search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98766"

    • தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சம்பவத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.
    • இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்பது குறித்து மேயர் தினேஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூரில் நேற்று பெய்த மழையினால் டி.எம்.எப் மருத்துவமனை அருகே உள்ள சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சம்பவத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது தண்ணீரை உறிஞ்சும் மோட்டார் பழுதாகி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து மோட்டாரை சரி செய்ய உத்தரவிட்டார். மேலும் கூடுதலாக ஒரு புதிய மோட்டார் ஒன்றை பொருத்தவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து பாலத்தில் தேங்கி நின்ற தண்ணீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டதை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்கள் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தி போக்குவரத்து செல்லும் வரை சரி செய்தனர்.பின்னர் மாநகராட்சி அதிகாரிகளிடம் இந்த பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு என்ன வழிமுறைகள் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்பது குறித்து மேயர் தினேஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.

    • வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    • நகர்மன்ற தலைவர் ஆனந்த், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஆய்வ செய்தனர்.

    சிவகங்கை நகராட்சியில் கட்டப்பட்டுவரும் அறிவுசார் மையம், செட்டியூரணியில் கரைகளை பலப்படுத்தும் பணி, வாரசந்தை, தெப்பக்குளம், ராணி ரெங்க நாச்சியார் பஸ் நிலையம் ஆகியவற்றில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்த அவர்கள் இதுதொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

    அதன்பின் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா கூறியதா வது:-

    சிவகங்கை நகராட்சி யில் போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்க ளுக்கு பயிற்சி வழங்க ரூ.1.85 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் கட்டப்பட்டு வரு கிறது. ெசட்டியூரணியை அதிக ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தும் பணியும், அதனை சுற்றி வேலி அமைக்கும் பணியும், நடை பாதை ஏற்படுத்தவும் பணிகள் நடந்து வருகிறது.

    சிறுவர்களுக்கான விளை யாட்டு உபகரணங்களுக்காக ரூ.1.60 கோடி ஒதுக்கீடு ெசய்யப்பட்டுள்ளது. சாலையோர கடைகளை ஒழுங்குப்படுத்தவும், வாரசந்தையில் கூடுதல் கடைகள் அமைக்கவும் ரூ.3 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. ராணி ரெங்கநாச்சியார் பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது நகர்மன்ற தலைவர் ஆனந்த், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மொத்தமுள்ள 1,667 பஸ்களில் 1,352 பஸ்கள் சான்றிதழ் பெற்றுள்ளது.
    • மொத்தமுள்ள 1,667 பஸ்களில் 1,352 பஸ்கள் சான்றிதழ் பெற்றுள்ளது.

    திருப்பூர்:

    நடப்பு கல்வியாண்டு தொடங்கிய நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,667 பஸ்களில் 885 பஸ்கள் சான்றிதழ் பெற்றன. ஜூலை முதல் கடந்த 2 வாரத்தில் மீதமுள்ள பஸ்கள் சான்றிதழ் பெற வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்துக்கு வர ஆர்.டி.ஓ.,க்கள் உத்தரவிட்டனர்.

    தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,667 பஸ்களில் 1,352 பஸ்கள் சான்றிதழ் பெற்றுள்ளது. இன்னமும் 315 பஸ்கள் தகுதிச்சான்றிதழ் பெறவில்லை. இந்நிலையில் ஜூலை 31க்குள் பள்ளி பஸ்கள் ஆய்வு செய்து முடித்து மாவட்டத்தில் தகுதிச்சான்றிதழ் பெற்ற பள்ளி பஸ்கள் குறித்த விபரத்தை அறிக்கையாக தெரிவிக்க வேண்டும் என போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இதனால் இன்னும் சான்றிதழ் பெறாத திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உடுமலை, தாராபுரம் ஆர்.டி.ஓ.,க்களிடம் இருந்து பள்ளிகளுக்கு பஸ்கள் நிலை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    • காண்டிராக்டர் கொலை வழக்கை விசாரித்து முடிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • சிறைக்குள் கைதிகள் அடித்துக் கொலை செய்தனர்.

    மதுரை

    நெல்லை மாவட்டம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்து மனோ என்பவர் ஒரு வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அடைக்கப்பட்டார். அவரை சிறைக்குள் கைதிகள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக இருந்த சிறைத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்திவு செய்ய வலியுறுத்தி 72 நாள்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவரது உடலை பெற்ற உறவினர்கள் கடந்த ஆண்டு ஜூலை 2-ந் தேதி அடக்கம் செய்தனர்.

