search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைநீர்"

    • மாணவர்கள் தங்களது பள்ளியை குப்பையில்லா பள்ளியாக மாற்ற முயன்று வருகின்றனர்.
    • மழை நீரை வீணாக்காமல் அதனை சேகரித்து மருத்துவ தோட்டத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மகரிஷி வித்யா மந்திர் மாணவர்களின் அறிவியல் ஆய்வு செயல்பா டுகள் நடைபெற்றன. மகான் மகரிஷி மகேஷ் யோகி ஆசியுடன் உணர்வு நிலை சார்ந்த கல்வி கற்கும் மாணவர்கள் அதன் வெளிப்பாடாக ஆக்கபூர்வமான அறிவியல் செயல்பாடுகளுள் ஒன்றாக

    தங்களது பள்ளியில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை நன்றாக மக்கச் செய்து பள்ளியில் பராமரிக்கப்படும் மருத்துவத் தோட்டத்திற்கு அவ்வுரத்தினை பயன்படுத்துகின்றனர்.

    மக்காத குப்பைகளான நெகிழி போன்ற பொருட்களை மறுசுழற்சி செய்து அதனை பள்ளிக்கு பயன்படும் அழகுப் பொருட்களாக மீள் உருவாக்கம் செய்கின்றனர்.

    நெகிழியை எரிப்பதால் ஓசோன் படலம் பாதிப்படையும் என்பதனால் அதனை எரிக்கும் போது ஏற்படும் புகையையும் சேகரித்து அதனையும் எரிபொருளாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

    இந்த அறிவியல் ஆய்வுத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் தங்களது பள்ளியை குப்பையில்லாத பள்ளியாக மாற்ற முயன்று வருகின்றனர்.

    நீரின்றி அமையாது உலகு என்பதனை உணர்ந்த என் பள்ளி மாணவர்கள் வானம் உமிழும் அமிர்தமாம் மழை நீரை வீணாக்காமல் அதனை சேகரித்து மருத்துவத் தோட்டத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    மழை நீரை பள்ளியின் கழிவறைக்கும் பயன்படுத்தவும் திட்டமிட்டு ள்ளனர்.நீர் மாசு, நிலமாசு, காற்று மாசு என அனைத்து மாசுகளையும் நீக்கும் அறிவியல் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வரும் மாணவர்களையும் அதற்கு உறுதுணையாக உள்ள அறிவியல் ஆசிரியர்களையும் பள்ளி முதல்வர் அனிதாராம் ஊக்க மூட்டியும் உற்சாகமூட்டியும் பாராட்டினார்.

    • மாநகராட்சியில் 60 வார்டுகளில் லட்சக்கணக்கான குடியிருப்புகள், தொழிற்சாலை, வர்த்தக கட்டடங்கள் உள்ளன.
    • பிரதான ரோடுகள், முக்கிய வீதிகள் மற்றும் தெருக்களில் கழிவு நீர் கால்வாய்கள், பாதாள சாக்கடை திட்டம் ஆகியன உள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் லட்சக்கணக்கான குடியிருப்புகள், தொழிற்சாலை, வர்த்தக கட்டடங்கள் உள்ளன. பிரதான ரோடுகள், முக்கிய வீதிகள் மற்றும் தெருக்களில் கழிவு நீர் கால்வாய்கள், பாதாள சாக்கடை திட்டம் ஆகியன உள்ளன. இருப்பினும் நீண்ட காலம் முன்னர் அமைந்த குடியிருப்புகளில் உரிய மழை நீர் வடிகால் வசதியில்லாத நிலை உள்ளது. பிரதான ரோடுகள், ெரயில்வே பாலங்கள் பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி அவதி ஏற்படுவதும், நீண்ட காலமாக தூர் வாராமல் உரிய பராமரிப்பில்லாத கால்வாய்களில் மழை நாட்களில் மழை நீர் செல்ல வழியின்றி ரோட்டில் சென்று பாய்வதும் வாடிக்கையாக உள்ளது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் அனைத்து வார்டுகளிலும் கழிவு நீர் கால்வாய் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தேங்கி கிடந்த மண் மற்றும் திடக்கழிவுகள் அகற்றிய நிலையில், கழிவு நீர் முறையாக கடந்து செல்ல வழி ஏற்பட்டுள்ளது.

