search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98971"

    • ஒரு சிலரின் சுயநலத்தால் இரட்டை இலைச் சின்னத்தில் தொண்டர்கள் போட்டியிட முடியாத சூழ்நிலை.
    • அதிமுகவில் நடப்பதை பார்த்து திமுகவினர் ஆனந்தமாக உள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் மன்னார்சாமி கோயில் அருகே அதிமுக தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது:

    எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை 3வது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா. பசுத்தோல் போர்த்திய புலிகளின் கையில் சிக்கி அதிமுக சின்னாபின்னமாகி வருகிறது.

    உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை இல்லாமல் போட்டியிட யார் அதிகாரம் கொடுத்தது? தனிப்பட்ட ஒரு சிலரின் சுயநலத்தால் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு தொண்டர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    அதிமுகவில் நடப்பதை பார்த்து திமுகவினர் ஆனந்தமாக உள்ளனர். சிலர் உயர் பதவியில் நீடிப்பதற்காக சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். சொந்த வீட்டிற்கே சூனியம் வைத்து விட்டார்கள். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலைச் சின்னம் முடங்கி உள்ளது.

    ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பத்திற்கு கட்சியின் சட்ட விதிகளை மாற்ற, யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவின் சட்டத்திட்டங்ளில் திருத்தம் செய்ய எந்த தொண்டரும் விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.
    • அரசு தவறும் பட்சத்தில் மக்கள் பிரச்சினையில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் ஈடுபடுவோம் என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

    வேலூர்:

    வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு காட்பாடியில் ரெயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

    இதையடுத்து அவர் மீது 6 பிரிவுகளின் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று வேலூர் ஜெயிலில் உள்ள எஸ்.ஆர்.கே.அப்புவை நேரில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;-

    காட்பாடியில் நீண்ட காலமாக ரெயில்வே பாலத்தை திறக்காததால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்‌. அவரை வேண்டுமென்றே ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

    வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு திட்டமிட்டபடி நடந்தே தீரும். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பொதுக்குழுவிற்கு ஏற்கனவே அனுமதி அளித்து விட்டார்.

    பணம் கொடுத்து மாவட்ட செயலாளர்களை ஈபிஎஸ் வளைப்பதாக டிடிவி தினகரன் கூறிவருகிறார். அவருக்கு எச்சரிக்கை விடுக்கிறோம், அவர் இந்த கட்சியால் ஆதாயம் பெற்று சுபயோகத்தை அனுபவித்து கொண்டிருப்பவர் அவருக்கு கட்சியை பற்றி பேச அருகதை கிடையாது. தொடர்ந்து இதுபோல் அவர் பேசினால் வழக்கு போட்டு அவரை நீதிமன்றத்தில் நிற்க வைப்போம்.

    சசிகலா பாவம் நானும் இருக்கிறேன் என பேசி வருகிறார். அவரை பற்றி பேச அவசியம் இல்லை. உண்மையாக உழைத்தவர்களை உயிர்தொண்டர்களை பிரிக்க முடியாது கட்சியினால் ஆதாயம் அடைந்த சந்தர்ப்பவாதிகள், விரக்தியில் பேசி வருகிறார்கள்.

    தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளுக்காக போராடும் அ.தி.மு.க.வினரை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் அதிமுக ஒருபோதும் அஞ்சாது.

    தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது, அரசு தவறும் பட்சத்தில் மக்கள் பிரச்சினையில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், முன்னாள் எம்.பி. ஹரி, வேலூர் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், தாஸ், பி.எஸ்.பழனி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் உடன் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சசிகலா நாளை (5-ந்தேதி), 7-ந்தேதி, 8-ந்தேதி ஆகிய 3 நாட்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
    • நாளை (5-ந்தேதி), சசிகலா விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

    சென்னை:

    சசிகலா தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு செய்தார். அதன்படி அவர் தனது சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார்.

    நேற்று அவர் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார்.

    குமணன் சாவடியில் தனது பயணத்தை தொடங்கிய அவர் திருமழிசை, வெள்ளவேடு, பாக்கம் மற்றும் தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். பொது மக்கள் மத்தியிலும் அவர் பேசினார்.

    இந்த நிலையில் சசிகலா நாளை (5-ந்தேதி), 7-ந்தேதி, 8-ந்தேதி ஆகிய 3 நாட்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். நாளை (5-ந்தேதி, சசிகலா விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

    இதற்காக அவர் நாளை மதியம் 12.30 மணிக்கு தி.நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறார். பின்னர் திண்டிவனம் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.

