search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபம்"

    • மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
    • இந்த விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர்.

    முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுவது.

    மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்வற்றில் தீபத் திருவிழா கொண்டாடப்படும் திருக்கார்த்திகை விரதம் மிக முக்கியமானதாகும்.

    இந்த விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர்.

    நாரத மகரிஷி 12 ஆண்டுகள் இந்த விரதமிருந்ததால், எல்லா முனிவர்களுக்கும் மேலான பதவி பெற்றார்.

    இந்த நாளில் முருகனுக்குரிய பாராயண நூல்களான கந்தசஷ்டி கவசம்,

    சண்முகக் கவசம் படிப்பதும், கந்தபுராணம் கேட்பதும் நல்லது.

    • தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.
    • சிவத்தலத்தில் ஏற்றப்படும் தீபத்திற்கு பாவங்களை போக்கும் சக்தி உண்டு.

    தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.

    கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள்.

    இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.

    கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்ரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றி குறிப்புகள் உள்ளன.

    பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள்.

    இதுதான் தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். தீபங்கள் நமது கர்மவினைகளை நீக்கக் கூடியவை.

    சிவத்தலத்தில் ஏற்றப்படும் தீபத்திற்கு பாவங்களை போக்கும் சக்தி உண்டு.

    தீபங்கள் தீய சக்திகளை அண்டா வண்ணம் காக்கக் கூடியவை. வேண்டும் பலனைத் தரக்கூடியவை.

    சிவத்தலத்தில் தீபம் ஏற்றுபவரும், ஏற்ற உதவியவரும் சிவலோக பதவி அடைவார்கள் என்பது திண்ணம்.

    தொடர்ந்து தீபம் ஏற்றியவர்களின் பரம்பரையில் யாருக்கும் கண்பார்வை குறைபாடு வராது.

    மிகுந்த புண்ணியம் சேரும்.

    சிவன் சந்நிதியில் அணைய இருந்த தீபத்தை தன்னை அறியாமல் தூண்டி விட்ட எலி மறுவிறவியில் மகாபலி சக்கரவரத்தியாக பிறந்தது என்றால் தீபத்தின் பெருமையினை நாம் உணரலாம்.

    திருக்கார்த்திகை திருநாளன்று அவரவர் இல்லங்கள் தோறும் தீபம் ஏற்றி எல்லாம் வல்ல அண்ணாமலையார் அருளை பெறலாம்.

    ஏற்றப்படும் தீபம் சிவபெருமானின் வடிவம் ஆகும்.

    எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை தீப வடிவில் வழிபடும் நாள் இந்த கார்த்திகை தீபத்திருநாள்.

    • கடந்த 2017 ம் ஆண்டு இந்த தீப உற்சவ விழாவை உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
    • இன்று காலை முதலே இதற்கான பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வருகிறது.

    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் வரும் ஜனவரி மாதம் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்ப ட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அயோத்தி ராமர் கோவிலை பக்தர்கள் வழிபாட்டுக்கு திறந்து வைக்கிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு தீப உற்சவம் எனப்படும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2017 ம் ஆண்டு இந்த தீப உற்சவ விழாவை உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.

    அந்த உற்சவத்தின் போது, ராமர் கோவிலில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்படும். அந்த வகையில் 2017 ம் ஆண்டு 1.71 லட்சம் தீபங்களும், 2018 ம் ஆண்டு 3.01 லட்சம் தீபங்களும், 2019 ஆண்டு 4.04 லட்சம் தீபங்களும், 2020ல் 6.06 லட்சம் தீபங்களும், 2021ல் 9.41 லட்சம் தீபங்களும், கடந்தாண்டு 15.76 லட்சம் தீபங்களும் ஏற்றப்பட்டது.

    இந்த ஆண்டு ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் உலக சாதனை நிகழ்ச்சி போல 24 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட உள்ளது. இது ராமர் கோவில் சுற்று பகுதியில் 51 இடங்களில் ஏற்றப்படுகிறது. இந்த பிரம்மாண்ட தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது.

