search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99024"

    தேனியில் வாலிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி அருகே கீழக்கூடலூர் சாமாண்டிபுரத்தை சேர்ந்தவர் ரகு(வயது31). இவர் தேனியில் அலுவலகம் வைத்துள்ளார். அப்போது கோவை கே.கே.புதூர் சாய்பாபா காலனியை சேர்ந்த வெற்றிவேல், அவரது மனைவி கலைவாணி ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர்.

    அவர்கள் தாங்கள் ஆஸ்பத்திரிக்கு உபகரணங்கள் சப்ளை செய்யும் ஏஜென்சி வைத்துள்ளதாகவும், அதற்கு பணம் கொடுத்தால் நல்ல லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். இதனைநம்பி ரகு பல்வேறு தவணைகளில் ரூ.7,21,040 பணம் கொடுத்துள்ளார்.

    அதன்பின்பு ரூ.27,135 பணத்தை மட்டும் லாபத்தொகை எனக்கூறி ரகுவிடம் கொடுத்துள்ளனர். ஆனால் அசல் பணத்தை திருப்பித்தரவில்லை. பலமுறை கேட்டும் தம்பதியினர் பணத்தை கொடுக்காததால் இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார்.

    எஸ்.பி உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து வெற்றிவேலை கைது செய்தனர்.

    மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை எல்.ஜி. நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 51). இவரது மகனுக்கு மருத்துவம் படிக்க சீட்டு வாங்கித்தருவதாக அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் ரவிராஜன் (51), அவரது நண்பர் கணேஷ்பாபு என்ற தென்னவன், இவரது மனைவி பிரேமா (51) ஆகியோர் ரூ.10 லட்சம் வாங்கியதாக கூறப்படுகி றது. ஆனால் குறிப்பிட்ட நாளில் மருத்துவச்சீட்டு வாங்கித்தரவில்லை.

    இதனால் கொடுத்த பணத்தை திருப்பித்தருமாறு சுப்புலட்சுமி கேட்டார். ஆனால் பணத்தை கொடுக்காமல் 3 பேரும் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசில் சுப்புலட்சுமி புகார் செய்தார். இதன் பேரில் கல்லூரி பேராசிரியர் ரவிராஜன், கணேஷ்பாபு, பிரேமா ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    துரைப்பாக்கம் சூப்பர் மார்க்கெட்டில் போலி பே.டி.எம். செயலி மூலம் பொருட்கள் வாங்கி மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Arrest #FakePaytmCheating

    சென்னை:

    கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்தி சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்குவது வழக்கம்.

    இப்போது பே.டி.எம். செயலி மூலமாகவும் பொருட்கள் வாங்குவது அதிகரித்துள்ளது. சிறிய வணிக நிறுவனங்களில் தொடங்கி பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரையில் பே.டி.எம். செயலி பயன் பாட்டில் உள்ளது. பொருட்களை வாங்கிய பின்னர் செல்போனில் உள்ள பே.டி.எம். செயலியை பயன் படுத்தி வியாபாரிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்தலாம்.

    இந்த டிஜிட்டல் பரிவர்த் தணையில் மோசடி செய்யப்பட்டுள்ளது. பே.டி.எம்.செயலியை போலியாக உருவாக்கி அதன் முலம் பொருட்களை வாங்கி ரூ.30 ஆயிரம் அளவுக்கு மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை துரைப்பாக்கத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர் வேல்ராஜ். இவரது கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 3 வாலிபர்கள் சென்று பொருட்கள் வாங்கினர். இதற்காக பே.டி.எம். செயலியை பயன்படுத்தி ரூ.30 ஆயிரம் பணமும் செலுத்தினர்.

    ஆனால் பணம் வாங்கிய 3 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து உரிமையாளர் வேல்ராஜின் வங்கி கணக்குக்கு பணம் போய் சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதனைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சூப்பர் மார்க் கெட்டுக்கு மீண்டும் பொருட்கள் வாங்க வந்த போதே பிடிபட்டனர். அவர்களது பெயர் யசாங், கிரண்குமார், செல்லி.

