என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 98804
நீங்கள் தேடியது "slug 98804"
பாகிஸ்தானில் பிரதமர் மாளிகையில் நவாஸ் ஷெரீப் ஆட்சி காலத்தில் வாங்கப்பட்ட 3 எருமை மாடுகள் மற்றும் 5 கன்றுக்குட்டிகள் ரூ.23 லட்சத்து 2 ஆயிரத்துக்கு ஏலம் போயின.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்ற பிறகு சிக்கன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இருந்த 61 ஆடம்பர கார்கள் கடந்த வாரம் ஏலம் விடப்பட்டன. அதன் மூலம் ரூ.20 கோடி வருமானம் கிடைத்தது.
மேலும் கூடுதலாக உள்ள 102 கார்கள், புல்லட் புரூப் வாகனங்கள் மற்றும் 4 ஹெலிகாப்டர்கள் ஏலம் விடப்பட உள்ளன. இந்த நிலையில் பிரதமர் மாளிகையில் உள்ள 3 எருமை மாடுகள் மற்றும் 5 கன்றுகளை ஏலம் விட முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று இஸ்லாமாபாத்தில் அவை ஏலம் விடப்பட்டன. அவை 23 லட்சத்து 2 ஆயிரத்துக்கு ஏலம் போயின. அவற்றை முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் ஆதரவாளர்கள் வாங்கினர்.
8 எருமைகளில் ஒன்று நவாஸ் செரீப்பின் ஆதரவாளர் குயால்ப் அலி ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்துக்கு வாங்கினார்.
ஆனால் அதன் உண்மையான விலை ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாகும். 2 எருமைகள் மற்றும் 4 கன்றுகளை நவாஸ் செரீப் கட்சி தொண்டர்கள் பாக்கர் வாரிக் எனபவர் ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்துக்கு வாங்கினார். மற்றொரு கன்று ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
இந்த எருமை மாடுகள் அனைத்தும் நவாஸ் செரீப் பிரதமராக இருந்த போது வாங்கப்பட்டது. எனவே அவரது ஆதரவாளர்கள் இதை விரும்பி ஏலத்தில் எடுத்துள்ளனர். #PakistanPM #ImranKhan

முன் அனுபவம் இல்லாத பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடனான உறவை புதுப்பிப்பதில் அவசரம் காட்டியதால் நிலைமை மேலும் மோசமடைந்ததாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. #ImranKhan #HasteinMending #FenceswithIndia
இஸ்லாமாபாத்:
இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச இந்தியா சம்மதித்தது.
இதற்கிடையே, காஷ்மீரில் மூன்று போலீசார் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தால் கடத்தி கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படை வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த படுகொலைகள் பாகிஸ்தான் ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.
மேற்கண்ட இரு சம்பவங்களையடுத்து, இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது என பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால், இந்திய அரசு பேச்சுவார்த்தையை ரத்து செய்தது. இது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்தியாவின் நடவடிக்கை குறித்து நேற்று கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான், ‘இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுக்கும் எனது முயற்சிக்கு இந்தியா அளித்த அடாவடியான மற்றும் எதிர்மறை அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், பெரிய படத்தை பார்க்கும் பார்வையை பெறாத சிறிய மனிதர்கள், பெரிய அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ளதை எனது வாழ்க்கையில் பார்த்தே வந்துள்ளேன்’ என குறிப்பிட்டிருந்தார்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், ‘‘இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மாற்றத்தையும் இப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியையும் ஏற்படுத்த உதவக் கூடிய நல்லதொரு பேச்சுவார்த்தையை மீண்டும் ஒரு முறை இந்தியா வீணடித்து விட்டது.
இந்தியாவின் இந்த நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு அதிருப்தி அளிக்கிறது. பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட 24 மணி நேரத்தில் அதை ரத்து செய்து இருப்பதற்கு இந்தியா கூறும் காரணமும் ஏற்புடையது அல்ல’’ என்று தெரிவித்தது.