    இந்தப் பணிக்காக 25 ஆயிரம் தன்னார்வலர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அங்கு திரண்டு உள்ளார்கள்.

    இதில் 21 லட்சம் தீபங்கள் ஏற்றுவதே இலக்காக வைக்கப்பட்டுள்ளது. எனவே 24 லட்சம் தீபங்கள் ஏற்றி அதில் சுமார் 3 லட்சம் தீபங்கள் ஆங்காங்கே அணைந்தாலும் 21 லட்சம் தீபங்கள் ஒரே நேரத்தில் பிரகாசமாக ஜொலிக்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தீப உற்சவத்தில் முந்தைய சாதனைகளை முறியடிக்க உத்திர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஒரு லட்சம் லிட்டர் எண்ணெய் மற்றும் திரிகள் பயன்படுத்தப்படஉள்ளது. இதனை லோகியா அவத் பல்கலைக்கழகத்தினர் முன்னின்று கவனித்து வருகின்றனர். இந்த தீப உற்சவத்திற்காக ரூ.3கோடி செலவிடப்படுகிறது.

    இதில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு பிரத்யேக சீருடை வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே இதற்கான பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வருகிறது.

    • தேங்காயை இரு பாதியாக உடைத்து அதில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
    • இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

    தேங்காய் விளக்குகள்

    தேங்காயை இரு பாதியாக உடைத்து அதில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

    இப்படி ஏற்றினால் எந்த காரியமும் சித்தியாகும் என்பது நம்பிக்கை.

    விளக்கு ஏற்றும் விதிமுறைகள்

    1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும்.

    குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.

    2. நெய் வேத்தியங்கள் நிவேதனம் செய்யும் வாழை இலையின் பக்கத்தில் விளக்கேற்றுவது மிகவும் சிறந்தது.

    3. ஊது பத்திகளை பூஜைக்கு வைத்த வாழைப்பழங்களின் மேல் குத்தி ஏற்றுதல் கூடாது.

    ஊது பத்திகளுக்கென்று உரிய ஸ்டாண்டை பயன்படுத்துதல் நல்லது.

    இல்லையேல் ஒரு சிறிய பாத்திரத்தில் அரிசியை நிரப்பி அதில் ஊது பத்திகளைக் குத்தலாம்.

    4. கற்பூரம் ஏற்றும் போது தட்டில் சிறிதளவு திருநீறை வைத்து அதன் மேல் கற்பூரத்தை ஏற்ற வேண்டும்.

    திருநீறு இல்லையேல் வாழை இலையிலோ வெற்றிலையையோ வைத்து ஏற்றலாம்.

    பூஜைக்குரிய வெற்றிலையை வைத்து கற்பூரம் ஏற்றுதல் தவறு.

    5. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

    6. சுபகாரியங்கள் வீட்டில் நடைபெற விளக்கு பூஜை செய்து வழிபட்டால் நற்பலன்களை கண்டிப்பாக பெறலாம்.

    7. விளக்கு பூஜை செய்யும் போது குத்து விளக்கிற்கு முன் சிறிது மஞ்சள் தூளால் சிறு விநாயகரின் சிலையை செய்து குங்குமமிட்டு அவரை அங்கு வீற்றிருக்க செய்ய வேண்டும்.

    8. தீபம் ஏற்ற தூய்மையான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும்.

    ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது.

    9. அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெ ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு

    திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

    10. விநாயக பெருமானுக்கு-1, 7 தீபம், முருகருக்கு-6 தீபம், பெருமாளுக்கு-6 தீபம், நாக அம்மனுக்கு-4 தீபம்,

    சிவனுக்கு-3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு-2 தீபம், மகாலட்சுமிக்கு-8 தீபம் என ஏற்றி வழிபட வேண்டும்.

    11. தீபங்களை வாகனங்களுக்கு முன்பாகவும் ஏற்றலாம்.

    சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன்-சிங்கம்-நந்தி முன்பாக, பிள்ளையார்- பெருச்சாளி முன்பாக,

    பெருமாள்- கருடன் முன்பாக, முருகர்- மயில் முன்பாக ஏற்ற வேண்டும்.

    12. தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும்,

    குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும்,

    துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு-2  என அம்மனை தீபம் நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

    13. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றி பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

    அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு,

    வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி,

    சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.

    14. காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.

    15. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

    16. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும்.

    நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

    17. புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை தீயசக்திகள் தொந்தரவுகள் அண்டாது.

    18. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக் கூடாது.

    19. தீப சரஸ்வதி என்று மூன்று முறையும், தீப லட்சுமி என்று மூன்று முறையும் குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் என தீபத்தை பன்னிரண்டு முறை வணங்க வேண்டும்.

    20. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு.

    மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம்.

    தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.

    • தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது.
    • பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாக தீப வழிபாடு செய்யலாம்.

    தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 சக்திகளும் உள்ளனர்.

    தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது.

    அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

    மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது.

    தினமும் மாலையில் தீபம் வைத்து வணங்கி பூஜை செய்ய வேண்டும்.

    பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாக தீப வழிபாடு செய்யலாம்.

    வீட்டிலே சாமிக்கு முன்னால் சின்னதாக அகல் விளக்கு ஏற்றி, மணி நேரமாவது எரிவதற்கு எண்ணெய் விட்டு,

     தேவியை மனதில் தியானித்துப் பூஜை செய்ய வேண்டும்.

    அப்படி செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி

    எல்லாவிதமான சந்தோஷங்களும், சவுபாக்கியங்களும் ஏற்படும்.

    வீட்டிலே நாம் இம்மாதிரி தீப பூஜை செய்யும்போது, பக்கத்திலேயே குழந்தைகளை வைத்துக் கொண்டு செய்ய வேண்டும்.

    அவர்களையும் நல்ல சுலோகங்களை பாடல்களைப் படிக்க வைத்து பூஜையில் ஈடுபடுத்த வேண்டும்.

    தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும் வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும்.

    லட்சுமியின் அருள் கிடைக்கும்.

    • விளக்கின் திருச்சுடர் எவ்வளவு காற்றடித்தாலும் சற்றும் அசையாமலும், ஆடாமலும் எரிகின்றது.
    • இந்த விளக்கானது, ஒரே சமயத்தில் மூன்று கிலோ எண்ணெய் ஊற்றும் அளவிற்கு பெரியது.

    திருப்பதி அருகே உள்ள ஸ்ரீ காளஹஸ்தி என்ற வாயுத் தலத்தின் கருவறைத் திருவிளக்குகளில்

    பல சுடர்களில் ஒரு திருச்சுடர் காற்றால் தாக்கப்படுவதைப் போல எப்போதும் அசைந்து ஆடிக் கொண்டே இருக்கின்றது.

    அந்தத் திருச்சுடரின் நடன கோலம், வாயுவின் வடிவில் இறைவன் நிலைத்து நிற்கின்றான் என்பதை உணர்த்துகிறது.

    மோகனூரில் உள்ள சிவன் கோவில் கருவறை விளக்கின் திருச்சுடர் எவ்வளவு காற்றடித்தாலும்

    சற்றும் அசையாமலும், ஆடாமலும் நின்று நிதானமாக நிலைத்து எரிகின்றது.

    இங்குள்ள இறைவனுக்கு "அசலதீபேசுவரர்" என்று பெயர்.

    மிகப்பெரிய திருவிளக்கு!

    ஏத்துமானூர் மகாதேவர் கோவிலின் திருவிளக்கு, அளவில் மிகப்பெரியது.

    அதன் குழி ஒரே சமயத்தில் மூன்று கிலோ எண்ணெய் ஊற்றும் அளவிற்கு பெரியது.

    கோவில்களில் எண்ணற்ற திருவிளக்குகள் உள்ளன.

    ஆனால் வேதாரண்யம் கோவிலில் உள்ள விளக்கு மட்டும் மிக்க அழகுடையது.

    • அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள் இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி.
    • கல்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும்.

    அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள் இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி.

    "பஞ்ச" என்றால் ஐந்து என்று பொருள்.

    பஞ்சமி திதியன்று குத்துவிளக்கில் ஐந்து எண்ணெய் கலந்து ஐந்து முகத்தினையும் ஏற்றி

    கல்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும்.

    தீபத்தில் எரியும் ஐந்து முகங்களில் ஏதாவது ஓர் தீபத்தை உற்றுப் பார்த்தபடியே மனதை ஒரு முகப்படுத்தி

    நம்முடைய வேண்டுதல்களை மனதிற்குள் சொல்லி வந்தால் அது நிச்சயம் நிறைவேறும்.

    இப்படி ஜோதியை நோக்கி வழிபடும்போழுது "ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும்.

    இப்படி செய்தால் அம்பிகையின் அருளாளல் நமது வேண்டுதல்கள் நிறைவேறும்.

    • அண்ணாமலையாரை தரிசித்தால் உயிர்களைப் பற்றியுள்ள கொடிய வினைகள் அனைத்தும் நீங்கும்.
    • திருக்கார்த்திகையன்று, ஈஸ்வரனை ஒரு வில்வத்தால் பூஜித்தவன் கூட முக்தி அடைகிறான்.

    1. அண்ணாமலையாரை தரிசித்தால் உயிர்களைப் பற்றியுள்ள கொடிய வினைகள் அனைத்தும் நீங்கும்.

    2. அண்ணாமலையாரை நேரில் வந்து தரிசித்தாலும் தூரத்தில் இருப்போர் மனத்தால் நினைத்தாலும் போதும் வேதாந்தத்தின் உண்மைப் பொருளான ஆத்ம ஞானம் கிடைக்கும்.

    3. திருவண்ணாமலையில் வசிப்பவர்களுக்கு குருவினுடைய தீட்சை முதலிய எதுவும் இல்லாமலேயே இறைவனோடு இரண்டறக் கலக்கும் முக்தி கிடைக்கும்.

    4. திருவண்ணாமலை தீபத்தை ஒருதரம் பக்தியுடன் பார்த்தவன் சந்ததி தழைக்கும். அவனுக்கும் மறுபிறப்பும் இல்லை.

    5. திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படுதை கண்டவர்களின் மானிடத் தன்மை நீங்கி ருத்ர தன்மை உண்டாகிறது. அவன் பாக்கியவான் ஆகிறான்.

    6. கார்த்திகை தீபத்தன்று காமம் முதலான குணங்களை விட்டு பெரும் முயற்சி செய்தாவது தீபத்தை தரிசிக்க வேண்டும்.

    7. திருக்கார்த்திகை தினத்தன்று ஈஸ்வரனை ஒரு வில்வத்தால் பூஜித்தவன் கூட முக்தி அடைகிறான்.

    8. தீப தரிசனத்தால் கங்கை முதலான சகல புண்ணிய தீர்த்த பலன்களும் ஒருங்கே உண்டாகும்.

    9. கர்த்திகை பவுர்ணமி அன்று சந்திர பகவான் 16 கலைகளுடன் பரிபூர்ணமாக பிரகாசிக்கிறான்.

    அந்த அமிர்த கிரணங்களை ஒரு மனிதன் தன் உடலில் ஏற்றால் அவனுக்கு அற்புதமான மனோ சக்தியும், தெய்வ பலனும் கிடைக்கும்.

    10. திருவண்ணாமலையில் கிரி வலம் வருவது பேறுகள் எல்லாவற்றையும் தருவதாகும்.

    சென்ற ஜென்மங்களில் செய்த பாவங்கள் கிரிவலம் செய்கிற ஒவ்வொரு அடியிலும் நசிந்து விடும்.

    • பசு மாடுகள் லட்சுமி வடிவம் என்பதால் அவை வருவதற்கு முன்பே வீடுகளில் தீபம் ஏற்றி விடும் பழக்கம் இருந்தது.
    • குத்து விளக்கு அம்பாளின் வடிவம் ஆகும்.