    இதில் கிரண்குமாரும், யசங்கும் கல்லூரி மாணவர்கள். பெங்களூரைச் சேர்ந்த இவர்கள் சென்னையில் தங்கி இருந்து தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இன்னொரு வாலிபரான செல்லி கேரளாவை சேர்ந்தவர். பி.டெக் முடித்துள்ள இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளார். 3 பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். #Arrest #FakePaytmCheating

    சென்னையில் போலி பேடிஎம் செயலி மூலம் பொருட்கள் வாங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்தது தொடர்பாக, கல்லூரி மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். #FakePaytm
    சென்னை:

    சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில், அதே பகுதியில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள் சிலர் அடிக்கடி பொருட்கள் வாங்கி உள்ளனர். இதற்காக பேடிஎம் செயலி மூலம் பணம் செலுத்தி உள்ளனர். ஆனால், பணம் கடைக்காரரின் வங்கி கணக்கிற்கு வந்து சேரவில்லை. பணம் வந்து சேருவதற்கு சிறிது தாமதம் ஆகும் என மாணவர்கள் கூறியதால் கடைக்காரர் அதனை நம்பி சில நாட்கள் கணக்கு பார்க்காமல் இருந்துள்ளார்.

    ஆனால் லட்சக்கணக்கில் பணம் தனது வங்கி கணக்கில் வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் நேற்று முன்தினம், 4 மாணவர்களை பிடித்து துரைப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், போலியான பேடிஎம் செயலி மூலம் பொருட்கள் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து, அவர்கள் போலி பேடிஎம் செயலி மூலம் வேறு எங்கேனும் மோசடியில் ஈடுபட்டனரா, இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இன்று அவர்களுடன் தொடர்புடைய சுமார் 30 மாணவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். #FakePaytm
    புதுவையில் தொழில் அதிபரிடம் வடமாநில தம்பதியர் ரூ.17 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    வடமாநிலத்தை சேர்ந்தவர் உபேந்திர திருப்பதி. இவர் தனது மனைவி தீபா மற்றும் மாமனார் ஸ்டார் ஆகியோருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுவை கோலாஸ் நகரில் தங்கி புதுவை நகர பகுதிகளில் உள்ள பாருடன் கூடிய 2 ஓட்டல்களை லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார்.

    ஓட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இந்த ஓட்டல்களை விலைக்கு வாங்கி நடத்துவதாக கூறி வந்தார்.

    இந்த நிலையில் புதுவை நெல்லித்தோப்பு அண்ணா நகர் 15-வது குறுக்கு தெருவில் வசித்து வரும் தொழில் அதிபர் சுரபதாஸ் என்பவரிடம் ஓட்டலை விற்று விட்டு சொந்த ஊருக்கு செல்ல போவதாக உபேந்திர திருப்பதி கூறினார்.

    இதனை நம்பி ஓட்டலை வாங்க உபேந்திர திருப்பதியிடம் ரூ.17 லட்சத்தை சுரபதாஸ் கொடுத்தார். ஆனால், பணம் வாங்கிய சிலநாட்களில் ஒட்டலை காலி செய்து விட்டு உபேந்திர திருப்பதி குடும்பத்தினருடன் மாயமாகி விட்டார்.

    இதையடுத்து சுரபதாஸ் விசாரித்த போதுதான் அந்த ஓட்டல் உபேந்திர திருப்பதிக்கு சொந்தமானது இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த சுரபதாஸ் இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே மோசடி செய்த தலைமறைவான வட மாநில தம்பதியர் சுவிட்சர்லாந்துக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி புதுவை சேர்ந்த பலரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

    சுமார் ரூ.2 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டி கொண்டு சென்று விட்டதாக தெரிகிறது. அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். மோசடியில் ஈடுபட்ட அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். #tamilnews
    மந்திரி மகள் உள்பட 400-க்கும் மேற்பட்ட பெண்களிடம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    காக்கிநாடா:

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரம் பகுதியை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா (வயது 28). பி.டெக் படித்து வந்த அவர் தன் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    மிகவும் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட அவர் முகநூலில் அழகான வாலிபர்களின் புகைப்படத்தை அனுப்பி, அதை தன்னுடைய படம் என்றும், வசதியான குடும்பதை சேர்ந்தவர் என்றும் நம்ப வைத்து இளம்பெண்களை தன் காதல் வலையில் விழ வைத்தார்.

