search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98971"

    • எடப்பாடி பழனிசாமியிடம் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் கிடையாது.
    • 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்தபோது அமைச்சர்கள் அனைவரும் சசிகலாவிடம் தான் விசுவாசம் காட்டினார்கள்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. கட்சியில் நடக்கும் சண்டையில் நான் இல்லை. நான் தனிக்கட்சி தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. அ.ம.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது. நாங்கள் நடத்தும் போராட்டத்தில் வெற்றிபெறுவோம். அ.தி.மு.க.வை திரும்பப்பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    அ.தி.மு.க.வையும், அ.ம.மு.க.வையும் இணைப்பதற்கு டெல்லியில் சில நலம் விரும்பிகள் முயற்சி மேற்கொண்டது உண்மை தான். தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்துக்கு நான் சம்மதித்தேன்.

    எடப்பாடி பழனிசாமியிடம் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் கிடையாது. ஆனால் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் முதல்-அமைச்சர் வேட்பாளராக அவரை களம் இறக்கக்கூடாது என்று தெரிவித்தேன். அவரை முன்னிலைபடுத்தினால் அ.தி.மு.க. வெற்றி பெறாது என்றேன்.

    ஆனால் எங்களது முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. அதனால் டெல்லி மேலிடமும், எடப்பாடி பழனிசாமியை கை கழுவி விட்டனர்.

    கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிசாமி சீனியராக இருந்ததால் அவரை முதல்-மந்திரி பதவிக்கு சசிகலா தேர்வு செய்தார். ஆனால் அவர் கட்சி தொண்டர்களுக்கும், சசிகலாவுக்கும் மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார்.

    எடப்பாடி பழனிசாமியை எந்தவிதத்திலும் நம்ப முடியாது. சசிகலா பெங்களூரு சிறையில் இருந்தபோது அவர் தமிழகத்துக்கு வந்து செல்ல அனுமதி கொடுக்க மறுத்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்று கூறினார். அந்த அளவுக்கு அவர் கொடூரராக நடந்து கொண்டார்.

    அரசியலுக்காக அவர் எதையும் செய்வார். ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டு எடப்பாடி பழனிசாமியுடன் கை கோர்த்தது மிகப்பெரிய தவறாகும். அதை அவர் இப்போதுதான் உணருகிறார்.

    எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் நாங்கள் இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் எடப்பாடி பழனிசாமியை நம்ப இயலாது. எனவே எந்த காலத்திலும் அவருடன் சேரும் எண்ணம் இல்லை.

    நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா டான்சி வழக்கில் சிறை சென்றபோதே மிக எளிதாக முதல்-மந்திரி ஆகி இருக்க முடியும். ஆனால் எனது இயல்பு அப்படிப்பட்டது அல்ல. ஆனால் நாங்கள் ஓ.பன்னீர்செல்வத்தை பரிந்துரை செய்து முதல்-மந்திரி ஆக்கினோம்.

    நான் போராட்ட குணம் கொண்டவன். போராடி மக்கள் ஆதரவுடன் நிச்சயமாக ஆட்சியை பிடிக்க முடியும்.

    2016-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்தபோது அமைச்சர்கள் அனைவரும் சசிகலாவிடம் தான் விசுவாசம் காட்டினார்கள். அதனால்தான் ஓ.பன்னீர்செல்வத்தை பதவி விலக சொன்னார்கள். ஆனால் அவர் தர்மயுத்தம் செய்தார். பிறகு மோடி பேச்சை கேட்டு எடப்பாடி பழனிசாமியிடம் போய் சேர்ந்தார்.

    தற்போது ஓ.பன்னீர்செல்வம் என்னுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் உண்மை இல்லை. அவர் என்னிடம் எப்போதும் தொடர்பு கொண்டதே கிடையாது. அவர் எனது நண்பர். 10 ஆண்டுகள் நாங்கள் இணைந்து அரசியல் பணிகள் செய்துள்ளோம்.

    பிரச்சினை ஏற்பட்ட சமயத்தில் ஒரு வாரம் மட்டும் அவர் அமைதியாக இருந்திருந்தால் இப்போது நடக்கும் அரசியல் நாடகம் எல்லாம் நடந்திருக்காது.

    சசிகலாவுக்காக நாங்கள் தலைவர் பதவியை தயாராக வைத்துள்ளோம். கோர்ட்டில் அவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் உரிமையை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்தால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை ஏற்பார்.

    அதன்பிறகு மக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். நாங்கள்தான் அம்மாவின் உண்மையான விசுவாசிகள் என்பதை நிரூபித்து காட்டுவோம். அதன்பிறகு ஒவ்வொருவராக நிச்சயம் எங்கள் பக்கம் வருவார்கள்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் கூட்டணி மாற்றம் இருக்கும் என்று நினைக்கிறேன். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலக வாய்ப்பு உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர்களின் சமீபத்திய பேச்சுகள் இதை பிரதிபலிப்பதாக உள்ளன.

    அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருக்கிறார். மேற்கு வங்காளத்தில் நடந்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கலாம். எனவே தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

    அ.தி.மு.க. தொண்டர்கள் என்னை விரும்புகிறார்கள். மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை நோக்கித்தான் நான் உழைத்து கொண்டிருக்கிறேன்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பா.ஜனதாவுக்கு மிக மிக முக்கியமானது. பா.ஜனதா உரிய மரியாதை கொடுத்தால் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்வேன். இல்லையென்றால் தனியாக போட்டியிடுவோம்.

    இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த ஓ.பன்னீர்செல்வமும் சசிகலாவோடு இணைந்து செயல்பட தயாராகி வருகிறார்.
    • சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை இணைத்து ஒரு வலுவான அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார்கள்.

