search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலிபான்கள்"

    • ஒரு வருடத்துக்கு பிறகு சினிமா தியேட்டர்களை திறக்க தலிபான்கள் அனுமதி அளித்துள்ளனர்.
    • பெண்கள் சினிமாவில் நடிக்க தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    காபூல்:

    20 வருட போருக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றினார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்து ஒரு வருடம் முடிந்துள்ளது.

    தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அவர்கள் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். பெண்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று கூறியுள்ளனர்.

    பெண்கள் வெளியே வந்தால் உடலை முழுவதும் மூடியபடி வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பெண்கள் மேல்நிலை கல்வி கற்க தடை பிறப்பித்துள்ளனர். கல்விக்காக வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சினிமா தியேட்டர்களையும் மூடிவிட்டனர். இந்த நிலையில் ஒரு வருடத்துக்கு பிறகு சினிமா தியேட்டர்களை திறக்க தலிபான்கள் அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்துக்கு பிறகு மீண்டும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன.

    ஆனாலும் பெண்கள் சினிமாவில் நடிக்க தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்படும் நிலையில் அங்கு 37 சினிமா படங்களும், சில ஆவணப்படங்களும் திரையிட தயாராக உள்ளன.

    ஆனால் இந்த அனைத்து படங்களிலும் நடிகையாக அதிபா முகமது என்ற பெண் மட்டுமே நடித்துள்ளார்.

    சர்வதேச நிதியமும், உலக வங்கியும் கூட ஆப்கானிஸ்தானுக்கு எந்த நிதி உதவியும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டன.
    காபூல் :

    ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. எந்த நேரமும் துப்பாக்கியும், கையுமாக அலைந்து கொண்டிருக்கிற தலிபான்களின் நிர்வாகம் அங்கு வந்து விட்டது. தலிபான்கள் அங்கு ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததைத்தொடர்ந்து, பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஆப்கானிஸ்தானின் வெளிநாட்டு சொத்துகளை அமெரிக்க ரிசர்வ் வங்கியும், ஐரோப்பிய மத்திய வங்கிகளும் முடக்கி உள்ளன. சர்வதேச நிதியமும், உலக வங்கியும் கூட ஆப்கானிஸ்தானுக்கு எந்த நிதி உதவியும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டன.

    இதனால் ஆப்கானிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. இந்த நிலையில் புதிய நெருக்கடியாக, அங்கு வெளிநாட்டு பணத்தை பயன்படுத்துவதற்கு தலிபான்கள் அதிரடியாக தடை விதித்து உள்ளனர். இதற்கான அறிவிப்பை தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “அனைத்து குடிமக்களும், கடைக்காரர்களும், வியாபாரிகளும், தொழில் அதிபர்களும், பொதுமக்களும் இனி எல்லா பரிமாற்றங்களையும் ஆப்கானியைக்கொண்டு (ஆப்கானிஸ்தான் பணம்) மட்டுமே செய்ய வேண்டும். வெளிநாட்டு பணங்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. யாரேனும் மீறி பயன்படுத்தினால் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது வரும்” என கூறி உள்ளார்.

    பொருளாதார நிலைமையையும், தேசிய நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலிபான்கள் கூறி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடைகளில், சந்தைகளில் அமெரிக்க டாலர் பரவலாக புழக்கத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
    ஹைபத்துல்லா அகுந்த்சாதா அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக பலமுறை வதந்திகள் பரவின. அண்மையில் கூட தலிபான்களுக்குள் ஏற்பட்ட உள்மோதலில் அவர் பலியானதாக செய்திகள் வெளியாகின.
    காபூல் :

    தலிபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவரான முல்லா உமரின் மரணத்துக்கு பிறகு 2016-ம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் உச்ச அதிகாரம் படைத்த தலைவராக இருந்து வருபவர் ஹைபத்துல்லா அகுந்த்சாதா. இவர் அந்த அமைப்பின் ஆன்மீக தலைவராகவும் உள்ளார். ஆனால் இவர் ஒருபோதும் பொதுவெளியில் தோன்றியது கிடையாது. எங்கு இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்பது மர்மமாகவே இருந்து வந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பிறகு கூட ஹைபத்துல்லா அகுந்த்சாதா வெளியில் தலைகாட்டவில்லை.