    நன்கு பழகிய பணக்கார பெண்களிடம் வீடியோ காலில் பேசி தன்னுடைய வியாபாரத்துக்கு அவசரமாக பணம் தேவை என்று கூறி கோடிக்கணக்கில் பணத்தை வாங்கி உள்ளார். மேலும் பல பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம், நகையை பெற்றுள்ளார்.

    அவ்வாறு ஏமாற்றி வாங்கிய பணத்தை கிரிக்கெட் சூதாட்டம், குதிரை பந்தயம் என ஆடம்பர செலவு செய்து வந்தார். அவரிடம் ஏமாந்த பெண்கள் சிலர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஐதராபாத் போலீசாரால் வம்சி கிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.

    பின்னர் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானார். அதன் பிறகும் அவர் பல பெண்களுக்கு காதல் வலைவீசி பணம், நகைகளை பறித்து உள்ளார். மருத்துவ கல்லூரி மாணவி ஒருவரிடம் 6 மாதத்துக்கு முன்பு பணம், நகையை ஏமாற்றி பெற்றுள்ளார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். அவர் மீது ஐதராபாத், கம்மம், நிஜாமாபாத் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 6 மாதங்களில் 25 சிம்கார்டுகளை பயன்படுத்தி பெண்களிடம் பண மோசடி செய்துள்ளார். இந்நிலையில் காக்கிநாடா ரெயில் நிலையத்தில் அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில் தெலுங்கானா மந்திரி ஒருவரின் மகள் மற்றும் ஆந்திர மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் மகள்கள் உள்பட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 400-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி ரூ.4 கோடிக்கும் மேல் வம்சி கிருஷ்ணா பணம் பறித்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    சென்னை கே.கே.நகரில் உள்ள மருந்து கம்பெனியில் ரூ.20 லட்சம் கையாடலில் ஈடுபட்ட பெண் காசாளரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் மருத்துவ உபகரணங்கள் மொத்த விற்பனை நிறுவனம் உள்ளது.

    இதை, ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ரத்னாகர் சாகு என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் கடந்த 7வருடங்களாக காசாளராக பணிபுரிந்து வருபவர் சஸ்மதா ராவுத் (39).

    கடந்த ஓராண்டாக இந்த நிறுவனத்தில் நடைபெற்ற வரவு செலவை சரி பார்த்தனர். இதில் முறைகேடு இருப்பது தெரியவந்தது. ரூ.20 லட்சம் கணக்கில் வரவில்லை.

    இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர், காசாளர் சஸ்மதாவிடம் கேட்டார். ஆனால் அதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. கணக்கும் ஒப்படைக்கவில்லை. எனவே, பணம் கையாடல் செய்ததாக கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார்.

    குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் நடத்திய விசாரணையில் காசாளர் சஸ்மதா ராவுத் பணம் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    திருவாரூர் அருகே வெளிநாடு அனுப்புவதாக கூறி ரூ.23½ லட்சம் பணம் பெற்று ஏமாற்றிய கணவன்-மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கை பகுதியை சேர்ந்தவர் சுதிர்தராஜ். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(வயது55). கொல்லாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி செல்வபாக்ய செந்தில் குமாரி(50). பூந்தோட்டம் உதவிபெறும் நடுநிலைப்பள்ளி ஆசிரியை. இவர்களது மகன் அருண் பாக்கியராஜ். இவர்களது தோழி சுப்புலட்சுமி.

    அருண்பாக்கியராஜ் அடிக்கடி வெளிநாடு சென்று வருவார். இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் வெளிநாடு அனுப்புவதாக முத்துராமலிங்கம், அவரது மனைவி செல்வபாக்ய செந்தில்குமாரி, இவர்களது மகன் அருண்பாக்கியராஜ் மற்றும் சுப்புலட்சுமி ஆகியோர் ஆசை வார்த்தை கூறி பணம் பெற்றுள்ளனர். இவ்வாறு கடந்த 2 வருடங்களாக அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் ரூ.23½ லட்சம் வரை பணம் வாங்கியுள்ளனர்.

    ஆனால் அவர்கள் கூறியபடி யாரையும் இதுவரை வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. இதனால் பணத்தை திரும்ப தரும்படி பலமுறை கேட்டும் தரவில்லை. எனவே வெளிநாடு அனுப்புவதாக கூறி ஏமாற்றிய 4 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறியுள்ளார்.

    அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அரசு பள்ளி ஆசிரியர்களான கணவன்-மனைவி மற்றும் இவர்களது மகன், தோழி உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி செய்து தலைமறைவான தனியார் நிதி நிறுவன உரிமையாளர் குறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை சரவணம் பட்டியை தலைமையிடமாக கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்திற்கு பூ மார்க்கெட், துடியலூர் உள்ளிட்ட மாநகரில் 5 கிளைகளும், அன்னூர் உள்பட புறநகரில் பல கிளைகளும் உள்ளன.

    இந்த நிறுவனத்தினர் மாதத் தவணையில் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இதில் ஏராளமானோர் வாடிக்கையாளர்களாக சேர்ந்து பணம் கட்டினார்கள்.

    கடந்த 2010-ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலில் பணம் கட்டியவர்களுக்கு அதனை வட்டியுடன் திரும்பி கொடுத்து வந்துள்ளனர்.

    பின்னர் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து உள்ளனர். இது குறித்து நிதி நிறுவன உரிமையாளரிடம் கேட்ட போது, சில மாதங்களில் பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறி உள்ளார்.

    கடந்த மே மாதம் முதல் சரவணம்பட்டி தலைமை அலுவலகம் மற்றும் கோவை மாநகர் மற்றும் புறநகரில் உள்ள நிதி நிறுவனத்தில் அனைத்து கிளைகளும் திடீரென மூடப்பட்டது. அங்கு வேலை பார்த்தவர்களும் வேலைக்கு வரவில்லை.

    இந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களது செல்போனை தொடர்பு கொண்டது போது சுவிட்ஆப் என வந்தது. நிதி நிறுவன உரிமையாளர் ரூ. 1½ கோடி வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது.

    இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று கோவை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். ஒண்டிப்புதூரை சேர்ந்த சதிஷ், பூமார்க்கெட் ராஜேஷ், சரவணம் பட்டி விநாயகபுரம் சேதுராமன், விஜயகுமார் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 20 பேர் வந்தனர். அவர்கள் போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யாவை சந்தித்து மனு அளித்தனர்.

    அதில் நிதி நிறுவன உரிமையாளரிடம் இருந்து பணத்தை தங்களுக்கு பெற்று தர வேண்டும் என கூறி உள்ளனர். மனு கொடுக்க வந்தவர்களில் ஒண்டிப்புதூரை சேர்ந்த சதிஷ் ரூ.4½ லட்சம் ஏமாந்ததாக கூறினார்.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும் போது, நாங்கள் குடும்ப செலவு மற்றும் கல்வி, தொழில் உள்ளிட்டவைகளுக்காக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை நிதி நிறுவனத்தில் கட்டி இருந்தோம்.

    சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 1½ கோடி வரை நிதி நிறுவன உரிமையாளர் ஏமாற்றி தலைமறைவாகி விட்டார். எங்கள் பணத்தை மீட்டு தருமாறு போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் அளித்து உள்ளோம் என்றனர்.
    போலி வங்கி கணக்குகள் தொடங்கி 3500 கோடி ரூபாய் முதலீடு செய்த ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இன்று விசாரணைக்கு ஆஜரானார். #Zardariarrestwarrant #Fakeaccountscase #ZardariappearsFIA
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவரும் அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி ஃபர்யால் தல்புர், பாகிஸ்தான் பங்குச்சந்தை முன்னாள் தலைவர் ஹுசைன் லவாய்  உள்பட மொத்தம் 32 பேர் 19 பேர் வங்கிகளில் பினாமி பெயரில் 29 கணக்குகளை தொடங்கி, அவற்றின் மூலமாக சுமார் 3500 கோடி ரூபாய் பணத்தை கள்ளத்தனமாக இடம்மாற்றியதாக கடந்த 2015-ம் ஆண்டு அந்நாட்டின் மத்திய புலனாய்வுதுறை கண்டுபிடித்தது.

    இதன் அடிப்படையில், இவர்கள் மீது வங்கியியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் தலைமறைவாக இருந்து வருவதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கு கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு  வந்தபோது குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிபர் ஆசிப் அலி சர்தாரியை கைது செய்து வரும் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி ஆஜர்படுத்துமாறு கோர்ட் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவுக்கு எதிராகவும் முன் ஜாமின் கோரியும் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஆசிப் அலி சர்தாரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய முடியாதவாறு பாதுகாப்பு ஜாமின் வழங்கி நீதிபதி மியான்குல் ஹசன் அவுரங்கசிப்  உத்தரவிட்டார்.

    இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு குழு அலுவலகத்தில் ஆசிப் அலி சர்தாரி இன்று விசாரணைக்கு ஆஜரானார். 

    கோர்ட்டின் வெளியே காத்திருந்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சர்தாரி, ‘துரதிர்ஷ்டவசமாக என் மீது போடப்பட்டுள்ள இந்த வழக்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட பொய் வழக்காகும். அதிகாரிகள் என்னிடம் என்ன வேண்டுமானாலும் விசாரித்து கொள்ளட்டும். எனது தரப்பிலான உண்மைகள் மூலம் இந்த வழக்கில் இருந்து விடுபட்டு வெளியேறுவேன்’ என தெரிவித்தார். #Zardariarrestwarrant #Fakeaccountscase #ZardariappearsFIA
    வேலை வாய்ப்பு அலுவல கத்தில் இருந்து பேசுவதாக கூறி வாலிபரிடம் ரூ. 75 ஆயிரம் மோசடி செய்ததாக 2 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை புது விளாங்குடி சத்குருநாத் நகரைச் சேர்ந்தவர் அழகப்பன். இவர் கூடல்புதூர் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பேசியதாக கூறிய மர்ம நபர், பழங்காநத்தம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் கிரேடு-1 பணியிடம் காலியாக உள்ளது.

    இந்த பணியிடத்திற்காக உங்களது வேலை வாய்ப்பு பதிவைஅனுப்ப ரூ.12 ஆயிரம் தர வேண்டும் என கூறினார்.

    மேலும் அந்த பணத்தை அழகுராஜா என்பவரது வங்கி கணக்கில் செலுத்தும்படி தெரிவித்தார். அதன்படி நான் ரூ.12 ஆயிரத்தை செலுத்தினேன். அதன் பிறகு பல தவணைகளில் மொத்தமாக ரூ.75 ஆயிரத்து 600 வாங்கி விட்டனர். ஆனால் வேலை வாங்கித்தரவில்லை.

    இதனைத்தொடர்ந்து பழங்காநத்தம் சென்று விசாரித்த போது அப்படி ஒரு அலுவலகமே அங்கு இல்லை என தெரியவந்தது.

    மேலும் என்னிடம் போனில் பேசியவர் சரவணன் என்பதும் தெரிய வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து கூடல்புதூர் போலீசார் விசாரணை நடத்தி சரவணன், அழகுராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    சேலத்தில் தங்கம், வெள்ளி வாங்கி தருவதாக கூறி நகைக்கடை அதிபரிடம் ரூ. 7½ கோடி மோசடி செய்த தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    கொண்டலாம்பட்டி:

    சேலம், செவ்வாய்ப்பேட்டை சாய்பாபா தெருவை சேர்ந்தவர் துளசிராம். இவரது மகன் லட்சுமிகாந்த் (வயது 26). இவர் மொத்தமாக வெள்ளி, தங்கத்தை வாங்கி ஆபரணமாக செய்து, விற்பனை செய்து வருகிறார்.

    இவர் சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கரிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான், பேர்லேண்ட்ஸ் ஏ.ஏ.தெருவில் உள்ள என்.எஸ். வில்லியன் பெயரில் நகைக்கடை நடத்தி வரும் அம்ஜித் சிங்கவி மற்றும் அவரது தந்தை மகேந்திரசந்த் சிங்கவி ஆகியோரிடம் இருந்து மொத்தமாக வெள்ளி, தங்கம் வாங்கி தொழில் செய்து வந்தேன். கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி முதல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி வரை தங்கம், வெள்ளி மொத்தமாக கொள்முதல் செய்வதற்காக வங்கி மூலம் ரூ.7 கோடியே 58 லட்சத்து 36 ஆயிரத்து 750 அவர்களிடம் செலுத்தினேன்.

    இதனை தொடர்ந்து அவர்கள் தங்கம், வெள்ளி ஆகியவை கொடுக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

    இது குறித்து விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு போலீஸ் கமி‌ஷனர் சங்கர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் அம்ஜித் சிங்கவி மற்றும் அவரது தந்தை மகேந்திரசந்த் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் மரியமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×