    பா.ஜனதா கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு 2024 பாராளுமன்ற தேர்லில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பா.ஜனதா மேலிட தலைவர்கள் கருதுகிறார்கள்.

    டெல்லி தலைமையை பொறுத்தவரை அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலே அவர்களுக்கு இலக்கு. அதற்கு ஏற்ற வகையில் அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளவே விரும்புகிறார்கள்.

    வலுவாக இருக்கும் தி.மு.க.வை தேர்தல் களத்தில் சந்திக்க வேண்டுமென்றால் தங்கள் கைகளையும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுகிறார்கள்.

    அ.தி.மு.க. வில் எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் ஆதரவு அதிகமாக இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் பிரிந்து இருப்பது சமுதாய அடிப்படையில் வாக்குகளை சிதறடிக்கும் என்று கருதுகிறார்கள்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் டி.டி.வி.தினகரன் அணிக்கு 13 தொகுதிகள் கொடுக்க டெல்லி மேலிடம் வற்புறுத்தியது. அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏற்றுக்கொள்ளவில்லை.

    அதன் விளைவு அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி 58 தொகுதிகளை இழக்க நேர்ந்தது. எனவே வருகிற தேர்தலில் அப்படி ஒரு சூழ்நிலை வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

    இதுவரை அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க பா.ஜனதா மேலிடம் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. சமீபத்தில் மோடி வருகையின்போது எடப்பாடி பழனிசாமி வரவேற்க சென்றார். ஓ.பன்னீர்செல்வம் வழியனுப்ப சென்றார்.

    இந்த பிரிவு நிரந்தரமானது என்பது உறுதியாகி விட்டது. கட்சி தொண்டர்களை பொறுத்தவரை ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற கருத்து இருந்தாலும் கட்சி ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள்.

    கட்சியினரின் விருப்பத்தை புரிந்துகொண்டு சசிகலாவும் தன் பங்குக்கு அணிதிரட்ட தொடங்கி இருக்கிறார். அவர் இரு தரப்பினரையும் விமர்சிக்காமல் அனைவரும் ஒருங்கிணைந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார்.

    எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த ஓ.பன்னீர்செல்வமும் சசிகலாவோடு இணைந்து செயல்பட தயாராகி வருகிறார்.

    மாவட்ட செயலாளர்களிடம் சசிகலா, டி.டி.வி.தினகரன் அணியினருடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ளும்படியும், இணைந்து செயல்படும்படியும் ஓ.பி.எஸ். கூறி இருக்கிறார்.

    இந்த நிலையில் டெல்லி தலைமையும் சசிகலாவுக்கு மறைமுக ஆதரவை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்து செயல்பட்டால் மேற்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இருக்கும். தென்மண்டலத்தில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோருக்கு ஆதரவு இருக்கும் என்று தமிழக நிலைமையை டெல்லி தலைமைக்கு எடுத்து சொல்லும் முக்கிய பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    எனவே சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை இணைத்து ஒரு வலுவான அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார்கள்.

    சட்டரீதியாக அ.தி.மு.க. யார் வசமாகிறது என்பதை பார்த்து அதற்கு ஏற்ற வகையில் வியூகம் அமைத்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே ரவீந்திரநாத்குமார் எம்.பி.யை அ.தி.மு.க உறுப்பினராக ஏற்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி வழங்கிய கடிதத்தின் மீது பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சில மாவட்டங்களில் சசிகலா, தினகரன் ஆகியோர் சென்றால் வரவேற்பு அளிக்கவும் முடிவு செய்துள்ளார்கள்.
    • சசிகலாவும் தனது ஆதரவாளர்களிடம் அ.தி.மு.க.வினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை திரட்டி பலப்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    கட்சியில் பின்னடைவை சந்தித்தது போல் கோர்ட்டு வழக்குகளிலும் தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறார். இருப்பினும் அ.தி.மு.க.வை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.

    இது கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் வெளிப்படையாகவே தெரிந்தது. மொத்தமுள்ள 1,665 பேரில் 1,400 பேர் வரை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கையெழுத்து போட்டனர். இந்த ஆதாரங்களை எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளார். இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மாவட்ட செயலாளர்களில் ஒருவரான கோவை செல்வராஜ் கூறும்போது, 'விரைவில் பொதுக்குழு கூட்டம் நடத்தவும், பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். அடிமட்டத்தில் கட்சியை வலுப்படுத்தவும் பணிகளை வழங்கி இருக்கிறார்' என்றார்.

    இதற்கிடையில் சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களிடமும் இணைந்து செயல்படும்படி கூறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தேனி மாவட்டத்துக்கு சென்ற தினகரனுக்கு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

    மேலும் சில மாவட்டங்களில் சசிகலா, தினகரன் ஆகியோர் சென்றால் வரவேற்பு அளிக்கவும் முடிவு செய்துள்ளார்கள். சசிகலாவும் தனது ஆதரவாளர்களிடம் அ.தி.மு.க.வினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் சில மூத்த தலைவர்கள் ஓ.பி.எஸ்., சசிகலா எல்லோரும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று கட்சியை வலுப்படுத்த வர வேண்டும் என்று கூறி உள்ளார்கள்.

    • ரூ.40 லட்சம் கடனை கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
    • வருமான வரித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சென்னை:

    வி.கே.சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கு கைவிடப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

    ரூ.1 கோடிக்கு குறைவான மதிப்புடைய வழக்குகளை கைவிடுவது என்ற வருமான வரித்துறை சுற்றறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. வருமானவரித் துறை அளித்த விளக்கத்தை ஏற்று, சசிகலாவுக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.