    பழங்காலத்து வீடுகளில் விளக்கு வைப்பதற்கு என்றே தனி மாடங்கள் அமைக்கப்பட்டன.

    வாசல்படியின் இருபுறங்களிலும் தீபங்கள் ஏற்றப்படுவதற்கு என மாடங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.

    கிராமப்புறங்களில் பசு மாடுகள் மேய்ந்து விட்டு மாலை நேரத்தில் வீடு திரும்பும்.

    பசு மாடுகள் லட்சுமி வடிவம் என்பதால் அவை வருவதற்கு முன்பே வீடுகளில் தீபம் ஏற்றி விடும் பழக்கம் இருந்தது.

    குத்து விளக்கு

    குத்து விளக்கு அம்பாளின் வடிவம் ஆகும்.

    இதன் அடிப்பாகம் பிரம்மா, தண்டு பாகம் விஷ்ணுவையும், தகழி சிவனையும்,

    திருவிளக்கின் ஐந்து முகம் பஞ்ச பூதங்களையும், எண்ண நாத தத்துவத்தையும்,

    குடம் லட்சுமியையும், ஒளி சரஸ்வதியையும், ஒளியால் பிறக்கின்ற சூடு சக்தியையும் குறிக்கும்.

    • தீபத்தில் லட்சுமியானவள் பதினாறு வகை “தீபலட்சுமி”யாக பரிணமிக்கிறாள்

    தீபத்தில் லட்சுமியானவள் பதினாறு வகை "தீபலட்சுமி"யாக பரிணமிக்கிறாள் என்று நமது ஆகமங்கள் கூறுகின்றன.

    அந்த பதினாறு வகை தீபலட்சுமிகள் விவரம் வருமாறு:

    ஆதிலட்சுமி,

    சவுந்தரிய லட்சுமி,

    சவுபாக்கிய லட்சுமி,

    கீர்த்தி லட்சுமி,

    வீர லட்சுமி,

    ஜெயலட்சுமி,

    சந்தான லட்சுமி,

    மேதா லட்சுமி,

    வித்யா லட்சுமி,

    துஷ்டி லட்சுமி,

    புஷ்டி லட்சுமி,

    ஞான லட்சுமி,

    சக்தி லட்சுமி,

    ராஜ்யலட்சுமி,

    தான்யலட்சுமி,

    ஆரோக்கிய லட்சுமி

    ஆகியோராவர்.

    • விடியற்காலை இந்த நேரத்திற்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.
    • குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது.

    விடியற்காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.

    பூஜைக்கு ஏற்ற விளக்குகள்

    குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது.

    ஐம்பொன் விளக்கு அடுத்து சிறப்புடையது.

    வெண்கல விளக்கு அடுத்து சிறப்புடையது.

    பித்தளை விளக்கு அதற்கு அடுத்த சிறப்புடையது.

    எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவ தற்கோ பயன்படுத்தக்கூடாது.

    அதைவிட மண் அகல் விளக்கு உத்தமம்.

    • விளக்கெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றலாம்.
    • எவர்சில்வர் விளக்கை தீபமேற்ற பயன்படுத்தக் கூடாது.

    தீபத்தை நெய் விட்டு ஏற்றுவதே நல்லது.

    விளக்கெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றலாம்.

    தீபத்திற்கு பஞ்சு திரியிடுவது சிறப்பானது.

    தாமரைத் தண்டுத்திரி, வாழைத்தண்டு நூல், வெள்ளெருக்கு பட்டை, புது மஞ்சள், துணி,

    புதுவெள்ளை வஸ்திரம் ஆகியவையும் உபயோகிக்கலாம்.

    காலையில் அதிகாலை நேரத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.

    எவர்சில்வர் விளக்கை தீபமேற்ற பயன்படுத்தக் கூடாது.

    தீபத்தை வாயால் ஊதி அணைக்காமல், ஒரு பூவின் காம்பால் அணைக்க வேண்டும்.

    ×