    இவரது கொலைக்கு பழி வாங்கும் வகையில் அடுத்த சில நாட்களில் நெல்லை மாவட்டம் தாழையூத்து கிராமத்தைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் கண்ணன் என்பவரை 10 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தது.

    இந்த கொலை வழக்கில் மொத்தம் 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலர் கைதானார்கள். இந்த வழக்கு நெல்லை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கொல்லப்பட்ட கண்ணனின் தந்தை நாராயணன், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது மகன் கண்ணன் கொலை வழக்கில் கைதானவர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் அவர்களால் சாட்சிகள் மிரட்டப்படுவார்கள். சாட்சிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

    எனவே கண்ணன் கொலை வழக்கைவிரைவாக விசாரித்துமுடிக்கவும், அதுவரை குற்றவாளி களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் கிருஷ்ணா தாஸ் ஆஜராகி, கண்ணன் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் பலர் குற்றப் பின்னணியை கொண்டவர்கள். ரவுடிகள் பட்டியலிலும் இடம் பெற்றவர்கள்.

    எனவே இந்த வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    விசாரணை முடிவில் நீதிபதி, மனுதாரர் மகன் கொலை வழக்கை சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டு 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    • அதிக விலைக்கு சிலிண்டர் விற்ற தனியார் கியாஸ் ஏஜென்சிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு விட்டது.
    • கேஸ் கம்பெனியின் அதிக வசூல், குறித்து வாடிக்கையாளர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் கடந்த ஆண்டு 2019 மே 6-ந் தேதி சமையல் கேஸ் சிலிண்டர் ரீபிள் கேட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் பதிவு செய்தார். கேஸ் ஏஜன்சியினர் சசிகலா பெயரில் ரசீது போட்டு கட்டணம் ரூ.746 என பதிவு செய்துள்ளனர்.

    மே 11-ந் தேதி கேஸ் கம்பெனியினர் சமையல் கேஸ் சிலிண்டரை சசிகலாவின் வீட்டிற்கு கொண்டு வந்து விநியோக புத்தகத்தை வாங்கி கையெழுத்திட்டு, கேஸ் சிலிண்டருக்கு ரூ.800 கட்டணம் கேட்டுள்ளனர். வாடிக்கையாளர் சசிகலா ரசீதில் ரூ.746 என்று தான் உள்ளது. அதை மட்டுமே தருவேன் என்று கூறவே, பணியாளர் ரூ.800 கொடுத்தால் தான் சிலிண்டர் தரமுடியும், இல்லையெனில் நான் திருப்பி எடுத்துப் போகிறேன் என்று கூறிவிட்டு சிலிண்டரை எடுத்துச் சென்றுவிட்டார்.

    கேஸ் கம்பெனியின் இத்தகைய அதிக வசூல், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி சேவைக்குறைபாடு மற்றும் நேர்மையற்ற வணிக முறையாகும் என சசிகாலா நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் முத்துக்குமார், ரத்தினசாமி ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

    விசாரணை முடிவில், வாடிக்கையாளருக்கு பில் விலையிலேயே கேஸ் சிலிண்டரை விநியோகம் செய்ய கோர்ட் உத்திரவிட்டது. மேலும், சசிகலாக்கு கேஸ் ஏஜென்சி ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், மனஉளைச்சல் இழப்பீடாக ரூ.5 ஆயிரம், வழக்கின் செலவுத் தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் நல நிதிக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை 2 மாதத்தில் நிறைவேற்றா விட்டால் சசிகலாக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சசிகலாவுக்கு ஆதரவாக தமிழ்நாடு பயனீட்டாளர் சங்க செயலாளர் சுப்பராயன் கோர்ட்டில் ஆஜராகி வாதிட்டார்.

    • மாளிகை மேடு அகழாய்வில் அன்றாடம் நடைபெறும் பணிகளை உடனுக்குடன் மதிப்பீடு செய்ய உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது
    • முதல்வர் பணியை தொடங்கிவைத்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ராஜேந்திர சோழனின் அரண்மனை அமைந்திருந்த மாளிகை மேட்டில் நடந்து வரும் இரண்டாம் கட்ட ஆய்வு பணிகளை தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    மாளிகைமேடு இரண்டாம் கட்ட ஆய்வு பணியை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியது கடந்த மார்ச் 11ஆம் தேதி காணொளி மூலம் தமிழக அரசு முதல்வர் ஸ்டாலின் இதற்கான பணியை தொடங்கிவைத்தார்.