இந்நிலையில், முன் அனுபவம் இல்லாத பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடனான உறவை புதுப்பிப்பதில் அவசரம் காட்டியதால்தான் நிலைமை மேலும் மோசமடைந்ததாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
‘இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு இணக்கமாக செயல்பட்டால் மோடிக்கு அது பாதகமாக அமையும் என்பதால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது முழுக்க முழுக்க அந்நாட்டின் அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என பாகிஸ்தான் நாளிதழான டான் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன்? என இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
முன் அனுபவம் இல்லாத பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அவசரமான நகர்வு என அந்நாட்டு இருபெரிய எதிர்க்கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(நவாஸ்) ஆகியவை விமர்சனம் செய்துள்ளன.
இந்த "ராஜதந்திர தோல்வி"க்கு இம்ரான்கான்தான் பொறுப்பு என்று கூறியுள்ள அக்கட்சிகள், பேச்சுவார்த்தையை நாடுவதற்கு முன்னதாக அதற்கான வீட்டுப் பாடத்தை ஒழுங்காக முடித்த பின்னர் இந்த நடவடிக்கையை அவர் தேர்வு செய்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளன.
நாமாக முன்வந்து சமாதானத்துக்கு கைகொடுப்பது என்பது நமது பலவீனமாக மற்றவர்கள் புரிந்து கொள்ள கூடாது. இந்தியாவுடன் சமாதானம் செய்துகொள்ள பாகிஸ்தான் அவசரப்படுவதுப் போன்ற ஒரு தோற்றத்தை தனது முதிர்ச்சி பெறாத நடவடிக்கையின் மூலம் இம்ரான் கான் உருவாக்கி விட்டதாக அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான காவ்ஜாமொஹம்மத் ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார். #ImranKhan #HasteinMending #FenceswithIndia
இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று அமைதி பேச்சுவார்த்தையைத் தொடர மோடி சம்மதம் தெரிவித்து இருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. #IndiaPakistanTalks #ImranKhan #Modi
புதுடெல்லி:
இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் நிலவும் பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்காக அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து காஷ்மீருக்குள் அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்பதை இந்தியா பிரதான கோரிக்கையாக வைத்து இந்த பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது.
இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு பதன்கோட் விமான தளத்துக்குள் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தானுடன் நடத்தி வந்த அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு முழுமையாக முடங்கியது.
இந்த காலக்கட்டத்தில் தான் இந்தியா ஓசையின்றி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருக்கும் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களை குண்டு வீசி அழித்தது. அதற்கு பழிவாங்கப் போவதாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் அடிக்கடி அச்சுறுத்தியபடி உள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். அவர் இந்தியாவுடன் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர், “இருநாட்டு மக்களின் நலன் கருதி அமைதி பேச்சு நடத்துவது அவசியமாகும். நியூயார்க் நகரில் ஐ.நா. சபை கூட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளை சந்தித்து பேச வைக்கலாம்” என்று கூறியிருந்தார்.
இம்ரான்கானின் கோரிக்கை குறித்து பிரதமர் மோடி நேற்று சுஷ்மா சுவராஜுடன் ஆலோசனை நடத்தினார். வெளியுறவுத் துறை அதிகாரிகளுடனும் ஆலோசித்தார்.
நீண்ட ஆலோசனைக்கு பிறகு இம்ரான்கானின் கோரிக்கையை ஏற்க பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் உறுதி செய்தார்.
ஆனால் இரு நாட்டு மந்திரிகளும் சந்தித்து பேசும் இடம், நேரம் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. ஐ.நா. சபை கூட்டம் தற்போது நியூயார்க்கில் நடந்து வருகிறது. அக்டோபர் 5-ந்தேதி வரை பல்வேறு நாடுகளின் அமைப்புகள் சார்பில் கூட்டங்கள் நடக்க உள்ளன.