    நகரின் மையமாக உள்ள நொய்யல் ஆறு மற்றும் இதில் சேரும் கிளை ஓடை, பள்ளம் மற்றும் வாய்க்கால்கள் நீர் வடிப் பகுதியாக உள்ளன. இவற்றின் கரைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக மழையின் போது மழை நீர் முறையாக செல்லாமல் அருகேயுள்ள குடியிருப்புகள், கட்டடங்களில் புகுவதும், ரோட்டில் சென்று பாய்வதும் பெரும் அவதியை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் தற்போது நீர் பாயத் தடையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த காலங்கள் போல் மழை பாதிப்புகள் ஏற்படாத வகையில், மாநகராட்சி நிர்வாகம் தற்போது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-

    நகரைக் கடந்து செல்லும் ஏறத்தாழ 7 கி.மீ., நீளமுள்ள நொய்யல் ஆறு தூர் வாரும் பணி பெருமளவு நிறைவடைந்துள்ளது. இதில் வந்து சேரும் ஓடைகள், நல்லாறு, பள்ளம், வாய்க்கால் அனைத்தும் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இதில் பொக்லைன் வாகனங்கள், செயின் டோசர் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பணி முழுமையடையும் நிலையில் உள்ளது.

    நகரில் பெரும் சவாலாக இருந்து வரும் கழிவு நீர் கால்வாய்கள் தூர் வாரும் பணி துரிதமாக நடக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிரந்தர கான்கிரீட் மூடிய நிலையில் உள்ளதால் அவற்றில் திடக்கழிவு அகற்றும் பணிக்கு முன்னுரிமை அளித்து பணி நடக்கிறது. இதில் நவீன ஸ்லிட்டிங் எந்திரங்கள்,ரீசைக்ளர் எந்திரம் ஒன்றும் சோதனை அடிப்படையில் களம் இறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் 9 டன் எடையுள்ள திடக்கழிவு அகற்றப்பட்டுள்ளது.

    மழையின் போது அதிகளவில் பாதிக்கப்படும் பகுதிகளாக 2,4,7,8,47 மற்றும் 58 ஆகிய வார்டுகளில் மொத்தம் 29 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் மழை நீர் தேங்கினால் உடனடியாக அகற்றும் வகையில் ஜெனரேட்டர் வசதியுடன் பம்பிங் மோட்டார் தயார் நிலையில் உள்ளது. இது தவிர 8 ஜெட் ராடு வாகனங்கள், 5 ஸ்லிட்டிங் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், 4 ஆட்டோக்களில் இது போல் பம்பிங் மோட்டார் அமைப்புடன் தயாராக உள்ளது. வேறு பகுதிகளில் தேவை ஏற்பட்டால் அவை அங்கு சென்று பயன்படுத்தப்படும். வார்டுவாரியாக மாநகராட்சி அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

    சுகாதாரப் பிரிவைப் பொறுத்தவரை வார்டு வாரியாக காய்ச்சல் கண்டறிதல் மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. உரிய மருந்துகள் தேவையான அளவு இருப்பு உள்ளது. கொசு ஒழிப்பு பணியாளர்கள் பகுதி வாரியாக 3 நாளுக்கு ஒருமுறை சென்று கொசு மருந்து தெளித்தல், கொசுப்புழு ஒழித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நடப்பு பருவ மழையின் பாதிப்புகள் ஏற்படாத வகையிலும், ஏதும் இருப்பின் அதை எதிர்கொள்ளும் வகையிலும் மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

    பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நீர் தேங்காத வகையில் கவனமாக இருக்க வேண்டும்.மைய அலுவலகத்தை, 155304 என்ற டோல் பிரீ எண்ணில் தொடர்பு கொண்டு மழை பாதிப்புகள் இருப்பின் புகார் தெரிவிக்கலாம் என்றார். 

