search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98971"

    • சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா மலர் அஞ்சலி செலுத்துகிறார்.
    • அண்ணா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் உறுதிமொழி ஏற்கிறார்.

    சென்னை:

    அண்ணாவின் 54-வது நினைவு நாளையொட்டி வருகிற 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆக போகிறது. 5 வருடங்களுக்கு பிறகு அந்த பெட்டிகளை திறந்தால் பிரயோஜனமில்லை.
    • எப்போது பெட்டிகளை திறந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்?

    சென்னை:

    திருவாரூர் மாவட்டம் சுந்தரக்கோட்டையில் சசிகலா நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    அ.தி.மு.க.வை மீண்டும் தனித்தன்மையோடு கொண்டு வர முடியும் என்று உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பாகவே அ.தி.மு.க. ஒன்றிணைய வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். ஏன் வாய்ப்பு இருக்கிறதா? என்று நினைக்கிறீர்கள். நிச்சயம் ஒன்றிணையும்.

    என்னை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் என்ன நடக்கிறது என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.

    ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கேட்கிறீர்கள். அதனை நான் எப்படி சொல்ல முடியும். அது மக்கள் கையில் தான் இருக்கிறது.

    நான் ஜெயலலிதாவின் பிரசாரங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய முடியுமோ அதனை மட்டும் தேர்தல் பிரசாரத்தில் சொல்வோம். ஏனென்றால் திரும்பவும் மக்களை நாங்கள் சந்திக்கும் போது அவர்கள் எங்களிடம் பேச வேண்டுமே தவிர, ஏன் சொன்னதை செய்யவில்லை என்று கேள்வி கேட்கக்கூடாது என்ற எண்ணத்தில் என்ன செய்ய போகிறோமோ அதனை மட்டும் தான் சொல்வோம்.

    தி.மு.க. சார்பில் தேர்தல் சமயத்தில் பெரிய பெட்டி வைத்து பூட்டு போட்டு, அதில் மக்கள் தங்கள் கோரிக்கைகளை கடிதங்களாக போடுங்கள். அதன் சாவி என்னிடம் தான் இருக்கும்.

    ஆட்சிக்கு வந்ததும் அந்த பெட்டிகளை எல்லாம் திறந்து அந்த கோரிக்கை கடிதங்களை மாவட்டம் வாரியாக பிரித்து, அதில் ஒன்றியம், நகரம், பேரூர், ஊராட்சி வாரியாக மீண்டும் பிரித்து மக்களின் கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னது ஊடகங்களிடம் இருக்கும்.

    அது போன்று சொல்லி மக்களை நாங்கள் ஏமாற்ற மாட்டோம். அந்த பெட்டியின் சாவி தொலைந்து விட்டது என்று தான் நான் நினைக்கின்றேன். ஏனென்றால் அந்த சாவி இருந்திருந்தால் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி இருப்பார்கள்.

    ஊடகங்கள் முன்பு வைத்து தான் அந்த பெட்டிகளை பூட்டு போட்டு பூட்டினார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆக போகிறது. 5 வருடங்களுக்கு பிறகு அந்த பெட்டிகளை திறந்தால் பிரயோஜனமில்லை.

    அதனால் எப்போது அந்த பெட்டிகளை திறந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்?

    அடுத்தவர்களை குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாம் சரியாக இருந்தால் நம்மை யார் என்ன செய்து விட முடியும். பா.ஜனதா மட்டுமல்ல, எல்லா கட்சியையும் சொல்கின்றேன் அடுத்த கட்சியை குறை சொல்லி கொண்டு இருக்க கூடாது.

    அவரிடம் கொடு, இவரிடம் கொடு என்று மற்ற கட்சிகள் ஏமாற்றுவதற்கு நாம் என்ன ஒரு மாத குழந்தையா? நாம் சரியாக இருந்தால், சரியாக செயல்பட முடியும். என்னையெல்லாம் யாரும் எதுவும் செய்ய முடியாது. என் நிழலை கூட யாரும் நெருங்க முடியாது.