    இதையடுத்து நடந்த விழாவில் சோழர் காலத்து கட்டடங்கள் பழங்கால அரண்மனை சுற்றுச் சுவர்களின் தொடர்ச்சி கண்டுபிடிக்கப்பட்டது.

    சில வாரங்களுக்கு முன்பு பழங்கால பாறை மற்றும் ஐம்பொன் கலந்த செப்பு காப்பு கண்டெடுக்கப்பட்டது. தமிழக தொல்லியல் துறை ஆணையர் ஜீவானந்தம் தலைமையிலான குழுவினர் மாளிகையில் நடந்தவரும் அகழாய்வு பணிகளை ஆய்வு செய்தனர்.

    நீளம் மற்றும் உயரத்தில் அளவுகளை சரி பார்த்து அன்றாடம் நடைபெறும் பணிகளை உடனுக்குடன் மதிப்பீடு பட்டியல் தயார் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் கவனமாக இருக்க வேண்டும். என அலுவலர்களிடம் அறிவுறுத்தினர் தொல்லியல் வல்லுநர் பேராசிரியர் ராஜன் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி பொறுப்பாளர் சுபலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பள்ளி வளாகங்களை, வகுப்புகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.
    • மாவட்டத்தில் பராமரிப்பில்லாத அரசு பள்ளி கட்டமைப்புகள் சீரமைக்க பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

    திருப்பூர்,

    கொரோனா தொற்றுக்கு பின் மீண்டும் பள்ளிகள் பிப்ரவரி 1-ந்தேதி முதல் துவங்கின. மே மாதம் அனைத்து பொதுத்தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் 2022-23ம் கல்வியாண்டு வரும் 13-ந் தேதி துவங்குகிறது.

    இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து அரசு பள்ளிகளிலும் மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) திருவளர்ச்செல்வி அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடந்தது. அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 183 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    இது குறித்து முதன்மை கல்வி அதிகாரி பேசியதாவது :-

    மாணவர்கள் பாதுகாப்பாக உணரும் விதமாக, பள்ளி வளாகங்களை, வகுப்புகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.வகுப்பறைகளை கிருமி நாசினி தெளித்துதூய்மையாக பராமரிக்க வேண்டும். எந்த வகையிலும் மாணவர் சேர்க்கை குறையவிடக்கூடாது. அதற்கேற்ப பள்ளி தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.

    மாணவர், ஆசிரியர் சார்ந்த தகவல்கள், தளவாட பொருட்கள், கழிப்பிட வசதி, வகுப்பறைகள் உள்ளிட்ட தகவல்களை 'எமிஸ்' தளத்தில் உடனுக்குடன் பதிவேற்றுங்கள். இனி வரும் காலங்களில்இதனடிப்படையிலே நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். மாவட்டத்தில் பராமரிப்பில்லாத அரசு பள்ளி கட்டமைப்புகள் சீரமைக்க பட்டியல் தயாரிக்கப்படுகிறது. தலைமையாசிரியர்கள் இதற்கான விவரங்களை தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் சிதிலமடைந்துள்ள கட்டடங்களை அகற்றுதல், கூடுதல் கழிப்பறை கட்டுதல், வகுப்பறை மேற்கூரைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்படும் என்றார்.

    • வருவாய்த்துறை அமைச்சர் உத்தரவின்படி ரூ. 2.42 கோடி செலவில் தொடங்கியது.
    • இந்த பாலப்பணி இரவு பகலாக நடந்து வருகிறது. தெற்குப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலம் ஒரு கோடியே 32 லட்சம் செலவில் நடக்கிறது. இந்தப் பாலம் 40 அடி நீளத்திற்கும் 32 அடி அகலத்திற்கும் அமைய உள்ளது.