    வழக்கு விவரம்:

    1996-97 ஆம் ஆண்டு வி.கே.சசிகலா செல்வவரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு சசிகலா தரப்பில் 2001ம் ஆண்டு பதில் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த  குறிப்பிட்ட ஆண்டில், சசிகலாவிடம் ரூ.4 கோடியே 97 லட்சத்து 52 ஆயிரத்து 100 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதால் அவற்றுக்கு ரூ.10,13,271 செல்வ வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து ஏற்ற வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சட்டத்திற்கு உட்பட்டு மறுமதிப்பீடு செய்யவேண்டும் என்றும், ரூ.40 லட்சம் கடனை கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மதிப்பீட்டு அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து 2018ம் ஆண்டு வருமான வரித்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரூ.1 கோடிக்கும் குறைவான மதிப்புடைய வழக்குகளை கைவிடுவது என்று நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டதாகவும், அதன் அடிப்படையில் சசிகலா மீதான செல்வ வரி வழக்கை கைவிடுவதாகவும், வழக்குகளை திரும்ப பெறுவதாகவும் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வருமான வரித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

    • பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா நேற்று சந்தித்து பேசினார்.
    • ஜெயலலிதா இருந்தவரையில் அ.தி.மு.க.வில் தவிர்க்க முடியாத சக்தியாகவே இருந்து வந்த சசிகலா அவரது மரணத்துக்கு பிறகு பல்வேறு சிக்கல்களை சந்தித்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.

    அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இது செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். இதன் மூலம் இருவருக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

    இந்த பரபரப்புக்கு மத்தியில் சசிகலாவும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் என்று கூறிக்கொண்டு தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அ.தி.மு.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையை தான் விரைவில் சரிசெய்து விடுவேன் என்று கூறிக் கொண்டு அவர் அ.தி.மு.க. நிர்வாகிகளையும் சந்தித்து பேசி வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மூத்த தலைவரும், எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இருந்து வருபவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா நேற்று சந்தித்து பேசினார்.

    இது அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் சசிகலா அதிரடி அரசியலுக்கு தயாராகி வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து சசிகலா ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் தற்போது நடைபெறும் பிரச்சினைகள் பிடிக்காமல் ஒதுங்கி இருக்கும் முன்னணி நிர்வாகிகள் பலரையும் போனில் அழைத்து பேசி வருவதாக கூறப்படுகிறது. அப்போது சின்னம்மா உங்களை சந்திக்க விரும்புகிறார் என்று கூறுகிறார்கள். இதற்கு ஒருசிலர் சம்மதம் தெரிவித்து வருகிறார்கள்.

    அதே நேரத்தில் இப்போதைக்கு சந்திக்க விரும்பவில்லை என்று கூறி அ.தி.மு.க.வினர் பலர் தெறித்து ஓடுவதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இருப்பினும் மனம் தளராமல் சசிகலாவும், அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க.வினரை ஒருங்கிணைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதற்காக அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பலருடன் ரகசிய பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஜெயலலிதா இருந்தவரையில் அ.தி.மு.க.வில் தவிர்க்க முடியாத சக்தியாகவே இருந்து வந்த சசிகலா அவரது மரணத்துக்கு பிறகு பல்வேறு சிக்கல்களை சந்தித்தார். தற்போது அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டு இருக்கும் அவர் மீண்டும் அ.தி.மு.க. தலைமை பதவியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

    இதற்காக சுற்றுப்பயணம், ரகசிய பேச்சுக்கள் என காய்களை நகர்த்தி வந்த அவர், அ.தி.மு.க.வில் உள்ள பழைய நிர்வாகிகளையும் முத்த தலைவர்களையும் சந்தித்து பேசி அவர்கள் மூலமாக கட்சிக்குள் தனது செல்வாக்கை நிலைநாட்டி விட வேண்டும் என்று புதிய வியூகத்தை வகுத்துள்ளார். இது கை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • சென்னையில் ஜூன் 23-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவமரியாதை செய்யப்பட்டது.
    • ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது அவருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாகும்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது தென் மாவட்டங்களில் உள்ள அவரது ஆதரவாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வில் இருந்து விலக்கப்பட்டதால் அந்த கட்சியில் தங்கள் இனத்துக்கு முக்கியத்துவம் இல்லாத நிலை ஏற்பட்டு இருப்பதாக தென் மாவட்டங்களில் உள்ள தேவர் இன அமைப்புகள் கருதுவதாக கூறப்படுகிறது.

    ஜெயலலிதா ஆட்சியின் போது அவரது தோழியாக இருந்த சசிகலா அதிகார மையமாக வலம் வந்தார். இதனால் அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க.வில் முக்கியத்துவம் பெற்று இருந்தனர். தற்போது அத்தகைய நிலை இல்லை.

    இதனால் அ.தி.மு.க.வை மீண்டும் முழுமையாக சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அவரது தென்மாவட்ட ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள். இதற்கான நடவடிக்கைகளை சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

    இந்த கருத்தை வலியுறுத்தி இந்த மாத தொடக்கத்தில் தென் மாவட்ட தேவர் அமைப்புகளில் உள்ள மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது அ.தி.மு.க.வில் தங்கள் அமைப்புகளின் ஆதிக்கம் மீண்டும் இருக்க வேண்டும் என்று ஆலோசித்தனர். இதற்காக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதில் அந்த அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 100 தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதை கடிதமாக தயாரித்து சசிகலாவிடமும், ஓ.பன்னீர்செல்வத்திடமும் கொடுத்து உள்ளனர். 2 வாரங்களுக்கு முன்பு இந்த கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டன.