    நான் உயிரோடு இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை ஒரு போதும் முடங்க விடமாட்டேன்.

    இவர்களின் செயல்பாடுகள், நடவடிக்கைகளை பார்க்கும் போது அது தி.மு.க.வுக்கு தான் நல்லதாக இருக்கிறது. அதனால் ஒருவருக்கொருவர் திட்டுவதை விட்டு விட்டு ஒழுங்காக ஒருங்கிணைந்து தி.மு.க.வை வீழ்த்துவதற்கு கைகோர்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க. எப்போதும் தொண்டர்களின் இயக்கம்.
    • அ.தி.மு.க.வை மீண்டும் எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன்

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தலைவர் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள், அனைவரின் ஒப்புதலோடு எதையும் செய்ய வேண்டும். தொண்டர்கள் எப்போதுமே கீழ்ப்படியில் நிற்பார்கள்.

    அவர்களால் தான் நாம் மேடையில் நிற்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அது மாதிரியான ஒரு சூழ்நிலை அ.தி.மு.க.வில் தற்போது இல்லை. இது அனைத்திற்கும் கீழ்ப்படியில் நின்று கொண்டிருக்கும் தொண்டர்கள் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்கள்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பா.ஜ.க. அலுவலக வாசலில் காத்திருந்தது குறித்து கேட்கிறீர்கள். அ.தி.மு.க. எப்போதும் தொண்டர்களின் இயக்கம். தொண்டர்களின் ஆதரவு பெற்றவர்களுக்கு இது போன்ற நிலை ஏற்படாது.

    அ.தி.மு.க.வில் எப்போதும் தொண்டர்கள் எண்ணப்படிதான் முடிவு எடுக்கப்படும். எப்போதுமே 2, 3 பேர் சேர்ந்து முடிவெடுக்க முடியாது. அதுபோன்று முடிவெடுக்கக் கூடிய கட்சி தி.மு.க.தான். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அவ்வாறு முடிவு எடுக்க முடியும்.

    அ.தி.மு.க. குடும்பம் என்பது மிகப்பெரியது. அ.தி.மு.க. குறித்து விரைவில் நல்ல முடிவு வரும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுதான் என்னுடைய முடிவு.

    நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க விட மாட்டேன். நான் ஒரு சிலரை எடை போட்டுக் கொண்டு இருக்கிறேன். அ.தி.மு.க.வை மீண்டும் எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க. ஒன்றிணையும்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து நான் எதுவும் கூற முடியாது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

    அ.தி.மு.க. சிதறுண்டு இருப்பதற்கு காரணம் பா.ஜ.க.வா என்று கேட்கிறீர்கள். நாம் அடுத்தவரை பற்றி குறை கூற தேவையில்லை. நாம் சரியாக இருந்தால் போதும். என்னை யாராலும் ஏதாவது செய்ய முடியுமா? என் நிழலிடம் கூட யாரும் வர முடியாது.

    ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் நடவடிக்கைகள் அனைத்தும் தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ளது. ஆகவே ஒருவரை ஒருவர் திட்டுவதை விட்டு விட்டு இருவரும் ஒன்றிணைந்து தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க. தொண்டர்களின் வேண்டுகோள். தேர்தல் சமயத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று பெட்டியை பூட்டி சாவியை வைத்துக்கொண்ட ஸ்டாலின் அந்த சாவியை தற்போது தொலைத்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரியலூர், பெரம்பலூர் பைபாஸ் சாலை வழியாக அரசூர் கூட்டு ரோட்டை சென்றடையும் சசிகலா அங்கிருந்து தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
    • வளையம்பட்டு, மேலமங்கலம், செம்மார், ஏனாதி மங்கலம், சிறுவானூர் ஏமப்பூர், திருவெண்ணை நல்லூர் பகுதிகளில் ஆதரவாளர்களை சந்திக்கிறார்.

    சென்னை:

    திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் சசிகலா சுற்றுப்பயணம் செல்கிறார். வருகிற 24-ந்தேதி காலை மன்னார்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டையில் கல்லூரி விழாவில் கலந்து கொள்கிறார்.

