search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைநீர்"

    • சரிவர தூர்வாராத காரணத்தாலும் கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டது.
    • மழை நின்ற பிறகும் கழிவுநீர் அப்படியே தேங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே மேலவெளி பஞ்சாயத்துக்கு உட்பட்டது சுந்தர பாண்டியன் நகர், லாலி நகர், இ.எம்.ஜி. நகர். இந்த பகுதி ஜெபமாலைபுரம் அருகே அமைந்துள்ளது.

    இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் காலியிடங்களில் கழிவுநீர் தேங்கியது.

    ஆனால் உடனடியாக கழிவு நீர் வெளியே செல்லாமல் அப்படியே தேங்கியது. கடந்த 3 மாதங்களாக தேங்கி நிற்பதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    கழிவு நீரை வெளியேற்றி சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் மேலவெளி பஞ்சாயத்து மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும் போது:-

    முறையான வடிகால் வசதி இல்லாததாலும், சரிவர தூர்வாராத காரணத்தாலும் கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் பெய்த கனமழையால் கழிவுநீருடன் மழை நீரும் கலந்து தெருவில் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் மழை நின்ற பிறகும் கழிவுநீர் அப்படியே தேங்கியது.

    இந்த பகுதி வழியாக வரும் கழிவு நீர் இங்குள்ள கோவில் அருகே ஒரு ஆற்றில் கலக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் போதிய வடிகால் வசதி, சரிவர தூர்வாராததால் செல்ல வழி இல்லாமலும், அடைப்பு ஏற்பட்டதாலும் கழிவுநீர் தெருவுக்குள் புகுந்தது.

    நாட்கள் செல்ல செல்ல கழிவு நீரின் அளவும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    அனைத்து குடியிருப்புகளை சுற்றிலும் 3 மதங்களாக தேங்கி நிற்கிறது.

    இதனால் வீட்டில் வசிக்க கூட முடியவில்லை . துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி விடுமோ என அச்சத்தில் உள்ளோம்.

    இது தவிர விஷ பூச்சிகள் வீட்டிற்கு படையெடுத்த வண்ணம் உள்ளதால் அச்சத்தில் உள்ளோம். வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலும் உள்ளது.

    மேலும் போர் தண்ணீரும் நிறம் மாறி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக கழிவு நீரை அகற்ற வேண்டும்.

    இதுபோன்று கழிவுநீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சரியான வடிகால் வசதி ஏற்படுத்தி வாய்க்கால்களை முறையாக தூர்வார வேண்டும் என்றனர்.

    • தூத்துக்குடி வி.இ.ரோட்டில் நடைபெற்று வந்த புதிய சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
    • ஜனவரி 31-ந் தேதிக்குள் பணிகள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்று மேயர் உறுதி அளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி புதிய பஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியை சுற்றிலும் நடைபெற்று வரும் வேலி அமைக்கும் பணி மற்றும் வி.இ.ரோட்டில் நடைபெற்று வந்த புதிய சாலை பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து சிதம்பரநகர் பகுதியில் நடைபெற்று வரும் சிமெண்டு சாலை பணிகளில் 200 மீட்டர் மட்டுமே அமைக்க வேண்டியுள்ளது. அதனை பார்வையிட்ட மேயர் அப்பகுதி பொதுமக்களிடம் பேசுகையில், இந்த பணிகள் அனைத்தும் வருகிற ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் நிறைவு பெற்று இந்த சாலை முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டி ற்கு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    தொடர்ந்து தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம், ஸ்பிக் நகர் பகுதியில் மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதற்கு தீர்வு காணும் வகையில் அந்தப் பகுதியில் ஊராட்சி காலத்தில் அமைக்கப்பட்ட வடிகால்களை மீண்டும் சீரமைத்து மழைநீர் சாலையில் தேங்காமல் செல்ல ஏதுவாக வியாபாரிகள் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதனையும் மேயர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மேயரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இதில் தெற்கு மண்டல உதவி கமிஷனர் ராமச்சந்திரன், சுகாதார அலுவலர் ராஜபாண்டியன், மாநகர கவுன்சிலர்கள் விஜயகுமார், சுயம்பு, ராஜதுரை, முத்துவேல், பச்சிராஜ், மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் உள்ளிட்ட அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சி பணியாளர்களால் தோண்டி எடுக்கப்பட்டு மழைநீர் அப்புறப்படுத்த ப்பட்டது.
    • முக்கிய சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் இரண்டு மாதங்களாகியும் சரி செய்யப்படாமல் உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட ஆசாத் நகர் பகுதியில் வடிகால் வாய்க்கால் தூர்ந்து போய் இருந்ததால் 5-வது வார்டு பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

