search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரபிரதேசம்"

    கான்பூர் மாவட்டத்தில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 45 பேர் ஆண்கள், 21 பேர் பெண்கள் ஆவர்.
    கான்பூர் :

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த 23-ந் தேதி இந்திய விமானப்படை அதிகாரி ஒருவருக்கு முதல் முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அடுத்தடுத்து மேலும் சிலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே, இந்திய விமானப்படை நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களிடையே மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, லக்னோவில் உள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், 30 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, கான்பூர் மாவட்டத்தில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 45 பேர் ஆண்கள், 21 பேர் பெண்கள் ஆவர். நோய்ப்பரவலை தடுக்க கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறைக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 14 உயிர்கள் பலியானதற்கு காரணமான கள்ளச்சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சில மாவட்டங்களில் ரகசியமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் தொழிலை பலர் செய்து வருகின்றனர்.

    பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அருகாமையில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் வாங்கி குடித்தனர்.
     
    குடித்த சில நிமிடங்களில் அவர்களில் சிலர் கண்ணிருண்டு, ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள ராம்நகர் ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.



    இதுகுறித்து உடனே விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசின் முதன்மை செயலாளர் மற்றும் பாரபங்கி மாவட்ட உயரதிகாரிகளுக்கு உ.பி முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும், 14 உயிர்கள் பலியானதற்கு காரணமான சாராய வியாபாரி பப்பு ஜெய்ஸ்வால் என்பவரை போலீசார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
    கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற உத்தரபிரதேச பா.ஜனதா எம்.எல்.ஏ அசோக் சிங் சந்தல் உள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தார்.
    ஹமிர்பூர்:

    உத்தரபிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சதர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அசோக் சிங் சந்தல். இவருக்கும், உள்ளூர் பா.ஜனதா தலைவர் சுக்லா என்பவருக்கும் கடந்த 1997-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அசோக் சிங் சந்தல் உள்ளிட்டோர் சுக்லா குடும்பத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சுக்லாவின் சகோதரர்கள், மருமகன்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அசோக் சிங் சந்தல் உள்ளிட்டோர் மீது உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் இருந்து அவர்கள் அனைவரும் கடந்த 2002-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.இதை எதிர்த்து சுக்லா, அலாகாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அசோக் சிங் சந்தல் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் தண்டனைக்காக கோர்ட்டில் சரணடையாமல் இருந்ததால் அவர்களுக்கு எதிராக கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று அசோக் சிங் சந்தல் உள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தார். அவருடன் மேலும் 5 பேரும் சரணடைந்தனர். அவர்கள் அனைவரும் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் மேலும் 10 கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். #Loksabhaelections2019 #BJP #PMModi

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மாநில வாரியாக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    இதுவரை அவர் சுமார் 300 பொதுக்கூட்டங்களில் பேசி பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டி உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் இன்று 6-வது கட்ட ஓட்டுப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதையடுத்து 7-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    7-வது கட்ட தேர்தலில் 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் தலா 13 தொகுதிகளிலும் மேற்கு வங்காளத்தில் 9 தொகுதிகளிலும், பீகாரில் 8 தொகுதிகளிலும், இமாச்சலபிரதேசத்தில் 4 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட்டில் 3 தொகுதியிலும், சண்டிகாரில் ஒரு தொகுதியிலும் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த 59 தொகுதிகளில் உத்தரபிரதேசம், மேற்கு வங்காளத்தில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள 23 தொகுதிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளன. இந்த தொகுதிகளில் பா.ஜனதா, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் முற்றுகையிட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள்.

     


     

    பிரதமர் மோடி இந்த 23 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே திட்டமிட்டுள்ள பொதுக்கூட்டங்களை தவிர மேலும் 10 பொதுக்கூட்டங்களில் பேச அவர் முடிவு செய்துள்ளார்.

    உத்தரபிரதேசத்தில் காசிப்பூர், ராபர்ஸ்ட் கஞ்ச், கோசி, சந்தலி, மிர்சாபூர் ஆகிய இடங்களிலும் மேற்கு வங்காளத்தில் பசிர்கட், டைமண்ட் ஆர்பர், மதுராபூர், டம்டண்ட் ஆகிய இடங்களிலும் மோடி பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    7-வது கட்ட தேர்தல் பிரசாரம் மே மாதம் 17-ந் தேதி நிறைவு பெறுகிறது. தேவைப்பட்டால் மேலும் 5 இடங்களில் மோடியை பேச வைக்க பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். #Loksabhaelections2019 #BJP #PMModi

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை குறித்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறிய சர்ச்சைக்குரிய பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. #YogiAdiyanath #Twitter #MuslimLeague
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை குறித்து சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் கடந்த 5-ந்தேதி வெளியிட்டு இருந்தார். மேலும் மாநிலம் முழுவதும் பிரசாரத்தின் போதும் இந்த கருத்தை அவர் தெரிவித்து வந்தார்.

    இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர், ஆதித்யநாத்தின் டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து ஆதித்யநாத்தின் சர்ச்சைக்குரியை பதிவை நீக்குமாறு டுவிட்டர் நிறுவனத்துக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல் வழங்கியது. இதை ஏற்றுக்கொண்ட டுவிட்டர் நிறுவனம், ஆதித்யநாத்தின் பதிவை நேற்று நீக்கியது.

    முன்னதாக தனது பிரசாரத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வந்த யோகி ஆதித்யநாத்துக்கு 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. #YogiAdiyanath #Twitter #MuslimLeague 
    உத்தரபிரதேசம் மாநிலத்தில் நேற்றிரவு 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இருந்து, அங்கு வசிக்கும் மக்களை நாய் ஒன்று உயிரை கொடுத்து காப்பாற்றியுள்ளது. #DogSavesLife
    பாந்தா:

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் பாந்தா பகுதியில் 4 மாடி கட்டிடம் உள்ளது. இந்த  கட்டிடத்தில் நேற்றிரவு முதல் தளத்தில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அந்த கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டின் வளர்ப்பு பிராணியாக இருந்த நாய் மோப்பம் பிடித்தது.

    உடனடியாக குரைக்க ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து ஒரே இடத்தை பார்த்துக்
    குரைத்துக் கொண்டு இருக்கவே, அந்த கட்டிடத்தில் வசிக்கும் அனைவரும் வெளியே வந்து பார்த்துள்ளனர்.  அப்போது அதே காலனியில் உள்ள  எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் ஷோரூமில்  மின்சாரம் வழங்கும் வயர்களில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.



    தீ வேகமாக பரவவே, உடனடியாக அனைவரும் அங்கிருந்து வெளியேறினர். சிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்த சிலிண்டரும் வெடித்தது. இந்த கோர சம்பவத்தில் இருந்து மக்களை சத்தம் எழுப்பி காப்பாற்றிய அந்த நாய், தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

    இது குறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் தீயணைப்பு துறையினருடன் விரைந்து, தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர்.  இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கில் பொருட்கள் சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #DogSavesLife

     
    உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளத்தில் போட்டியிட உள்ள ஜெயப்பிரதா, மேனகா காந்தி உள்ளிட்ட வேட்பாளர்களை பாஜக இன்று அறிவித்துள்ளது. #LSpolls #BJP #JayaPrada #ManekaGandhi
    புதுடெல்லி:

    பிரபல நடிகை ஜெயப்பிரதா கடந்த 1994-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். சந்திரபாபு நாயுடுவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2004-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சி சார்பில் உத்தரபிரதேசத்தில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

    கடந்த 2014-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சி தலைவர்களுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஜெயப்பிரதா சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியில் சேர்ந்தார்.

    இதற்கிடையே, இன்று காலை ஜெயப்பிரதா திடீரென அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.



    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் போட்டியிட உள்ள 39 வேட்பாளர்களை பாஜக இன்று அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பாஜக தலைவர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரபிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஜெயப்பிரதா போட்டியிடுகிறார்.

    மேனகா காந்தி சுல்தான்பூரிலும், வருண் காந்தி பிலிபித் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேற்கு வங்காளத்தின் அல்பேரியா தொகுதியில் நடிகர் ஜாய் பானர்ஜி போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #LSpolls #BJP #JayaPrada #ManekaGandhi
    பிரபல நடிகையும் நாட்டிய கலைஞருமான சப்னா சவுத்ரி காங்கிரசில் இணைந்ததாக வந்த செய்திக்கு பதில் அளித்த பாஜக எம்.எல்.ஏ. சோனியா காந்தி இத்தாலியில் நாட்டியக்காரியாக இருந்ததாக தெரிவித்துள்ளார். #SapnaChaudhary #dancerSoniaGandhi #SoniaGandhi #BJPMLA #SurendraSingh
    சண்டிகர்: 

    உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையில்  பாஜக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சுரேந்திரா சிங். உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி மாயாவதி வயதையும் நரைமுடியையும் மறைக்க தலையில் ‘டை’ பூசிக்கொள்வதாகவும், முகத்தை பளபளப்பாக காட்டிக்கொள்ள அடிக்கடி அழகு நிலையங்களில் ‘ஃபேஷியல்’ செய்து கொள்வதாகவும் சமீபத்தில் இவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பிக்பாஸ் இந்தி தொடர் மூலம் சமீபத்தில் பிரபலமடைந்த நடிகையும் ‘ஹர்யான்வி’ நாட்டியக் கலைஞருமான சப்னா சவுத்ரி என்பவர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகை ஹேமா மாலினிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் சப்னா சவுத்ரி நிறுத்தப்படலாம் எனவும் பேசப்பட்டது.