    அந்த கடிதத்தில் தேவர் அமைப்பு தலைவர்கள் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க.வை மீட்டு எடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும். இதற்கு பொதுச்செயலாளர் (சசிகலா), ஒருங்கிணைப்பாளர் (ஓ.பன்னீர்செல்வம்) இருவரும் ஒன்று சேர வேண்டும். இருவரும் கைகோர்த்து கட்சியை கைப்பற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது.

    ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான நீங்களும், உங்கள் விசுவாசியுமான ஓ.பன்னீர் செல்வமும் கைகோர்க்க வேண்டும். அதுதான் கழகத்தில் உள்ள 1½ கோடி தொண்டர்களின் விருப்பமாகும்.

    சென்னையில் ஜூன் 23-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவமரியாதை செய்யப்பட்டது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் அவருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாகும். இது அவருக்கு மட்டுமல்ல தேவர் இனத்துக்கே செய்யப்பட்ட அவமரியாதையாக கருதுகிறோம்.

    இதற்கு காரணமானவர்களை நாம் தோற்கடித்தே தீர வேண்டும். நம்மிடம் உள்ள துரோகிகளை வைத்து நம்மை வீழ்த்த நம் எதிரிகள் முயற்சி செய்கிறார்கள். இதற்கு இடம் கொடுக்கக் கூடாது.

    நீங்கள் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். நீங்கள் இருவரும் ரகசியமாக செயல்படுவதாக சொல்கிறார்கள். வெளிப்படையாக வாருங்கள். அவர்களது குற்றச்சாட்டுகளை உண்மை என்று நிரூபியுங்கள்.

    நீங்கள் இருவரும் கைகோர்த்தால் அது பலன் உள்ளதாக இருக்கும். உங்கள் ஒற்றுமை கட்சிக்கும், இனத்துக்கும் இந்த காலக்கட்டத்தில் அவசியமான ஒன்றாகும். கட்சியின் நலனுக்கு இது கை கொடுக்கும்.

    பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ஆசி பெற்று பயணத்தை தொடங்குங்கள். உங்களுக்கு எதிராக வேறு யாரும் போட்டியாளர்களாக வர முடியாது. இது நிச்சயம்.

    நாகப்பட்டினத்தில் இருந்து திருநெல்வேலி வரையும், கோவையில் இருந்து வேலூர் வரையில் நீங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த கடிதம் தொடர்பாக சசிகலா தரப்பினரோ, ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    • தவறான முடிவுகளால், மாநிலங்களவையில் கட்சியின் அங்கீகாரத்தை இழந்து நிற்கிறோம்.
    • அ.தி.மு.க.வின் ஒரே எம்.பி.யான ரவீந்திரநாத்தை நீக்குவது நியாயமற்ற செயல்.

    சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    அ.தி.மு.க. எம்ஜி.ஆர். என்ற மாமனிதரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதா என்ற பெண் சிங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வந்த பேரியக்கம். ஜெயலலிதா விட்டுச்சென்ற நாள் முதல் இப்போது வரை நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும், ஒருசில சுயநலவாதிகள் மேற்கொண்ட தவறான முடிவுகளே காரணம்.

    இந்த முடிவுகளால் அ.தி.மு.க.வின் சிறப்பு குறைந்து, அதன் பெருமைகளை ஒவ்வொன்றாக இழந்து வருவதாக கட்சி தொண்டர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். ஒரு சிலர் தனது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் எண்ணத்தில் பொய்யான வாக்குறுதிகளையும், நம்பிக்கைகளையும் அனைவரிடத்திலும் விதைத்து, தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    இதுமட்டுமில்லாமல், தன்னை சுற்றி இருக்கின்ற சொந்த கட்சியினரையும் ஏன் இன்னும் சொல்லப்போனால் தங்களோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த மாற்று கட்சியினரையும் கூட நம்ப வைத்து ஏமாற்றியதுதான் மிச்சம்.

    கட்சியின் நலனை காற்றில் பறக்கவிட்டு எடுத்த தவறான முடிவுகளால், மாநிலங்களவையில் நமது (அ.தி.மு.க.) உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்ததோடு, கட்சியின் அங்கீகாரத்தையும் இழந்து நின்றோம்.

    இந்த சூழ்நிலையில் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஒரே ஒரு மக்களவை உறுப்பினரை (ரவீந்திரநாத் எம்.பி.) கட்சியை விட்டே நீக்குவதும், நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க.வின் பெயரை சொல்வதற்கு யாருமே வேண்டாம் என்று கண்மூடித்தனமாக முடிவு எடுப்பதையும் தொண்டர்கள் நியாயமற்ற செயலாகத்தான் பார்ப்பார்களே தவிர, அறிவார்ந்த செயலாக பார்க்கமாட்டார்கள்.

    தனது சொந்த விருப்பத்துக்காக மக்களவையில் கட்சியின் அங்கீகாரத்தையே அழிக்க நினைப்பதை, தன் உடம்பில் உண்மையான அ.தி.மு.க. ரத்தம் ஓடும் கட்சி தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இயக்கம் அழிந்தாலும் பரவாயில்லை, எப்படியாவது பதவிகளை தட்டி பறிக்கவேண்டும் என்று தாண்டி குதிப்பவர்களை எண்ணி தொண்டர்கள் சிறிதும் கவலைப்படாதீர்கள். அவர்கள் எண்ணம் தவறானது, இயக்கத்துக்கு எதிரானது என்பது வெளிப்படுகின்ற காலம் வந்துவிட்டது.