    பின்பு, பேரூராட்சி பணியாளர்களால் தோண்டி எடுக்கப்பட்டு மழைநீர் அப்புறப்படுத்த ப்பட்டது. அப்போது, சாலையின் சில பகுதியும் தோண்டப்பட்டு பள்ளத்தை சுற்றி 'பேரிகார்டுகள்' வைத்து தற்காலிகமாக தடுப்பு வைக்கப்பட்டிருந்தது.

    குறிப்பாக, அதிகமான கடைகள், மீன் மார்க்கெட், பள்ளிக்கூடங்கள் என எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாக காணப்படும் ஆசாத்நகர் பகுதியின் முக்கிய சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் இரண்டு மாதங்களாகியும் இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் சென்று கோரிக்கை விடுத்தும் பயனில்லை.

    எனவே, விபத்துகள் ஏற்படும் முன் மக்களின் நலன் கருதி தோண்டப்பட்ட மழைநீர் வடிகாலை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

    • மழைநீர் வடிகால் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாததால் மழை வெள்ளம் வீடுகளை சுற்றி தேங்கி உள்ளது.
    • நசரத்பேட்டை யமுனா நகரில் வீடுகள் முன்பு தேங்கி உள்ள மழை நீரை கடந்து செல்ல சிலர் படகு போன்று மிதவையை தயார் செய்து தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    மாண்டஸ் புயல் மற்றும் அதனை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. தற்போது மழை ஓய்ந்து உள்ளது. கனமழையின் போது தாழ்வான இடங்களில் தேங்கி இருந்த மழைநீர் முழுவதும் வடிய தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் தற்போது மழை நின்றும் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளம் இன்னும் வடியாமல் தேங்கி நிற்கிறது.

    காட்டுப்பாக்கம் அம்மன் நகர், சென்னீர்குப்பம், நசரத்பேட்டை யமுனா நகர், பாரிவாக்கம் மாருதி நகர் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் வெளியேறாமல் தேங்கிஉள்ளது. பல நாட்களாக தேங்கி நிற்கும் இந்த தண்ணீர் தற்போது நிறம் மாறி துர்நாற்றம் அடிக்க அடிக்க தொடங்கி உள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்கள் அத்தியாவசிய தேவைக்கு இந்த தண்ணீரிலேயே வெளியே நடந்து செல்லும் நிலை உள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,

    இப்பகுதியில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாததால் மழை வெள்ளம் வீடுகளை சுற்றி தேங்கி உள்ளது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தேங்கியிருக்கும் மழை வெள்ளத்தை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

    காட்டுப்பாக்கம், பாரிவாக்கம், நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்மோட்டார்கள் மூலம் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இருப்பினும் பல இடங்களில் மீண்டும் நீர் சுரப்பதால் நீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரி வித்தனர்.

    நசரத்பேட்டை யமுனா நகரில் வீடுகள் முன்பு தேங்கி உள்ள மழை நீரை கடந்து செல்ல சிலர் படகு போன்று மிதவையை தாயார் செய்து தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

    • வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
    • ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள துறைமங்கலம் ஏரிக்கு நீர்வரத்து ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள குடிசை வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. பின்னர் பொதுமக்கள் அந்த ஓடையில் அடைப்பை சரி செய்ததையடுத்து மழைநீர் வடிந்தது. மேலும் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையின் கிழக்குப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், ரோஸ்நகர், ரெங்காநகர் ஆகிய பகுதியில் இருந்து மழைநீர் வடிகால் வாய்க்காலில் தண்ணீர் அதிகரித்து பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ரோவர் சாலையில் வெள்ளந்தாங்கியம்மன் ஏரிக்கு செல்லும் மழைநீர் வடிகால் வாய்க்காலில் அளவுக்கு அதிகமாக சென்ற மழைநீர் சாலையில் புகுந்தது. இதனால் அந்த வழியாக கார்கள், மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் மெதுவாக அப்பகுதியை கடந்து சென்றனர்.