    வருகிற 7-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியிலும், 8-ந்தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியிலும் சசிகலா சுற்றுப் பயணம் செய்து தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொத்து வாங்கியதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து வருமான வரித்துறை சொத்துகளை முடக்கியுள்ளது.
    • இதுவரை 2000 கோடிக்கும் அதிகமான சசிகலா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    ஜெயலலிதாவின் தோழி சசிகலா அ.தி.மு.க. ஆட்சி காலத்தின் போது தமிழகம் முழுவதும் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்தார். அவர் ஜெயலலிதாவின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி தனக்காகவும், தனது குடும்பத்தினருக்காகவும் பினாமி பெயர்களில் சொத்துக்களை வாங்கி குவித்ததாக புகார் எழுந்தது.

    மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போதும் பெரும்பாலான சொத்துக்களை பினாமி பெயரில் வாங்கி குவித்துள்ளார்.

    அவர் அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்தது தொடர்பாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    தமிழகம் முழுவதும் இந்த அதிரடி சோதனைகளை வருமான வரித்துறையினர் மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின் போது சசிகலா முறைகேடாக சொத்துக்களை வாங்கி குவித்தது தெரியவந்தது. இதையடுத்து சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் வாங்கி குவித்த சொத்துக்களை முடக்கும் அதிரடி நடவடிக்கைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடங்கினார்கள்.

    பினாமி சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரை பல்வேறு கட்டங்களாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடைய சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர்.

    முதல்கட்டமாக சென்னை, கோவை, புதுவை உள்ளிட்ட இடங்களில் 9 சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கினார்கள். 2-வது கட்டமாக போயஸ் கார்டன், தாம்பரம், சேலையூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் உள்ள சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கினார்கள்.

    3-வது கட்டமாக கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா ஆகிய இடங்களில் உள்ள சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய பினாமி சொத்துக்களை நோட்டீஸ் ஒட்டி முடக்கும் நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

    அதன் தொடர்ச்சியாக சென்னையை அடுத்த பையனூரில் இருக்கும் 49 ஏக்கர் நிலத்தை முடக்கி வருமானவரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    அதன் தொடர்ச்சியாக இன்றும் சசிகலாவுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பு ரூ.15 கோடி ஆகும்.

    இந்த நிறுவனம் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய பினாமி பெயரில் செயல்பட்டு வந்ததை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை தொடங்கினார்கள். அதன் படி இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து ரூ.15 கோடி மதிப்புள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் சொத்துக்களை முடக்கி உள்ளனர்.

    பினாமி சட்டத்தின் படி இந்த நடவடிக்கையை வருமான வரித்துறையினர் மேற்கொண்டனர். இதுவரை சசிகலாவுக்கு சொந்தமான ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமானவரித்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

    பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் மூலம் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சசிகலா இழந்துள்ளார்.

    சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி இருப்பதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்த பிறகே வருமான வரித்துறை இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அவரது சொத்துக்களை முடக்கி வருகிறது.

    • முதல்வரான எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக கட்சியை ஒருங்கிணைக்க களம் இறங்கினார்.
    • தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த புகார்களுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் கொடுத்துள்ளார்.

    ஈ.பி.எஸ்...!

    ஓ.பி.எஸ்...!

    வி.கே.எஸ்...!

    இந்த 3 எஸ்களுக்குள்ளும் தான் இறுதிப்போட்டி. மியூசிக்கல் சேர் சுற்றி பிடிக்கும் போட்டியில் இறுதி கட்டத்தில் ஒற்றை நாற்காலியை கைப்பற்ற களத்தில் 3 பேர் சாதுர்யமாக ஓடிக்கொண்டிருப்பார்கள். கடைசியில் ஒருவர்தான் நாற்காலியை கைப்பற்றுவார்.

    அதே போல்தான் இப்போது அ.தி.மு.க. என்ற கட்சியை கைப்பற்ற போவது யார் என்ற போட்டியின் விறுவிறுப்பான ஆட்டத்தை பார்வையாளர்களான மக்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    களத்தில் நிற்கும் 3 போட்டியாளர்களுமே பிரபலமானவர்கள் தான். ஈ.பி.எஸ். என்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். என்ற ஓ.பன்னீர்செல்வம், வி.கே.எஸ். என்ற வி.கே.சசிகலா.

