search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரைமுருகன்"

    வரும் டிசம்பர் மாதத்துக்குள் பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்தல் வருவது உறுதி என தி.மு.க முதன்மை செயலாளர் துரைமுருகன் பேசினார். #DuraiMurugan #DMK
    வேலூர்:

    காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.க முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.



    வரும் டிசம்பர் மாதத்திற்குள் பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வருவது உறுதி. அப்போது தி.மு.க. ஆட்சிக்கு வரும்.

    தி.மு.க ஆட்சிக்கு வந்த உடனேயே முதல் வேலையாக காட்பாடிக்கு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கொண்டு வரப்படும் அதற்குள் காட்பாடிக்கு தாலுகா மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் தாலுகா மருத்துவமனை இங்கு அமைக்கப்படும். சிலர் என்னை பற்றி அவதூறாக பேசி குறை கூறி வருகின்றனர். அவர்கள் எல்லாம் சாயம் போகக்கூடியவர்கள் அவர்கள் பெயரை நாங்கள் சொல்லக்கூட அவர்களுக்கு தகுதியில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் அ.தி.மு.க வினர் துரைமுருகன் குறித்து குறை கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில் கடந்த 1971 முதல் இதுவரை காட்பாடி தொகுதியில் தான் செய்த பணிகளை பட்டியலிட்டு கூறினார்.  #DuraiMurugan #DMK



    சட்டசபையில் இருக்கும் அனைவருமே நடிகர்கள் என்று தி.மு.க.வின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார். #TNAssembly #Duraimurugan

    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது நாட்டுப்புற கலைகளை ஊக்கப்படுத்துவது பற்றிய கேள்விக்கு அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பதில் சொல்லிக் கொண் டிருந்தார்.

    அப்போது 1 லட்சம் நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக குறிப்பிட்டார்.

    அப்போது குறுக்கிட்டு பேசிய துரைமுருகன் நாடகக் கலையை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரதாஸ் சுவாமிகள், ‘‘அருணாச்சல கவிராயர் ஆகியோர் எழுதிய வரிகளிலேயே அந்த நாடகங்களை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.

    துரைமுருகன்:- நான் பல நாடகங்களில் நடித்திருக்கிறேன். இப்போது இந்த சபையில் இருக்கும் எல்லோரும் ஒவ்வொரு வகையில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லோருமே நடிகர்கள் தான்.

    (அப்போது சபையில் சிரிப்பலை எழுந்தது).

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- 2001- 2006-ம் ஆண்டு ஆட்சியின் போது துரைமுருகனை பார்த்து அன்றைய முதல்- அமைச்சர் ஜெயலலிதா, ‘நீங்கள் சிறப்பாக நடிக்கிறீர்கள். நவரச நடிப்பும் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் நடிகராகி இருந்தால் உலக நடிகர் ஆகி இருக்கலாம்’ என்று சொன்னார். அந்த வார்த்தைதான் இப்போது என் நினைவுக்கு வருகிறது.

    இவ்வாறு விவாதம் நடந்தது. #TNAssembly #Duraimurugan

    மூன்றாவது அணியில் தி.மு.க. ஒரு போதும் இடம் பெறாது. காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்று தி.மு.க.வின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார். #DMK #Duraimurugan
    சென்னை:

    தி.மு.க.வின் முதன்மை செயலாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைக்க சில மாநில கட்சிகள் முயற்சி செய்கின்றன. மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாபானர்ஜி அந்த கூட்டணியை உருவாக்க வாய்ப்புள்ளது.



    ஆனால் அந்த மூன்றாவது அணியில் தி.மு.க. ஒரு போதும் இடம் பெறாது. காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. அந்த கூட்டணி தொடர்ந்து நீடிக்கும்.

    கருணாநிதி உடல் நலம் இல்லாமல் செயல்பட முடியாதபடி இருப்பதால், அவர் இல்லாத வெற்றிடத்தை உணரத் தொடங்கியுள்ளோம். அவர் மட்டும் முன்பு போல அரசியலில் தீவிரமாக இருந்திருந்தால், அ.தி.மு.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவை அவர் வேறு விதமாக கையாண்டிருப்பார். மாறுபட்ட திட்டத்துடன் களம் இறங்கி இருப்பார்.