அடுத்த வாரம் வியாழக்கிழமை (27-ந்தேதி) ஐ.நா. சபையில் சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதன் பிறகு அடுத்த வார இறுதியில் இரு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையே இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று அமைதி பேச்சுவார்த்தையைத் தொடர மோடி சம்மதம் தெரிவித்து இருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி மணீஷ்திவாரி கூறியதாவது:-
பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அடிக்கடி அத்துமீறியபடி உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு கூட நமது எல்லையில் பாதுகாப்புப் படை வீரர் நரேந்தர்சிங்கை, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மிக கொடூரமாக கொலை செய்துள்ளனர். நமது ராணுவ வீரரின் கழுத்து அறுக்கப்பட்டது.
எல்லையில் உருவான அந்த பரபரப்பு இன்னமும் மறையவில்லை. அதற்குள் பாகிஸ்தானுடன் சுமூக பேச்சு நடத்த பிரதமர் மோடி சம்மதித்தது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தது யார்?
தீவிரவாதத்துக்கு உதவி செய்து கொண்டே பேச்சு நடத்தும் பாகிஸ்தானின் செயலை ஏற்க இயலாது என்றுதான் இந்தியா கொள்கை முடிவு எடுத்திருந்தது. இந்த கொள்கை முடிவை மாற்ற வேண்டிய அளவுக்கு என்ன நடந்தது?
பாகிஸ்தான் நிலையில் தெளிவு இல்லை. அப்படி இருக்கும்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கையை ஏற்க வேண்டிய அவசியம் ஏன்? இந்த விவகாரத்தில் இந்தியாவிடம் மன மாற்றம் ஏற்பட செய்த சக்தி எது என்பதை காங்கிரஸ் தெரிந்து கொள்ள விரும்புகிறது.
இவ்வாறு மணீஷ்திவாரி கூறினார். #IndiaPakistanTalks #ImranKhan #Modi

பாகிஸ்தானில் கடுமையான நிதி பற்றாக்குறையால் தள்ளாட்டம் போடும் ரெயில்வே துறையை நிர்வகிப்பதற்காக சில நிலங்களை விற்க பிரதமர் இம்ரான் கான் தீர்மானித்துள்ளார். #PakistanRailways #PakistansellRailwaysland
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆடம்பரமான பிரதமர் மாளிகையில் தங்காமல் தனது சொந்த வருமானத்தில் கட்டிய வீட்டில் வாழ்ந்துவரும் இம்ரான் கான், மந்திரிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பயன்படுத்தி வந்த சொகுசு கார்களை விற்று அந்த பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
வெளிநாடுகளில் இருந்து உயர்ரக கார்கள், செல்போன் மற்றும் அழகு சாதனங்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் அப்பாசியின் தவறான திட்டங்களாலும் வைத்துச் சென்ற கடன் சுமையாலும் அரசு நிர்வாகத்தை நடத்த பணம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக இம்ரான் கான்தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சுமார் 3700 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறையில் அந்நாட்டு ரெயில்வே துறை நிர்வாகம் சிக்கி தவிக்கிறது. புதிய ரெயில்கள் மற்றும் சம்பள செலவினங்களால் பல ஆண்டுகளாக இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனவே, பாகிஸ்தான் முழுவதும் தனியாரிடம் சிக்கியுள்ள ரெயில்வே நிலங்களை மீட்டு, அவற்றில் முக்கிய பகுதியில் உள்ள நிலங்களை விற்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாடின் ரெயில்வே மந்திரி ஷேக் ரஷீத் அஹமத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவசர சட்டம் இயற்றுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ள இம்ரான் கான், நாட்டிலுள்ள முக்கிய பெருநகரங்களில் ரெயில்வே துறைக்கு சொந்தமான, பயம்படுத்தப்படாத காலி நிலங்கள் தொடர்பான பட்டியலை இன்னும் 15 நாட்களில் தயாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக ஷேக் ரஷீத் அஹமத் குறிப்பிட்டுள்ளார்.