    • மழைக்காலத்திலும் தண்ணீர் தேங்கி, பொதுமக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு வருகின்றது.
    • நடவடிக்கை எடுக்காததால் அந்த வார்டு பொதுமக்கள் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி, 14-வது வார்டுக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் முறையான வடிகால் அமைக்கப்படாத காரணத்தினால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் தண்ணீர் தேங்கி, பொதுமக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு வருகின்றது.

    இது சம்பந்தமாக முதல் மன்ற கூட்டத்திலேயே எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 14-வது வார்டு உறுப்பினர்ஜகபர் அலி கோரிக்கை வைத்து, பேரூராட்சி மன்றத்தின் 27-வது தீர்மானமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மழைக்காலம் நெருங்குவதை கருத்தில் கொண்டு இரண்டு மாதங்களுக்கு முன்னரே 14-வது வார்டு பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

    இருந்தாலும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அந்த வார்டு பொதுமக்கள் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர், பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களிடமிருந்து மனுவை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கப்படாவிட்டால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • பல்வேறு பகுதிகளில் தூர்வாரப்படாமல் இருந்த உபரி நீர் கால்வாயால், மழைநீர் ஆங்காங்கே உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.
    • மழை நீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்த னூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், சேளூர், பிலிக்கல் பாளையம், குன்னத்தூர், ஆனங்கூர், வடகரையாத்தூர், இருக்கூர், கோப்பணம் பாளையம், கபிலக்குறிச்சி, பெரிய சோளிபாளையம், திடுமல், கவுண்டம்பாளையம், சிறுநல்லி கோவில், ஜமீன்எளம் பள்ளி, சோழசிராமணி, பெருங்குறிச்சி, மணியனூர், கந்தம்பாளையம், ஒத்தக்கடை, பரமத்தி, கபிலர்மலை, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 7 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதனை தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த கனமழை இரவு முழுவதும் பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தூர்வாரப்படாமல் இருந்த உபரி நீர் கால்வாயால், மழைநீர் ஆங்காங்கே உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. மழை நீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    வயல்களில் மழைநீர்

    அதேபோல் பலத்த மழை பெய்த காரணமாக விவசாயிகள் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, வெற்றிலை, நெல் வயல்களில் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மழை நீரை வெளியேற்ற முடியாததால் நெல் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே கிராமப்புறங்களில் வற்றிய நிலையில் இருந்த கிணறுகள், பலத்த கன மழையின் காரணமாக நீரூற்று எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வியாபாரம் பாதிப்பு

    மழையின் காரணமாக சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த பழக்கடைகள், பலகார கடைகள், ஜவுளிக்கடைகள், உணவு பொருள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிப்படைந்து உள்ளனர். சாலை ஓர கடைக்காரர்கள், கட்டில் கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் பலத்த மழையின் காரணமாக தார் சாலைகளில் இருபுறமும் உள்ள குழிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பெரிய வாகனங்கள் செல்லும்போது இந்த மழைநீர் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது தெளிப்பதால், இருசக்கர வாகனங்கள் ஓட்டிகள் அவதிபடுகின்றனர்.

    • சேலம்-கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் வடிகால் மற்றும் மழை நீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடி வருகிறது.
    • தரைப்பாலம் மூழ்கினால் பள்ளி மாணவர்கள் செல்ல வழியில்லாத நிலை ஏற்படும்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதியில் தினமும் பெய்து வரும் மழையால் அங்குள்ள சேலம்-கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் வடிகால் மற்றும் மழை நீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருவதுடன், விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது.

