search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    • காலை 6 மணிக்கு துவங்கிய வார சந்தையில் தற்போது விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் வருகையால் களை கட்டியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகேயுள்ள குந்தாரப்பள்ளி புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமைதோறும் ஆடு, மாடு, கோழி விற்பனை நடைபெற்று வருகிறது.

    தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், திருச்சி மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர்.

    செம்மறியாடு, வெள்ளாடு, மறிக்கை ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு துவங்கிய வார சந்தையில் தற்போது விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, பொள்ளாச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா, பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆடுகளை வாங்க குவிந்துள்ளனர்.

    ஒரு கிடா ஆடு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் பெண் ஆடுகள் அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஆடுகள் வாங்கிச்செல்லும் வியாபாரிகள் கூடுதல் விலை விற்பதால் ஆட்டு இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்றும் வழக்கமாக ஒரு கிலோ 750 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் தற்போது பண்டிகை காலங்களில் ரூ. 900க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

    சராசரியாக தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் சுமார் ரூ. 7 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் வருகையால் அந்த பகுதியே களை கட்டியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'காட்பாதர்' என்ற பீர் பாட்டில் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.
    • வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் தற்போது புதிதாக 2 வகைகளில் பீர் பாட்டில்களை அறிமுகம் செய்துள்ளது. குடிமகன்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த பீர் பாட்டில்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

    தற்போது 'தண்டர்போல்ட் ஸ்டிராங்' என்ற புதிய வகை பீர் பாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் நேற்று முன்தினம் இரவு முதல் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பீர் பாட்டிலின் விலை ரூ.160 ஆகும். மேலும் மற்றொரு ரகமாக 'காட்பாதர்' என்ற பீர் பாட்டிலும் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.

    இந்த புதிய பீர் பாட்டில் வகைகளை தீபாவளி விருந்தாக குடிமகன்கள் பார்க்கிறார்கள். வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

    • சென்னை - தூத்துக்குடி இடையே தீபாவளி சிறப்பு ெரயில் இயக்க தெற்கு ெரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
    • சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 10 மற்றும் 12 ஆகிய நாட்களில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.

    மதுரை

    தென்னக ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - தூத்துக்குடி இடையே ஒரு சிறப்பு ெரயில் இயக்க தெற்கு ெரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி சென்னை - தூத்துக்குடி சிறப்பு ெரயில் (06001) சென்னை எழும்பூரி ல் இருந்து நவம்பர் 10 மற்றும் 12 ஆகிய நாட்களில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.

    மறு மார்க்கத்தில் தூத்துக்குடி - சென்னை சிறப்பு ெரயில் (06002) நவம்பர் 11 மற்றும் 13 ஆகிய நாட்களில் தூத்துக்குடியில் இருந்து மாலை 03.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ெரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்ப ரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ெரயில் நிலை யங்களில் நின்று செல்லும். இந்த ெரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு குறைந்த கட்டண படுக்கை வசதி பெட்டி, 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு சரக்கு மற்றும் ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆம்னி பஸ்களைப் பொறுத்தவரை, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் தற்காலிக பஸ் நிலையங்கள் வாயிலாக பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இயக்கப்பட்ட வழக்கமான ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் மூலம் 1.50 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை:

    நாளை மறுநாள் (12-ந்தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு பயணமாகும் வகையில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அதன்படி நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயங்கத் தொடங்கின. சென்னையை பொறுத்தவரை பிற்பகல் முதலே போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    இதற்கு அவ்வப்போது பெய்து வரும் மழையும் காரணமாக இருந்தது. அதே நேரம், மாதவரம் பஸ் நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், பூவிருந்தவல்லி பைபாஸ் (மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை), கோயம்பேடு பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரவர் செல்லும் ஊர்களுக்கு ஏற்ப பஸ் நிலையங்களுக்குச் சென்று பயணத்தைத் தொடர்ந்தனர்.

