என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேரூர் குளத்தின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி
- வருவாய்த்துறை அமைச்சர் உத்தரவின்படி ரூ. 2.42 கோடி செலவில் தொடங்கியது.
- இந்த பாலப்பணி இரவு பகலாக நடந்து வருகிறது. தெற்குப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலம் ஒரு கோடியே 32 லட்சம் செலவில் நடக்கிறது. இந்தப் பாலம் 40 அடி நீளத்திற்கும் 32 அடி அகலத்திற்கும் அமைய உள்ளது.
நாகர்கோவில்:
தேரூரில் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்கள் தேரூரில் உள்ள பெரிய குளத்திலிருந்து பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த குளத்திற்கு தட்டையார் குளம், மாணிக்க புத்தேரி குளம் ஆகிய குளத்திலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தேரூர் குளத்தின் நடுவே வெள்ளமடத்திலிருந்து சுசீந்திரம் செல்லும் சாலை உள்ளது. தேரூர் குளம் மேற்கு பகுதியில் இருந்து தேரூர் கிழக்கு பகுதியில் உள்ள குளத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில் சாலையின் குருக்கே இரு இடங்களில் குழாய்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த குழாய்கள் அடைப்பட்டு தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. தேரூர்குளம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்ததால் தண்ணீரை வற்றவைத்து குழாயில் அடைபட்டிருந்த அடைப்பை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவமழையால் இந்த குளத்தின் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த இடத்தை பார்வையிட்ட வருவாய்த்துறை அமைச்சர் 2 இடங்களில் பாலம் அமைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தேரூர் குளத்தின் இரு இடங்களில் பாலம் அமைக்கும் பணி ரூ. 2 கோடியே 42 லட்சம் செலவில் தொடங்கியது.
தற்போது இந்த பாலப்பணி இரவு பகலாக நடந்து வருகிறது. தெற்குப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலம் ஒரு கோடியே 32 லட்சம் செலவில் நடக்கிறது. இந்தப் பாலம் 40 அடி நீளத்திற்கும் 32 அடி அகலத்திற்கும் அமைய உள்ளது.