    நாகர்கோவில்:

    தேரூரில் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்கள் தேரூரில் உள்ள பெரிய குளத்திலிருந்து பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த குளத்திற்கு தட்டையார் குளம், மாணிக்க புத்தேரி குளம் ஆகிய குளத்திலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தேரூர் குளத்தின் நடுவே வெள்ளமடத்திலிருந்து சுசீந்திரம் செல்லும் சாலை உள்ளது. தேரூர் குளம் மேற்கு பகுதியில் இருந்து தேரூர் கிழக்கு பகுதியில் உள்ள குளத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில் சாலையின் குருக்கே இரு இடங்களில் குழாய்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

    இந்த குழாய்கள் அடைப்பட்டு தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. தேரூர்குளம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்ததால் தண்ணீரை வற்றவைத்து குழாயில் அடைபட்டிருந்த அடைப்பை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவமழையால் இந்த குளத்தின் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த இடத்தை பார்வையிட்ட வருவாய்த்துறை அமைச்சர் 2 இடங்களில் பாலம் அமைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தேரூர் குளத்தின் இரு இடங்களில் பாலம் அமைக்கும் பணி ரூ. 2 கோடியே 42 லட்சம் செலவில் தொடங்கியது.

    தற்போது இந்த பாலப்பணி இரவு பகலாக நடந்து வருகிறது. தெற்குப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலம் ஒரு கோடியே 32 லட்சம் செலவில் நடக்கிறது. இந்தப் பாலம் 40 அடி நீளத்திற்கும் 32 அடி அகலத்திற்கும் அமைய உள்ளது.

    நேற்று இரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடத் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

    சென்னை:

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வடகிழக்குப் பருவமழையையொட்டி முன் கூட்டியே ஆலோசனைக் கூட்டம் நடத்தி அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நான் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டு இருக்கிறேன்.

    அமைச்சர்களும் இதுபோன்ற நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வீடுகளில் மழைநீர் தேங்கி இருப்பதை படத்தில் காணலாம்

    இந்நிலையில் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து கழக நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அளித்தல், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மக்களின் இன்னல்களைப் போக்கிட தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    இதையும் படியுங்கள்...மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க.வினர் உதவ வேண்டும் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை

    தந்தை இறுதி சடங்கில் பங்கேற்க வாலிபர் ஜாமினுக்கு மனு தாக்கல் செய்த நிலையில், நள்ளிரவில் தட்டச்சு செய்ய ஆளில்லாததால் நீதிபதி கைப்பட தீர்ப்பு எழுதி உத்தரவிட்டார்.

    சென்னை:

    ராயபுரத்தை சேர்ந்தவர் டேவிட்சன். அதேபகுதியை சேர்ந்த பெண்ணை வாய் தகராறில் தாக்கிய வழக்கில் இவர் கடந்த 23-ந்தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் டேவிட்சனின் தந்தை விஜயகுமார் நேற்று மரணம் அடைந்தார்.

    இவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக டேவிட்சன் தனது வக்கீல் ஏ.கே. கோபால் மூலமாக மனு தாக்கல் செய்தார்.

    ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதி ஜெகதீஷ் சந்த்ரா வீட்டில் நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் கோபால் மனு அளித்தார். இதனையடுத்த நீதிபதி ஜெகதீஷ்சந்த்ரா, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் அனுமதி பெற்று ஜாமீன் மனுவை விசாரித்தார்.

    இதுபற்றி தலைமை குற்றவியல் வக்கீல் எமலியாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ராயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    ஜாமீன் மனு தொடர்பான விசாரணையில் அரசு தரப்பில் ஆஜராவதற்காக வக்கீல் முகமது ரியாஸ் நியமிக்கப்பட்டார்.

    இதனையடுத்து நீதிபதி ஜெகதீஷ் சந்த்ரா, தனது வீட்டிலேயே ஜாமீன் மனுவை விசாரித்தார். ராயபுரம் போலீசாருக்கும் அரசு வக்கீலும் வீட்டுக்கே சென்றனர்.

    வாலிபர் டேவிட்சன், தந்தை விஜயகுமாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்கு வசதியாக அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    ஜாமீன் உத்தரவு கோர்ட்டில் தட்டச்சு செய்து வழங்கப்படுவது வழக்கம். நள்ளிரவில் தட்டச்சு செய்ய யாரும் இல்லாததால் நீதிபதி ஜெகதீஷ் சந்த்ரா தனது கைப்பட ஜாமீன் உத்தரவை எழுதினார். இன்று முறைப்படி தட்டச்சு செய்து கொடுக்கப்படுகிறது. புழல் சிறையில் இருந்து டேவிட்சன் விடுதலை செய்யப்படுகிறார். #tamilnews

    ×