    இந்த சாலையில் உள்ள வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீருடன், மழைநீர் வெளியேறி வருவதால் துர்நாற்றமும் ஏற்பட்டு வருகிறது. இந்த நீருடன் அருகே உள்ள விவசாய நிலத்தில் தேங்கிய மழைநீர் , சர்வீஸ் சாலையை தாண்டி புறவழிச்சாலையில் கரைபுரண்டு ஓடுகிறது. வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் இந்த விவசாய நிலத்தின் அருகே, மழைநீரில் மூழ்கும் நிலையில் உள்ள தரை பாலத்தின் வழியாக சென்று வந்து கொண்டுள்ளனர்.

    தரைப்பாலம் மூழ்கினால் பள்ளி மாணவர்கள் செல்ல வழியில்லாத நிலை ஏற்படும். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர், இட உரிமையாளர்கள் பரிசீலித்து விவசாய நிலத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். செடி, கொடிகள், பிளாஸ்டிக் பொருட்கள், துணி மணிகள் உள்ளிட்டவைகளால் அடைபட்ட வடிகால் அடைப்பை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • மழைகாலங்களில் மழைநீரை வடிய வைக்க முடியவில்லை.
    • சுமார் 40 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    மெலட்டூர்:

    அன்னப்பன்பேட்டை சேர்ந்த விவசாயிகள் தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு, அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;-

    பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை கிராமத்தில் பல விவசாய நிலங்களின் முக்கிய வடிகால் வாய்க்காலை தனிநபர் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இதனால் மழைகாலங்களில் மழைநீரை வடிய வைக்க முடியவில்லை. சுமார் 40 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே விவசாயிகளின் சிரமத்தை உணர்ந்து உடனடியாக வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்தநிலையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாமல் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று காலை 8மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு-20,அவினாசி-38.40, பல்லடம் -45, ஊத்துக்குளி-4, காங்கயம்-1.40, தாராபுரம்-20, மூலனூர்-40, குண்டடம்-27, அமராவதி அணை-2, உடுமலை-2, மடத்துக்குளம்-4, திருப்பூர் கலெக்டரேட்- 16, வெள்ள கோவில்-6, திருப்பூர் தெற்கு-5, கலெக்டர் முகாம் அலுவலகம்-45.50. மொத்தம் 276.30 மி.மீ. மழை பெய்துள்ளது.

    இதனிடையே திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றும் பணியில் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளன. 

    • உழவர் சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விவசாயிகள், விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
    • ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை உழவர் சந்தைக்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள், விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வருகின்றனர்.

    உழவர் சந்தை அமைந்துள்ள கபூர்கான் வீதியில், போதிய மழை நீர் வடிகால் வசதியில்லாத நிலையில், நேற்று முன்தினம் பெய்த சிறிய அளவிலான மழைக்கு கூட தாங்காமல் வெள்ள நீர் தேங்கியுள்ளது.குண்டும், குழியுமான ரோட்டில் பல இடங்களில் குளம் போல், மழை நீர் தேங்கியுள்ளது. அதே போல் உழவர் சந்தை நுழைவாயில் மற்றும் வளாகத்திலும் மழை நீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு காணப்படுகிறது.வளாகத்தில், குறைந்த அளவே கடைகள் உள்ள நிலையில் பெரும்பாலான விவசாயிகள் வளாகத்தில் தரையில் வைத்தே காய்கறிகள் விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் காய்கறிகள் மண், சேறு என பாதிப்பதோடு, வளாகத்திற்குள் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அங்கு வரும் மக்கள், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே, உழவர் சந்தை ரோட்டில் மழை நீர் வடிகால் வசதி மற்றும் குண்டும், குழியுமான ரோட்டை சரி செய்யவும், உழவர் சந்தை வளாகத்தில் மழை நீர் தேங்காமலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • வெள்ளநீர் வடியாமல் வயல்களில் தேங்கி பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.
    • ஆகாயதாமரை செடிகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தாலுகா, முத்துப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிகுளம் மற்றும் இடும்பவனம் பகுதியில் செல்லும் கழனியாறு, புதிய மற்றும் பழைய கிளைதாங்கியாறு, மரைக்கா கோரையாறு ஆகியவற்றில் ஆகாயதாமரை செடிகள் மண்டியுள்ளதால் மழை காலங்களில் வெள்ளநீர் வடியாமல் வயல்களில் தேங்கி பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