    இந்த பஸ் நிலையங்களை இணைக்கும் வகையில் கோயம்பேட்டில் இருந்து மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் தென் மாவட்டம் உள்ளிட்ட சில ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் மட்டுமே வருகை தந்தனர்.

    ஆம்னி பஸ்களைப் பொறுத்தவரை, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் தற்காலிக பஸ் நிலையங்கள் வாயிலாக பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து திருப்போரூர்-செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.

    பஸ் இயக்கம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் 643 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் 2,734 பஸ்களில் 1 லட்சத்து 36 ஆயிரம் பயணிகள் பயணம் செய்தனர்.

    அதே நேரம், சென்னையில் இருந்து பயணிக்க 19,858 பேர் முன்பதிவு செய்திருந்தனர். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான பஸ்கள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிவட்டச் சாலை வழியாக வண்டலூர் சென்றடையும் வகையில் இயக்கப்பட்டன.

    இந்த பஸ்களில் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தத்தில் ஏறிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

    ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 மற்றும் 044 2474 9002, 044 2628 0445, 044 2628 1611 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

    அரசு போக்குவரத்துக் கழக பஸ் இயக்கம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க 1800 599 1500 என்ற கட்டணமில்லா உதவி எண் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை எளிதில் நினைவில் வைத்து கொள்ள இயலவில்லை என்று பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், 149 எனும் புதிய உதவி எண் மூலமாக மக்கள் மற்றும் பயணிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

    இதே போல சென்னையில் இருந்து 1,320 ஆம்னி பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. இதில் 51 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்று 1,680 பஸ்கள் இயக்கப்படுகிறது. அதில் 67 ஆயிரம் பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.

    மேலும் சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இயக்கப்பட்ட வழக்கமான ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் மூலம் 1.50 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் ரெயில்களில் நேற்று ஒரே நாளில் சுமார் 3.50 லட்சம் பேர் வரை பயணம் செய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    • புகழூர் நகர தி.மு.க. சார்பில் கட்சி பொறுப்பாளர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய நகராட்சி தலைவர்
    • உறுப்பினர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், கழக மூத்த முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 24 வார்டு பகுதிகளுக்கும் புகழூர் நகர கழக செயலாளரும், புகழூர் நகராட்சி தலைவருமான சேகர் என்கிற குணசேகரன் நேரில் சென்று, வார்டு கவுன்சிலர்கள், வார்டு கழக செயலாளர், கழக நிர்வாகிகளுக்கும், கழக மூத்த முன்னோடிகளுக்கும் தீப ஒளி திருநாளை முன்னிட்டு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில், நகர்மன்ற துணைத் தலைவர் பிரதாபன், நகர கழக அவை தலைவர் வாங்கிலி, மாவட்ட தொமுச தலைவர் அண்ணாவேலு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் நவாஸ்கான், நகர கழக பொருளாளர் கந்தசாமி, நகர கழக துணைச் செயலாளர் இம்ரான்கான், அனைத்து வார்டு கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பூத் கமிட்டி முகவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், கழக மூத்த முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • தீபாவளி பண்டிகையை ஒட்டி உயர்ந்திருந்த தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.
    • சென்னையில் 1000-க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் ஜவுளி கடைகளில் தங்களுக்கு தேவையான ஆடைகளை தேர்ந்தெடுத்து வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    அதே நேரத்தில் தீபாவளி அன்று மாலையில் வீடுகளில் லட்சுமி குபேர பூஜைக்கும் மக்கள் தயாராகி வருகிறார்கள். அன்றைய தினம் நகைகளை வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்தால் கூடுதலாக மேலும் நகைகள் சேரும் என்பது நம்பிக்கை. இதன்படி சென்னையில் பெரும்பாலான வீடுகளில் லட்சுமி குபேர பூஜை நடைபெறுவது வழக்கம்.

    இதனால் அட்சய திருதியை நாளில் நகை வாங்குவது போன்று தீபாவளி பண்டிகையையொட்டியும் நகை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் இந்த தீபாவளிக்கும் நகைகளை வாங்க மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்படுகிறது.

    கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி ஒரு பவுன் நகை ரூ.37,920 ஆக இருந்தது. ஆனால் தற்போது ஒரு பவுன் தங்க நகையின் விலை ரூ.44 ஆயிரத்து 920 ஆக உள்ளது. இதன் மூலம் பவுனுக்கு ரூ.7ஆயிரம் அதிகரித்துள்ள போதிலும் மக்கள் மத்தியில் நகைகளை வாங்குவதில் இருக்கும் ஆர்வம் குறையாமலே இருக்கிறது என்கிறார்.

    சென்னை நகை வியாபாரிகள் சங்கத் தலைவரான ஜெயந்திலால் ஜலானி இது தொடர்பாக அவர் கூறும்போது, தீபாவளியை ஒட்டி மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் தீபாவளி போனஸ் வாங்குபவர்கள், தீபாவளியை கணக்கிட்டு நகை, சுவீட்டுகளை வாங்க சீட்டு போட்டு வைத்திருப்பார்கள். இதன் மூலம் சேரும் தொகையை வைத்து தீபாவளி பண்டிகையொட்டி நகையை வாங்குவதற்கு எப்போதுமே மக்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

    தங்க நகையின் விலை உயர்ந்துள்ள போதிலும் இந்த ஆண்டும் எப்போதும் போல விற்பனை அதிகரிக்கும் என்று நினைக்கிறோம். 30 சதவீதம் வரையில் தங்க நகைகள் இந்த ஆண்டு விற்பனையாக வாய்ப்பிருப்பதாக ஜெயந்திலால் ஜலானி தெரிவித்தார்.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி உயர்ந்திருந்த தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் பவுனுக்கு ரூ.800 என்கிற அளவுக்கு தங்கத்தின் விலை குறைந்து இருக்கிறது.

    ரூ.45 ஆயிரத்தை தாண்டி இருந்த தங்கத்தின் விலை தற்போது குறைந்திருப்பதாலும் தீபாவளியையொட்டி தங்கம் வாங்கினால் செல்வம் செழிக்கும் என்ற நம்பிக்கையினாலும் பொதுமக்கள் மத்தியில் தங்கம் வாங்குவதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளதாகவே நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் நகைக்கடைகளில் அதிக அளவில் தங்க நகைகள் விற்பனையாவதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னையில் 1000-க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளன. இந்த நகைக்கடைகளிலும் மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் இந்த தீபாவளிக்கு வழக்கமான தங்க விற்பனையை விட கூடுதலாக நகை விற்பனையாகும் என்பதால் புதுப்புது டிசைன்களில் தங்க நகைகள் வந்து உள்ளன.

    தீபாவளிக்கு எப்போதுமே வழக்கமான விற்பனையைவிட 30 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரிக்கும் இந்த ஆண்டும் அதே போன்று விற்பனை இருக்கும் என்று நம்புகிறோம் எனவும் இதன் மூலம் ரூ.500 கோடி தாண்டி நகை விற்பனையாகும் என்றும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    குறிப்பாக ஆண்கள், பெண்கள் இருவரையும் கவரும் வகையில் புதிய டிசைன் வகைகளும் விற்பனைக்காக வந்துள்ளன. இப்படி தங்க நகைகளை தீபாவளியொட்டி வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் மக்கள் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாகவே நகைகளை வாங்கி வருகிறார்கள் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த தீபாவளிக்கு 1,500 கிலோ அளவுக்கு தமிழகம் முழுவதும் நகைகள் விற்பனையாக வாய்ப்பு இருப்பதாகவும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம்.
    • வியாபாரிகள் ஆடுகளை வாங்கி தாங்கள் கொண்டு வந்த லாரி, வேன் போன்றவைகளில் ஏற்றி சென்றனர்.