    ஜெயலலிதா என்ற ஒற்றை தலைமை மறைந்ததால் அந்த இடத்தை பிடிக்கவும் மிகப்பெரிய இயக்கத்தை தன் வசப்படுத்தவும் இந்த 3 தலைகளும் முட்டி மோதுகின்றனர்.

    சாதாரணமாக இருந்த சசிகலா ஜெயலலிதாவின் உயிர்த்தோழியாகியதால் அம்மாவுக்கு அடுத்த இடத்தில் சின்னம்மாவை வைத்துதான் அழகு பார்த்தார்கள்.

    ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட சர்ச்சைகளும், சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியதும் கட்சியின் பிடிமானத்தை இழக்க வைத்தது.

    முதல்வரான எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக கட்சியை ஒருங்கிணைக்க களம் இறங்கினார். அதன் ஒரு கட்டமாக ஓ.பன்னீர்செல்வம் அணியையும் இணைத்துக்கொண்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இணைந்த கைகள் ஒரு கட்டத்தில் இரட்டை தலைமை வேலைக்கு ஆகாது, ஒற்றை தலைமையை கொண்டு வருவோம் என்று காய் நகர்த்த தொடங்கினார்கள்.

    இதில் எடப்பாடி பழனிசாமியின் சாதுர்யமான ஆட்டம் கட்சியினரை ஈர்த்தது. தொண்டர்களும், நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியின் பக்கத்தில் குடிபுகுந்தார்கள்.

    பொதுக்குழுவை கூட்டி மகுடம் சூட இருந்த தருணத்தில் ஓ.பன்னீர்செல்வம் கோர்ட்டு மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு முட்டுக்கட்டை போட்டார். ஆனால் அதையும் சாதுர்யமாக அடித்து ஆடி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று கோர்ட்டு அறிவித்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி மொத்த தீர்மானங்களையும் நிராகரிக்க செய்து ஒற்றை தலைமை தேர்வுக்காக அடுத்த பொதுக்குழு தேதியையும் அறிவிக்க செய்தார்.

    எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் அதரவு அதிகம் இருப்பது கண்கூடாக தெரிகிறது. ஆனால் ஒற்றை தலைவராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இல்லை.

    புதிய வியூகம் அமைக்க தொடங்கி உள்ளார்கள். 2017ல் அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி இருந்தும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரனுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதால் அ.தி.மு.க. கட்சி பெயரும், இரட்டை இலை சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடங்கியது.

    அந்த நெருக்கடியில் இருந்து மீளமுடியாத நிலை வந்தபோது பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை தூக்கி விட்டு புதிதாக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை உருவாக்கி இரட்டை தலைமையின் கீழ் கட்சியை கொண்டு வந்து முடக்கப்பட்ட சின்னத்தையும் மீட்டார்கள்.

    அப்போது கட்சி உடையாமல் இருக்க அந்த இணைப்புக்கு மோடியும், அமித்ஷாவும் உதவினார்கள். அதேபோல் இப்போதும் அவர்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கை ஓ.பன்னீர்செல்வத்திடம் இருக்கிறது.

    ஒருவேளை கட்சியை கைப்பற்றும் போரில் பின்னடைவு ஏற்பட்டால் கடைசி அஸ்திரமாக 2017-ஐ போல் கட்சி சின்னம், பெயரை முடக்க திட்டமிட்டு உள்ளார். உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் இருவரது கையெழுத்தும் இல்லாததால் சின்னம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி சட்டரீதியாகவும் முயற்சிகளை மேற்கொண்டால் தன்னை கேட்காமல் தீர்ப்பளிக்க கூடாது என்று 'கேவியட்' மனுவையும் சுப்ரீம் கோர்ட்டில் போட்டு வைத்துள்ளார்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வருகிற 11-ந் தேதி பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைமையை கொண்டு வர தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

    தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த புகார்களுக்கு எடப்பாடி பழனிசாமியும் பதில் கொடுத்துள்ளார். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்துடன் அந்த மனுவை கொடுத்து உள்ளார்கள்.

    எடப்பாடி பழனிசாமி தான் பொதுச் செயலாளர் என்று அவரது ஆதரவாளர்கள் முழு நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

    ஆனால் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல தங்கள் பக்கம் நிர்வாகிகள் ஆதரவு குறைவாக இருந்தாலும் எடப்பாடி தலைமைக்கு கட்சியை அவ்வளவு எளதில் ஓ.பி.எஸ். விட்டு விட மாட்டார் என்பது அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை.