ரெயில்வே நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் வேளையில் ரெயில் பாதைகளின் ஓரங்களில் வாழும் ஏழை, எளிய மக்களின் குடிசைகள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு இம்ரான் கான் அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். #PakistanRailways #PakistansellRailwaysland
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அந்த நாட்டின் உளவுத்துறை தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் 8 மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ImranKhan #ISIHeadquarters #Pakistan
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், கடந்த மாதம் 18-ந் தேதி பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அவர் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த மாதம் 30-ந் தேதி அவர் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு மூத்த மந்திரிகளுடன் சென்றார். அங்கு அவர் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வாவை சந்தித்துப் பேசினார். உள்நாட்டு பாதுகாப்பு, எல்லை தாண்டிய பிரச்சினைகள், ராணுவ நிலவரம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ பாகிஸ்தானிலும், பிராந்தியத்திலும் அமைதியை ஏற்படுத்துவதற்கு பிரதமரும், ராணுவ தளபதியும் இணைந்து பணியாற்றுவது என உறுதி எடுத்துக்கொண்டனர்” என கூறப்பட்டது.
இந்த நிலையில், இம்ரான்கான் நேற்று முன்தினம் அந்த நாட்டின் உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ.) தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவரை ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வாவும், ஐ.எஸ்.ஐ. தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தாரும் வரவேற்றனர்.
இம்ரான்கானுடன் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷி, ராணுவ மந்திரி பர்வேஸ் கட்டாக், தகவல் துறை மந்திரி பவாத் சவுத்ரி, உள்துறை ராஜாங்க மந்திரி ஷெர்யார் அப்ரிடி ஆகியோரும் சென்றிருந்தனர்.
அங்கு இம்ரான்கான் 8 மணி நேரம் இருந்து, ராணுவ தளபதியுடனும், உளவுத்துறை தலைமை இயக்குனருடனும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்கள், உளவுத்தகவல்கள் பரிமாற்றம், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அப்போது உளவுத்துறையின் செயல்பாடுகளை இம்ரான்கான் மனம் திறந்து பாராட்டினார். குறிப்பாக தேசப்பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு ஆகியவற்றில் உளவுத்துறையின் செயல்பாடுகள் மெச்சத்தகுந்தவை என அவர் கூறினார்.
இம்ரான்கான் தொடர்ந்து கூறும்போது, “பாகிஸ்தானின் ஒட்டுமொத்த மக்களும், பாதுகாப்பு படைகள் மற்றும் ராணுவ உளவு அமைப்புகளின் பின்னால் உறுதிபட நிற்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.
இம்ரான்கான், உளவுத்துறை தலைமை அலுவலகத்துக்கு சென்று ஆலோசனை நடத்தியது தொடர்பாக தகவல் துறை மந்திரி பவாத் சவுத்ரி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், “பிரதமருக்கும், அவருடன் சென்றிருந்த மூத்த மந்திரிகளுக்கும் ராணுவ தளபதியும், உளவுத்துறை தலைமை இயக்குனரும் 8 மணி நேரம் முக்கிய தகவல்கள் அளித்தனர். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள சவால்கள் குறித்தும் அவர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது” என கூறப்பட்டு உள்ளது. இம்ரான்கான் அடுத்தடுத்து ராணுவ தலைமையகத்துக்கும், உளவுத்துறை தலைமை அலுவலகத்துக்கும் சென்று ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ImranKhan #ISIHeadquarters #Pakistan

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, 6 புதிய மந்திரிகள் பதவியேற்றுள்ளனர். #PakistanCabinet #ImranKhan
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (பிடிஐ) அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றார். அதன்பின்னர் அவரது அமைச்சரவையில் 15 பேர் மந்திரிகளாகவும், 5 பேர் ஆலோசகர்களாகவும் நியமிக்கப்பட்டு பதவியேற்றனர்.