    செடிகளை அகற்றி குளத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் சங்கர், முருகையன் மாவட்ட விவசாய சங்க துணைத்தலைவர் மற்றும் விவசாயிகளுடன் சென்று பார்வையிட்டு ஆகாயதாமரை செடிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு ஜல்சக்தி அபியான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • மழைநீர் சேகரிப்பு என்பது இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.

    சேலம்:

    நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு ஜல்சக்தி அபியான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மழைநீர் சேகரிப்பு என்பது இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாக உள்ளது. இதனால் மழைக்காலத்திற்கு முந்தைய காலத்தில் தொடங்கி, மழைக்காலம் வரை நீர் சேமிப்பு பணிகள் நடக்கிறது. நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. இந்த பிரச்சினையை சரி செய்யவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் மத்திய அரசு இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளது.

    தாலுகாக்களில்...

    நாடு முழுவதும் 225 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக 225 கூடுதல் மற்றும் இணை செயலாளர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பாளர்களாக இருந்து தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் 225 மாவட்டங்களிலும் 1592 தாலுகாக்களில் இந்த திட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வறட்சி மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், தண்ணீர் சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்துவதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய, மாநில நீர்வளத்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், நீர்வளத்துறை பொறி யாளர்கள், அதிகாரிகள் என்று பல்வேறு தரப்பினர் இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நீர்மேலாண்மை குழுக்களும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்டம்

    சேலம் மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் தடுப்பணைகள், குளங்கள், பொது மற்றும் தனியார் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள், நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் தொடர்பான திறந்தவெளி கிணறுகள், பாரம்பரிய நீர்நிலைகள் தொடர்பான பணிகள், மறு பயன்பாட்டுக்குரிய நீர் கட்டமைப்புகள், நீர்வள ஆதாரம் தொடர்பான கசிவு நீர் குட்டைகள், அகழிகள், அடர்வன காடுகளில் மரக்கன்றுகள் நடுதல், நர்சரிகளை பராமரித்தல், அமிர்த குளங்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜல்சக்தி அபியான் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    ஜல் சக்தி அபியான் திட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளில் இருந்து நீர் வெளியே செல்லும் கால்வாய்களில் நீர்கால் பகுதியை கண்டறியப்படுகிறது. அந்த பகுதியில் மீள்நிரப்பு புழை அமைக்கும்போது நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதற்கு முக்கியத்துவம் அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. அதேபோல் குளங்களை சீரமைக்கும்போது கரைகளை மிகவும் உறுதித்தன்மை கொண்டதாகவும் பலப்படுத்த வேண்டும். மேலும் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள், பண்ணை குட்டை அமைத்தல், சிறு தடுப்பணைகள், விளை நிலங்களில் வரப்பு அமைத்தல், மழை வளம் அதிகரிக்க மரம் வளர்த்தல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நிதி பற்றாக்குறை உள்ளதாக கூறி வடிகால்கள் தூய்மைப்படுத்–தப்படவில்லை.
    • நேரடி தெளிப்பு செய்துள்ள சம்பா 30 நாள் நெற்பயிராக உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே சுமார் 3.5 கி.மீ தூரம் சொந்த செலவில் வடிகால் வாய்க்காலில் முளைத்த ஆகாயத்தாமரையை அகற்றும் பணியில் விவசாயிகள் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி கடைமடை பகுதியாகும். ஓவரூர் வடிகாலிலும் அதனை தொடர்ந்து வளவனாற்றிலும் ஆகாயத்தாமரை வலுவாக படர்ந்துள்ளது.

    இதனால், கீழப்பெருமலை, மேல பெருமலை, இடும்பாவனம், விளாங்காடு, குன்னலூர், எக்கல், பாண்டி, கோட்டகம், வெள்ளங்கால், கரையன் காடு, ஓவர்குடி ஓவரூர் ஆகிய கிராமங்களின் வடிகாலாக ஓவரூர் வடிகால் உள்ளது.

    சிறு மழை பெய்தால் கூட மேற்கண்ட கிராமங்களை சூழும் மழைநீர் ஆனது ஒவரூர் வடிகாலில் விழுந்து அதன் பின்னர் வளவனாற்றில் கலக்க வேண்டும். ஆனால் ஓவரூர் வடிகால் முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால் சிறு மழை பெய்தால் கூட தண்ணீர் வடியாமல் வயல்களில் வெள்ள நீர் சூழ்ந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இதன் காரணமாக வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் விவ சாயிகள் ஒருங்கிணைந்து குன்னலூர் முதல் கீழப்பெருமலை வரை உள்ள படந்துள்ள ஆகாயத்–தாமரைகளை அகற்றி வருகின்றனர்.

    மேலும் ஜேசிபி வாகனம் ஒன்றையும் கிராம நிதியிலிருந்து வாடகைக்கு பணியமரத்தி உள்ளனர்.

    இதுகுறித்து கீழப்பெரு மழை கிராம விவசாயிகள் கூறும்போது கடந்த ஆண்டு இந்த வடிகால்வாய்க்காலை தூய்மைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம் நிதி பற்றாக்குறை உள்ளதாக கூறி வடிகால் தூய்மைப்படுத்–தப்படவில்லை இந்த ஆண்டும் அதே பதிலை தான் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

    தற்போது குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகிய உள்ளன.

    அதேபோல் நேரடி தெளிப்பு செய்துள்ள சம்பா 30 நாள் நெற்பயிராக உள்ளது அவ்வப்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி குறு வை மற்றும் சம்பா நெற்பயர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளதால் விவசாயிகள் ஒன்று கூடி பேசி வீட்டுக்கு ஒருவர் வேலைக்கு வர வேண்டும், கிராம நிதியில் ஜேசிபி இயந்திரம் வாடகைக்கு நியமித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

    வடிகால் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி விட்டால் மழை வெள்ள பாதிப்பில் இருந்து நெற்பயிர்கள் பாதுகாக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். இந்த பணியினால் 10 கிராமங்களில் 5000 ற்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள குறுவை சம்பா பயிர்கள் மழை வெள்ளத்தில் இருந்து காக்கப்படும்.

    • நூற்றுக்கணக்கான கிராமங்களில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர் .
    • கீழ்நிலையாக கட்டப்பட்டுள்ள பாலத்தில் மழை நீர் வடிகால் அமைக்கப்படவில்லை.

    உடுமலை :

    உடுமலை அடுத்துள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி கணேசபுரம் பகுதியில் உள்ள ெரயில்வே சுரங்கபாதை வழியாக கண்ணமநாயக்கனூர், மருள்பட்டி , அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உட்பட நூற்றுக்கணக்கான கிராமங்களில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர் . இப்பகுதி மக்கள் உடுமலை வந்தடைய முக்கிய சாலையாக ெரயில்வே தண்டவாளத்தின் கீழ் உள்ள பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். கீழ்நிலையாக கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் சரியான மழை நீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக இன்று ஒரு வாரம் ஆகியும் தேங்கியுள்ள மழை நீர் குளம் போல் காட்சி அளிக்கிறது . தற்போது தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் அப்படியே உள்ளதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த வழியை பயன்படுத்தி வரும் மக்கள் அனைவரும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆகையால் சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×