    மறுநாள் (25-ந்தேதி) அரியலூர், பெரம்பலூர் பைபாஸ் சாலை வழியாக அரசூர் கூட்டு ரோட்டை சென்றடையும் சசிகலா அங்கிருந்து தனது பிரசாரத்தை தொடங்குகிறார். வளையம்பட்டு, மேலமங்கலம், செம்மார், ஏனாதி மங்கலம், சிறுவானூர் ஏமப்பூர், திருவெண்ணை நல்லூர் பகுதிகளில் ஆதரவாளர்களை சந்திக்கிறார்.

    • அரசியல் களத்தில் சசிகலா போடும் திட்டம் என்ன? என்பது புரியாத புதிராகவும் மர்மமாகவுமே உள்ளது.
    • கடந்த சில மாதங்களாகவே அரசியல் களத்தில் அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பேன் என்று சசிகலா கூறிக் கொண்டிருக்கிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என கூறிக்கொண்டு அறிக்கைகள் வெளியிட்டு வரும் சசிகலா, திடீர் திடீரென சுற்றுப்பயணத்தையும் மேற்கொள்கிறார்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அவரும் செயல்பட்டு வருகிறார். டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இப்படி 4 பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.

    இதற்கிடையே சசிகலா பேட்டி அளிக்கும் போதெல்லாம் அ.தி.மு.க.வை ஒன்று சேர்க்கும் முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன். என்னால் மட்டுமே அது முடியும் என்று திரும்ப திரும்ப கூறி வருகிறார்.

    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தலைமை பதவிக்கான போட்டி காரணமாகவே பிரிந்துள்ளனர். இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதா? என்று அ.தி.மு.க.வினரிடம் கேட்டால் "ஒரே உறையில் 2 கத்திகள் இருக்க முடியுமா?" என அவர்கள் எதிர்கேள்வி கேட்கிறார்கள். இதன் மூலம் யாராவது விட்டுக் கொடுத்தால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என்பது தெள்ளத் தெளிவாகி உள்ளது.

    ஆனால் சசிகலாவோ நேற்று அளித்த பேட்டியில் 2 பேரையும் சந்திக்க முடிவு செய்திருப்பது போல கருத்துக்களை தெரிவித்துள்ளார். எனது கட்சியினரை எப்போது வேண்டுமானாலும் நான் சந்திப்பேன் என்று அவர் கூறியுள்ளார். இதற்கு அ.தி.மு.க. சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.

    "அ.தி.மு.க. விவகாரத்தில் சசிகலா மூக்கை நுழைக்க வேண்டாம்" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க.வை இணைப்பேன், இணைப்பேன் என்று திரும்ப திரும்ப கூறி சசிகலா பிலிம் காட்டிக்கொண்டிருப்பதாக அ.தி.மு.க.வினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. அவரது தலைமையை ஏற்று பிரிந்து சென்றவர்கள் இணையலாம். ஆனால் சசிகலாவுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இதனால் அரசியல் களத்தில் சசிகலா போடும் திட்டம் என்ன? என்பது புரியாத புதிராகவும் மர்மமாகவுமே உள்ளது. அவரது பின்னால் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் யாருமே இல்லாத நிலையில் அவர் எதை நோக்கி பயணிக்கிறார் என்றும் அ.தி.மு.க.வினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    சசிகலா சிறையில் இருந்து வெளியானபோது முதலில் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவேன் என்றார். பின்னர் ஒதுங்கி இருக்கப்போவதாக பின் வாங்கினார். கடந்த சில மாதங்களாகவே அரசியல் களத்தில் அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். இப்படி மாற்றி மாற்றி அவர் பேசியுள்ளதால் சசிகலாவின் எதிர்கால திட்டம்தான் என்ன? என்பதும் குழப்பமாகவே மாறி இருக்கிறது என்றும் அ.தி.மு.க.வினர் விமர்சித்துள்ளனர்.