    எம்.ஜி.ஆர். மரணம் அடைந்தபோது அ.தி.மு.க. இரண்டாக உடைந்து ஆட்சியை இழந்தது. ஆனால் ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்ட போதும், ஆட்சி கவிழவில்லை. 1989-ல் நடந்த சம்பவத்துக்கும், தற்போதைய சூழ்நிலைக்கும் வித்தியாசம் உள்ளது. தற்போது அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. உள்ளது.

    தற்போதைய அ.தி.மு.க. அரசு முற்றிலுமாக மத்திய அரசிடம் சரண் அடைந்து கிடக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி மீதான ஏராளமான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்.

    எனவே தி.மு.க. எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. சட்டசபையில் நாங்கள்தான் முதன் முதலாக குட்கா பிரச்சினையை கிளப்பினோம்.

    18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உறுதியான தீர்ப்பு வந்து விடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் மாறுபட்ட தீர்ப்பு வந்துள்ளது. அடுத்து 3-வது நீதிபதி தீர்ப்புக்கு சென்றுள்ளது. 3-வது நீதிபதி தீர்ப்பால் ஆட்சி கவிழலாம் என்று நினைக்கிறோம்.

    தி.மு.க.வை பொறுத்தவரை தி.மு.க. தொண்டர்கள் கட்டுக்கோப்புடன் உள்ளனர். தி.மு.க. தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இனத்தை சேர்ந் தவர்கள் ஆவார்கள். தி.மு.க. கொள்கையால் அவர்கள் அனைவரும் பிணைந்துள்ளனர்.

    தி.மு.க. கடந்த 7 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக உள்ளது. எங்கள் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று தொண்டர்களை சந்தித்து வருகிறார். இதனால் தி.மு.க.வினர் இன்றும் அதே கட்டுக் கோப்புடன் உள்ளனர்.

    1977-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை எம்.ஜி.ஆர். மீது இருந்த கவர்ச்சி காரணமாக நாங்கள் 13 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் இருந்தோம். 1989-ல் கலைஞர் முதல்வரானார். அதன் பிறகு தி.மு.க.- அ.தி.மு.க.வுக்கு மாற்றாக திகழ்ந்து வருகிறது. கடந்த தேர்தலில்தான் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. தோல்வியை தழுவியது.

    தற்போது தி.மு.க.வில் நாங்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கலந்து பேசி ஆலோசனை செய்து செயல்பட்டு வருகிறோம். எனவே மூத்த உறுப்பினர் என்ற ரீதியில் நான் மு.க. ஸ்டாலினுக்கு எந்த அறிவுரையும் சொல்வது இல்லை. ஏதாவது கருத்து கேட்டால் சொல்வேன்.

    அரசியலில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மாதிரி மு.க.ஸ்டாலின் உள்ளார். சந்திரபாபு நாயுடு எப்போதும் அரசியல் பற்றியே பேசுவார். சிந்திப்பார். மு.க.ஸ்டாலினும் அதே போன்று உள்ளார்.

    இவ்வாறு துரைமுருகன் கூறினார். #DMK #Duraimurugan
    காவிரி பிரச்சனையில் சாதித்தது தி.மு.க.வா?, அ.தி.மு.க.வா? என்பது குறித்து என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா? என்று துரைமுருகன் சவால் விடுத்துள்ளார். #EdappadiPalanisamy #DuraiMurugan
    சென்னை:

    தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு தி.மு.க. துரோகம் செய்து விட்டது என்று திரும்பத் திரும்ப சொன்னால் மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியிருப்பது அவர் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கு துளியும் அழகல்ல என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    காவிரி பிரச்சனையில் முதல் பேச்சுவார்த்தையை துவக்கியது, நடுவர் மன்றத்திற்கு முதலில் கோரிக்கை வைத்தது, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, நடுவர் மன்றம் அமைத்தது, இடைக்காலத்தீர்ப்பு பெற நடுவர் மன்றத்திற்கு உச்சநீதிமன்றத்தில் அதிகாரம் பெற்றது, இடைக்காலத் தீர்ப்பினை அரசிதழில் வெளியிட்டு அதன்படி காவிரி நதி நீர் ஆணையம் அமைத்தது, அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்திருந்த காவிரி வழக்கு இறுதி விசாரணையை முடித்து இறுதி தீர்ப்பு பெற்றது அனைத்துமே கருணாநிதி முதலமைச்சராக இருந்து செய்த சாதனைகள் என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    காவிரி வரைவு திட்டம் உச்சநீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்டு, ஜூன் 1-ந் தேதிக்குள் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும், இன்று வரை அமைக்காமல் நாகப்பட்டினத்தில் நின்று கொண்டு நான் தான் காவிரிப்பிரச்சனையில் சாதித்து விட்டேன் என்று நர்த்தனம் ஆடுவதற்கு முதலமைச்சருக்கு கொஞ்சமாவது தயக்கம் வேண்டாமா?. ஆணையமே அமைக்காமல் காவிரி பிரச்சனையில் சாதித்து விட்டோம் என்று முதலமைச்சர் போய் பேசுகிறார் என்றால் அய்யகோ, தமிழ்நாட்டிற்கு இப்படியொரு சோதனையா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.



