search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98971"

    • ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதிக்கு வரும் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • சசிகலாவின் சுற்றுப்பயணத்தில் அவரை அ.தி.மு.க. நிர்வாகிகள் யாராவது சந்தித்து பேசுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ஈரோடு:

    சேலம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணமாக சசிகலா வருகை தந்து நேற்று சுற்றுப்பயணத்தை தொடங்கினார். பல்வேறு இடங்களில் சசிகலாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அதைத் தொடர்ந்து இரவில் சசிகலா சேலத்தில் ஓய்வு எடுத்தார். இன்று 2-வது நாளாக மதியம் 3 மணி அளவில் அரியானூரில் இருந்து சசிகலா தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். மகுடஞ்சாவடி, சங்ககிரி, எடப்பாடி பிரிவு, நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் வழியாக மாலை 6 மணி அளவில் சசிகலா ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதிக்கு வரும் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் சசிகலா பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார்.

    அதைத்தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் இருந்து பொதுமக்கள் மத்தியில் சசிகலா பேசுகிறார். பின்னர் திண்டலுக்கு செல்லும் சசிகலா அங்கு புகழ் பெற்ற திண்டல் வேலாயுதசாமி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

    சாமி தரிசனம் முடித்துக்கொண்டு அங்கு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பி கோவை செல்கிறார். சசிகலாவின் சுற்றுப்பயணத்தில் அவரை அ.தி.மு.க. நிர்வாகிகள் யாராவது சந்தித்து பேசுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ஆனால் ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை அ.தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது. பெரும்பாலானவர்கள் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆதரவாளராக உள்ளனர். அதனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்து பேச வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

    எனினும் அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும் சசிகலாவை சந்தித்து பேசாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சசிகலாவின் ஒவ்வொரு நிகழ்வையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளார்கள்.

    • அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தினார்.
    • ஆனால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்க பார்க்கிறது என்றார் சசிகலா.

    ஆத்தூர்:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று சேலம் மாவட்டத்தின் ஆத்தூருக்குச் சென்றார். பழைய பஸ் நிலையம் முன்பு கூடியிருந்த கூட்டத்தினர் இடையே வேனில் இருந்தபடி சசிகலா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியாவில் எந்த முதலமைச்சரும் கொண்டு வராத திட்டங்களான தொட்டில் குழந்தை திட்டம், அம்மா உணவகம், ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தினார்.

    இரு பெரும் தலைவர்களான எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை தற்போதைய தி.மு.க. அரசு முடக்கப் பார்க்கிறது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு கட்சி இரண்டாக பிளவுபட்டபோது கூட கட்சியை ஒன்றுசேர்த்தது நான்தான்.

    இன்றைய சூழ்நிலையில் கட்சியை ஒன்றிணைப்பது பெரிய விஷயம் அல்ல. ஒற்றுமையுடன் பணியாற்றி மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவோம் என தெரிவித்தார்.

    • சேலத்திற்கு வருகை தரும் சசிகலாவிற்கு நாளை மறுநாள் மதியம் 3 மணிக்கு தலைவாசலில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • அ.தி.மு.க.வில் ஏற்கனவே கட்சி தலைமைக்கான போட்டியில் குழப்பம் நிலவி வரும் நிலையில் சசிகலாவின் சுற்றுப்பயணம் தொண்டர்களிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    அ.தி.மு.க.வில் தலைமை பொறுப்பை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டது.

    இதுதொடர்பாக கோர்ட்டில் தற்போது மாறி மாறி வழக்குகளும் தீர்ப்புகளும் வந்த நிலையில் அ.தி.மு.க தலைமையை கைப்பற்ற சசிகலா அதிரடியாக வியூகம் அமைத்து தமிழக முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சசிகலா சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாளை மறுநாள் (12-ந் தேதி) காலை தஞ்சையிலிருந்து திருவையாறு, திருமானூர், கீழப்பலூர், அரியலூர், பெரம்பலூர் வழியாக சேலம் மாவட்டம் வீரகனூர் வருகிறார். அங்கிருந்து தலைவாசல் வரும் அவர் மதியம் 2.30 மணியளவில் தனது பயணத்தை தொடங்குகிறார்.

    தலைவாசலில் அவருக்கு தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளிக்கின்றனர்.