    • பெரியவர்கள் முதல் சிறியவர் வரை காது மற்றும் மூக்கு பகுதிகளில் ஈரக்காற்று படாதபடி பாதுகாப்பாக இருக்கவேண்டும்.
    • முகக்கவசம் அணியாவிட்டால் மற்றவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையஆரம்ப சுகாதார நிலையஆரம்ப சுகாதார நிலையமருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தற்போது அடிக்கடி மழை பெய்து வருகிறது. பனிபொலிவும் உள்ளது. எனவே பெரியவர்கள் முதல் சிறியவர் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும், காது மற்றும் மூக்கு பகுதிகளில் ஈரக்காற்று படாதபடி பாதுகாப்பாக இருக்கவேண்டும். வீட்டை சுற்றி மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்கும் போது கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வீட்டில் குடிநீரை பாதுகாப்பாக மூடிவைக்க வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். சளி மற்றும் காய்ச்சல் இருந்தால் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து கொண்டு உடனே மருத்துவரை அணுகவும், முகக்கவசம் அணியாவிட்டால் மற்றவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கள்ளிமேடு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • மழைநீர் தேங்கி நிற்பதால் சேறும் சகதியுமாக சாலை காட்டியளிக்கிறது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராராமுத்திரகோட்டை கீழ கள்ளிமேடு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்திற்கு செல்லும் கிராம சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாகவே உள்ளதால் கிராமவாசிகள் பல அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக மழை காலங்களில் தெரு சாலையில் பல இடங்களில்

    மழைநீர் தேங்கி நிற்பதால் சேறும் சகதியுமாக மாறி நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே மண்சாலையை தார் சாலையாக மாற்றிதர வேண்டும் என கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழை மற்றும் மழைநீர் தேங்கியதால் விளைநிலங்கள் மற்றும் புதர்களில் இருந்த பாம்புகள் அருகில் உள்ள வீடுகள் மற்றும் தோட்டங்களில் தஞ்சமடைந்துள்ளது.
    • பாம்பு பாண்டியன் லாவகமாக பிடித்து மக்கள் நடமாட்டம் அற்ற வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 11ஆம் தேதி பெய்த அதீத கனமழை காரணமாக குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்தது.

    8 நாட்கள் கடந்தும் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

    மழை மற்றும் மழைநீர் தேங்கியதால் விளைநிலங்கள் மற்றும் புதர்களில் இருந்த பாம்புகள் அருகில் உள்ள வீடுகள் மற்றும் தோட்டங்களில் தஞ்சமடைந்துள்ளது.

    சீர்காழி, தொடுவாய், வைத்தீஸ்வரன் கோவில், திருநகரி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், தோட்டங்களில் அடுத்தடுத்து தஞ்சமடைந்த கொடிய விஷம் கொண்ட நாகம், கோதுமை நாகம், கருநாகம் உள்ளிட்ட 8 பாம்புகளை பாம்பு பிடிக்கும் வீரரான சீர்காழி பாம்பு பாண்டியன் லாவகமாக பிடித்து மக்கள் நடமாட்டம் அற்ற வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட்டார்.விஷம் கொண்ட பாம்புகள் பிடிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

    • பனியன் கம்பெனி தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
    • அரசு பஸ், கார், லாரி ஆகிய வாகனங்கள் செல்கின்றன.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி தேவம்பாளையம் முதல் குளத்துப்பாளையம் வழியாக அணைப்புதூர் வரை செல்லும் பாதை உள்ளது. இந்தப் பாதையில் தினசரி பனியன் கம்பெனி தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் அரசு பஸ், கார், லாரி ஆகிய வாகனங்கள் செல்கின்றன. இதனால் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக குளத்துப் பாளையம் பெரிய தோட்டம் பகுதி அருகில் ரோட்டில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களும் சிரமத்திற்குள்ளாகினர்.