    உண்மையான கட்சி தொண்டர்களின் பேராதரவோடு, நம்முடைய இயக்கம் சீரோடும், சிறப்போடும் செழிக்க இருக்கிறது. இதை யாராலும் தடுக்கவும் முடியாது. அதேபோன்று, இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும் என்று சூளுரைத்த ஜெயலலிதாவின் எண்ணமும் நிச்சயம் ஈடேறும். இதை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் கண்கூடாக பார்க்கத்தான் போகிறீர்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சசிகலாவின் அரசியல் பயணம் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் மோதலுக்கு பின்னர் வேகம் எடுத்துள்ளது.
    • சசிகலாவின் அப்போதைய செயல்பாடுகளை இப்போது இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் மறக்காமலேயே உள்ளனர்.

    ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிரடியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலாவின் அரசியல் வாழ்க்கைக்கு சிறைவாசம் முட்டுக்கட்டை போட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்கு சென்று அவர் திரும்புவதற்குள் கட்சிக்குள் ஏகப்பட்ட மாற்றங்கள் அரங்கேறின.

    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக கைகோர்த்து சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தலைமை பதவியை கைப்பற்றினார்கள். இதன் பின்னர் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா சென்னை திரும்பிய போது வழிநெடுக அவருக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பும், அவரது பேச்சுக்களும் சசிகலாவின் 'அரசியல் ஆசை' ஓயவில்லை என்பதையே காட்டின.

    இதையடுத்து தீவிர அரசியலில் ஈடுபடப்போகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்ட சசிகலா, சட்டமன்ற தேர்தலின்போது சத்தமில்லாமல் ஒதுங்கிக்கொண்டார். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. சசிகலாவை ஒதுங்கி இருக்கச்சொல்லி குறிப்பிட்ட சில மேலிட நபர்களிடம் இருந்து உத்தரவுகள் வந்ததாகவும், இதன் காரணமாகவே சசிகலா ஒதுங்கினார் என்றும் பல்வேறு தகவல்கள் பரவியது.

    சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்த போதிலும் எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டி பிடித்தது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க. பெற்ற இந்த வெற்றி சாதாரணமானது அல்ல. அ.தி.மு.க. உடையாமல் இருந்திருந்தால் நிச்சயம் மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் என்கிற கருத்துக்கள் பரவலாகவே பேசப்பட்டன. இதனை சசிகலாவும் குறிப்பிட்டு பேசினார்.

    தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியில் அமரும் என்றே நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இனியும் என்னால் சும்மா இருக்க முடியாது என்று கூறிய சசிகலா சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தீவிரமாக அரசியல் பயணத்தை தொடங்கி ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

    இப்படி தொடங்கப்பட்ட அவரது அரசியல் பயணம் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் மோதலுக்கு பின்னர் வேகம் எடுத்துள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் தலைமை கழகத்தில் நடந்த மோதலை மையமாக வைத்தே தனது சுற்றுப்பயணத்தின் போது சசிகலா தற்போது பேசி வருகிறார். அ.தி.மு.க.வில் நடைபெற்று வரும் சம்பவங்களால் தொண்டர்கள் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தற்போதும் நான் தான். கட்சியையும், தமிழகத்தையும் நானே வழிநடத்த வேண்டும் என்றே தொண்டர்களும், தமிழக மக்களும் விரும்புகிறார்கள் என்பது போன்றே சசிகலாவின் பேச்சுக்கள் அமைந்துள்ளன.

    இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களை தன்வசப்படுத்த முடியும் என்பதே சசிகலாவின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    இதனை மனதில் வைத்தே சசிகலா தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று அவரது தீவிர ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.

    அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் பற்றி கருத்து தெரிவிக்கும் போதெல்லாம் சசிகலா தவறாமல் ஒரு வார்த்தையை பயன்படுத்துவார். 'இது எங்கள் பிரச்சினை. எல்லாம் சரியாகிவிடும்' என்பார். அ.தி.மு.க.வில் நிலவும் இப்போதைய பிரச்சினையை என்னால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும் என்பது போன்றே அவரது கருத்துக்கள் இருந்து வருகின்றன.

    உங்களை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ள முடியாது என்பதில் தீவிரமாக இருக்கும் முன்னணி தலைவர்கள் பற்றி கருத்துக்கள் கேட்கப்படும் போதெல்லாம், அதெல்லாம் சரியாகிவிடும், சிலர் மட்டுமே அப்படி நினைக்கிறார்கள். தொண்டர்கள் என்பக்கமே உள்ளனர் என்றே சசிகலா பதில் அளித்து வந்துள்ளார்.

    இதன் மூலம் வரும் காலத்தில் அ.தி.மு.க. எனது தலைமையிலேயே இயங்கும் என்பதையே அவர் திரும்பத்திரும்ப சொல்லி வருகிறார். போகப்போக எல்லாம் சரியாகி விடும் என்கிற எண்ணத்தில் சசிகலாவே காய் நகர்த்தி வருவதாகவும், இதற்காக ரகசிய வியூகங்களை அவர் வகுத்து வருவதாகவும் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் சசிகலா இனி வரும் காலங்களில் தீவிரம் காட்டப்போவதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, 'ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் சசிகலா இல்லாவிட்டால் அ.தி.மு.க. அப்போதே சிதறுண்டு போயிருக்கும். அப்போது அ.தி.மு.க.வை அவர் ஒருங்கிணைத்ததை யாரும் மறந்துவிட முடியாது. அவர்தான் அப்போது எம்.எல்.ஏ.க்களை ஒன்று திரட்டி புதிய அரசாங்கத்தை உருவாக்கினார். சசிகலாவின் அப்போதைய செயல்பாடுகளை இப்போது இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் மறக்காமலேயே உள்ளனர்.

    அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பலர் இப்போதும் சசிகலாவிடம் இதனை கூறி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களை நினைவூட்டும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பலரும் சசிகலாவை தலைமை ஏற்க அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்தான் காலம் கனியட்டும் என்று காத்திருக்கிறார் என்றும் சசிகலாவின் ஆதரவாளர்கள் கூறி உள்ளனர்.