    தொடர்ந்து ஆத்தூர் பஸ் நிலையம், புத்திரகவுண்டன் பாளையம், வாழப்பாடி பஸ் நிலையம் அருகில் தொண்டர்களை சந்திக்கிறார். பின்னர் சேலம் 4 ரோடு பகுதிக்கு வரும் அவர் அண்ணா பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார்.

    தாதகாபட்டி, சீலநாயக்கன்பட்டி, பைபாஸ் ரோடு சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் கட்சி தொண்டர்களையும் பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்.

    13-ந் தேதி பிற்பகல் 3 மணியளவில் அரியானூரில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அரியானூரிலிருந்து மகுடஞ்சாவடி, சங்ககரி-எடப்பாடி பிரிவு, நாமக்கல் மாவட்டம் வெப்படை, பள்ளிப்பாளையம் பகுதிகளில் கட்சி தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்.

    பின்பு அவர் ஈரோடு மாவட்டத்துக்கு செல்கிறார்.

    முன்னதாக சென்னையில் இருந்து கார் மூலம் ஆத்தூர் வழியாக சேலம் வரும் சசிகலாவுக்கு ஆங்காங்கே பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும், சசிகலா ஆதரவாளர்களும் தயாராகி வருகின்றனர்.

    சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க.வின் கோட்டை என்று கருதப்படுவதால் ஜெயலலிதா விசுவாசிகள் தன்னை சந்திப்பார்கள் என்று சசிகலா நம்புகிறார்.

    இதனிடையே எடப்பாடி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க முக்கிய பிரமுகர் சுரேஷ் தலைமையில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வரவேற்பில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிகிறது.

    சேலத்திற்கு வருகை தரும் சசிகலாவிற்கு நாளை மறுநாள் மதியம் 3 மணிக்கு தலைவாசலில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அ.தி.மு.க.வில் ஏற்கனவே கட்சி தலைமைக்கான போட்டியில் குழப்பம் நிலவி வரும் நிலையில் சசிகலாவின் சுற்றுப்பயணம் தொண்டர்களிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அதே வேளையில் அ.தி.மு.க.வில் எந்த பிரச்சினையும் இல்லை, எடப்பாடி பழனிசாமியின் பின்னால் தொண்டர்கள் நிற்கிறார்கள் என்று அவரது ஆதரவாளர்களும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கூறியுள்ளனர்.

    மேலும் சேலம் மாவட்டத்துக்கு வரும் சசிகலாவை அ.தி.மு.க.வினர் சந்திக்காமல் இருக்கவும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நிர்வாகிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    சசிகலாவின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் உற்று நோக்கும் வகையில் எடப்பாடி ஆதரவாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

    சசிகலாவை யார் யார் சந்திக்கிறார்கள் அவருக்கு எந்த பகுதியில் அதிக அளவில் வரவேற்பு அளிக்கப்படுகிறது என்பது குறித்து ரகசியமாக கண்காணிக்க ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொடர்ந்து 3 நாட்கள் சேலத்தில் தங்கும் எடப்பாடி பழனிசாமி சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
    • இனிவரும் நாட்களில் கட்சியினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

    சேலம்:

    தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து இன்று மாலை கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் வழியாக சேலம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    தொடர்ந்து 3 நாட்கள் சேலத்தில் தங்கும் எடப்பாடி பழனிசாமி சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் இனிவரும் நாட்களில் கட்சியினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. அப்போது அண்டை மாவட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அவரை சந்தித்து பேச உள்ளனர்.

    இதற்கிடையே நாளை மறுநாள் முதல் 2 நாட்கள் வி.கே.சசிகலா சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சேலத்தில் 3 நாட்கள் தங்கி எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    • தற்செயலாக இந்த சந்திப்பு நடந்ததாக வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
    • தன்னை காப்பாற்றிக்கொள்ள யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு ஈபிஎஸ் அதிமுகவை அழிக்க பார்க்கிறார்.

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவாரப்பட்டு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.எல்.ஏ வைத்திலிங்கம் சந்தித்துக் கொண்டனர்.