    வேப்பூா்:

    கடலூர் மாவட்டம் பெரியநெசலூர், குளவாய், காட்டு மயிலூர், சிறுப்பாக்கம், அடரி, கழுதூர், கண்டப்பன் குறிச்சி, கொத்தனூர் உள்ளிட்ட 50 கிராம பகுதியில் இருந்து விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்துக்கு ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்துவருகின்றனர். அவர்கள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்ய வெள்ளிக்கிழமை தோறும் வேப்பூரில் நடைபெறும் ஆட்டு சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாட இருக்கும் நிலையில் வேப்பூரில் இன்று ஆட்டு சந்தை நடைபெற்றது. இங்கு ஆடுகளை திருச்சி, சென்னை, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் வாங்கி சென்றனர். கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு ,கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு, சிவபாடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தது.

    ஒரு ஆடு 4 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று வழக்கத்தை விட விலை 500 முதல் ஆயிரம் வரை ஒரு ஆட்டின் விலை கூடுதலாக விற்கப்பட்டது.

    தீபாவளி பண்டிகை என்பதால் அதிகாலை 1 மணி முதல் 7 மணிக்குள் 6 மணி நேரத்துக்குள் சந்தை வளாகத்தில் உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது.

    ரூ. 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்து உள்ளதாக தெரிவித்தனர். அதிக விலைக்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் ஆட்டு சந்தை மற்றும் கருவாட்டு சந்தை பிரபலமானது. செஞ்சி கருவாட்டு சந்தையில் வியாபாரம் செய்த வியாபாரி ஒருவர் விழுப்புரத்தில் பிரபல கல்வியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் ஆட்டு சந்தையும் பிரபலமாக உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள். இன்று நடந்த ஆட்டு சந்தையில் ஆடுகள் அமோகமாக விற்பனையானது.

    அதிகாலையிலேயே கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதேபோல் வியாபாரிகளும் புதுவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, செங்கல்பட்டு, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலையிலேயே ஆடுகளை கொள்முதல் செய்ய வந்திருந்தனர். ஆடுகள் வரவும் அதிகமாக இருந்தது.

    வியாபாரிகளும் அதிகமாக இருந்ததால் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. வியாபாரிகள் ஆடுகளை வாங்கி தாங்கள் கொண்டு வந்த லாரி, வேன் போன்றவைகளில் ஏற்றி சென்றனர்.

    இந்த வார சந்தையில் ஒரு ஆட்டின் விலை குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து அதிகப்பட்சம் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இந்த சந்தையில் சுமார் ரூ.6 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளதாக ஆடுகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
    • அதிகளவில் கூட்டம் கூடியதால் சந்தை நடைபெறும் ஆட்டுச்சந்தையில் கடும் இடநெருக்கடி உண்டானது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுசந்தை தென் மாவட்ட அளவில் நடைபெறும் பெரிய ஆட்டுசந்தையாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் 8 ஆயிரம் முதல் 10 ஆடுகள் வரை விற்பனையாவது வழக்கம்.

    இந்தநிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகையையொட்டி இன்று சிறப்பு ஆட்டுச்சந்தை நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த சந்தை நண்பகல் 11 மணி வரை நடைபெற்றது. இதில் உள்ளூர் ஆடுகளை தவிர ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலில் இருந்தும் லாரிகளில் பல ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஆடுகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குவிந்தனர்.

    ஆடுகளை வாங்க மதுரை, விருதுநகர், சிவகாசி, கம்பம், உசிலம்பட்டி, வத்தலக்குண்டு, ராஜபாளையம், சிவகங்கை, காரைக்குடி பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாாிகள் வந்திருந்தனர். இதனால் சந்தை நடைபெற்ற ஆட்டுச்சந்தை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதுகுறித்து ஆடு விற்பனையாளர்கள் கூறுகையில் தீபாவளி, பொங்கல் மற்றும் ரம்ஜான் பண்டிகை காலங்களில் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் அதிகளவில் ஆடுகள் விற்பனையாவது வழக்கம்.