    எனவே அப்பகுதி மக்கள் பள்ளமான அந்த ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் மேம்படுத்த வேண்டும் என்று கூறி ரோட்டில் திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ஊராட்சி தலைவர் கோமதி, துணைத்தலைவர் மிலிட்டிரி நடராசன், முன்னாள் தலைவர் எம்.செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள் சண்முகம், கவுரீஸ்வரி, தங்கபாண்டி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கணேசன், வருவாய்துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் அந்த ரோட்டில் மீண்டும் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து செல்கின்றனர்.
    • வடிகால் அமைத்து தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமதாஸ் நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி வெளியே செல்ல முடியாமல் குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால்இப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து செல்கின்றனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகள் இந்த வழியைத்தான் பயன்படுத்த வேண்டி உள்ளது. தேங்கி உள்ள மழை நீரால்அவர்களும் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே வடிகால் அமைத்து தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு மேலாக மழைநீர் தேங்கி உள்ளது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லைஎனபொதுமக்கள் கூறினர்.

    • வாடிப்பட்டி அருகே ஜவுளி பூங்காவில் இருந்து வெளியேறிய மழைநீர் வயல்களுக்குள் புகுந்தது.
    • வடிகால் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் ஒருங்கி ணைந்த ஜவுளி பூங்கா உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட பனியன் மற்றும் ஆயத்த ஆடை தயாரிக்கும் தனியார் கம்பெனிகள் உள்ளது. இந்த ஜவுளி பூங்காவை சுற்றிலும் தடுப்பு சுவர்கள் 4 புறமும் கட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த பூங்காவின் தென்மேற்கு புறம் உள்ள கம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. அதனால் அந்தபகுதியில் பெய்த மழைத்தண்ணீர் காட்டாற்று வெள்ளமாய் வெளியேறி வயல்கள், புளியந்தோப்புகள், தென்னந்தோப்பு பகுதிகளில் புகுந்துவிடுகின்றன. இதனால் விவசாயிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    பல ஆண்டுகளுக்கு முன் தாதம்பட்டி கண்மாய் நிரம்பியபின் மாறுகால் செல்லும் ஓடை தேசியநான்குவழிச்சாலை அமைத்ததால் தூர்ந்து போய்விட்டது. இதனால் வயல்வெளிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லவழியில்லாமல் வயலுக்குள் தேங்கி விடு கிறது. எனவே தூர்ந்து போன ஓடைக்கு மாற்றாக புதியதாக மழைவெள்ளம் செல்லும்படியாக வடிகால் அமைக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக விவசாயி கருப்பையா என்பவர் கூறியதாவது:-

    தாதம்பட்டியில் ஒருங்கி ணைந்த ஜவுளிபூங்கா சுமார் 127ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அதிகஅளவில் மழைபெய்யும்போது மழை வெள்ளம் காம்பவுண்டுசுவர் இடிந்துவிழுந்ததால் எங்கள் வயல்களில் புகுந்துவிட்டது. இதனால் தற்போது நான் பயிரிட்டுள்ள 4 ஏக்கரில் 300 தென்னைமரங்களிலும், 10 மாமரங்களிலும், 50 செண்டில் உள்ள தீவண புல்லிலும் தண்ணீர்தேங்கி வடிகால் இல்லாததால் அவை அழுகும் நிலையில் உள்ளது.

    மேலும் அடுத்தடுத்துள்ள தென்னந்தோப்புகளிலும் மழை வெள்ளம் புகுந்து தேங்கி நின்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜவுளிபூங்கா தண்ணீர் வெளியில் செல்ல வடிகால் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
    • கல்லாங்காடு வலசு, சக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கின்றன.

    வெள்ளகோவில்:

    தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் மிதமான முதல் கன மழை பெய்து வந்தது. இதனால் குடியிருப்பு பகுதியை மழைநீர் சூழ்ந்தன. வெள்ளகோவில் பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்ததால் வெள்ளகோவில் நகர் பகுதியில் குமாரவலசு, கல்லாங்காடு வலசு, சக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கின்றன. இதனால் கொசு உற்பத்தியாகி நோய்த்தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி மழை நீர் தேங்கி இருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    ×