    இப்படி இங்கு நீயா? நானா? என்று மோதிக்கொண்டிருக்கும் நிலையில் சசிகலா உள்ளே புகுந்து வடிவேலுவும், பாண்டியராஜனும் சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது எம்.எஸ்.பாஸ்கர் உள்ளே புகுந்து உருவுவதைபோல் கட்சியை தன் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார்.

    புரட்சித்தாய், சின்னம்மா என்ற கோஷத்தோடு 2016-ம் ஆண்டு பொதுச் செயலாளராக முடி சூட்டப்பட்ட சசிகலா மறு ஆண்டே அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக சசிகலா அறிவித்தார். அரசியலில் பதவி சுகம் கண்டவர்கள் அவ்வளவு எளிதில் ஒதுங்குவார்களா ? இல்லை ஒதுங்கத்தான் விடுவார்களா?

    தனது ஆதரவாளர்ளுடன் செல்போனில் பேசி வந்தார். அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த ஒரே மாதத்தில் அதாவது 16.10.2021 அன்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு அரசியல் மறு பிரவேசம் செய்தார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வில் தலைமை பதவிக்கு எழுந்துள்ள போட்டியில் தானும் களம் இறங்கி விட்டதாக பிரகடனப்படுத்தி இருக்கிறார்.

    கையில் செங்கோலுடன் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் காட்சி தரும் சசிகலா 50 ஆண்டு கால வரலாற்றில் கட்சி இப்படி தொடர் தோல்விகளை சந்தித்தது இல்லை. கட்சியில் இன்று நடைபெறும் நிகழ்வுகள் மனதுக்கு வேதனையை தருகிறது என்று தெரிவித்து இருந்தார்.

    ஒரு தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர். பாடலில் வரும் கருணை, கடமை, பொறுமை என்ற மூன்றையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

    அதோடு தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்த பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தி ஆகணும் என்ற பாடலையும் சுட்டிக்காட்டி ஒற்றுமையோடு உழைப்போம் வென்று காட்டுவோம் என்று அறிவித்துள்ளார்.

    இதை பார்த்ததும் சின்னம்மா வந்துட்டாங்கடா... இனி பார்...! என்று அவரது ஆதரவாளர்களும் வேட்டியை மடித்துக் கட்டுகிறார்கள்.

    என்னதான் நடக்கும்... நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே. தன்னாலே வெளிவரும் தயங்காதே...

    என்ற எம்.ஜி.ஆர். பட பாடல் வரிகளை தான் தொண்டர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.

    • சசிகலா வருகிற 3-ந்தேதி அன்று மதியம் 2 மணிக்கு, தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு கிண்டி, கத்திப்பாரா மேம்பாலம், போரூர் வழியாக பூந்தமல்லி சென்றடைகிறார். அப்போது அவர் தொண்டர்களை சந்திக்கிறார்.
    • 5-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலும், 7-ந்தேதி வானூரிலும், 8-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையிலும் சுற்றுப் பயணம் செய்கிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சசிகலா தனது சுற்றுப்பயணத்தை தீவிரப்படுத்தி உள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து திருத்தணி சென்ற அவர் ஆதரவாளர்கள், தொண்டர்களை சந்தித்தார். அப்போது பேட்டி அளித்த அவர் அ.தி.மு.க.வுக்கு தான் தலைமை தாங்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறர்கள் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் சசிகலாவின் அடுத்த கட்ட சுற்றுப் பயண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக அ.தி. மு.க. பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் தலை நிமிரவும், தி.மு.க. தலைமையிலான அரசின் அராஜக செயல்களை தடுத்து நிறுத்திடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை உறுதி செய்திட வலியுறுத்தியும் சசிகலா, பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் தனது பயணத்தை தொடர்ந்து மேற்கொள்கிறார்.

    வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மதியம் 2 மணிக்கு, தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு கிண்டி, கத்திப்பாரா மேம்பாலம், போரூர் வழியாக பூந்தமல்லி சென்றடைகிறார். அப்போது அவர் தொண்டர்களை சந்திக்கிறார்.

    பின்னர் குமணன்சாவடியிலிருந்து தனது பயணத்தை தொடங்கும் சசிகலா திருமழிசை, வெள்ளவேடு, பாக்கம் மற்றும் தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தொண்டர்களையும், பொது மக்களையும் சந்திக்கிறார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு தியாகராய நகர் இல்லம் வந்தடைகிறார்.