    2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்குள் தனது செயல்பாடுகள் மூலமாக அ.தி.மு.க. தலைமை பதவியை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் சசிகலா தீவிரமாக செயலாற்றி வருகிறார். எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையிலும் அதை எல்லாம் உடைத்துக்காட்டி மீண்டும் அ.தி.மு.க. தலைமை பதவியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதே சசிகலாவின் எண்ணமாக உள்ளது. இதனை மனதில் வைத்து சசிகலா இதுபோன்ற வியூகங்களை வகுத்து வருகிறார். இது நிச்சயம் வெற்றியில் முடியும் என்றே சசிகலாவின் ஆதரவாளர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டி விட்டு எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை பதவியை கைப்பற்றி இருக்கும் நிலையில் சசிகலாவின் இந்த வியூகம் எப்படி அவருக்கு கைகொடுக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • கடந்த சில நாட்களாகவே ஓ.பன்னீர்செல்வம் பாரதிய ஜனதாவில் சேரப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது.
    • இதை ஓ.பன்னீர்செல்வமும் மறுக்கவில்லை. பா.ஜனதா கட்சியும் மறுக்கவில்லை. இதனால் தகவல் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்று விட்டால் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற நிலை உறுதியாகிவிடும். அரசியலில் ஓ.பன்னீர் செல்வம் தனி மரமாகி விடுவார். எனவே அவர் தேர்தல் கமிஷன், கோர்ட்டு, போலீஸ் என பல வகைகளிலும் போராடி வருகிறார்.

    சட்ட விதிகளின்படி ஓ.பன்னீர்செல்வத்துக்கு வெற்றி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அப்படி வெற்றி கிடைக்காத சூழ்நிலையில் அவர் அரசியலில் வேறொரு முடிவு எடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளார்.

    இதை பயன்படுத்தி சில அரசியல் கட்சிகள் அவரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. கடந்த சில நாட்களாகவே அவர் பாரதிய ஜனதாவில் சேரப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதை ஓ.பன்னீர்செல்வமும் மறுக்கவில்லை. பா.ஜனதா கட்சியும் மறுக்கவில்லை. இதனால் தகவல் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

    இதற்கிடையே சசிகலா குடும்பத்தை சேர்ந்த சிலர் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் தங்கள் வளையத்துக்குள் கொண்டு வரும் முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. அதில் எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்பது தெரியவில்லை.

    இந்த நிலையில் இன்னொரு தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது. உங்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும். போயஸ் கார்டன் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தாக தெரிகிறது.

    இந்த விருந்தின்போது சசிகலாவும் வருவார். நீங்கள் சந்தித்து பேசுங்கள். கட்சியில் நீங்கள் இணைந்து செயல்பட்டால்தான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அரசியல் செய்ய முடியும். அ.தி.மு.க. அல்லது ஜெயலலிதா பெயரில் புதிய இயக்கம் தொடங்கி எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்க வேண்டும். அப்போதுதான் அ.தி.மு.க. முழுவதையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று பேசியதாக தெரிகிறது.

    ஆனால் இந்த தகவலை ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. இந்த விருந்துக்கு அவர் போவாரா? என்பதும் தெரியவில்லை. இருந்தாலும் சசிகலாவையும் ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்திக்க வைக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் இருவரும் சேர்ந்து அ.தி.மு.க. தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் சொத்துக்கள் குவித்ததாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் செய்து அவர்களை சிக்க வைக்க முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.

    • ஒன்றரை கோடி தொண்டர்களும், பொதுமக்களும் என்னைத்தான் ஆதரிக்கிறார்கள் என்றார் சசிகலா.
    • அ.தி.மு.க. பொதுக்குழு நடந்ததே செல்லாது என தெரிவித்தார்.

    சென்னை:

    சசிகலா செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது, அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது.

    தலைமை பதவியை அடித்துப் பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது.

    பணம் அதிகாரம் வைத்து அடைந்த எந்தப் பதவியும் நிலைக்காது. சட்டப்படி செல்லாது. நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை இழந்து விடக்கூடாது. ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு, நிஜத்தை நிச்சயம் அடைவோம்.

    ஒன்றரை கோடி தொண்டர்களும், பொதுமக்களும் என்னைதான் ஆதரிக்கிறார்கள். பொதுக்குழுவில் நிதிநிலை அறிக்கைகளை அறிவிக்க முடியாது. அப்படி இருக்கையில், இது எப்படி பொதுக்குழுவை ஏற்றுக்கொள்ள முடியும். அ.தி.மு.க. பொதுக்குழு நடந்ததே செல்லாது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 11-ந் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளின்படி செல்லாது. நான்தான் கட்சியின் பொதுச்செயலாளர்.
    • அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன். விரைவில் மாற்றங்கள் வருவதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

    சென்னை:

    ஜெயலலிதாவின் தோழி சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடும் திட்டத்துடன் சமீபத்தில் திருத்தணியில் இருந்து தனது அதிரடி பிரசாரத்தை தொடங்கினார்.

    மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி மீண்டும் அ.தி.மு.க.வை வலுப்படுத்த போவதாக அவர் அறிவித்து உள்ளார். நேற்று அவர் திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு இடங்களில் பேசினார்.

    விழுப்புரத்தில் மக்களை சந்தித்து விட்டு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வுக்கு நான்தான் இப்போதும் பொதுச்செயலாளராக இருக்கிறேன். அ.தி.மு.க. என்பது ஒரு தனிநபரின் வீடோ அல்லது தனியார் அமைப்போ அல்ல. அ.தி.மு.க.வை மக்களுக்கு சேவை செய்யும் வகையில் மாநிலத்தில் ஆட்சி செய்யவே எம்.ஜி.ஆர். தொடங்கினார்.