இந்நிலையில், இம்ரான் கான் தனது அமைச்சரவையை இன்று விரிவாக்கம் செய்து, 6 பேரை இணைத்துள்ளார். புதிய மந்திரிகள் பதவியேற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. மத்திய மந்திரிகளாக உமர் அயூப், அலி முகமது கான் மெஹர் மற்றும் சையத் அலி ஹைதர் ஜைதி ஆகியோர் மத்திய மந்திரிகளாக பதவியேற்றனர். முகமது ஷபிர் அலி, முராத் சயீத் மற்றும் முகமது ஹமத் அஸார் ஆகியோர் இணை மந்திரிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் பிரதமர் இம்ரான் கான், மத்திய மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இன்று பதவியேற்ற மந்திரிகளில் உமர் அயூப் கான், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிடிஐ கட்சியில் சேர்ந்தார். இதற்கு முன்பு, சவுகத் அஜீஸ் அமைச்சரவையில் நிதித்துறை இணை மந்திரியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. #PakistanCabinet #ImranKhan

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இன்று சீனா வெளியுறத்துறை மந்திரியும், சவுதி அரேபியா நாட்டு கலாசாரத்துறை மந்திரியும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். #Saudiminister #ImranKhan
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பல்வேறு நாடுகளுடனான தொடர்புகளை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இஸ்லாமாபாத் நகரில் இன்று சவுதி அரேபியா நாட்டு தகவல் தொடர்பு மற்றும் கலாசாரத்துறை மந்திரி அவ்வாட் பின் சாலே அல்-அவ்வாட் இன்று இம்ரான் கானை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் சவுதி அரேபியா தொடர்ந்து ஆதரிக்கும் என அந்நாட்டு மன்னர் முஹம்மது பின் சல்மான் உறுதியளித்துள்ளதாக இம்ரான் கானிடம் தெரிவித்த அவ்வாட் பின் சாலே, சவுதி அரேபியாவுக்கு வருமாறு மன்னர் அனுப்பிய அழைப்பையும் அளித்தார்.
பின்னர், பாகிஸ்தானில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீனா வெளியுறத்துறை மந்திரி வாங் இ இம்ரான் கானை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்புகளின்போது பாகிஸ்தான் வெளியுறத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி பவாட் சவுத்ரி ஆகியோரும் உடனிருந்தனர். #Saudiminister #ImranKhan
பாகிஸ்தானில் சீர்குலைந்து கிடக்கும் பொருளாதாரத்தை வலுப்படுத்த பிரதமர் இம்ரான்கான் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். #Pakistan #ImranKhan
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் புதிய பிரதமராக தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான்கான் கடந்த மாதம் பதவியேற்றார். அவர் தலைமையிலான புதிய அரசுக்கு பல்வேறு சவால்கள் இருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதார சீரமைப்புதான் பிரதானமாக உள்ளது.
ஏனெனில் கடும் கடன் நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், அதிலிருந்து மீண்டுவர தடுமாறி வருகிறது. நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 18 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. எனவே இவற்றில் இருந்து பொருளாதாரத்தை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. இதை உணர்ந்துள்ள புதிய அரசும், பொருளாதார சீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக 18 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் அரசு சார்ந்தவர்கள் 7 பேரும், தனியார் துறையை சேர்ந்தவர்கள் 11 பேரும் அடங்குவர். தனியார் துறையை சேர்ந்தவர்களில் புகழ்பெற்ற வெளிநாட்டு பொருளாதார வல்லுனர்களையும் நியமித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய அரசுகளில் பொருளாதார ஆலோசனைக்குழுக்கள், நிதி மந்திரிகளின் தலைமையிலேயே அமைக்கப்பட்டு இருக்கும். எப்போதாவது நடைபெறும் இந்த கமிட்டியின் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளுக்கும் அரசுகள் செவிமடுப்பதில்லை.