    இறுதியில் ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அ.தி.மு.க. அரசை அசைக்க முடியாது திருவாய் மலர்ந்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு ஸ்டாலினை சட்டமன்றத்தில் பேச விடுவதற்கே அஞ்சி நடுங்கி நிற்கும் நீங்கள் ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தால் வங்காள விரிகுடா கடலில் தான் அ.தி.மு.க. அரசு கிடக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    அ.தி.மு.க. அரசை அசைத்துப் பார்க்க ஆயிரம் ஸ்டாலின்கள் தேவையில்லை. மு.க.ஸ்டாலின் கண் அசைத்தால் ஒவ்வொரு தி.மு.க. தொண்டனும் களத்தில் இறங்கினால் ஒரு பழனிசாமி அல்ல ஓராயிரம் பழனிசாமிகள் வந்தாலும் தாக்குப்பிடிக்க முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். ஏதோ விபத்தில் முதலமைச்சராகி விட்ட பழனிசாமி வீராப்பு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல காவிரி பிரச்சினையில் சாதித்தது தி.மு.க.வா? அல்லது அ.தி.மு.க.வா? என்று விவாதம் நடத்த விரும்பினால் நான் அதற்கு ரெடியாக இருக்கிறேன். ஒரே மேடையில் காவிரி பற்றி விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாரா?.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #EdappadiPalanisamy #DuraiMurugan
    மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்க முடியாது என்று கூறியதுடன் அரசின் தோல்வியை மறைப்பதற்கு தி.மு.க. மீது குறை கூறுவதாக முதலமைச்சருக்கு துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். #DMK #DuraiMurugan #ADMK
    சென்னை:

    தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ந்தேதியன்று தண்ணீர் திறந்து விட இயலாது என்று கூறியதோடு மட்டுமல்லாமல், ஏதோ அதிமுக ஆட்சியில் மட்டுமே ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை நேற்றைய தினம் சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் பேசினார்.

    தி.மு.க. ஆட்சி இருந்த காலங்களில் எல்லாம் சட்டப் போராட்டத்தையும் நடத்தியிருக்கிறோம். கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தண்ணீரை பெற்றிருக்கிறோம்.

    இது போன்ற தெளிவான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இல்லாத காலத்திலும் கூட தலைவர் கலைஞர் முதல்-அமைச்சராக இருந்த போது கர்நாடகத்தில் யார் முதல்-அமைச்சராக இருந்தாலும் அவர்களுடன் நல்லுறவு பேணி, பேச்சுவார்த்தை நடத்தி தமிழக விவசாயிகளின் நலனை காப்பதில் மிகுந்த அக்கறை காட்டியிருக்கிறார். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளார்.

    ஆனால் இப்போது நீண்ட விளக்கத்தைக் கொடுத்துள்ள முதல்-அமைச்சர் அ.தி.மு.க. ஆட்சியில் இரு வருடங்கள் ஜூன் 6 மற்றும் 12-ந்தேதிகளில் மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். அதற்கு முன்பு இருந்த கழக ஆட்சி காவிரி நீரை உரிய முறையில் பெற்று மேட்டூர் அணையில் தேக்கி வைத்ததால் மட்டுமே 12.6.2001 மற்றும் 6.6.2011 ஆகிய காலங்களில் குறித்த காலத்தில் அணை திறந்து விட முடிந்தது என்பதை ஏதோ முதல்-அமைச்சர் வசதியாக மறந்து விட்டார்.

    காவிரி ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று வாதிட்டுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வெளிவந்ததிலிருந்து கடந்த 113 நாட்களில் ஆக்கபூர்வமான, அழுத்தம் தரக்கூடிய செயல்களில் ஈடுபட்டிருந்தால் இந்நேரம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கும். ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறப்பதில் எந்த தடையும் இருந்திருக்காது.