    இதன் பிறகு வருகிற 5-ந் தேதி மதியம் 12.30 மணிக்கு, தியாகராயநகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

    சசிகலா 5-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலும், 7-ந்தேதி வானூரிலும், 8-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையிலும் சுற்றுப் பயணம் செய்கிறார்.

    சசிகலா மேற்கொள்ளும் இந்த சுற்றுப்பயணத்தில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள், ஜெயலலிதாவின் வீரத்தையும், விவேகத்தையும் தொடர்ந்து பின்பற்றிக் கொண்டிருக்கும் அனைத்து தாய்மார்கள், எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான இளம் தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன‌.
    • சசிகலா-ஓ.பன்னீர்செல்வம் படங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    மதுரை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே நாளுக்கு நாள் பிளவு வலுத்து வருகிறது. அ.தி.மு.க.வில் எழுந்துள்ள ஒற்றை தலைமை கோஷம் காரணமாக அந்த கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் முடிவுகளை அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை கொண்டு வரவும், பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ்.சை நீக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதனை முறியடிக்க ஓ.பன்னீர்செல்வமும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கடிதம் பெறப்பட்டு வருகிறது.‌ இந்த நிலையில் மதுரை பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன‌.

    சசிகலா-ஓ.பன்னீர்செல்வம் படங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    மதுரை நகரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், "அன்று சீதை வடித்த கண்ணீர் இலங்கையை அழிந்தது, இன்று சின்னம்மா வடிக்கும் கண்ணீரால் துரோகிகள் கூட்டம் ஒழியும், அம்மாவின் ஆயுதக்கிடங்கு சின்னம்மா" என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

    சசிகலா படத்துடன் ஓ.பன்னீர்செல்வம் படத்தையும் சேர்த்து அச்சிடப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் மதுரை புறநகர் பகுதிகளிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க.வில் அடுத்த கட்டமாக என்னென்ன நிகழுமோ என்று தொண்டர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

    இந்த நிலையில் புறநகர் பகுதிகளான நாகமலை புதுக்கோட்டை, கீழகுயில் குடி, திருப்பரங்குன்றம் மேலூர் பகுதிகளில் ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டிகளை அப்பகுதியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி அணியினர் கிழித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை விரைவில் சரியாகி விடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
    • அ.தி.மு.க.வுக்கு மீண்டும் தலைமை ஏற்க வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி தீவிரமாக களம் இறங்கி உள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதில் ஓ.பன்னீர் செல்வம் உறுதியாக உள்ளார்.

    இந்த பரபரப்புக்கு மத்தியில் சசிகலாவும் அ.தி.மு.க. தலைமை பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து திருத்தணி சென்ற சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அ.தி.மு.க.வில் நிலவும் தற்போதைய பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த சசிகலா, அ.தி.மு.க. தலைமை பதவிக்கு வரவேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள் என கூறினார்.

    அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை விரைவில் சரியாகி விடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    இதன் மூலம் அ.தி.மு.க.வுக்கு மீண்டும் தலைமை ஏற்க வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து சட்டமன்ற தொகுதி வாரியாக தனது அடுத்தக்கட்ட சுற்றுப் பயணத்தை தீவிரப்படுத்த அவர் முடிவு செய்துள்ளார். கரூரில் இருந்து சசிகலா இந்த பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்னும் சில நாட்களில் தனது பயணத்தை தொடங்க உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    முதலில் கரூருக்கு செல்லும் சசிகலா, அடுத்தடுத்த நாட்களில் சுற்றுப் பயணத்தை வேகப்படுத்தி ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார். இதன் மூலம் அ.தி.மு.க.வில் அதிருப்தியில் இருப்பவர்களை தன் பக்கம் நிச்சயமாக இழுக்க முடியும் என்று சசிகலா நம்புவதாக அவரது ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.

    • சென்னையில் இருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா திருவள்ளூர் மாவட்டத்துக்குச் சென்றார்.
    • அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க. ஏழை எளியோருக்கான கட்சி என்றார்.

    திருவள்ளூர்:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இந்நிலையில், தொண்டர்களைச் சந்திக்க சென்னையில் இருந்து திருத்தணி புறப்பட்டார் சசிகலா. சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக சென்ற சசிகலா திருத்தணி அடைந்தார். அங்கு முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. இது நிச்சயம் சரிசெய்யப்படும்.

    அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் என்னுடன் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க. ஏழை எளியோருக்கான கட்சி

    நிச்சயம் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க பாடுபடுவேன். அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2-வது முறையாக ஏற்பட்டுள்ள சிக்கலை சரிசெய்ய முடியும்.

    தி.மு.க.வை தான் எப்போதும் எங்கள் எதிரியாகப் பார்ப்போம்.

    வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க.வை ஒரு தலைமையின்கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் என தெரிவித்தார்.

    • எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் முற்றியுள்ளதை தொடர்ந்து அ.தி.மு.க. மீண்டும் உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
    • 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட குழப்பம் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருப்பதன் பின்னணியில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அ.தி.மு.க.வில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் அடுத்த கட்டமாக என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் பக்கமே இருப்பதால் அவரே அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்புக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

    இதனால் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுக்கு சேர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்காக டெல்லியில் பிரதமர் மோடியை சந்திப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் பிரதமரை நேரில் சந்திப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படவில்லை.

    அ.தி.மு.க.வில் உள்கட்சி பிரச்சினை தீவிரமாக இருக்கும் இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசுவதற்கு பிரதமர் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தரப்பினரிடமும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் பின்னர் அவரை ஆதரித்து பேசினார்.

    சசிகலாவும் இதனை ஆமோதித்து இருக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்கு சசிகலாவுடன் கைகோர்க்கவும் ஓ.பன்னீர்செல்வம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சசிகலா குடும்பத்தினர் சிலருடன் அவர் ரகசியமாக பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பியதும் தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது தனது எதிர்காலம் குறித்தும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவது பற்றியும் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் முற்றியுள்ளதை தொடர்ந்து அ.தி.மு.க. மீண்டும் உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட குழப்பம் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

    இதனால் அடுத்தடுத்த நாட்களில் அ.தி.மு.க.வில் மேலும் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே அ.தி.மு.க.வில் நடைபெற்று வரும் இந்த உள்கட்சி மோதலை பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக கண்காணித்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் நிலவும் தற்போதைய பிரச்சினை விரைவில் முடிவுக்கு வந்து அந்த கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பதையே பா.ஜனதா விரும்புகிறது. இதுவே தற்போதைய சூழலில் தமிழகத்தில் பா.ஜனதா கால் பதிக்க உதவும் என்றே அக்கட்சியினர் நம்புகின்றனர்.

    இதனை மனதில் வைத்து அந்த கட்சி ரகசியமாக சில நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டு சசிகலா எந்த முயற்சி தொடங்கினாலும் முதலில் நல்ல நேரம், நல்ல இடம் பார்த்துதான் தொடங்குவார்.
    • அந்த வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருத்தணி முருகன் காலடியில் இருந்து தனது பயணத்தை அவர் தொடங்கவுள்ளார்.

    சென்னை:

    ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பியதும், அரசியலில் தன்னை அனைவரும் வரவேற்பார் என்று எதிர்பார்த்தார்.

    ஆனால் அவருக்கு யாருமே சிவப்பு கம்பளம் விரிக்கவில்லை. அ.தி.மு.க. தலைவர்கள் அனைவரும் அவரை கண்டுகொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் அரசியலில் ஈடுபட போவதில்லை என்று ஒரு கட்டத்தில் அறிவித்தார்.

    என்றாலும், அவரது அந்த அறிவிப்பு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார். அ.தி.மு.க. பிரமுகர்களை தன் பக்கம் இழுப்பதற்காக எத்தனையோ வழிகளை கையாண்டார். தொண்டர்களுடன் பேசி ஆடியோ வெளியிட்டார்.

    சில மூத்த தலைவர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாக தகவலை பரப்பினார். ஆனால் எதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் சிறிது நாட்கள் தமிழகம் முழுவதும் கோவில் கோவிலாக ஆன்மிக பயணம் மேற்கொண்டார். அப்போதும் மக்கள் அவரை கண்டுகொள்ளவில்லை.

    தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தால்தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்று சசிகலா கருதுகிறார். இதற்காக அவர் உரிய அரசியல் சூழ்நிலையை எதிர்பார்த்து காத்திருந்தார். இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் எதிரொலித்து மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த சலசலப்பை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள சசிகலா ஓசையின்றி வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளார். நேற்று முன்தினம் சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்த அன்று இரவு சுற்றுப்பயணத்தின் தொடக்கத்தை அவர் முடிவு செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எம்.ஜி.ஆரின் பெருமைகளையும், ஜெயலலிதாவின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மகத்தான சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அதன்படி ஜூன் 26-ம் தேதி (நாளை) பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் சாலை வழியாக திருத்தணி பைபாஸ் செல்கிறேன்.