    இவ்விவகாரம் தொடர்பாக பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திரா சிங், 'அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்துவிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இப்போது நாட்டியக்காரிகள் மீது நம்பிக்கை வைக்க தொடங்கியுள்ளதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், இந்த நாட்டை நாட்டியக்காரிகள் வழிநடத்துவதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.

    ராகுல் காந்தியின் அம்மா சோனியாவும் இத்தாலியில் நாட்டியக்காரியாக இருந்தார். அவரை பார்த்த ராஜீவ் காந்தி சோனியாவை சொந்தமாக்கிக் கொண்டதுபோல், அப்பாவின் வழியில் ராகுல் காந்தியும் சப்னா சவுத்ரியை தனது சொந்தமாக்கி திருமணம் செய்துகொள்ள வேண்டும். 

    அப்போதுதான் மாமியாரும் மருமகளும் ஒரே தொழிலில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள்’ என்று தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.



    இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக வெளியான செய்தியை சப்னா சவுத்ரி இன்று மறுத்துள்ளார். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. யாரை ஆதரித்தும் பிரசாரம் செய்யப்போவதில்லை. பிரியங்கா காந்தியுடன் நான் இருப்பதுபோல் வெளியாகி இருக்கும் புகைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

    ஆனால், இந்த விளக்கத்தை உத்தரப்பிரதேசம் மாநில காங்கிரஸ் செயலாளர் நரேந்திரா ரத்தி மறுத்துள்ளார்.

    நடிகை சப்னா சவுத்ரியும் அவரது சகோதரியும் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து கட்சியில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து, உறுப்பினர் படிவத்தில் கையொப்பமிட்டு, உறுப்பினர் சேர்க்கை சீட்டுக்கான கட்டணத்தையும் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர் இதற்கு ஆதாரமாக சப்னா சவுத்ரி உறுப்பினர் படிவத்தில் கையொப்பமிடும் புகைப்படத்தை நரேந்திரா ரத்தி இன்று வெளியிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, சோனியா காந்தி, ராஜ்நாத் சிங், வருண் காந்தி, ஹேமா மாலினி என பல வி.ஐ.பி. வேட்பாளர்கள் போட்டியிடும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது சப்னா சவுத்ரி விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. #SapnaChaudhary #dancerSoniaGandhi #SoniaGandhi #BJPMLA #SurendraSingh
    உத்தரபிரதேசத்தில் மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ. யோகேஷ் வர்மா காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். #BJPMLA #YogeshVerma
    லக்கிம்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. யோகேஷ் வர்மா. இவர், லக்கிம்பூரில் நேற்று தனது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது, மர்ம நபர் ஒருவர், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினார். இதில், எம்.எல்.ஏ.வின் காலில் குண்டு பாய்ந்தது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 
    உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் சரயு ஆற்றில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.
    கோரக்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் சரயு ஆற்றில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.

    ஹோலி பண்டிகையையொட்டி, சொந்த கிராமத்துக்கு வந்திருந்த அவர்கள், ஆற்றில் குளித்தபோது இச்சம்பவம் நடந்தது. முதலில், இதை அறியாத அவர்களது குடும்பத்தினர், அவர்களை தேடி சென்றபோது, ஆற்றங்கரையில் உடைகளும், செல்போனும் கிடந்தன. அதைப் பார்த்து, அவர்கள் பலியானதை அறிந்தனர்.

    பலியானவர்களின் பெயர்கள் சத்யம் (வயது 14), சவுரவ் (19), நிதேஷ் (16), அமன் (17), ஆதர்ஷ் (23) என்று தெரியவந்துள்ளது.
    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் முதல் வாரணாசி வரையிலான கங்கை நதி யாத்திரையை தொடங்கிய பிரியங்கா, தனது பாட்டியான இந்திராவை நினைத்து நெகிழ்ச்சியடைந்தார். #PriyankaGandhi #IndiraGandhi #Congress
    பிரயாக்ராஜ்:

    தீவிர அரசியலில் சமீபத்தில் இணைந்த பிரியங்கா, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், உத்தரபிரதேச கிழக்குப்பகுதிக்கு கட்சியின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் மாநிலத்தில் அவர் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

    இதில் முதற்கட்டமாக கங்கை நதியில் படகுமூலம் சென்று கரையோர மக்களின் ஆதரவை திரட்ட விரும்பிய அவர் இதற்காக 3 நாள் கங்கை நதி யாத்திரையை நேற்று தொடங்கினார். இதில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினமே அவர் லக்னோ சென்றடைந்தார். பின்னர் மாலையில் பிரயாக்ராஜ் நகருக்கு சென்றார்.