ஆனால் தற்போதைய அரசில், பொருளாதார ஆலோசனைக்குழுவுக்கு பிரதமர் இம்ரான்கானே தலைமை தாங்குகிறார். அது மட்டுமின்றி குழுவின் கூட்டத்தையும் விரைவில் கூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் முதற்கட்டமாக வெளிநாடுகளில் பாகிஸ்தானியர்கள் குவித்துள்ள சட்ட விரோத சொத்துகளை திரும்ப கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை 2 வாரங்களுக்குள் அளிக்குமாறு, இந்த கமிட்டி உறுப்பினர்களை இம்ரான் கான் கேட்டுக்கொண்டு உள்ளார். #Pakistan #ImranKhan

பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சியை சேர்ந்த பெண் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை விதித்து கராச்சி கோர்ட் தீர்ப்பளித்தது.
கராச்சி:
பாகிஸ்தானில் கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலின்போது, கராச்சி தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த நேரத்தில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த பெண் தலைவர் ஜாஹ்ரா ஷகீத், அவருடைய வீட்டுக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த கொலைக்கு எம்.கியூ.எம்.எல். என்ற அமைப்புத்தான் காரணம் என இம்ரான்கான் புகார் கூறினார். அதைத் தொடர்ந்து ஜாஹ்ரா ஷகீத் கொலையில், அந்த அமைப்பை சேர்ந்த முகமது ரஷீத் என்ற மாஸ்டர், ஜாகித் அப்பாஸ் ஜைதி, இர்பான், கலீம் ஆகிய 4 பேர் சிக்கினர்.
இது தொடர்பான வழக்கை கராச்சி பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு விசாரித்து வந்தது. விசாரணையின்போது முகமது ரஷீத் என்ற மாஸ்டர், ஜாகித் அப்பாஸ் ஜைதி ஆகிய இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளும் அவர்களை சரியாக அடையாளம் காட்டினர்.
இந்த நிலையில் விசாரணை முடிந்து, கராச்சி பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு நேற்று தனது தீர்ப்பை வழங்கியது. ஜாஹ்ரா ஷகீத் கொலையில், முகமது ரஷீத் என்ற மாஸ்டர், ஜாகித் அப்பாஸ் ஜைதி ஆகிய 2 பேருக்கும் உள்ள தொடர்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது என நீதிபதி கூறி 2 பேருக்கும் மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
அதே நேரத்தில் இந்த வழக்கில் சிக்கி இருந்த எஞ்சிய இருவரான இர்பான், கலீம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.

காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க ஒரு திட்ட அறிக்கை தயார் செய்து இருப்பதாக பாகிஸ்தானின் மனித உரிமைகள் துறை பெண் மந்திரி ஷிரீன் மஷாரி தெரிவித்துள்ளார். #PakistanMinister #ShireenMazari
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றார்.
அப்போது இந்தியாவுடன் ஆன அனைத்து பிரச்சனைகளையும் குறிப்பாக காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அதற்கு வலுசேர்க்கும் வகையில் பாகிஸ்தானின் மனித உரிமைகள் துறை பெண் மந்திரி ஷிரீன் மஷாரி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க ஒரு திட்ட அறிக்கை தயார் செய்து இருப்பதாக கூறினார். அந்த அறிக்கை பிரதமர் இம்ரான்கான் மற்றும் காபினெட் மந்திரிகளுக்கு அனுப்பப்படும்.
அதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அதை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டப்படும் என்றார். இவர் அரசியல் தந்திரம் சார்ந்த கல்வி துறையில் டைரக்டர் ஜெனரலாக பணிபுரிந்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள குயாத்-இ-ஆசம் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு துறை பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். #PakistanMinister #ShireenMazari

பாகிஸ்தானில் இயங்கும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அமெரிக்க மந்திரி பேச்சுக்கு இம்ரான்கான் மறுப்பு தெரிவித்துள்ளார். #Pakistan #US #ImranKhan
இஸ்லாமாபாத்:
அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் டெலி போனில் பேசினார்.
அப்போது இவருக்கு வாழ்த்து கூறிய அவர் ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட பாகிஸ்தானின் பங்கு குறித்து விவாதித்தார்.