    இந்தாண்டு தீபாவளி நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஆடுகள் வாங்க ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளனர். இதில் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையில் ஆடுகள் விற்பனையாகியுள்ளது. அதே போல் ஆடுகளின் விலையும் அதிகரித்துள்ளது. 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்தாண்டை விட இந்த ஆண்டு ஆடுகளின் விலை ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளதாகவும் ஆடுகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். தீபாவளி சிறப்பு ஆட்டுச்சந்தையான இன்று ஒருநாள் மட்டும் சுமார் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. அதிகளவில் கூட்டம் கூடியதால் சந்தை நடைபெறும் ஆட்டுச்சந்தையில் கடும் இடநெருக்கடி உண்டானது.

    எனவே நகராட்சி நிர்வாகம் ஆட்டுச்சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். தீபாவளியையொட்டி கடந்த சில வாரங்களாக ஆடுகளின் விலை அதிகரித்து வந்ததாகவும் தீபாவளி முடிந்த பிறகு ஆடுகளின் விலையும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் கோழி விற்பனையும் நடைபெறுவது வழக்கம். ஆட்டுச்சந்தையின் வாசல் பகுதியில் ஏராளமான கோழி வியாபாரிகள் நாட்டு கோழிகள், சேவல்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதனையும் ஏராளமானோர் வாங்கி சென்றனர்.

    • கேரளா மாநிலத்தில் இருந்து நீண்ட காதுகளை உடைய ஜமுனா பாரி ரக ஆடுகள் அதிகம் விற்பனைக்கு வந்திருந்தன.
    • ஆடுகளை வாங்குவதற்காக அதிகாலை 4 மணி முதலே நூற்றுக்கணக்கான வியாபாரிகள் குவிந்தனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

    அதிகாலையில் தொடங்கும் விற்பனையில் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம். புரட்டாசி மாதம் என்பதால் கடந்த சில வாரங்களாக ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்தது. இந்தநிலையில் நாளை மறுநாள் (12-ந் தேதி) தீபாவளி பண்டிகை என்பதால் பொள்ளாச்சி வாரச்சந்தைகளில் நேற்று ஆடுகள் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    தமிழகத்தில் நாட்டு ஆடுகள் குறைவாக விற்பனைக்கு வந்திருந்தன. கேரளா மாநிலத்தில் இருந்து நீண்ட காதுகளை உடைய ஜமுனா பாரி ரக ஆடுகள் அதிகம் விற்பனைக்கு வந்திருந்தன. ஆடுகளை வாங்குவதற்காக அதிகாலை 4 மணி முதலே நூற்றுக்கணக்கான வியாபாரிகள் குவிந்தனர். 5 கிலோ எடையுள்ள ஆடு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை ஆனது. 20 கிலோ எடையுள்ள ஆடு ரூ.17 ஆயிரம் முதல் ரூ.1 ஆயிரம் வரை விற்பனையானது. பொள்ளாச்சியில் சுமார் ரூ.2.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • காஞ்சிபுரம், ஆரணி பட்டு, தர்மாவரம் திருபுவன பட்டு என பல்வேறு ஆடைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    • ஆடை ரகங்களுக்கு 5 முதல் 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காங்கயம் ரோடு மற்றும் பல்லடம் ரோட்டில் தி திருப்பூர் சில்க்ஸ், எம்.எஸ்.நகரில் திருப்பூர் கணபதி சில்க்ஸ், அவினாசி ரோட்டில் திருப்பூர் ஸ்ரீமருதர் சில்க்ஸ் என பல இடங்களில் கிளைகளுடன் செயல்படும் தி திருப்பூர் சில்க்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை யொட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடியில் ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. 4 பிளவுஸ் பிட் ரூ.99-க்கும், ஒருகாட்டன் நைட்டி ரூ.149-க்கும், ஒரு மேஜிக் கிரேப் சேலை, ரூ.199-க்கும், ஒரு பேன்சி டாப் ரூ.149-க்கும், ஒரு லெக்கின்ஸ் ரூ.99-க்கும், பட்டியாலா சுடிதார் செட் ரூ.499-க்கும், ஒரு சுடிதார் மெட்டீரியல் ரூ.249-க்கும், காட்டன் மிடி ரூ.349-க்கும் வழங்கப்படுகிறது.