    மக்கள் காட்டும் வழியில் நான் நடந்து கொண்டிருக்கிறேன். பெரும்பாலான மக்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவேன். மக்களுக்கு பணியாற்றும் விஷயத்தில் ஜெயலலிதா என்னுடன் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

    அவரது கனவுகளை எல்லாம் நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து நான் மக்கள் பணி செய்வேன்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு யார் வரவேண்டும் என்பதை தனிநபர்கள் தீர்மானிக்க முடியாது. அதை கட்சி தொண்டர்கள் தான் தீர்மானிக்க முடியும். தற்போது அ.தி.மு.க.வில் நடந்து வரும் நிகழ்வுகளை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

    துரோகிகளை மக்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள். 11-ந் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளின்படி செல்லாது. நான்தான் கட்சியின் பொதுச்செயலாளர்.

    எனவே அடுத்தக்கட்டமாக அ.தி.மு.க. தொண்டர்களை திரட்டி அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு செல்வேன். நான் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன். விரைவில் மாற்றங்கள் வருவதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

    பொதுக்குழு, ஒற்றைத் தலைமை என்று என்னிடம் கேட்கிறீர்கள். அதற்கு நான் திரும்ப திரும்ப சொல்வது தொண்டர்களின் முடிவுதான் இறுதியானது என்பதைத் தான். தொண்டர்களின் முடிவைத்தான் நானும் விரும்புகிறேன். இப்போது நடப்பது பொதுக்குழுவே அல்ல.

    என்னுடைய அரசியல் பயணம் தேவையற்றது என சிலர் கிண்டல் செய்வதாக சொல்கிறீர்கள். இது போன்று சொல்பவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் பேசுவதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

    தமிழக மக்களும், எங்கள் கழகத் தொண்டர்களும் பார்த்துக் கொள்வார்கள். ஏனென்றால் தமிழக மக்கள் ரொம்ப நியாயம், நீதி, நன்றி இதற்கெல்லாம் உதாரணமாக இருப்பவர்கள்.

    இதற்கு தகுந்த பதிலை எப்பொழுது கொடுக்க வேண்டுமோ அப்பொழுது பொது மக்கள் கொடுப்பார்கள். பிரிந்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை எல்லோரும் ஒன்றுதான். அதுதான் என்னுடைய முடிவு. எல்லோரும் எங்கள் பிள்ளைகள் தான்.

    எல்லாக்கட்சியிலும் சுற்றுப்பயணம் சென்றுகொண்டு தான் இருக்கிறார்கள். ஆளுங்கட்சியினரும் சுற்றுப் பயணம் சென்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு போக வேண்டிய நேரம் வரும்போது நிச்சயம் செல்வேன்.

    நான் எப்போதுமே நியாயப்படித்தான் செயல்படுவேன். அதனால் எங்கள் தொண்டர்களுடன் சேர்ந்து போவேன். நான் அமைதியாக இல்லை. நான் என்ன செய்ய வேண்டுமோ அதனைத் தொடர்ந்து முறையாக செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

    புரட்சித்தலைவர் எப்படி இந்த கழகத்தை நடத்தினாரோ, அவரை தொடர்ந்து இந்த கழகத்தை புரட்சித்தலைவி அம்மா எப்படி நடத்தினார்களோ, அதுபோன்று இந்தக் கழகத்தை நடத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

    இது எங்கள் தொண்டர்களுக்கு நன்றாகவே தெரியும். அதுமட்டுமல்ல உண்மையாகவும், நேற்று ஒன்று இன்று ஒன்று என்று பேசாமல் ஒரு தலைமை இருந்தது என்றால்தான் தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய முடியும். அதனை மட்டும் தான் நான் பார்க்கிறேன்.

    என்னைப் பொறுத்தவரை அது கொடநாடு வழக்காக இருந்தாலும் சரி, அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடைபெற்ற நிகழ்வுகள் என எல்லாமே எனக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும் தெரிய வேண்டும். யார் யார் சுய லாபத்திற்காக என்னென்ன பேசினார்கள் என்பதை தமிழக மக்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள்.

    இதற்கெல்லாம் தீர்ப்பு வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதுமட்டுமல்ல இந்த வழக்கு சம்பந்தமாக என்னிடம் தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க. அரசினுடைய விசாரணை காவல்துறை சார்பில் இரண்டு நாட்கள் விசாரித்தார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் முறையாக பதில் சொல்லி இருக்கிறேன்.

    இது சம்பந்தமாக அரசாங்கம் தான் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது முதல்-அமைச்சராக இருப்பவர் தேர்தல் சமயத்தில் பேசியது இரண்டு விஷயங்கள். அதில் ஒன்று கொடநாடு கொலை வழக்கு. ஒவ்வொரு தெருவிலும் சென்று வாக்கு கேட்கும் போது ஆட்சிக்கு வந்தவுடன் கொடநாடு கொலை தொடர்பாக நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார். எனவே கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று முதல்-அமைச்சரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.

    இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.

    முன்னதாக தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது:-

    அ.தி.மு.க.வில் ஒரு சிலரின் சுயநலத்தால் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு தொண்டர்கள் தள்ளப்பட்டு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. ஏதாவது சூழ்ச்சிகளை செய்து அவரவர்கள் உயர் பதவியில் நீடிப்பதற்காக அடிமட்ட தொண்டர்கள் தலைமைக்கு, வருவதற்கு முட்டுக்கட்டை போடுவது எந்த விதத்தில் நியாயம். இது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம்.