பாகிஸ்தானில் இயங்கும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளின் மீதும் ஒரு திடமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீதர் நியூரெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து நடந்த விவாதத்தில் பயங்கரவாதிகள் மீது திடமான நடவடிக்கை குறித்து பேசப்படவில்லை. எனவே இது குறித்து சரியான திருத்தத்துடன் அமெரிக்கா அறிக்கை வெளியிட வேண்டும்” என வலிறுத்தியுள்ளார். அது டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு மந்திரி அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி இஸ்லாமாபாத் வருகை தர உள்ளார். புதிய பிரதமர் இம்ரான்கானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். இந்த நிலையில் 2 நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. #Pakistan #US #ImranKhan

ஆனால் இதை இம்ரான்கான் அரசு மறுத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது பைசல் கூறும் போது, “அமெரிக்க மந்திரி பாம்பியோ பிரதமர் இம்ரான்கானுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
முகமது பைசல்
அதை தொடர்ந்து நடந்த விவாதத்தில் பயங்கரவாதிகள் மீது திடமான நடவடிக்கை குறித்து பேசப்படவில்லை. எனவே இது குறித்து சரியான திருத்தத்துடன் அமெரிக்கா அறிக்கை வெளியிட வேண்டும்” என வலிறுத்தியுள்ளார். அது டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு மந்திரி அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி இஸ்லாமாபாத் வருகை தர உள்ளார். புதிய பிரதமர் இம்ரான்கானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். இந்த நிலையில் 2 நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. #Pakistan #US #ImranKhan
அமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் புதிய பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்து உள்ளார். முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு இது அவசியம் என அவர் கூறி இருக்கிறார். #India #Pakistan #ImranKhan
இஸ்லாமாபாத்:
இந்தியாவுடன் ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கம் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களை முந்தைய நவாஸ் ஷெரீப் அரசு ஊக்குவித்ததால், அந்த நாட்டுடனான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திக்கொண்டது.
இந்த நிலையில் அங்கு தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதுவரை அங்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சி என இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த நிலை மாறி, இம்ரான்கான் தலைமையில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆட்சிக்கு வந்து உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் புதிய பிரதமர் இம்ரான்கான், இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்து உள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்தியாவும், பாகிஸ்தானும் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காஷ்மீர் உள்ளிட்ட மோதல்களை தீர்த்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், “வறுமையை ஒழித்துக்கட்டி விட்டு, துணைக்கண்டத்தில் உள்ள மக்களை முன்னேற்றம் அடையச்செய்வதற்கு நமது கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டு, வர்த்தகத்தை தொடங்குவதுதான் சிறந்த வழி” என்றும் கூறி உள்ளார்.
இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் அவரது முன்னாள் நண்பரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டதும், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வாவை தழுவிக்கொண்டதும் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் விழாவில் சித்து கலந்து கொண்டதற்கு இம்ரான்கான் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் குறிப்பிடுகையில், “சித்து அமைதித் தூதர். பாகிஸ்தான் மக்கள் அவர்மீது மிகுந்த அன்பையும், நேசத்தையும் வாரி வழங்கினர். இந்தியாவில் அவரை குறி வைத்து விமர்சிப்பவர்கள், துணைக்கண்டத்தில் அமைதி ஏற்படுவதற்கு மிகப்பெரிய தீங்கு செய்கிறார்கள்” என்று கூறி உள்ளார்.
பாகிஸ்தானின் புதிய வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி, “இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், சாகச செயல்களை நிறுத்துவதற்கு நாம் ஒன்றுபடுவது அவசியம். பிரச்சினைகள் கடுமையானவை என்பதையும், ஒரே நாளில் தீர்க்க முடியாது என்பதையும் அறிவோம். அதே நேரத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்” என ஏற்கனவே கூறியது நினைவுகூரத்தக்கது. #India #Pakistan #ImranKhan

×

X