    • தி.மு.க.வுக்கு தக்க பாடத்தை நிச்சயம் அளிப்போம்.
    • அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் வகையில் நிச்சயம் செயல்படுவேன்.

    சென்னை :

    எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அப்போது, 'அ.தி.மு.க.வை இணைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கும் திட்டம் இருக்கிறதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சசிகலா பதிலளித்து பேசியதாவது:-

    தொடக்கத்தில் இருந்தே என் யுக்தியை பார்த்துக்கொண்டிருப்பீர்கள். இதற்கு மேல் வெளியே சொல்லக்கூடாது. நடந்துவிடும். எங்கள் கட்சிக்காரர்களை நான் சந்திப்பதில் என்ன இருக்கிறது? உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன்.

    அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் வகையில் நிச்சயம் செயல்படுவேன். தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்றால் அ.தி.மு.க ஒற்றுமையுடன் இருந்து வெற்றியை எங்கள் தலைவர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும். இதை எண்ணி அனைவரும் ஒன்றிணைந்து தி.மு.க.வுக்கு தக்க பாடத்தை நிச்சயம் அளிப்போம்.

    இவ்வாறு அவர் பதிலளித்தார்.

    • தி.நகர் இல்லத்தில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
    • நிகழ்ச்சியில் சசிகலா ஆதரவாளர்கள் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா வருகிற 17-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி அன்று காலை 10.30 மணிக்கு தி.நகர் இல்லத்தில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். இதில் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்கிறார்கள்.

    • தி.மு.க. ஆட்சியில் நகரங்களில் ஒருத்தரும் புதிதாக கடை வைக்க முடியாது.
    • அம்மா இருந்தபோது எப்படி இருந்தது தமிழகம். இதே காவல்துறையை வைத்து தானே அன்றைக்கு ஆட்சியை நடத்தினோம்.

    செங்கல்பட்டு:

    ஜெயலலிதா தோழி சசிகலா செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பல இடங்களில் நடந்த கூட்டங்களில் அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் நகரங்களில் ஒருத்தரும் புதிதாக கடை வைக்க முடியாது. அப்படி வைத்தால் தி.மு.க.வினர் வந்து மிரட்டுவதுதான் வேலை.

    ஒரு சிறிய வீடு கட்டுவதற்கு மணலோ, ஜல்லியோ வைத்தால் பணம் கொடு என்று தி.மு.க.வினர் பொதுமக்களை மிரட்டுகிறார்கள். பணம் கொடுத்தால்தான் வீடு கட்ட முடியும் என்ற நிலை. இதற்கெல்லாம் காரணம் உங்கள் பதவி படுத்தும் பாடு. அந்த பதவியை எடுத்தால் எல்லாம் சரியாகி விடும்.

    அம்மாவின் ஆட்சி வந்தால் மீண்டும் பழைய நிலைக்கு வரும். அது மட்டுமல்ல தி.மு.க. கவுன்சிலர்களை முதலில அடக்கி வைக்க வேண்டும். என்ன காரணம் என்றால், ஒவ்வொருத்தரையும் போன் செய்து மிரட்டுவதுதான் வேலை.

    இப்போது கூட்டணி கட்சிகள் எல்லாம் உன்னுடன் இருப்பதால் அவர்கள் வாயை அடைக்கலாம். ஆனால் என்னுடைய வாயை அடைக்க முடியாது. இந்த மக்களுக்காக என் உயிர் உள்ளவரை தட்டிக்கேட்பேன். ஏன் என்றால் நாங்கள் அப்படிதான் வளர்ந்திருக்கிறோம். 30 வருட அரசியலில் நாங்கள் இதைத்தான் செய்திருக்கிறோம்.

    அம்மா இருந்தபோது எப்படி இருந்தது தமிழகம். இதே காவல்துறையை வைத்து தானே அன்றைக்கு ஆட்சியை நடத்தினோம். இப்போது தி.மு.க.வால் ஏன் நடத்த முடியவில்லை. என்ன காரணம் என்பதை யோசித்து பாருங்கள். மக்களை தாக்குவதற்கோ, மிரட்டுவதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது.