    அ.தி.மு.க. விவகாரம் பரபரப்பாக பேசப்படும் சூழ்நிலையில் இன்று சசிகலாவும், ஓ.பி.எஸ். ஆதரவாளரான வைத்திலிங்கம் சந்தித்து பேசிக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்செயலாக இந்த சந்திப்பு நடந்ததாக வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம் பின்னர் பேசியதாவது:-

    சசிகலாவை எதேச்சையாக சந்தித்தேன். அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை. அதிமுகவில் ஒற்றுமை தேவை. அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும்

    தன்னை காப்பாற்றிக்கொள்ள யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு ஈபிஎஸ் அதிமுகவை அழிக்க பார்க்கிறார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
    • அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது.

    சேலம்:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்ற கருத்து எழுந்ததை தொடர்ந்து தலைமை பொறுப்பை கைப்பற்ற சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே கடும் போட்டி எழுந்தது.

    இதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக இருந்த நிலையில் அதன் பின்னர் உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்தது.

    தொடர்ந்து அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா கடந்த ஜூன் மாதம் முதல் சட்டமன்ற வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர் அடுத்த வாரம் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    தி.மு.க ஆட்சியில் மக்கள் படும் துன்பங்களை வெளிப்படுத்தவும், பெண்ணினத்தின் உரிமைகளை நிலை நாட்டிடவும் இந்த பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அதன்படி நாளை (புதன்கிழமை) காலை தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் சென்றடைகிறார். அதன்பின் மறுநாள் வியாழக்கிழமை அன்று திருத்துறைப்பூண்டி, பாமணி என்கிற இடத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் காலை நடைபெற இருக்கின்ற மஹா கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்கிறார்.

    அதன் பின்னர் 11-ம் தேதி தஞ்சையிலிருந்து திருவையாறு, திருமானூர், கீழப்பலூர், அரியலூர், பெரம்பலூர், வீரகனூர் வழியாக தலைவாசல் சென்றடைந்து பிற்பகல் 2.30 மணியளவில் அங்கிருந்து தனது பயணத்தை மேற்கொள்கிறார்.

    சேலம் ஆத்தூர் பஸ் நிலையம், புத்திரகவுண்டன் பாளையம், வாழப்பாடி பஸ் நிலையம் அருகில், சேலம் 4 ரோடு அண்ணா பூங்கா, தாதகாபட்டி, சீலநாயக்கன்பட்டி, பைபாஸ் ரோடு சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் கட்சி தொண்டர்களையும் பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார். அதன் பிறகு 12-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் அரியானூரிலிருந்து தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

    சேலம் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சசிகலா அரியானூரிலிருந்து மகுடஞ்சாவடி, சங்ககரி-எடப்பாடி பிரிவு, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, ஈரோடு திண்டல் முருகன் கோவில் ஆகிய பகுதிகளில் கட்சி தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்.

    இந்த பயணத்தின்போது அ.தி.மு.க. மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகளையும், இ.பி.எஸ். தரப்பு ஆதரவாளர்களையும் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

    சேலம் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்ற நிலையில் எடப்பாடி பழனிசாமியின் மீது அருப்தியில் உள்ள சிலர் ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசி உள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க. எம்.ல்.ஏ.க்கள் அனைவருமே எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கிறார்கள். ஒரு சில நிர்வாகிகள் ஓ.பி.எஸ். தரப்பிலும், சிலர் அ.ம.மு.க.விலும் உள்ளனர். ஓரிரு நிர்வாகிகள் சசிகலாவை சென்னையில் நேரடியாக சந்தித்து பேசி உள்ளார்கள். அவர்கள் மூலம் சேலத்தை தன்வசப்படுத்த சசிகலா திட்டுமிட்டுள்ளார். இதற்காக அ.தி.மு.க. செல்வாக்கு மிகுந்த பகுதிகளையே தனது சுற்றுப் பயணத்துக்கு தேர்வு செய்துள்ளார்.

    இந்த சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை சசிகலா ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகிறார்கள். மேலும் அ.தி.மு.க.வில் அதிருப்தியில் உள்ள சிலரை சசிகலாவை சந்தித்து பேச வைக்கவும் மறைமுக ஏற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபோல் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதி முன்னாள் அமைச்சர் தங்கமணியின் செல்வாக்கு மிகுந்த இடமாக கருதப்படுகிறது. ஏற்கனவே குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் அவர் தனது தொகுதி மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினரை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இங்கும் அதிருப்தியில் இருப்பவர்களை தன்பக்கம் ஈர்க்கும் வகையில் சசிகலாவின் சுற்றுப்பயணம் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    • 2016-ல் ஜெயலலிதா மறைந்ததும் சின்னம்மா என்று அழைத்த சசிகலாவுக்கு எதிராகவே ஓ.பி.எஸ். தர்மயுத்தத்தை தொடங்கினார்.
    • அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ். சசிகலாவை எதிர்த்து கட்சியில் இருந்து அவரை நீக்க வேண்டும். ஜெயலலிதா மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதிர வைத்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமையை ஏற்றுக்கொள்ளாத ஓ.பி.எஸ். எப்படியாவது கட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வியூகம் அமைத்து வருகிறார். சட்டரீதியாக தனி ஒருவராக நின்று மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சறுக்கலைத் தான் கொடுத்துள்ளது.