    இதுபோல் 4 பார்மல் சட்டை ரூ.999-க்கும், 3 கேசுவல் சட்டை ரூ.999-க்கும், 3 காட்டன் பேண்ட் ரூ.999-க்கும், 2 லைக்ரா ஜீன்ஸ் பேண்ட் ரூ.750-க்கும், ஒரு கலர் வேட்டி, சட்டை(மேட்சிங் காம்போ) ரூ.650-க்கும், மணமகன் பட்டுவேட்டி, சட்டை, கோட்சூட், ஷர்வாணி, மணமகள் காஞ்சிபுரம், ஆரணி பட்டு, தர்மாவரம் திருபுவன பட்டு என பல்வேறு ஆடைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.4999-க்குமேல் ஆடைகள் வாங்கினால் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது. இது பற்றி நிர்வாகத்தினர் கூறுகையில், ஆடை ரகங்களுக்கு 5 முதல் 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.

    • கொரோனாவிற்கு முன்பு சில ஆண்டுகளாக வியாழக்கிழமை தோறும் நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
    • சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் நெல்லைக்கு சில சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டன.

    தென்காசி:

    வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அனைத்து தென்மாவட்ட ரெயில்களும் நிரம்பி வழிகிறது.

    தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரெயில்களான கன்னியாகுமரி, முத்துநகர், திருச்செந்தூர், அனந்தபுரி, நெல்லை, பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில், பாண்டியன் உள்ளிட்ட அனைத்து விரைவு ரெயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து ஒவ்வொரு ரெயிலிலும் காத்திருப்பு பட்டியல் எண்ணிக்கை 300-க்கும் மேல் உள்ளது.

    இந்நிலையில், சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் நெல்லைக்கு சில சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் தென்காசிக்கு ஒரு சிறப்பு ரெயில் கூட இயக்கப்படாதது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

    நெல்லையில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல்லை - பிலாஸ்பூர் ரெயில் பெட்டிகளை கொண்டு கொரோனாவிற்கு முன்பு சில ஆண்டுகளாக வியாழக்கிழமை தோறும் நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது.

    தற்போது அதே காலிப்பெட்டிகளை கொண்டு தென்காசி வழியாக தீபாவளி சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அந்த ரெயிலை நெல்லையில் இருந்து நேர்வழியில் தற்போது சிறப்பு ரெயிலாக இயக்குவது வருத்தமளிக்கிறது.

    சேரன்மகாதேவி, கல்லிடை, அம்பை, கடையம், பாவூர்சத்திரம் ரெயில் நிலையங்களின் நடைமேடைகளில் 17 பெட்டிகள் மட்டுமே நிறுத்த முடியும் என்பதால் 22 பெட்டிகள் கொண்ட பிலாஸ்பூர் ரெயில் பெட்டிகளை வைத்து தென்காசி வழியாக சிறப்பு ரெயில் இயக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    எனவே உடனடியாக இந்த 5 ரெயில் நிலையங்களில் நடைமேடைகளை நீட்டிப்பதோடு மட்டுமல்லாமல் தீபாவளி முடிந்து சென்னை செல்வதற்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 12-ந்தேதி நடக்கிறது
    • மாலையில் தோமாலை சேவையும் இரவு ஏகாந்த சேவையும் நடக்கிறது.

    கன்னியாகுமரி, நவ.9-

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.

    இங்கு ஐப்பசி மாதத்தில் வரும் நரக சதுர்த்தி அன்று தீபாவளி ஆஸ்தானம் திருப்பதியை போன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி ஆஸ்தானம் நிகழ்ச்சி வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

    இதையொட்டி அன்று காலையில் சுப்ரபாதம் நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு புதிய பட்டாடை அணிவித்து பல வண்ண மலர்களால் அலங்கரித்து பூலங்கி சேவை நடக்கிறது. அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் அர்ச்சகர்கள் பாராயணம் பாடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலையில் தோமாலை சேவையும் இரவு ஏகாந்த சேவையும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி தலைமையில் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

    ×