    எந்த சமயத்தில் தி.மு.க.விற்கு பாடம் புகட்ட வேண்டுமோ அந்த சமயத்தில் மக்கள் சரியாக செய்ய வேண்டும். அம்மா மிகவும் கஷ்டப்பட்டு நல்ல நிலைக்கு தமிழகத்தை கொண்டு வந்து வைத்தால், தி.மு.க. ஆட்சி இப்போது செய்வதை பார்த்தால் எனக்கு ஒருநாள் கூட நிம்மதியாக தூக்கம் என்பதே வருவதில்லை. என்ன இப்படி கொடுமை செய்கிறார்களே என்று எனக்கு கஷ்டமாக இருக்கிறது.

    அராஜகம் செய்யும் தி.மு.க.வினர் 4 பேரை கைது செய்தால் தானே மற்றவர்கள் செய்யாமல் இருப்பார்கள். அதை செய்வதற்கு தி.மு.க. பயப்படுவது ஏன்? அது போன்று பயப்படுபவர்கள் எல்லாம் பதவிக்கு வரக்கூடாது. பயந்தால் எப்படி காவல்துறையை வைத்து பணிகளை செய்ய முடியும்? நானும் பலமுறை நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லி விட்டேன். தமிழக மக்களே நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ளுங்கள். இந்த ஆட்சிக்கு என்ன பாடம் புகட்ட வேண்டும் என்பதை மனதில் வைத்து அதற்கான தக்க சமயம் வரும்போது மக்கள் தெளிவாக பாடம் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சசிகலா பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து உள்ளார்.
    • சசிகலாவின் சுற்றுப்பயணத்தையொட்டி வழி நெடுக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    சென்னை:

    செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சசிகலா இன்று ஆதரவாளர்களை சந்தித்து பேசுகிறார்.

    அ.தி.மு.க.வை ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து கூறிவரும் சசிகலா பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து உள்ளார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசி ஆதரவு திரட்டியுள்ளார்.

    அந்த வகையில் செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கொளப்பாக்கத்தில் இருந்து இன்று மாலை சசிகலா சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம், திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களுக்கு செல்லும் அவர் தனது ஆதரவாளர்களையும், பொதுமக்களையும் சந்தித்து பேசுகிறார்.

    இதற்காக இன்று மாலை தி.நகரில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்படும் சசிகலா, கிண்டி, குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் வழியாக கொளப்பாக்கத்தை சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

    சசிகலாவின் சுற்றுப்பயணத்தையொட்டி வழி நெடுக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சசிகலா ஆதரவாளர்கள் செய்துள்ளனர். சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களில் போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    • மறைமலை நகர், சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் தொண்டர்களையும் பொது மக்களையும் சசிகலா சந்திக்கிறார்.
    • சுற்றுப்பயணத்தில் ஈடுபடும் சசிகலாவை வரவேற்க தொண்டர்கள் முக்கிய இடங்களில் வரவேற்பு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    சென்னை:

    சசிகலா புதிய ஆண்டில் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி 9-ந்தேதி செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் தொண்டர்களை சந்திக்கிறார்.

    இதற்காக சசிகலா 9-ந்தேதி மதியம் 3 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டு கிண்டி, குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் வழியாக கொளப்பாக்கம் செல்கிறார்.

    அங்கிருந்து மறைமலை நகர், சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் தொண்டர்களையும் பொது மக்களையும் சந்திக்கிறார்.