    பின்னர், அங்கிருந்து பயணத்தை தொடங்கி திருத்தணி, குண்டலூர் பகுதிகளில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறேன். குண்டலூரில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறேன்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோரமங்கலம், கே.ஜி. கண்டிகை, எஸ்.வி.ஜி.புரம், கிருஷ்ணா குப்பம், ஆர்.கே.பேட்டையில் தொண்டர்கள், பொது மக்களை சந்திக்கிறேன்.

    ஆர்.கே.பேட்டையில் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறேன். பிறகு அம்மையார் குப்பம் சென்று தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு தியாகராயநகர் இல்லம் வந்தடைகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சசிகலா நாளை சென்னையில் இருந்து திருத்தணி வரை சென்று விட்டு திரும்ப இருப்பது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்யும் நடவடிக்கையாக கருதப்படுகிறது. அது மட்டுமின்றி அவரது சுற்றுப்பயணத்தின் ஒத்திகை பயணமாகவும் நாளைய சசிகலாவின் பயணம் பார்க்கப்படுகிறது.

    ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டு சசிகலா எந்த முயற்சி தொடங்கினாலும் முதலில் நல்ல நேரம், நல்ல இடம் பார்த்துதான் தொடங்குவார். அந்த வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருத்தணி முருகன் காலடியில் இருந்து தனது பயணத்தை அவர் தொடங்கவுள்ளார்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பற்றிய விழிப்புணர்வை மேலும் அதிகப்படுத்தும் வகையில் சசிகலா தனது திட்டத்தை வகுத்துள்ளார். மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு, பெண்களின் பெருமையை உணர்த்தும் வகையில் பேசவும் சசிகலா முடிவு செய்துள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வர முயற்சி செய்யும் நிலையில் அந்த பதவியில் தான் இருப்பதாக மக்களின் மத்தியில் பேசவும் சசிகலா திட்டமிட்டு இருக்கிறார். அ.திமு.க.வை தன்னால் மட்டுமே புத்துணர்ச்சி செய்ய முடியும் என்று பிரசாரம் செய்யவும் தீர்மானித்து இருக்கிறார்.

    அ.தி.மு.க. முழுமையாக எடப்பாடியின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டால் அடுத்து அரசியல் பக்கமே வர முடியாது என்பது சசிகலாவுக்கு நன்கு தெரியும். எனவேதான் அவர் புதுமையாக பேசி அ.தி.மு.க.வினரை கவர நினைக்கிறார். அவரது முயற்சி தீபாவளி பட்டாசாக வெடிக்குமா? அல்லது புஸ்வானமாகுமா? என்பது நாளை இரவு தெரிந்துவிடும்.

    • எதிராளிக்கு எதிராளியே நண்பன் என்ற ரீதியில் சசிகலாவுடன் நெருங்கத் தொடங்கினார் ஓ.பி.எஸ். தனக்கு எதிராக உருவாகிய வியூகத்தை உடைக்க எடப்பாடியும் ஆயத்தமானார்.
    • அதுதான் இனி ஓ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடாது. ஒற்றை தலைமையை ஏற்படுத்தி விட வேண்டும் என்பதில் எடப்பாடி தீவிரமாக செயல்பட்டார்.

    சென்னை:

    எந்தப்பக்கம் போனாலும் கட்டையை போடுறாங்களே என்ற ரீதியில் தான் அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் அடுத்த என்ன செய்யலாம் என்று யோசித்து வருகிறார்.

    சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு போனதும் ஆட்சியையும், கட்சியையும் தங்கள் வசமாக்க ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமியும், தனியாக கோஷ்டியாக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கொண்டார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இணைந்து கொண்டார்களே தவிர அவர்ளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிய தொடங்கியது.