    அவரது இன்னொரு முயற்சி சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரையும் அ.தி.மு.க.வுக்குள் இணைக்க வேண்டும் என்பது தான்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதல் கட்சிக்காக உழைத்து வரும் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வெளிப்படையாக கூறினார்.

    சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை சந்திக்க போவதாகவும் அறிவித்தார். ஓ.பி.எஸ்.சின் அழைப்பை தினகரனும் வரவேற்று உள்ளார்.

    ஆனால் இப்போது ஓ.பி.எஸ். தொடங்கி தோற்றுப் போன தர்மயுத்தமே அவரது இந்த முயற்சிக்கும் முட்டுக்கட்டையாக மாறி இருக்கிறது.

    அதாவது 2016-ல் ஜெயலலிதா மறைந்ததும் சின்னம்மா என்று அழைத்த சசிகலாவுக்கு எதிராகவே ஓ.பி.எஸ். தர்மயுத்தத்தை தொடங்கினார். அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ். சசிகலாவை எதிர்த்து கட்சியில் இருந்து அவரை நீக்க வேண்டும். ஜெயலலிதா மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதிர வைத்தார்.

    அடுத்த சில மாதங்களில் காட்சிகள் மாறியது. சசிகலா சிறை சென்றார். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கை கோர்த்தனர். துணை முதல்-அமைச்சராக இ.பி.எஸ்.-சுக்கு துணையாக இருந்தார்.

    ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை கமிஷன் அறிக்கையும் அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா உள்ளிட்டோரின் மீது பங்கு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தமிழக அரசு தயாராகி வருகிறது.

    ஓ.பன்னீர்செல்வம் அன்று வைத்த கோரிக்கை வலுப்பெற்று, பல வடிவங்களில் உருவெடுத்து இப்போது சசிகலாவையும் நெருக்கடிக்குள் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

    இதனால் ஓ.பி.எஸ். சசிகலா இணைவதற்கான வாய்ப்பும் மங்கி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

    • ஆறுமுகசாமி ஆணைய விசாரணை முடிவடைந்தவுடன் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையும் முடிவுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
    • ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ராம் மோகன்ராவ், டாக்டர் சிவக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டிருப்பதன் மூலம் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.

    கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இதுதொடர்பான விரிவான அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி, தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளார்.

    அந்த அறிக்கையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது தோழி சசிகலா, அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜய பாஸ்கர், தலைமை செயலாளராக பணிபுரிந்த ராம் மோகன்ராவ், டாக்டர் சிவக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் பரிந்துரையை அடுத்து அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி அதில் எடுக்கப்போகும் முடிவுகள் என்ன என்பதை சட்டசபையில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆறுமுகசாமி ஆணைய விசாரணை முடிவடைந்தவுடன் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையும் முடிவுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ராம் மோகன்ராவ், டாக்டர் சிவக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டிருப்பதன் மூலம் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக 'சிறப்பு புலனாய்வு குழு' புதிதாக அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

    இந்த குழு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தலைமையில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு கீழ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரும் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த குழுவினரும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவார்கள். இதன்மூலம் சசிகலா, விஜயபாஸ்கர், ராம் மோகன்ராவ், டாக்டர் சிவக்குமார் ஆகியோரிடம் புதிய குழு விசாரணை நடத்தி அதுதொடர்பாக அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும். இதன் பிறகே ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மம் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பல்வேறு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா வருகிற 2-ந்தேதி கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு செல்கிறார்.
    • சசிகலா பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்.

