என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 98984
நீங்கள் தேடியது "அமேசான்"
சியோமி நிறுவனத்தின் Mi பேனட் 3 ஃபிட்னஸ் டிராக்கர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MiBand3
சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi பேன்ட் 3 ஃபிட்னஸ் டிராக்கர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய Mi பேன்ட் 3 மாடலில் 0.78 இன்ச் OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் அல்லது எஸ்எம்எஸ் மெசேஜ்களில் அதிக எழுத்துக்களை டிஸ்ப்ளே செய்யும். முந்தைய Mi பேன்ட் 2 சாதனத்தில் 0.42 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டது. புதிய Mi பேன்ட் சாதனத்தில் 5ATM வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நீருக்கு அடியில் 50 மீட்டர் ஆழத்திலும் பேன்ட் பயன்படுத்த முடியும்.
புதிய Mi பேன்ட் 3 சாதனத்தில் மேம்படுத்தப்பட்ட ஆக்டிவிட்டி டிராக்கிங் வழங்கப்பட்டு இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது. மேலும் ஓட்டப்பயிற்சி, மிதிவண்டி, நடைபயிற்சி மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்த ரியல்-டைம் டேட்டாவை வழங்குகிறது. முன்பக்கம் பட்டன் புதிய பேன்ட்-லும் வழங்கப்பட்டு இருககிறது. சியோமி Mi பேன்ட் 3 சாதனம் 20 நாட்கள் ஸ்டான்ட்-பை வழங்கும் 110 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சியோமி Mi பேன்ட் 3 சிறப்பம்சங்கள்:
- 0.78 இன்ச் OLED 128x80 பிக்சல் டிஸ்ப்ளே
- கீறல் விழாத கிளாஸ், ஆன்டி-ஃபிங்கர்ப்ரின்ட் கோட்டிங்
- போட்டோப்லெதிஸ்மோகிராஃபி (Photoplethysmography - PPG)
- இதய துடிப்பு சென்சார்
- உறக்கத்தை டிராக் செய்து, உடற்திறனை மானிட்டர் செய்கிறது
- செடன்ட்டரி ரிமைன்டர்
- 8.5 கிராம் அல்ட்ரா லைட் பாடி
- 5ATM (50 மீட்டர்) வாட்டர் ரெசிஸ்டன்ட்
- ப்ளூடூத் 4.2 LE, என்எஃப்சி (ஆப்ஷன்)
- 110 எம்ஏஹெச் லி-ஐயன் பாலிமர் பேட்டரி
சியோமி Mi பேன்ட் 3 பிளாக் ரிஸ்ட் பேன்ட் உடன் வருகிறது. எனினும் இந்த ஃபிட்னஸ் டிராக்கரை புளூ மற்றும் ஆரஞ்சு நிறங்களிலும் வாங்க முடியும். இந்தியாவில் புதிய Mi பேன்ட் 3 விலை ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இதன் விற்பனை செப்டம்பர் 28-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது.
சியோமி நிறுவனத்தின் Mi பேன்ட் 3 சாதனம் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் நிலையில் இதன் விற்பனை சார்ந்த விவரம் வெளியாகியுள்ளது. #MiBand3
சியோமி நிறுவனத்தின் Mi பேன்ட் 3 சாதனம் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட் ஃபிட்னஸ் பேன்ட் சாதனம் அமேசான் வலைதளத்தில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அமேசானில் இடம்பெற்றிருந்த டீசரின் படி Mi பேன்ட் 3 சாதனம் அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது.
செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் இணைக்கப்பட்ட சாதனங்களுடன் சியோமியின் புதிய Mi பேன்ட் 3 சாதனமும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டீசரின்படி Mi பேன்ட் 3 மாடலில் ரியல்-டைம் ஃபிட்னஸ் டிராக்கிங் மற்றும் சிறப்பான பேட்டரி பேக்கப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் Mi பேன்ட் 3 முன்னதாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.
சியோமி Mi பேன்ட் 3 சிறப்பம்சங்கள்:
- 0.78 இன்ச் OLED 128x80 பிக்சல் டிஸ்ப்ளே
- கீறல் விழாத கிளாஸ், ஆன்டி-ஃபிங்கர்ப்ரின்ட் கோட்டிங்
- போட்டோப்லெதிஸ்மோகிராஃபி (Photoplethysmography - PPG)
- இதய துடிப்பு சென்சார்
- உறக்கத்தை டிராக் செய்து, உடற்திறனை மானிட்டர் செய்கிறது
- செடன்ட்டரி ரிமைன்டர்
- 8.5 கிராம் அல்ட்ரா லைட் பாடி
- 5ATM (50 மீட்டர்) வாட்டர் ரெசிஸ்டன்ட்
- ப்ளூடூத் 4.2 LE, என்எஃப்சி (ஆப்ஷன்)
- 110 எம்ஏஹெச் லி-ஐயன் பாலிமர் பேட்டரி
சியோமி Mi பேன்ட் 3 பிளாக் நிறம் மற்றும் பேன்ட்கள் கிராஃபைட் பிளாக், ஹாட் ஆரஞ்சு மற்றும் டீப் புளு நிறங்களில் கிடைக்கிறது. Mi பேன்ட் 3 சீனாவில் 169 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1,7890) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Mi பேன்ட் 3 என்எஃப்சி வேரியன்ட் 199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.2,095) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் டீசர்கள் வெளியாகி வரும் நிலையில், இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #OnePlus6T
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6டி மாடல் டீசர் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 6டி விளம்பர வீடியோ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பப்பட்டது. ஆசிய கோப்பை தொடரின் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டியின் போது இந்த விளம்பரம் ஒளிபரப்பனது.
விளம்பர வீடியோவில் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் நடத்திருக்கிறார். ஒன்பிளஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒன்பிளஸ் 6டி விளம்பர வீடியோவில் வளைந்த கிளாஸ் ஸ்கிரீன் மற்றும் வளைந்த ஓரங்கள் இடம்பெற்றிருந்தது.
பின்புறம் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கும் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் ஒப்போ ஆர்17 ப்ரோ போன்று மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்படவில்லை என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. தொலைகாட்சி சேனல்களைத் தொடர்ந்து அமேசான் வலைத்தளத்திலும் ஒன்பிளஸ் 6டி டீசர் பதிவிடப்பட்டுள்ளது.
புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுவதை ஒன்பிளஸ் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. அந்த வகையில் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டு, பெரிய பேட்டரி வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக பணக்காரர்களின் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருக்கும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஏழைகளுக்கு உதவ ரூ.14,500 கோடி ஒதுக்கியுள்ளார். #JeffBezos
அமேசான் நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ் தனக்கு சொந்தமான சொத்துக்களில் பெருமளவு பங்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தப்படும் என அறிவித்தார்.
உலக பணக்காரர்களின் டாப்-10 பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஜெஃப் தொண்டு நிறுவனங்கள் மூலம் 2 பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.14,500 கோடி செலவிடப்படும் என அறிவித்திருக்கிறார்.
இது குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டார். அதில் தனது அறக்கட்டளை மூலம் வீடு இல்லாதோரின் குடும்பங்களுக்கு ரூ.14 ஆயிரத்து 500 கோடி (2 மில்லியன் டாலர்) நிதி உதவி பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் குறைந்த வருவாய் உள்ளோரின் குழந்தைகள் படிக்க மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என அவர் பதிவிட்ட போஸ்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெசோஸ் டே ஒன் ஃபன்ட் (Bezos Day One Fund) என்ற பெயரில் இதற்கென புதிய அமைப்பை ஜெஃப் பெசோஸ் துவங்கி இருக்கிறார்.
கடந்த ஒருவருடமாத எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு தற்சமயம் ஜெஃப் ட்வீட் மூலம் வெளியாகியுள்ளது. முன்னதாக 2017-ம் ஆண்டு ட்விட்டரில் அவசர தேவை மற்றும் நீணட காலத்திற்கு அதன் நன்மை நீடிக்கும் படியான யோசனைகளை வழங்குமாறு கேட்டிருந்தார்.
அவ்வாறு தனக்கு பல்வேறு பதில்கள், யோசனைகள் ஆக்கப்பூர்வமாகவும், உதவிகரமாகவும் இருந்தது என அவர் தெரிவித்து, கருத்துக்களை பாராட்டுவதாக தெரிவித்தார். அந்த வகையில் தனக்கு கிடைத்த பதில்களின் அடிப்படையில் இரண்டு நலத்திட்டங்களை தேர்வு செய்திருக்கிறார்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. #GalaxyA8Star
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ8 ஸ்டார் என அழைக்கப்படுகிறது.
6.28 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம், 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 24 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஸ்மார்ட் பியூட்டி, ப்ரோ லைட்டிங் மற்றும் ஏ.ஆர். ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து வித வெளிச்சங்களுக்கும் ஏற்ப தானாக மாற்றிக் கொள்ளும் என்பதால் புதிய டூயல் கேமரா அமைப்பை இன்டெலிகேம் என சாம்சங் அழைக்கிறது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போனில் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார் சிறப்பம்சங்கள்:
- 6.28 இன்ச் FHD பிளஸ் 1080x2220 பிக்சல் FHD+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
- அட்ரினோ 512 GPU
- 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7
- 24 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
- சாம்சங் பே
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கும் நிலையில், இதன் விலை ரூ.34,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ஆகஸ்டு 27-ம் தேதி முதல் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
கேரளாவில் கனமழை காரணமாக தொடர்ந்து நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், நிவாரணப் பொருட்களை அமேசான் மூலம் வழங்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #KeralaFloods #Amazon
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளில் சிக்கி இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், மீட்பு பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும், காணாமல் போனவர்கள் பற்றி அறிந்து கொள்ளவும், கூகுள் சா்ர்பில் பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்யப்பட்ட நிலையில், ஃபேஸ்புக் தரப்பில் சேஃப்டி செக் எனேபிள் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர டெலிகாம் நிறுவனங்கள் சார்பில் இலவச சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமேசான் இந்தியா சார்பில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருப்போருக்கு உதவ பிரத்யேக வலைப்பக்கம் துவங்கப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா சார்பில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறது. அமேசான் இந்திய முகப்பு பக்கத்தில் கேரள வெள்ள பாதிப்புக்கு உதவக்கோரும் பேனர் இடம்பெற்றிருக்கிறது.
இதனை க்ளிக் செய்ததும், மூன்று தொண்டு நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன, இதைத் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. பொருட்களை கார்ட்டில் சேர்த்து, முகவரி பகுதியில் தொண்டு நிறுவன முகவரியை பதிவிட்டு பணம் செலுத்த வேண்டும்.
பணம் செலுத்தியதும் அமேசான் சார்பில் பொருட்கள் கேரளாவில் விநியோகம் செயய்ப்படும், அங்கிருந்து தொண்டு நிறுவனங்கள் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவை ஒப்படைக்கப்படும்.
கேரளாவில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க 23 ஹெலிகாப்டர்களும், 200 படகுகளும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், உள்ளூர் மீனவர்களும் தங்களது படுகுகளை கொண்டு மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #KeralaFloods #Amazon
ஸ்கைவொர்த் நிறுவனம் இந்தியாவில் எம்20 சீரிஸ் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.12,999 முதல் துவங்குகிறது. #smarttv
சீன நிறுவனமான ஸ்கைவொர்த் இந்தியாவில் எம்20 சீரிஸ் புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எம்20 சீரிஸ் 32-இன்ச், 43-இன்ச் மற்றும் 49-இன்ச் என மூன்று வித மாடல்களில் கிடைக்கிறது. இவற்றில் இன்பில்ட் கேம், வைபை, லைவ் டிவி ஆப்ஸ், நெட் ரேன்ஜ் ஆப் ஸ்டோர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.
எம்20 ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. சீரிஸ் DTS சவுண்ட் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால், சிறப்பான ஆடியோ அனுபவம் கிடைக்கும். கூடுதலாக பயனர் விருப்பப்படி தேர்வு செய்ய பல்வேறு பிக்சர் மற்றும் ஆடியோ மோட் ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது. 49-இன்ச் மாடலை தவிர்த்து 32 மற்றும் 43-இன்ச் மாடல்களில் ஐ.பி.எஸ். பேனல் கொண்ட ஹெச்.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
ஸ்கைவொர்த் எம்20 சீரிஸ் பேஸ் மாடலாக இருக்கும் 32-இன்ச் டி.வி.யில் ஹெச்.டி. எல்.இ.டி. டிஸ்ப்ளே, 1366×768 ரெசல்யூஷன், 60ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 20 வாட்ஸ் இன்பில்ட் ஸ்பீக்கர் அவுட்புட், ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் யு.எஸ்.பி. போர்ட்கள், குவாட்-கோர் பிராசஸர் மற்றும் டூயல்-கோர் கிராஃபிக்ஸ் பிராசஸர் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
புதிய எம்20 சீரிஸ் 43 இன்ச் மாடலில் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே 1920×1080 ரெசல்யூஷன், 60ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 20 வாட்ஸ் இன்பில்ட் ஸ்பீக்கர் அவுட்புட் கொண்டிருக்கிறது. இறுதியில் 49-இன்ச் மாடலிலும் ஃபுல் ஹெச்.டி. 1080 பிக்சல் டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 20 வாட் ஸ்பீக்கர் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 2 ஹெச்.டி.எம்.ஐ., 2 யு.எஸ்.பி. மற்றும் ஒரு வி.ஜி.ஏ. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சொந்த ஆப் ஸ்டோர் மற்றும் ஏ.பி.கே. செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்கைவொர்த் எம்20 ஸ்மார்ட் எல்.இ.டி. டிவி 32-இன்ச் வேரியன்ட் விலை ரூ.12,999, 43-இன்ச் வேரியன்ட் ரூ.22,999 மற்றும் 49-இன்ச் வேரியன்ட் ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் மூன்று டி.வி. மாடல்களையும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. #smarttv
அமேசான் வலைதளத்தில் ஃப்ரீடம் விற்பனையில் ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் பல்வேறு இதர சாதனங்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. #AmazonFreedomSale #AmazonPrimeDay
அமேசான் வலைதளத்தில் ஃப்ரீடம் விற்பனை துவங்கியது. இன்று (ஆகஸ்டு 9-ம் தேதி) துவங்கிய சிறப்பு விற்பனை ஆகஸ்டு 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. சிறப்பு விற்பனையில் பல்வேறு சாதனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறன்றன.
ஸ்மார்ட்போன்கள், நுகர்வோர் மின்சாதனங்கள், தொலைகாட்சி மற்றும் இதர பிரிவுகளில் சுமார் 17 கோடி பொருட்களுக்கு 20,000-க்கும் அதிகமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஒன்பிளஸ், ஹூவாய், ஹானர், சாம்சங், விவோ, ரியல்மி, ஜெ.பி.எல்., சோனி மற்றும் பல்வேறு பிரான்டுகளின் சாதனங்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் எக்கோ சாதனங்கள், ஃபயர் டிவி ஸ்டிக் மற்றும் கின்டிள் இ-ரீடர்கள் நான்கு நாட்களுக்கும் சிறப்பு விலையில் வழங்கப்படுகின்றன. இத்துடன் மொபைல் போன், உபகரணங்களுக்கு 40% மற்றும் நுகர்வோர் மின்சாதனங்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றன.
ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகள்
- ஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.59,999 (ரூ.5000 தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவனை)
- நோக்கியா 6.1 (4 ஜிபி) ரூ.15,999 (ரூ.2000 தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவனை)
- ஹூவாய் P20 லைட் - ரூ.16,999 (ரூ.3000 தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவனை)
- ஒன்பிளஸ் 6 - எக்சேன்ஜ் செய்து ரூ.2000 கூடுதல் தள்ளுபடி, 6 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவனை முறை வசதி
- ரியல்மி 1 - எக்சேன்ஜ் முறையில் ரூ.1000 கூடுதல் தள்ளுபடி, 6 மாதங்களுக்கு வட்டில்லா மாத தவனை முறை
சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10,700 வரை தள்ளுபடி, எக்சேன்ஜ் முறையில் ரூ.10,000 வரை கூடுதல் தள்ளுபடி, வட்டியில்லா மாத தவனை முறை வசதி சலுகைகள். விவோ ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்து ரூ.6000 கூடுதல் தள்ளுபடி, வட்டியில்லா மாத தவனை முறையில் ரூ.6000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதேபோன்று மோட்டோ ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.5700 வரை தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை, வட்டியில்லா மாத தவனை முறை வசதியும், ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு எக்சேன்ஜ் முறையில் ரூ.8,000 வரை கூடுதல் தள்ளுபடி, வட்டியில்லா மாத தவனை முறை வசதி வழங்கப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு ஒன் மொபைலான Mi A2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #XiaomiMiA2 #smartphone
சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi A2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 5.99 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.75, சோனி IMX486 சென்சார், 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், 20 எம்பி சோனி IMX376 செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
Mi A2 ஸ்மார்ட்போனில் தற்சமயம் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருந்தாலும், இந்த ஆண்டிற்குள் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதள அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ள Mi A2 பின்புறம் கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ மற்றும் 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சியோமி Mi A2 சிறப்பம்சங்கள்
– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் FHD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ), ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட்
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல், EIS
– 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 2.0um பிக்சல்
– 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 2.0um பிக்சல், சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 4+
சியோமி Mi A2 ஸ்மார்ட்போன் லேக் புளு, கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விரைவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 9-ம் தேதி முதல் முன்பதிவு துவங்கும் நிலையில் சியோமியின் mi.com மற்றும் அமேசான் வலைதளங்களில் அடுத்த வாரம் விற்பனைக்கு வருகிறது. அதன்படி முதல் விற்பனை ஆகஸ்டு 16-ம் தேதி முதல் Mi ஹோம் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு வவுச்சர்கள் வடிவில் ரூ.2200 வரை உடனடி கேஷ்பேக் மற்றும் 4500 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #XiaomiMiA2 #smartphone
இந்தியாவில் ஹானர் பிளே கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் சலுகைகளை தொடர்ந்து பார்ப்போம். #HonorPlay
ஹூவாய் ஆன்லைன் பிரான்டான ஹானர் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. ஹானர் பிளே என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் கேமிங் செய்ய சிறப்பானதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் பிளே மாடலில் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, கிரின் 970 பிராசஸர், சிறப்பான டர்போ கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளதால், மொபைலின் கேமிங் அனுபவம் சிறப்பானதாக இருக்கும். இதனால் மொபைல் கேம் விளையாடும் போது ஹேங் ஆவது, சீக்கிரம் சூடாவது போன்ற பிரச்சனைகள் எழாது எனலாம். கேமிங்கை தொடர்ந்து அழகிய புகைப்படங்கள் எடுக்க வசதியாக ஹானர் பிளே ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
ஏ.ஐ. சார்ந்த 20 எம்பி டூயல் பிரைமரி கேமரா சென்சாருடன் இணைந்து போர்டிரெயிட் படங்களையும் மிகத் தெளிவாக எடுக்கும். போனுக்கு சக்தியூட்டும் விதமாக 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும், 4D கேமிங் அனுபவத்தில் கிராஃபிக்ஸ் மட்டுமின்றி 3D ஆடியோ எஃபெக்ட்களும் வழங்கப்படுகிறது. இத்துடன் கேம் சூழலுக்கு ஏற்ப ஏ.ஐ. வைப்ரேஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
ஹானர் பிளே சிறப்பம்சங்கள்:
– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்சிடி 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஹூவாய் கிரின் 970 10nm பிராசஸர்
– மாலி-G72 MP12 GPU
– i7 கோ-பிராசஸர், NPU, GPU டர்போ
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8. ஓரியோ மற்றும் EMUI 8.2
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, PDAF, CAF, EIS
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5mm ஆடியோ ஜாக், 7.1-சேனல் ஹிஸ்டன் ஆடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3750 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
ஹானர் பிளே அறிமுக சலுகைகள்:
- தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு கூடுதல் சேமிப்புகள்
- வோடபோன் பயனர்களில் ரூ.199-க்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் போது 120 ஜிபி வரை கூடுதல் டேட்டா
- வோடபோன் ரெட் சலுகையில் 10 ஜிபி கூடுதல் டேட்டா
- வோடபோன் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ஹானர் பிளே ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் நேவி புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் மாடல் ரூ.19,999 என்றும் 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.23,999 என நிர்ணயம் செயய்ப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் மற்றும் ஹானர் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. #HonorPlay #smartphone
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் முன்பதிவு துவங்கப்பட்டு விட்டது. #GalaxyNote9
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 9-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. எனினும் சாம்சங் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் கடந்த சில மாதங்களாக இணையத்தில் வலம் வருகின்றன.
இதுவரை டீசர்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், கேலக்ஸி நோட் 9 மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்டு 24-ம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டது.
சாம்சங் தனது புதிய நோட் 9 ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் வியாழன் கிழமை (ஆகஸ்டு 9) நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சாம்சங் வலைதளம் அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலியில் உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் டெலிகாம் நிறுவனம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யலாம்.
தற்சமயம் நடைபெறுவது வெறும் முன்பதிவு தான் என்பதால், பயனர்கள் எவ்வித கட்டணும் செலுத்த வேண்டியதில்லை, எனினும் இவ்வாறு முன்பதிவு செய்வதன் மூலம் அறிமுக தினத்திலேயே ஸ்மார்ட்போனினை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் வலைதளம் மற்றும் செயலியில் புதிய ஸ்மார்ட்போனிற்கு எக்சேஞ்ச் மூலம் 450 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.30,800) வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் புதிய நோட் 9 மாடலின் விலை, ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் நிறம் சார்ந்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். நிறத்தை பொருத்த வரை கேலக்ஸி நோட் 9 மாடல் கிரே நிறத்தில் வெளியிடப்படாது என்றும் இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் பிளாக், புளு, காப்பர், லாவென்டர் மற்றும் கிரெ நிறங்களில் வெளியிடப்படலாம் என கூறப்பட்டிருந்தது.
சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட டிஸ்ப்ளே, மேம்படுத்தப்பட்ட எஸ் பென், ப்ளூடூத் வசதியுடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. கீக்பென்ச் விவரங்களின் படி நோட் 9 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9820 சிப்செட், அமெரிக்காவில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய நோட் 9 மாடலில் 512ஜிபி வெர்ஷன் அறிமுகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் பயனர்களை கவரும் வகையில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பல்வேறு நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் கேமரா அளவில் மேம்படுத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமரா, பெரிய பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படலாம். #GalaxyNote9 #Samsung
ஹூவாய் நோவா 3i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் அறிமுக சலுகைகளை தொடர்ந்து பார்ப்போம். #HuaweiNova3i
ஹூவாய் நோவா 3 ஸ்மார்ட்போனை தொடர்ந்து நோவா 3i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. நோவா 3i ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் 19:5:9 ரக வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 24 எம்பி செல்ஃபி கேமரா, 2 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா, 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கிரின் 710 ஆக்டா-கோர் 12nm சிப்செட் மற்றும் GPU டர்போ அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
ஹூவாய் நோவா 3i சிறப்பம்சங்கள்
- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:5:9 3D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஹூவாய் கிரின் 710 12nm பிராசஸர்
- ARM மாலி-G51 MP4 GPU
- 4 ஜிபி ரேம்
- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- 2 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 3340 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ஹூவாய் நோவா 3i ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஐரிஸ் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் நோவா 3i ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அறிமுக சலுகைகள்
- அமேசான் தளத்தில் ரூ.1000 கேஷ்பக்
- வட்டியில்லா மாத தவணை முறை
- எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.2000 தள்ளுபடி
- ஜியோ பயனர்களுக்கு ரூ.1200 கேஷ்பேக், 100 ஜிபி கூடுதல் டேட்டா
- ரூ.3300 வவுச்சர்கள்
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X