    அதே வேளையில் தலிபான்கள் தலைமையில் அமையும் புதிய அரசியல், மதம் மற்றும் ராணுவ விவகாரங்கள் மீதான இறுதி முடிவை எடுக்கும் உச்ச அதிகாரம் படைத்த தலைவராக ஹைபத்துல்லா அகுந்த்சாதா இருப்பார் என தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்தது. முன்னதாக ஹைபத்துல்லா அகுந்த்சாதா அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக பலமுறை வதந்திகள் பரவின. அண்மையில் கூட தலிபான்களுக்குள் ஏற்பட்ட உள்மோதலில் அவர் பலியானதாக செய்திகள் வெளியாகின.

    இந்த நிலையில் இந்த வதந்திகளை பொய்யாக்கும் வகையில் முதல் முறையாக தலிபான் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்சாதா பொதுவெளியில் தோன்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. காந்தஹார் மாகாணத்தில் உள்ள ஒரு மதரசா பள்ளிக்கூடத்துக்கு சென்று, அங்கு தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றியதாக தலிபான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஹைபத்துல்லா அகுந்த்சாதா வருகையையொட்டி அந்த இடத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும், வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
    போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு நிதியளிப்பதாக தெரிவித்துள்ள சீனா, அண்டை நாடான பாகிஸ்தான் வழியாக சீன சந்தைகளுக்கு ஆப்கானிஸ்தானின் ஏற்றுமதிகளை எடுத்து செல்லவும் உறுதியளித்துள்ளது.
    காபூல் :

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையில் அமைந்துள்ள இடைக்கால அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை. சீனாவும் பாகிஸ்தானும் மட்டுமே தலிபான்களுடன் நல்லுறவை பேணி வருகின்றன. மேலும் தலிபான்களுடன் முறையான உறவை ஏற்படுத்துமாறு உலக நாடுகளுக்கு இந்த 2 நாடுகளும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றன.

    இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசை அங்கீகரிக்க தவறுவது பிராந்தியத்தில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் உலகுக்கும் பிரச்சினைகளை உருவாக்கி விடும் என்று தலிபான்கள் அமெரிக்காவை எச்சரித்துள்ளனர். இதுகுறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதாவது:-

    அமெரிக்காவுக்கு நாங்கள் சொல்லவரும் செய்தி என்னவென்றால், எங்கள் அரசை அங்கீகரிக்காமல் இருப்பது தொடர்ந்தால், ஆப்கானிஸ்தான் பிரச்சினை தொடரும். அது பிராந்தியத்தின் பிரச்சினை. பின்னர், உலக பிரச்சினையாக கூட மாறும்.

    தலிபான்களும் அமெரிக்காவும் கடந்த முறை போருக்குச் சென்றதற்குக் காரணம் இருவருக்கும் முறையான தூதரக உறவுகள் இல்லாததே. போருக்கு காரணமான பிரச்சினைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்திருக்கலாம், அரசியல் சமரசத்தின் மூலமும் தீர்த்திருக்கலாம். எங்கள் அரசுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது ஆப்கன் மக்களின் உரிமையாகும். போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு நிதியளிப்பதாக தெரிவித்துள்ள சீனா, அண்டை நாடான பாகிஸ்தான் வழியாக சீன சந்தைகளுக்கு ஆப்கானிஸ்தானின் ஏற்றுமதிகளை எடுத்து செல்லவும் உறுதியளித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுல் புறநகர் பகுதியில் இன்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். #suicideattack #Kabulsuicideattack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப்படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுல் புறநகர் பகுதி வழியாக சென்ற ராணுவ வாகனங்கள் மீது இன்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி தெரிவித்துள்ளார்.  