    சென்னை:

    சசிகலா கடந்த ஜூன் மாதம் முதல் சட்டமன்ற வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    பல்வேறு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர் வருகிற 2-ந்தேதி கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு செல்கிறார்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம் என்ற பெயரில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கை வருமாறு:-

    தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், தி.மு.க. தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும் சசிகலா பயணத்தை தொடர்ந்து மேற்கொள்கிறார்.

    வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மதியம் 2 மணிக்கு தியாகராஜ நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு பாலம், மாதவரம் ரவுண்டானா, செங்குன்றம், பாடியநல்லூர் வழியாக கன்னிகைப்பேர் சென்றடைந்து, அங்கிருந்து தனது புரட்சிப் பயணத்தை தொடங்கும் சசிகலா பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்.

    இந்த பயணத்தில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள், தாய்மார்கள், இளம் தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி, மத, பேதமின்றி திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சின்னச்சின்ன பிரச்சினைகளால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கின்ற சூழ்நிலையில்தான் தி.மு.க. ஆளுகின்ற கட்சியாக வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
    • தொண்டர்களின் எண்ணம் நிறைவேற வேண்டும் என்பதுதான் எங்களின் தலையாய கொள்கை.

    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. இயக்கம் எம்.ஜி.ஆரால் தொண்டர்களுக்கான இயக்கமாக தொடங்கப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும் வரை யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக மக்களுடைய பேராதரவை பெற்று 3 முறை மக்களின் மனம் கவர்ந்த முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தார்.

    அவரது மறைவுக்கு பின்னர் புரட்சித்தலைவி அம்மா பொதுச்செயலாளராக பொறுப்பேற்று 30 ஆண்டு காலம் அ.தி.மு.க.வை வழிநடத்தினார்.

    இந்த இயக்கத்தை அழித்து விட வேண்டும் என்ற சவால்களை முறியடித்தார். 17 லட்சம் தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க.வை 1½ கோடி தொண்டர்களை கொண்ட இயக்கமாக உருவாக்கினார். அவர் 16 ஆண்டுகாலம் தமிழகத்தின் முதல்-அமைச்சராக நல்லாட்சி தந்தார்.

    இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முதல்-அமைச்சராக இருந்தார். எம்.ஜி.ஆரின் நோக்கத்தை 100 சதவீதம் நிறைவேற்றும் வகையில் மக்கள் நல திட்டங்களை தொலைநோக்கு திட்டங்களாக அர்ப்பணித்தார்.

    இன்றைய சூழ்நிலையில் அ.தி.மு.க. ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்தபோது அதை வெல்வதற்கு இன்று தமிழகத்தில் இருக்கின்ற எந்த கட்சியும் இல்லை என்ற நிலையை புரட்சித் தலைவியும், எம்.ஜி.ஆரும் உருவாக்கி தந்தார்கள்.

    சின்னச்சின்ன பிரச்சினைகளால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கின்ற சூழ்நிலையில்தான் தி.மு.க. ஆளுகின்ற கட்சியாக வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இன்றைக்கும் அந்த சூழ்நிலை நிலவி இருக்கிறது. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் தம்பிகளாக, அம்மாவின் பிள்ளைகளாக அவர்கள் வகுத்து தந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.

    கேள்வி:- சசிகலா, தினகரன் ஆகியோர் வந்தால் சேர்த்துக்கொள்வீர்களா?

    பதில்:- எங்களை பொறுத்தவரை தலைவர் காலத்தில் தலைவரோடு உடன் இருந்து இந்த இயக்கத்துக்கு பாடுபட்டவர்கள். இந்த இயக்கத்தை வளர்க்க ஒத்துழைப்பு கொடுத்தவர்கள், அம்மாவின் காலத்தில் இந்த இயக்கத்துக்கு பலமாக, தூணாக இருந்து உழைத்தவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இணைத்துக்கொண்டு கழகம் வெற்றி அடைய வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.

    கேள்வி:- இதில் சசிகலாவும், தினகரனும் இருக்கிறார்களா?

    பதில்:- அவர்கள் எங்களோடு வரவேண்டும் என்றும், நாங்கள் அவர்களோடு போக வேண்டும் என்றும் எந்த நிலையும் இல்லை. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

    கேள்வி:- சசிகலா பெயரை சொல்ல ஏன் தயங்குகிறீர்கள்?