    அதை கோட்டை விட்ட முதல்-அமைச்சர் தி.மு.க.வை குறை கூறுவதில் காட்டும் அக்கறையை, மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுப்பதிலோ, உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை திறக்க வைப்பதிலோ எவ்வித முயற்சியும் எடுக்க இயலவில்லை.

    மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்துப் பேச முடியாத தன் இயலாமையை “மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்க இயலாது” என்ற வடிவத்தில் நேற்றைய தினம் அவையில் அறிவித்திருக்கிறார்.

    ஆகவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அமைக்கப்படும் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் 113 நாட்களாக காவிரி நீரைப் பெறாமல் வேடிக்கை பார்த்து விட்டு இன்றைக்கு மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்க முடியாது என்று முதல்-அமைச்சர் கூறுவது உள்ளபடியே மனவேதனையளிக்கிறது.

    தன் தோல்வியை மறைக்க தி.மு.க. மீது குறை கூறி திசை திருப்ப முனைவது அதை விட வேதனை தருகிறது. ஆகவே விவசாயிகளின் நலனில் அரசியல் செய்வதை நிறுத்தி விட்டு, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக காவிரி நீரைப் பெற முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்திய அரசுக்கு அதற்கு தேவையான அழுத்தத்தை கொடுக்க முன் வர வேண்டும்.

    இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார். #DMK #DuraiMurugan #ADMK
    திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வந்த அய்யாக்கண்ணுவை கைது செய்வதா என்று சட்டசபையில் இன்று துரைமுருகன் முதல்-அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று துரைமுருகன் (தி.மு.க.) எழுந்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து பேசியதாவது:-

    சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கு அவர் இருக்கும் போது பல்வேறு தரப்பு மக்களும் பார்க்க வருவார்கள்.

    பாதிக்கப்பட்டவர்கள் ஏதாவது உதவி பெற அவரை பார்ப்பார்கள். மனு கொடுப்பார்கள். இது வழக்கமாக எல்லா கட்சியிலும் நடக்கும்.

    விவசாய சங்கத்தை சேர்ந்த அய்யாக்கண்ணு இன்று எதிர்க்கட்சி தலைவரை பார்க்க அனுமதி கேட்டு இருந்தார். அவரை 12 மணிக்கு வருமாறு நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படி அய்யாக்கண்ணு பார்க்க வந்தார். ஆனால் அதற்குள் போலீசார் அவரை வழியிலேயே மடக்கி பிடித்து பார்க்கவிடாமல் வட பழனி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விட்டனர். இது நியாயம்தானா? இதை முதல்-அமைச்சரின் கவனத்துக்காக சொல்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது உதவியாளரை அழைத்து ஏதோ கூறினார். அதற்கு துரை முருகன் சிரித்தபடியே தலையாட்டினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியை திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, டோனியின் ஆட்டோகிராஃப் போடப்பட்ட டி-ஷர்ட்டையும் பரிசாக பெற்றார். #CSK #MSDhoni
    சென்னை:

    இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு ஐபிஎல் 11வது சீசனில் டோனி தலைமையில் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, வாட்சனின் அதிரடியால் மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

    கோப்பையுடன் நேற்று சென்னை வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டு, நட்சத்திர ஓட்டலில் தங்கவைக்கப்பட்டனர். அணி நிர்வாகத்தினர், நிர்வாகத்தினருக்கு நெருங்கியவர்கள் ஆகியவர்களுடன் வீரர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

    சென்னையில் முக்கிய நபர்களை டோனி சந்திக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், டோனியை சந்தித்து பேசினார், அப்போது தான் கையெழுத்திட்ட டிஷர்டை டோனி பரிசளித்துள்ளார். தோனியுடன் துரைமுருகன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  அரசியலில் பரபரப்பாக இருந்தாலும் துரைமுருகன் கிரிக்கெட்டின் மிகப்பெரிய ரசிகர். #CSK #MSDhoni #DuraiMurugan



    தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்ட செயல் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி அரசு மீது துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    வேலூர், மே.26-

    தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் எம்.எல்.ஏ. காட்பாடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த அரசு காட்டுமிராண்டித்தனமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களில் வேலூர்:

    தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் எம்.எல்.ஏ. காட்பாடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த அரசு காட்டுமிராண்டித்தனமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களில் 13 பேரை இதுவரை சுட்டுக்கொன்றுள்ளது. இதனை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியென கூறுகிறார். மக்கள் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டனர் என்றும் அதனால் துப்பாக்கிசூடு சம்பவம் நடந்ததாகவும் தெரிவிக்கிறார். இவ்வளவு பெரிய கலவரம் நடப்பதை ஏன் உளவுத்துறை முன்கூட்டியே அரசுக்கு தெரியப்படுத்தவில்லை.