    ஒருசிலரின் அரசியல் லாபத்திற்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? உங்களது சுய விருப்பம், வெறுப்புகளுக்காக இரட்டை இலை சின்னத்தை இது போன்று முடக்குவதற்கு யார் முதலில் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? சொந்த வீட்டிற்கே சூனியம் வைத்து விட்டீர்களே.

    எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உங்களை மன்னிப்பார்களா? உங்களை உருவாக்கிய இயக்கத்திற்கு இருபெரும் தலைவர்களுக்கு நீங்கள் காட்டும் நன்றி இது தானா?

    ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பப்படி அ.தி.மு.க. சட்ட திட்டங்களை மாற்றுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அதே போன்று எம்.ஜி.ஆர். உருவாக்கிய சட்டதிட்டங்களை திருத்தம் செய்வதை எந்த அ.தி.மு.க. தொண்டர்களும் மனப்பூர்வமாக விரும்பவில்லை. இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு அனைவரும் ஒன்றிணைத்தால் இது இருபெறும் தலைவர்களுக்கு நாம் காட்டும் மிகப்பெரிய நன்றிக் கடனாகும்.

    தி.மு.க.வினர் அ.தி.மு.க. இயக்கத்தைப் பார்த்து பொறாமைப்பட்ட காலங்கள் கடந்து தற்பொழுது நடக்கும் நிகழ்வுகளை பார்த்து ஆனந்தத்தோடு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றை மட்டும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வினரின் எண்ணம் ஒருநாளும் ஈடேறாது. அவர்கள் ஊதும் மகுடிக்கு ஒரு சிலர் வேண்டுமானால் மயங்கலாம். ஆனால் எதற்கும் மயங்காத எண்ணில் அடங்கா தொண்டர்களை கொண்டது அ.தி.மு.க. இயக்கம்.

    தி.மு.க.வினருக்கு நாமே இடம் கொடுத்து விடக்கூடாது என்று தான் நான் மிகவும் பொறுமையாக இருக்கிறேன். அனைவருக்கும் வலியுறுத்தி ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்காவே இயங்கும் என்ற ஜெயலலிதாவின் எண்ணம் ஈடேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பப்படி அ.தி.மு.க. சட்டதிட்டங்களை மாற்றுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை.
    • தி.மு.க.வினருக்கு நாமே இடம் கொடுத்து விடக்கூடாது என்று தான் நான் மிகவும் பொறுமையாக இருக்கிறேன்.

    மரக்காணம்:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கோர்ட்டை நாடி வருகிறார்கள்.

    பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ளதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டும் பொதுக்குழு நடத்துவதற்கு தடையில்லை என்று அறிவித்துள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சியடைந்துள்ளார்.

    இதற்கிடையே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அ.தி.மு.க. தொண்டர்கள் என்பக்கம்தான் உள்ளனர் என்று கருத்து தெரிவித்துள்ளார். எனவே அவர் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    அதன்படி நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சசிகலா தொண்டர்களை சந்திக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார், திண்டிவனத்தில் தொடங்கிய பயணத்தை மரக்காணம் பகுதியில் முடித்தார். அப்போது சசிகலா தொண்டர்களை சந்தித்தார். சசிகலாவின் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது:-

    அ.தி.மு.க.வில் ஒரு சிலரின் சுயநலத்தால் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு தொண்டர்கள் தள்ளப்பட்டு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. ஏதாவது சூழ்ச்சிகளை செய்து அவரவர்கள் உயர்பதவியில் நீடிப்பதற்காக அடிமட்ட தொண்டர்கள் தலைமைக்கு, வருவதற்கு முட்டுக்கட்டை போடுவது எந்தவிதத்தில் நியாயம். இது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம்.

    ஒரு சிலரின் அரசியல் லாபத்திற்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? உங்களது சுய விருப்பம், வெறுப்புகளுக்காக இரட்டை இலை சின்னத்தை இதுபோன்று முடக்குவதற்கு யார் முதலில் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? சொந்த வீட்டிற்கே சூனியம் வைத்து விட்டீர்களே.

    எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உங்களை மன்னிப்பார்களா? உங்களை உருவாக்கிய இயக்கத்திற்கு இருபெரும் தலைவர்களுக்கு நீங்கள் காட்டும் நன்றி இதுதானா?

    ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பப்படி அ.தி.மு.க. சட்டதிட்டங்களை மாற்றுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அதே போன்று எம்.ஜி.ஆர். உருவாக்கிய சட்டதிட்டங்களை திருத்தம் செய்வதை எந்த அ.தி.மு.க. தொண்டர்களும் மனப்பூர்வமாக விரும்பவில்லை. இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்டு அனைவரும் ஒன்றிணைத்தால் இது இரு பெறும் தலைவர்களுக்கு நாம் காட்டும் மிகப்பெரிய நன்றிக்கடனாகும்.

    தி.மு.க.வினர் அ.தி.மு.க. இயக்கத்தைப் பார்த்து பொறாமைப்பட்ட காலங்கள் கடந்து தற்பொழுது நடக்கும் நிகழ்வுகளை பார்த்து ஆனந்தத்தோடு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள், ஒன்றை மட்டும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வினரின் எண்ணம் ஒருநாளும் ஈடேறாது. அவர்கள் ஊதும் மகுடிக்கு ஒரு சிலர் வேண்டுமானால் மயங்கலாம். ஆனால் எதற்கும் மயங்காத எண்ணில் அடங்கா தொண்டர்களை கொண்டது அ.தி.மு.க. இயக்கம்.

    தி.மு.க.வினருக்கு நாமே இடம் கொடுத்து விடக்கூடாது என்று தான் நான் மிகவும் பொறுமையாக இருக்கிறேன். அனைவருக்கும் வலியுறுத்தி ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்காகவே இயங்கும் என்ற ஜெயலலிதாவின் எண்ணம் ஈடேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×