    பதில்:- யாராக இருந்தாலும் என்று சொல்லி விட்டேன். இதில் சின்னம்மாவும், டி.டி.வி. தினகரனும் இருக்கிறார்கள். அவர்கள் வந்து சேருகிறார்களா? நாங்கள் போய் சேருகிறோமா என்ற பிரச்சினையே இல்லை. எல்லோரும் எம்.ஜி.ஆர். அம்மாவின் குடையின் கீழ் இருந்து வாழ்பவர்கள். 30 ஆண்டுகாலம் ஆளுகின்ற பொறுப்பை வகித்த கட்சி. இது வரலாறு. இந்த வரலாறு மீண்டும் வர வேண்டும் என்பதுதான் ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணமாகும். தொண்டர்களின் எண்ணம் நிறைவேற வேண்டும் என்பதுதான் எங்களின் தலையாய கொள்கை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 9 மணி அளவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசரடி இயற்கை விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட்டார். அதன் பிறகு ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்தார்.

    • விரைவில் உங்களையெல்லாம் நேரில் வந்து சந்திக்க, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வர இருக்கிறேன்.
    • நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களையெல்லாம் நான் காண இருக்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எனது பிறந்த நாளன்று, சென்னையில் உள்ள இல்லத்தில் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து கோரிக்கை வருவதை அறிந்து கொண்டேன். உங்களுடைய அன்புக்கு நான் என்றைக்குமே அடிமை. உங்களுடைய அன்பும், ஆதரவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.

    அதே சமயத்தில், நான் விரைவில் உங்களையெல்லாம் நேரில் வந்து சந்திக்க, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வர இருக்கிறேன். நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களையெல்லாம் நான் காண இருக்கிறேன்.

    உங்களோடு நேரில் உரையாட இருக்கிறேன். ஆகையால், தற்சமயம் எனது பிறந்த நாளுக்காக, நீங்கள் சிரமப்பட்டு, பயணித்து எனது இல்லம் வருவதை தவிர்த்துவிட்டு, தாங்கள் இருக்கும் பகுதியிலேயே உங்கள் கண்முன்னே இருக்கும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு, உங்களால் இயன்ற அளவில் நீங்கள் செய்கின்ற உதவிகளையே, எனக்கு நீங்கள் அளிக்கின்ற, சிறந்த பிறந்த நாள் பரிசாக, மனதார ஏற்றுக்கொள்கிறேன். அதுவே, மறைந்த நம் புரட்சித்தலைவி அம்மாவுக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசாகவும் எண்ணுகிறேன்.

    என் உயிரினும் மேலான கழகத் தொண்டர்களே, பொறுமையோடு இருங்கள். ஒளிமயமான எதிர்காலம் நம் முன்னே நமக்காகவே காத்துகொண்டு இருக்கிறது. அதாவது " நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி" என்று புரட்சித்தலைவர் பாடியது போன்று, இந்த மண் நம்மை போன்ற நல்லவர்களை, உண்மையானவர்களை, உறுதியானவர்களை, மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை எதிர்பார்த்துதான் இன்றைக்கும் காத்து கொண்டு இருக்கிறது. ஆகவே, மண்ணை நேசிப்போம், மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அ.தி.மு.க.வுக்கு சுயேட்சை சின்னமாக வழங்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயத்தேவர்.
    • மாயத்தேவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரட்டை இலை சின்னம் தான், அ.தி.மு.க.வின் நிரந்தர மற்றும் வெற்றி சின்னமாக அமைந்து விட்டது.

    அவனியாபுரம்:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள டி.உச்சம்பட்டியில் பிறந்தவர் மாயத்தேவர் (வயது88). அ.தி.மு.க.வின் முதல் எம்.பி.யான இவர் உடல்நலம் குறைவு காரணமாக திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.

    அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சசிகலா சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு கட்சி தொடங்கிய போது நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு சுயேட்சை சின்னமாக வழங்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயத்தேவர். உடல்நல குறைவு காரணமாக காலமான அவருக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளேன்.

    மாயத்தேவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரட்டை இலை சின்னம் தான், அ.தி.மு.க.வின் நிரந்தர மற்றும் வெற்றி சின்னமாக அமைந்து விட்டது. பிளவுகளை கடந்து அ.தி.மு.க. நிச்சயம் ஒன்றிணையும். அம்மா ஆட்சி விரைவில் அமையும்.

    இவ்வாறு சசிகலா கூறினார்.

    ×