    அரியணையை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்துவிட்டு ஜெயில் வாசம் முடிந்து திரும்பினார் சசிகலா. தான் ஜெயிலில் இருந்தபோதே தனது எதிராளியான ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி தன்னையே கட்சியை விட்டு தூக்கியதை சசிகலாவால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

    எதிராளிகளாக மாறிய இருவரையும் வீழ்த்தி கட்சியை கைப்பற்ற சசிகலா அமைத்த வியூகம் எதுவும் பலன் கொடுக்கவில்லை. ஆட்சி இருந்தவரை துணை முதல்-அமைச்சர் எப்போது தான் முதல்-அமைச்சர் ஆவது என்ற எண்ணம் ஓ.பன்னீர்செல்வத்தை தூங்க விடாமல் துரத்தியது.

    காய்களை நகர்த்த தொடங்கினார். எதிராளிக்கு எதிராளியே நண்பன் என்ற ரீதியில் சசிகலாவுடன் நெருங்கத் தொடங்கினார் ஓ.பி.எஸ்.

    தனக்கு எதிராக உருவாகிய வியூகத்தை உடைக்க எடப்பாடியும் ஆயத்தமானார். அதுதான் இனி ஓ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடாது. ஒற்றை தலைமையை ஏற்படுத்தி விட வேண்டும் என்பதில் எடப்பாடி தீவிரமாக செயல்பட்டார்.

    ஒவ்வொரு கட்டத்திலும் சூழ்நிலைகளும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே மாறியது. ஓ.பி.எஸ்சுடன் இருந்தவர்களை தன் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி நினைத்தார். ஆனால் அவர் எதிர்பாராத வகையில் ஒவ்வொருவராக நழுவி எடப்பாடி பக்கம் வந்து சேர்ந்தார்கள்.

    65 மாவட்ட செயலாளர்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சி தொண்டர்கள் என்று யானை பலம் வந்ததும், இனி போட்டு பார்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டார். அதனாலேயே பொதுக்குழு கூட்டத்தில் 'ஒற்றை தலைமை' என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

    ஒற்றை தலைமை என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான் என்று முடிவு செய்துவிட்டனர். பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்யும் பணிகள் விறு விறு என்று நடந்தன.

    'நம்பர் ஒன்' என்ற தனது ஆசை தவிடுபொடியாகி விடும் என்பதை உணர்ந்த ஓ.பி.எஸ். ஒற்றை தலைமை வேண்டாம் என்று பேசிப் பார்த்தார். எடுபடவில்லை. கோர்ட்டு மூலம் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கோர்ட்டுக்கு சென்றார். முதல் தீர்ப்பு ஏமாற்றம் அளித்ததால் மேல் முறையீடு செய்தார்கள். விடிய விடிய விசாரணை நடந்தது. கோர்ட்டும், ஏற்கனவே முடிவு செய்த 23 தீர்மானங்களை மட்டும் தான் நிறைவேற்ற வேண்டும். புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்று உத்தரவிட்டது.

    விடிய விடிய கண்விழித்து காத்து இருந்ததற்கு பலன் கிடைத்தது என்று சற்று ஆறுதல் அடைந்தார். ஆனால் அரசியல் சதுரங்கத்தில் தனது ஆட்டத்தை அதிரடியாக தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி.

    அனைத்து மாவட்டங்களிலும் தனது ஆதரவாளர்கள் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் மின்னல் வேகத்தில் கையெழுத்து பெற்றார்கள். கூட்டம் தொடங்கியதும் அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்து விட்டு ஒற்றை தலைமை என்ற தீர்மானத்தோடு மீண்டும் பொதுக்குழு என்ற அறிவிப்பு ஓ.பி.எஸ்.சை அதிர வைத்தது.

    பொதுக்குழுவுக்கு செல்லும் போதாவது தொண்டர்கள் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். மாறாக எதிர்ப்பை மட்டுமே அவரால் சம்பாதிக்க முடிந்தது. சோர்ந்து போன ஓ.பி.எஸ். தரப்பினர் நேற்று இரவு பண்ணை வீட்டில் கூடி ஆலோசித்த தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த கூட்டத்தில் சசிகலா தரப்பின் ஆதரவும் இருந்ததாக கூறப்படுகிறது. அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டாலும் முதல் நிலையை அவரால் இன்று வரை எட்டிப்பிடிக்க முடியவில்லை. இப்போதும் அவர் போடும் திட்டப்படி சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரோடு இணைந்து புதிய முயற்சியை எடுத்தாலும் 2-ம் இடம் தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

    இந்த முகாமில் இப்படி நடக்க... எடப்பாடி பழனிசாமி முகாமிலும் சசிகலா, டி.டி.வி.தினகரனோடு சேர்ந்து வந்தால் அதையும் எதிர்கொள்வது பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ×