search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99007"

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்தால் இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என பேசிய சசி தரூருக்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #HinduPakistan #ShashiTharoor
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை பாரதிய ஜனதா கட்சி செய்து வருவதாகவும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்திற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து சசி தரூரை காங்கிரஸ் கண்டித்தது. பொது மேடைகளில் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. ஆனால் தன் கருத்தில் இருந்து பின்வாங்காத சசி தரூர், மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிட்டார்.

    இந்நிலையில், சசி தரூரின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிராக கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுமீத் சவுத்ரி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், சசி தரூரின் கருத்துக்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அரசியலமைப்பை அவமதிப்பதாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.

    இந்த வழக்கை இன்று விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், சசி தரூருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அதில், வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கமான சட்ட நடைமுறைகள் மட்டுமின்றி அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக் முகவரிகளுக்கும் சம்மனை அனுப்ப நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    இந்திய நீதித்துறை வரலாற்றில் டுவிட்டர் மூலம் சம்மன் அனுப்புவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #HinduPakistan #ShashiTharoor
    இந்திய வரைப்படத்தில் தமிழக பகுதியை கருப்பு மையிட்டு அழித்ததப்படி பேஸ்புக் பதிவு செய்த தஞ்சைவூர் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    கும்பகோணம்:

    தமிழர் பாதுகாப்பு மற்றும் தமிழர் தாயக மீட்பு என்ற அமைப்பு சார்பில் கும்பகோணத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி மாநாடு நடைபெறுகிறது.

    இந்த மாநாடு நடைபெறுவதையொட்டி பேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியாகி இருந்தது. அதில் ‘‘ இந்து..இந்தி.. இந்தியா எதிர்ப்பவர்களுக்கும்... தமிழ், தமிழர், தமிழ்நாடு ஏற்பவர்களுக்கும்’’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    மேலும் இந்திய வரைப்படத்தில் தமிழக பகுதியை கருப்பு மையிட்டு அழிக்கப்பட்டு இருந்தது.

    பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேஸ்புக் பதிவு செய்து கும்பகோணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் கும்பகோணத்தை சேர்ந்த வாலிபர் சிளம்பரசன் (வயது 32) என்பவர், பேஸ்புக்கில் வெளியிட்டது தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
    மேற்கு வங்காள மாநிலத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் காதலனுடன் சண்டை போட்டு பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் 24 பாரகான் மாவட்டம் சோனார்புர் என்ற இடத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார்.

    அன்று வாலிபருடன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன் பிறகு வீடு திரும்பிய அந்த பெண் யாரிடமும் பேசாமல் மவுனமாக இருந்து வந்தார்.

    இவரது தாயார் ஆஸ்பத்திரி ஒன்றில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். தந்தை நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். அவர்கள் இருவருமே வெளியே சென்றிருந்தனர்.

    அப்போது அந்த இளம்பெண் திடீரென தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவர் தூங்கி விட்டார் என கருதி யாரும் அவரை பார்க்கவில்லை.

    காலையில் வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்து அவரது தாயார் அந்த அறைக்கு சென்று பார்த்தார்.

    மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது அப்போதுதான் தெரிய வந்தது. அவர் தூக்கில் தொங்கும் காட்சிகளை போக்கஸ் செய்து அவரது செல்போன் வைக்கப்பட்டு இருந்தது.

    அதை ஆய்வு செய்த போது, அந்த பெண் தற்கொலையை பேஸ்புக்கில் ‘லைவ்’வாக நேரடி ஒளிபரப்பு செய்திருந்தது தெரியவந்தது. தற்கொலை செய்வதை காதலன் பார்க்கும் வகையில் அவர் ஏற்பாடு செய்திருந்ததாக தெரிகிறது.

    இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலனிடம் விசாரணை நடக்கிறது. #Tamilnews
    இலங்கையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மதக்கலவரத்துக்கு பிறகு இலங்கையில் செயல்பட்டு வரும் பேஸ்புக் நிறுவனம் சிங்கள மொழி தெரிந்தவர்களை அதிகளவில் பணியில் சேர்த்து வருகிறது. #SriLankariots #Facebook
    கொழும்பு :

    இலங்கையில் கடந்த மார்ச் மாதம் பௌத்தர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையியே ஏற்பட்ட வன்முறை காரணமாக அந்நாடு முழுதும் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டது. மேலும், வன்முறை ஏற்படவும் அது மேலும் பரவவும் பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட எரிச்சலூட்டும் வார்த்தைகள் முக்கிய காரணமாக அமைந்தன.

    மேலும், சிங்கள மொழியில் சமூக விரோதிகள் பதிவிட்ட விரும்பத்தகாத மற்றும் எரிசலூட்டும் சிங்கள மொழி வார்த்தைகளை அடையாளம் கண்டு நீக்கவில்லை என ஒரு வார காலத்திற்கு பேஸ்புக்கை முடக்கி அந்நாட்டு தொலைத்தொடர்புத்துறை உத்தரவிட்டது. வன்முறையில் இருந்து இலங்கை சுமூக நிலைக்கு திரும்பிய பின்னர் பேஸ்புக் நிறுவனம்  நடந்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டது. 

    இந்நிலையில், இது போன்ற நிலை வருங்காலத்தில் மேலும் ஏற்படாமல் தடுக்க அந்நாட்டில் இயங்கி வரும் பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிங்கள மொழி கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சிங்கள மொழி தெரிந்தவர்களை அதிகளவில் பேஸ்புக்கில் நிறுவனம் தற்போது பணியில் அமர்த்தி வருகிறது.  #SriLankariots #Facebook
    சிங்கப்பூர் தியேட்டரில் இருந்து காலா படத்தை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் இந்தியா முழுவதும் இன்று(வியாழக்கிழமை) திரைக்கு வருகிறது. வெளிநாடுகளிலும் அதிக தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. சில நாடுகளில் நேற்று இரவு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. ரசிகர்கள் ஏராளமானோர் வந்து படம் பார்த்தார்கள். படம் பற்றிய விமர்சனங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டபடி இருந்தனர்.

    காலா படம் பற்றிய தகவல்கள் டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் டெரிண்டிங்கில் இருந்தது. இந்த நிலையில் சிங்கப்பூரில் உள்ள ஒரு தியேட்டரில் இருந்து காலா படம் பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    படம் பார்க்க சென்ற ஒருவர் தியேட்டரில் ஓரமாக உட்கார்ந்து படத்தை பேஸ்புக்கில் அப்படியே நேரடியாக ஒளிபரப்பு செய்து கொண்டு இருந்தார். 40 நிமிடங்கள் காலா படக்காட்சிகள் பேஸ்புக்கில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. இது திரை உலகினரையும், ரஜினி ரசிகர்களையும் அதிர்ச்சி ஆக்கியது.

    இது பற்றி சிங்கப்பூர் வினியோகஸ்தர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று பேஸ்புக்கில் காலா படத்தை ஒளிபரப்பிய வாலிபரை கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் பிரவீன் என்பது தெரிய வந்தது. பேஸ்புக்கில் காலா படத்தை ஒளிபரப்பி கைதானவர் பற்றிய தகவலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 
    கதுவாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி குறித்த விவரங்களை வெளியிட்ட கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உட்பட அனைத்து சமூக ஊடகங்களுக்கும் டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #delhihighcourt #kathuacase
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார், ஒரு சிறுவன் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகைப்படங்கள், குடும்ப விவரங்களை வெளியிடக்கூடாது என அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கை நிறுவனங்களிடம் டெல்லி ஐகோர்ட் கேட்டுக்கொண்டது. ஆனால் கதுவா கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது.

    இதைத்தொடர்ந்து, டெல்லி ஐகோர்ட் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில், கூகுள் மற்றும் மற்ற சமூக ஊடகங்கள் இது போன்ற தகவல்களை பதிவேற்றம் செய்வதன் மூலம் நாட்டிற்கு கேடுவிளைவிக்கின்றனர். இந்தியாவிற்கு என்று தனிப்பெருமை உள்ளது.

    சிறுமியின் புகைப்படங்களை வெளியிட்டது அவள் குடும்பம் மற்றும் நாட்டிற்கு செய்யும் அநியாயமாகும். இதற்கு அனுமதி கிடையாது. இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தது.

    இதற்குமுன் கதுவா சிறுமி குறித்து விவரங்களை வெளியிட்ட பத்திரிக்கை நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #delhihighcourt #kathuacase

    பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார். #europeanparliament #markzuckerberg
    பிரசல்ஸ்:

    கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக 8 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், பேஸ்புக் நிறுவனமும் தனது தவறை ஒப்புக்கொண்டது. அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க் மன்னிப்பும் கேட்டார்.

    இந்நிலையில், தகவல் திருட்டு தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆலோசனை நடத்தி உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார்.

    இதுதொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற அவைத்தலைவர் அந்தோனியோ டஜானி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த வாரத்தில் 8 கோடி பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Facebook #europeanparliament #markzuckerberg
    ×