    ஆனால் இப்போது இதெல்லாம் எதிர்க்கட்சிகளின் சதி என்று கூறுவது பொய்யான ஒன்றாகும். உடனடியாக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும், இந்த அரசும் மக்களின் சாவிற்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும்.

    முதல்- அமைச்சரும், அமைச்சர்களும் ஏன் பாதிக்கப்பட்ட, கொல்லப்பட்ட மக்களின் உறவினர்களை சந்திக்கவில்லை. இவற்றிற்கெல்லாம் முதல்- அமைச்சர் தான் காரணம். இது திட்டமிட்ட செயல்.

    மக்களைபார்த்து முட்டியிலும், வானத்தை நோக்கியும் சுடாமல் வாகனத்தின்மீது ஏறி போலீசார் படுத்துக்கொண்டு சுட்டனர். இது தீவிரவாதிகளை சுடுவதற்காக பயிற்சி கொடுக்கப்பட்ட போலீஸ் பிரிவு. அதனை அனுமதிக்கவேண்டுமென்றால் உள்துறை செயலாளர் அனுமதிக்கவேண்டும். இல்லையென்றால் முதல்-அமைச்சர் இதற்கு அனுமதிக்கவேண்டும். அதன்படி இவற்றையெல்லாம் அனுமதித்தது தமிழக முதல்-அமைச்சர்தான்.

    தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து அரசு நியமித்துள்ள ஒருநபர் விசாரணை கமி‌ஷன் மூலம் நியாயம் கிடைக்காது. இது கண்துடைப்பு. தமிழக ஆளுனர் நடவடிக்கை எடுக்காமல் அறிக்கை மட்டும் வெளியிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring13 பேரை இதுவரை சுட்டுக்கொன்றுள்ளது. இதனை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியென கூறுகிறார். மக்கள் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டனர் என்றும் அதனால் துப்பாக்கிசூடு சம்பவம் நடந்ததாகவும் தெரிவிக்கிறார். இவ்வளவு பெரிய கலவரம் நடப்பதை ஏன் உளவுத்துறை முன்கூட்டியே அரசுக்கு தெரியப்படுத்தவில்லை.

    ஆனால் இப்போது இதெல்லாம் எதிர்க்கட்சிகளின் சதி என்று கூறுவது பொய்யான ஒன்றாகும். உடனடியாக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும், இந்த அரசும் மக்களின் சாவிற்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும்.

    முதல்- அமைச் சரும், அமைச்சர்களும் ஏன் பாதிக்கப்பட்ட, கொல்லப்பட்ட மக்களின் உறவினர்களை சந்திக்கவில்லை. இவற்றிற்கெல்லாம் முதல்- அமைச்சர் தான் காரணம். இது திட்டமிட்ட செயல்.

    மக்களைபார்த்து முட்டி யிலும், வானத்தை நோக்கியும் சுடாமல் வாகனத்தின்மீது ஏறி போலீசார் படுத்துக்கொண்டு சுட்டனர். இது தீவிரவாதிகளை சுடுவதற்காக பயிற்சி கொடுக்கப்பட்ட போலீஸ் பிரிவு. அதனை அனுமதிக்கவேண்டுமென்றால் உள்துறை செயலாளர் அனுமதிக்கவேண்டும். இல்லையென்றால் முதல்-அமைச்சர் இதற்கு அனுமதிக்கவேண்டும். அதன்படி இவற்றையெல்லாம் அனுமதித்தது தமிழக முதல்-அமைச்சர்தான்.

    தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து அரசு நியமித்துள்ள ஒருநபர் விசாரணைகமி‌ஷன் மூலம் நியாயம் கிடைக்காது. இது கண்துடைப்பு. தமிழக ஆளுனர் நடவடிக்கை எடுக்காமல் அறிக்கை மட்டும் வெளியிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×