    இதைத்தொடர்ந்து நேற்று காலையில் அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இருந்து தனது பிரசார பயணத்தை தொடங்கினார். இதற்காக கட்சிக்கொடிகள் மற்றும் தோரணங்களுடன் படகு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த படகில் கட்சியினருடன் இணைந்து சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

    முன்னதாக திரிவேணி சங்கமத்தில் உள்ள அனுமன் கோவிலில் பிரியங்கா வழிபாடு செய்தார். மேலும் அங்குள்ள ஸ்வராஜ் இல்லத்துக்கு சென்ற அவர், தனது பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்திக்கும், ஸ்வராஜ் இல்லத்துக்குமான தொடர்புகளை நினைவுகூர்ந்து தனது டுவிட்டர் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘சுவராஜ் பவன் முற்றத்தில் அமர்ந்திருக்கும் போது, எனது பாட்டி (இந்திரா காந்தி) பிறந்த அறையை பார்க்க முடிகிறது. இங்கு வைத்துதான் நான் தூங்குவதற்காக அவர் மடியில் என்னை படுக்க வைத்து கதைகளை கூறுவார். அவரது வார்த்தைகள் இன்னும் எனது காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ‘எதற்கும் அஞ்சக்கூடாது, எல்லாம் சரியாகிவிடும்’ என அவர் சொல்லித்தருவார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    பிரியங்காவின் கங்கை யாத்திரை நாளை (புதன்கிழமை) வாரணாசியில் நிறைவு பெறுகிறது. இந்த யாத்திரை மாநில காங்கிரசாருக்கு உற்சாகத்தை அளித்து இருக்கிறது. இதனால் கங்கை நதிக்கரையில் பிரியங்கா செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.  #PriyankaGandhi #IndiraGandhi #Congress

    உத்தரபிரதேசத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வருவேன் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார். #PriyankaGandhi #UttarPradesh
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியும், சோனியாவின் மகளுமான பிரியங்கா, தீவிர அரசியல் களத்தில் இறங்கி உள்ளார். கட்சியின் பொதுச்செயலாளராகவும், உத்தரபிரதேச கிழக்கு பிராந்திய பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ள அவர், கடந்த மாதம் உத்தரபிரதேசத்தில் தனது கட்சிப்பணிகளை தொடங்கினார்.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிரயாக்ராஜ் மற்றும் மிர்சாபூர் மாவட்டங்களில் பிரியங்கா, கங்கை நதி யாத்திரை மேற்கொள்கிறார். 3 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையை திரிவேணி சங்கமத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறார். கங்கை நதியில் சுமார் 140 கி.மீ. தூரத்துக்கு செல்லும் அவர் நதிக்கரையில் உள்ள கிராம மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

    இந்த பயணத்தை முன்னிட்டு உத்தரபிரதேச மக்களுக்கு பிரியங்கா, கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதிக்கு கட்சியின் பொறுப்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னை நியமித்து உள்ளார். இந்த மாநில மக்களுக்கும், எனக்கும் பழைய தொடர்பு ஒன்று உண்டு. ஒரு காங்கிரஸ் தொண்டராக உத்தரபிரதேசத்தில் உங்கள் ஆதரவுடன் அரசியல் மாற்றத்தை கொண்டு வரவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

    மாநிலத்தில் தற்போதைய அரசியல் சூழலில் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் அனைவரும் கடும் அழுத்தத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வலிகளை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர். உங்கள் கருத்துகளை கேட்காமல், கவலைகளை பகிர்ந்து கொள்ளாமல் மாநிலத்தில் எந்த அரசியல் மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

    எனவே உங்கள் வீட்டுக்கே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வருகிறேன். அவ்வாறு உங்கள் கருத்துக்களை அறிந்த பிறகு உண்மையின் அடித்தளத்தில் மாநிலத்தில் அரசியல் மாற்றத்தை நாம் இணைந்து கொண்டு வருவோம். உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கி நாம் நகர்வோம்.

    இவ்வாறு பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

    கங்கை நதி யாத்திரைக்காக பிரியங்கா நேற்றே உத்தரபிரதேசம் சென்றார். லக்னோ விமான நிலையத்தில் அவரை மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் மற்றும் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். அங்கிருந்து கட்சி அலுவலகம் சென்ற பிரியங்கா, கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் மாலையில் பிரயாக்ராஜ் நகருக்கு சென்று சேர்ந்தார். அவரது கங்கை நதி யாத்திரைக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. மேலும் இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. 
    ×