிகளை செய்து முடிக்க வாய்ப்புகளாக அமையும்.

    உடுமலைப்பேட்டை நகராட்சியின் சார்பாக வடிகால் அமைக்கும் பணிகளை காலதாமதம் ஏற்படாமல் விரைந்து முடிக்கவும், மேலும், மின்சார வாரியத்தின் சார்பில்பழுதடைந்த மின்கம்பிகளை எல்லாம் மாற்றியமைக்கவும், நெடுஞ்சாலைத் துறையின்சார்பில் பழுதடைந்த சாலைகளை எல்லாம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் கோடை காலமாக இருப்பதால் ஏற்கனவே வழங்கப்படுகின்ற குடிநீரினை எந்தவித தடைகளும் இன்றி பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் . மேலும் வருகின்ற மானிய கோரிக்கையில் நிதிநிலையறிக்கை சமர்பித்தவுடன்தமிழ்நாடு முதலமைச்சர் நமது மாவட்டத்திற்கு வருகை புரிந்து நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். அதற்குள் நமது மாவட்டத்தில் முடிக்க வேண்டிய பணிகளை விரைந்து முடிக்க அனைத்து துறை அலுவலர்களையும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளையும்கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர்இல.பத்மநாபன், உடுமலைப்பேட்டை நகராட்சி தலைவர் மு.மத்தின், மண்டலஇணை இயக்குநர் (நகராட்சி நிர்வாகம்) வி.ராஜன், உடுமலைப்பேட்டை நகராட்சிஆணையாளர் சத்யநாதன், மண்டலப்பொறியாளர் பாலச்சந்திரன், முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும்அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    • அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ரூ.12,500 வழங்க உத்தரவு
    • நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் அதிரடி உத்தரவு

    பெரம்பலூர்

    பெரம்பலூரை அடுத்த வாலிகண்டபுரத்தை சேர்ந்தவர் சையத் ஹூசைன். வழக்கறிஞர். இவர் கடந்த 13.3.2022 அன்று வாழப்பாடிக்கு சென்றுவிட்டு, ஆத்தூரில் இருந்து பெரம்பலூர் வந்த அரசு போக்குவரத்துக்கழக பஸ்சில், தனது 2 உறவினர்களுடன் பயணம் செய்தார். இதில் வழக்கமான பஸ்களில் சாதாரண கட்டணம் ரூ.36 ஆகும். ஆனால் அரசு போக்குவரத்து கழக விரைவு பஸ் என்று கூறி ரூ.45 கட்டணம் கேட்டதால், 3 பேருக்கும் சேர்த்து கண்டக்டரிடம் ரூ.135 செலுத்தி, சையத் ஹூசைன் பயண சீட்டுகளை பெற்றுக்கொண்டார். ஆனால் அந்த பஸ் அனைத்து பஸ் நிறுத்தங்களில் நின்று பெரம்பலூருக்கு 2 மணி நேரம் 15 நிமிடத்தில் வந்தடைந்தது. வழக்கமாக ஆத்தூர்-பெரம்பலூர் இடையேயான பயண நேரம் சுமார் 1 மணி 45 நிமிடம் ஆகும். ஆனால் விரைவு பஸ்சுக்கான கட்டணத்தை பெற்றுக்கொண்டு, அந்த பஸ் தாமதப்படுத்தி, பெரம்பலூர் வந்ததால், சையத் ஹூசைன் மனநெருக்கடிக்கு ஆளானார். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் சையத் ஹூசைன் அரசு போக்குவரத்து கழக திருச்சி கோட்ட மேலாளர் மற்றும் பெரம்பலூர் டெப்போ கிளை மேலாளர் ஆகிய இருவர் மீதும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து, நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி ஜவகர், நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர், மனுதாரருக்கு சேவை குறைபாடு செய்து அவருக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியமைக்கு நிவாரணமாக ரூ.7 ஆயிரத்து 500 மற்றும் வழக்கு செலவுத்தொகையாக ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை எதிர்மனுதாரர்கள் இருவரும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    • 2 நாட்களில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் அக்கரை நடுத்தெருவை சேர்ந்தவர் கவியரசன்.

    இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஆவார்.

    இவர் முன் பகை காரணமாக ஒரு மாதத்திற்கு முன்பு திருக்கண்ணமங்கை அருகே வயல்வெளியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை நடந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எடையூர் என்கிற இடத்தில் காவல்துறையினர் இந்த கொலையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் காளிதாஸ் உள்ளிட்ட ஐந்து நபர்களை கைது செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

    மேலும் இந்த கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் அப்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தொடர்ந்து அதனை எதிர்த்து அதே இடத்தில் பாஜக மாநில துணை தலைவர் வி.பி துரைசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சபரிநாதன் சின்ன காளி என்கிற காளிதாஸ், பெரிய தம்பி என்கிற ராஜசேகர், சந்தோஷ்குமார், வசந்தகுமார், சிவகாளிதாஸ், கணேசன், சந்தோஷ், சுர்ஜித் ஆகிய 9 நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பரிந்துரையின் பெயரில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    இதில் சின்ன காளி என்கிற காளிதாஸ் கொரடாச்சேரி ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மயிலம் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியினை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • மாணவியர்களுக்கு வழங்கப்படவுள்ள மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது

    விழுப்புரம்:

    மயிலம் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியினை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது, முதல்-அமைச்சர் விடுதிகளில் தங்கி அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு ஆரோக்கியத்துடன் கூடிய உணவு, அடிப்படை பொருட்கள், ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை வழங்கி, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட வழிவகுத்துள்ளார்.அதனடிப்படையில், மயிலம் ஆதிதிராடர் நல மாணவியர் விடுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, படுக்கையறை வசதி, மின் வசதி, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மாணவியர்களுக்கு வழங்கப்படவுள்ள மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நாள்தோறும் விடுதியினை தூய்மைப்படுத்தி சுகாதாரமாக வைத்துக்கொள்ள விடுதி காப்பாளாருக்கு அறிவுறுத்தப்பட்டது. விடுதி ஆய்வி ன்போது, காப்பாளர் விடுதியில் இல்லா மலும், தின ந்தோறும் விடுதியில் தங்காமல் சென்று விடுவதும், மாணவி யர்கள் தங்கி பயில நடவடிக்கை மேற்கொ ள்ளாமல் இருந்ததும், மாணவி யர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் முழுமையான அளவில் இல்லாது இருப்பதும் கண்டறியப்பட்டது. ஆகையால் காப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, திடீர் ஆய்வு மேற்கொள்ளும் நேரத்தில், விடுதியில் ஏதேனும், முறைகேடுகள் கண்டறியும் பட்சத்தில், விடுதி காப்பாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்     மேலும், நடப்பாண்டிற்கான அரசு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதால், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கவனத்தினை சிதற விடாமல் நல்ல முறையில் படித்த அதிக மதிப்பெண் பெற்றிட வேண்டும் என மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார்.   ஆய்வின்போது, திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணி உட்பட பலர் உள்ளனர்.

    • ஒரு ஆண்டுக்கு மேலாக சிகிச்சை பெறும் யானையை வனத்துறையினர் பராமரிக்க உத்தரவு விடப்பட்டுள்ளது.
    • யானையை லாரியில் இருந்து இறக்கியபோது தடுமாறி விழுந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் சீதக்காதி தெருவை சேர்ந்த வர் சேக் முகமது. இவர் 56 வயதான லலிதா என்ற யானையை வளர்த்து வருகிறார்.

    கடந்த ஜனவரி 1-ந் தேதி இந்த யானை தேனி மாவட்டத்தில் இருந்து கோவில் விழாவிற்காக விருதுநகர் கொண்டு வரப்பட்டது. அந்த யானையை லாரியில் இருந்து இறக்கியபோது தடுமாறி விழுந்தது. இதில் யானைக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.

    இதுபற்றி அறிந்த வனத்துறையினர், யானையை உரிமையாளர் ராஜபாளையத்திற்கு அழைத்துச்செல்ல அனுமதி வழங்கவில்லை. அந்த யானையை விருதுநகர் ரெயில்வே காலனி முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் கட்டிவைத்து கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அந்த யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அதன் காயங்கள் ஆறாமல் உள்ளது என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிக்குமாறு வனத்துறை தலைமை காட்டுயிர் பாதுகாவலர் சீனிவாஸ் ஆர்.ரெட்டி, மேகமலை வனச்சரகர் துணை இயக்குநர் திலிப்குமாருக்கு உத்தரவிட்டார்.

    மேலும் அந்த யானையை பராமரிப்பதற்கு ஆகும் செலவை யானையின் உரிமையா ளரிடம் இருந்து அபராதமாக பெற்று விருதுநகரிலேயே யானைக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்க அறிவுரை வழங்கி உள்ளார்.

    இந்தநிலையில் விருதுநகரில் சிகிச்சை பெற்று வரும் யானையை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பார்வையிட்டார். அப்போது அவர் யானையின் பராமரிப்பு, அதற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து பாகன்களிடம் கேட்டறிந்தார்.

    • நவீனப்படுத்தும் வகையில் ரூ.3 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • 99 கடைகனையும் காலி செய்ய நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரமான அரூர் பேரூராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பேருந்துநிலைத்தை விரிவுபடுத்தி நவீனப்படுத்தும் வகையில் ரூ.3 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பேரூந்து நிலையம். தேவையான அனைத்து கடைகளும், நவீன கழீப்பிடங்கள், அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூந்து நிலையத்தில் 99 கடைகனையும் காலி செய்ய நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது.

    பேரூந்து நிலையத்தை நவீன பேரூந்து நிலையமாக மாற்றி அமைக்கும் பணிக்கு நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது. இதனால் பேரூந்து நிலையத்தில் உள்ள கடையின் ஏலதாரர்கள், தங்களது 2022-2023 ஆண்டுக்கு செலுத்த வேண்டிய முழு தொகையையும் செலுத்தி ரசீது பெற்று கொள்ள வேண்டும்.

    வரும் மார்ச் 15-ந்தேதிக்குள் கடைகளை காலி செய்து பேரூராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். தவறினால் பேரூராட்சி மூலம் கடைகள் காலி செய்யப்பட்டு நிலுவை தொகைகள் இருப்பின் நீதிமன்ற நவவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×