    காயமடைந்த சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #suicideattack #Kabulsuicideattack 
    ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹெல்மன்ட் மாகாணத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தின் மீது தலிபான்கள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். #Eightkilled #suicideattack #Afghanelectionrally
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியான ஹெல்மன்ட் மாகாணத்துக்குட்பட்ட  லஷ்கர் கா நகரின் அருகே சாலே முஹம்மது அச்சக்ஸாய்  என்ற வேட்பாளர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டபோது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவீச்சு  தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

    வேட்பாளர் சாலே முஹம்மது அச்சக்ஸாய்  உள்பட பலர் காயமடைந்தனர். காயமடைந்த சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #Eightkilled #suicideattack #Afghanelectionrally
    ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனைச்சாவடிகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தி தீ வைத்ததில் 30 வீரர்கள் உயிரிழந்தனர்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள், மேலும் பல நகரங்களை கைப்பற்றும் நோக்கத்தில் சமீபமாலமாக பாதுகாப்பு படையினரை குறிவைத்து ஆவேச தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களை கைப்பற்றி உள்ளனர். இழந்த பகுதிகளை மீட்க பாதுகாப்பு படையினரும் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.

    நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள செனயா என்ற ராணுவ தளத்தின்மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை தலிபான் பயங்கரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தி கைப்பற்றினர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் கடுமையான உயிர்ச்சேதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், பக்லான் மாகாணம் பக்லான் இ மர்காசி மாவட்டத்தில் உள்ள இரண்டு போலீஸ் சோதனைச்சாவடிகள் மீது நேற்று நள்ளிரவில் தலிபான்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். பின்னர் அந்த சோதனைச் சாவடிகளுக்கு தீ வைத்துள்ளனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீஸ் தரப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதேபோல் தெற்கு ஜாபூல் மகாணத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் 4 போலீசார் கொல்லப்பட்டனர். போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் தலிபான்கள் தரப்பில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #AfghanAttack
    ஆப்கானிஸ்தான் நாட்டின் பர்யாப் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமை கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் முகாமிட்டிருந்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் கடந்த 2014-ம் ஆண்டு முற்றிலுமாக வெளியேறிய பின்னர் அங்கு ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டின் மேலும் பல நகரங்களை கைப்பற்றும் நோக்கத்தில் சமீபமாலமாக ஆவேச தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    நாட்டின் தென்கிழக்கு பகுதியில் தலைநகர் காபுலில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கஸ்னி நகரை கைப்பற்றும் நோக்கத்தில் முற்றுகையிட்ட தலிபான்களுக்கு அரசு படையினருக்கும் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மோதல்களில் இருதரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். அந்நகரம் தலிபான்கள் கையில் சிக்காமல் தடுக்கும் வகையில் தொடர்ந்து அங்கு  பாதுகாப்பு படையினர் சண்டையிட்டு வருகின்றனர். கூடுதலாக ராணுவப்படைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


    இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஃபர்யாப் மாகாணம், கோர்மாச் மாவட்டத்தில் உள்ள செனயா என்ற ராணுவ தளத்தின்மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை  தலிபான் பயங்கரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.

    அப்போது அங்கு சுமார் 100 ராணுவ வீரர்கள் இருந்ததாக தெரிகிறது. இருதரப்பினருக்கும் விடிய, விடிய நடந்த மோதலில் 14 ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்ற தலிபான்கள் சுமார் 40 வீரர்களை சிறைபிடித்து அந்த ராணுவ தளத்தை கைப்பற்றி விட்டதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. மீதியிருந்த ராணுவ வீரர்கள் உயிர் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. #Talibancapture #Faryabarmybase
    ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 14 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். #AfghanTaliban #AfghanistanAttack
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரசுப் படைகள் வசம் உள்ள சில இடங்களையும் கைப்பற்றி உள்ளனர்.

    இந்நிலையில் கிழக்கு காஸ்னி மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இன்றும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், தி யாக் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி, ரிசர்வ் போலீஸ் கமாண்டர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். ஜகாத்து மாவட்டத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 20-க்கும் அதிகம் இருக்கும் என மாகாண கவுன்சில் தலைவர் கூறியிருக்கிறார்.

    மேலும் தி யாக் மாவட்டத்தின் பல்வேறு காவல்  சோதனை சாவடிகளையும் பயங்கரவாதிகள் தகர்த்துள்ளனர். ஜகாத்து மாவட்ட தலைமையகம் மற்றும் சோதனைச் சாவடிகளை கைப்பற்றிவிட்டதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். #AfghanTaliban #AfghanistanAttack
    ×