    சுற்றுப்பயணத்தில் ஈடுபடும் சசிகலாவை வரவேற்க தொண்டர்கள் முக்கிய இடங்களில் வரவேற்பு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    • வருகிற ஜனவரி 1-ந்தேதியான புத்தாண்டு தினத்தன்று சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்கிறார்.
    • தி.நகரில் உள்ள இல்லத்தில் அன்று காலை 10 மணி அளவில் ஆதரவு நிர்வாகிகளை சந்திக்கும் சசிகலா, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வுக்கு விரைவில் தலைமை தாங்குவேன் என்று சசிகலா தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார். அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் சசிகலாவும் தனது லெட்டர் பேடில் பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

    அதே நேரத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் நான்தான். கட்சிக்கு தலைமை தாங்குவதும் நான்தான் என்று கூறிக்கொண்டு செயல்பட்டு வருகிறார். இதனால் அ.தி.மு.க.வில் நீடிக்கும் குழப்பம் முடிவுக்கு வராமலேயே உள்ளது.

    இதுதொடர்பான கேள்விக்கு சமீபத்தில் பதில் அளித்த சசிகலா, பாராளுமன்ற தேர்தலுக்குள் எல்லாம் சரியாகிவிடும். அனைவரையும் ஒருங்கிணைத்து அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கும் என்றும் தெரிவித்தார்.

    இப்படி அ.தி.மு.க.வில் நடக்கும் பிரச்சினைகளை என்னால் தான் சரி செய்ய முடியும் என்று சசிகலா தொடர்ந்து கூறி வருகிறார். அதே நேரத்தில் அவர் தனியாக கூட்டம் எதையும் இதுவரை நடத்தியது இல்லை. மாவட்டம் வாரியாக சென்று ஆதரவாளர்களை மட்டுமே சந்தித்து உள்ளார்.

    இந்த நிலையில் வருகிற ஜனவரி 1-ந்தேதியான புத்தாண்டு தினத்தன்று சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்கிறார். தி.நகரில் உள்ள இல்லத்தில் அன்று காலை 10 மணி அளவில் ஆதரவு நிர்வாகிகளை சந்திக்கும் சசிகலா, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார்.

    சசிகலாவை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க வருபவர்கள் எதையும் எடுத்து வராமல் வாழ்த்துக்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆதரவாளர்கள் சந்திப்பின்போது சசிகலா பத்திரிகையாளர்களையும் சந்திக்க முடிவு செய்துள்ளார். அப்போது அ.தி.மு.க.வில் தற்போது நிலவும் பிரச்சினைகள் மற்றும் தனது எதிர்கால அரசியல் பயணம் ஆகியவை பற்றி முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சசிகலா பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்யின் உருவம்.
    • ஓ.பி.எஸ்.சின் ஊதுகுழலாகவே இருங்கள். தப்பில்லை. ஆனால் உங்களை வளர்த்த இயக்கத்துக்கு துரோகம் செய்யாதீர்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. அணிகளை ஒன்று சேர்ப்பதற்கான வேலைகளை தொடங்கி விட்டேன். அது நடந்து கொண்டிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஒன்றிணையும் என்று சசிகலா தெரிவித்து இருந்தார்.

    இதற்கு அ.தி.மு.க.வின் எடப்பாடி தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

    சசிகலாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் அ.தி.மு.க. ஒன்றுபட்டு செயல்படுகிறது. கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.

    இணைப்பு பேச்சு நடப்பதாக சசிகலா கூறியிருப்பது வடிகட்டிய பொய். அவர் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்யின் உருவம்.

    அ.தி.மு.க. இனி ஆட்சிக்கு வர முடியாது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் சொல்வதில் இருந்தே அவர்தான் தி.மு.க.வின் பி.அணியாக செயல்படுகிறார். தி.மு.க.வுக்காக வேலை செய்கிறார் என்பது தெளிவாகி விட்டது.

    நீங்கள் ஓ.பி.எஸ்.சின் ஊதுகுழலாகவே இருங்கள். தப்பில்லை. ஆனால் உங்களை வளர்த்த இயக்கத்துக்கு துரோகம் செய்யாதீர்கள்.

    நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பொங்கல் பரிசாக ரூ.2500, கரும்பு உள்ளிட்ட பொருட்களை அனைத்து கார்டுகளுக்கும் வழங்கினோம். ஆனால் இப்போது கொடுப்பது ரூ.1000. கரும்பு கிடையாது. அதுவும் கார்டிலும் பாகுபாடு பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×