என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 99224
நீங்கள் தேடியது "ரெட்மி"
சியோமி நிறுவனம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் சியோமி பிராண்டிங் கொண்ட ஸ்மார்ட்போனும் அதன்பின் ரெட்மி பிராண்டிங் கொண்ட ஸ்மார்ட்போனும் வெளியிடப்பட இருக்கிறது. இரு மாடல்களும் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகமாகிறது.
சியோமியின் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஓ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படலாம் என தெரிகிறது.
புகைப்படங்களை எடுக்க 108 எம்பி அல்லது 50 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர்கள், எக்ஸ்-ஆக்சிஸ் மோட்டார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மூன்று பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
சியோமியின் ரெட்மி பிராண்டு தனது புதிய டாப்-எண்ட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி K20 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம் டர்போ 2.0, ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 124.8 டிகிரி அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, சஃபையர் லென்ஸ் கவர் வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஏழாம் தலைமுறை ஆப்டிக்கல் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3P லென்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் கைரேகை இயங்கும் பகுதி 15 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த போன் 3D வளைந்த வடிவமைப்பு கொண்டிருக்கிறது. 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் ரெட்மி K20 ஸ்மார்ட்போனில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.
ரெட்மி K20 ப்ரோ சிறப்பம்சங்கள்
- 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 AMOLED HDR டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
- 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, 1/2″ சோனி IMX586, 0.8μm பிக்சல், 6P லென்ஸ்
- 8 எம்.பி. 1/4″ OV8856 டெலிபோட்டோ லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.4
- 13 எம்.பி. 1/3″ சாம்சங் S5K3L6 124.8° அல்ட்ரா-வைடு சென்சார், 1.12μm பிக்சல், f/2.4
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 0.8μm
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5எம்.எம். ஆடியோ ஜாக், குவால்காம் அக்யூஸ்டிக் WCD9340 ஹை-ஃபை ஆடியோ சிப்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
ரெட்மி K20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபிளேம் ரெட், கிளேசியர் புளு மற்றும் கார்பன் ஃபைபர் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 2499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.25,200) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.26,220) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.28,230) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.30,245) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் கொண்ட ரெட்மி K20 ஸ்மார்ட்போனினை சியோமி அறிமுகம் செய்துள்ளது.
ரெட்மி பிராண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பற்றி அந்நிறுவன தலைவர் லு வெய்பிங் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
ரெட்மி பிராண்டின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் K20 என்ற பெயரில் அறிமுகமாகும் என ரெட்மி தலைவர் லு வெய்பிங் தெரிவித்து இருக்கிறார். K என்ற வார்த்தை கில்லர் என்பதை குறிக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதனால் ரெட்மி K20 ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் கில்லர் ஆக இருக்கும்.
முன்னதாக ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா, நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் கொண்டிருப்பது உறுதியானது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படும் என்றும் வெய்பிங் ஏற்கனவே தெரிவித்தார்.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி ரெட்மி K20 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் FHD பிளஸ், நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, MIUI10 சார்ந்த ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 13 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 20 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.
இத்துடன் அதிநவீன இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ரெட்மி K20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் புதிய லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சியோமியின் ரெட்மி பிராண்டு விரைவில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் ரெட்மி லேப்டாப் ஒன்றும் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும், புதிய ரெட்மி லேப்டாப் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இது ரெட்மி பிராண்டின் முதல் லேப்டாப் மாடலாக இருக்கும். இதுவரை ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்ட ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பற்றி அதிகளவு விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஹூவாய் நிறுவனமும் தனது லேப்டாப்களை துணை பிராண்டான ஹானர் பெயரில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. ஹூவாய் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் இதுவரை மேட்புக் சீரிஸ் பெயரிலும் ஹானர் பிராண்டு மேஜிக்புக் சீரிஸ் பெயரில் கணினி சாதனங்களை அறிமுகம் செய்திருக்கிறது.
கோப்பு படம்
புதிய ரெட்மி லேப்டாப் மாடல்கள் சியோமியின் Mi நோட்புக் மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய லேப்டாப்பில் பிரத்யேக கிராஃபிக்ஸ், விலை உயர்ந்த சேசிஸ் உள்ளிட்டவை நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இருவித மாடல்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் ரெட், புளு மற்றும் கார்பன் ஃபைபர் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே, MIUI 10 சார்ந்த ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கும் ரெட்மி போனில்: 48 எம்.பி., 8 எம்.பி. மற்றும் 13 எம்.பி. என மூன்று பிரைமரி கேமரா சென்சார்களும், முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. கேமரா சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் பாப்-அப் ரக கேமராவுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Redmi
சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டிருக்கிறது. இதில் பாப்-அப் ரக முன்புற கேமரா மற்றும் நாட்ச் இல்லாத டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.
முன்னதாக ரெட்மி தலைவர் லு வெய்பிங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படும் என்றும் இதில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் இடம்பெறும் என தெரிவித்திருந்தார். இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் அதிவேக செயல்திறன், நீண்ட பேட்டரி பேக்கப், சிறப்பான கேமரா உள்ளிட்டவை இருக்கும் என தெரிகிறது.
இத்துடன் 6.39 இன்ச் FHD பிளஸ் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 13 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. பாப்-அப் ரக கேமரா வழங்கப்படுகிறது.
முன்னதாக சியோமி இந்தியா துணை தலைவர் ஸ்னாப்டிராகன் 730 சிப்செட் கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார். ஏற்கனவே வெளியான விவரங்களில் சியோமி நிறுவனம் பாப்-அப் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்பட்டிருந்தது.
ரெட்மியின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீனாவில் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Redmi
ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டு உருவாகும் ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதன்படி சீனா வலைதளத்தில் ஸ்மார்ட்போனின் புகைப்படம் லீக் ஆகியுள்ளது. அதில் புதிய ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் பாப்-அப் ரக கேமரா வழங்கப்படுவதும், சிவப்பு நிறம் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. ஏற்கனவே ரெட்மி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்குவதை சியோமி உறுதி செய்திருந்தது. எனினும் இதன் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
ரெட்மி தலைவர் லு வெய்பிங் ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் உருவாகி வருவதாகவும், இதில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் போது அதில் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா மற்றும் ஃபுல் ஸ்கிரீன் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.
இவை தவிர ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மெட்டாலிக் பில்டு கொண்டிருக்கும் என்றும் இது சிவப்பு நிறத்தை தழுவி இருக்கும் என தெரிகிறது. முன்புறம் பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் ஆன்டெனா பேண்ட்களும் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் மூன்று பிரைமரி கேமராக்களும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
முன்னதாக ரெட்மி 2 ப்ரோ என்ற பெயரில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகி இருந்தது. இதில் பாப்-அப் செல்ஃபி கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது. இரு ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பை பார்க்கும் போது இவற்றின் பாப்-அப் செல்ஃபி கேமரா வித்தியாசமாக பொருத்தப்பட்டிருப்பது தெரிகிறது.
இதனால் எந்த ஸ்மார்ட்போனினை ரெட்மி உருவாக்கி வருகிறது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
புகைப்படம் நன்றி: Weibo- Alvin
ரெட்மி பிரண்டு தனது நோட் 7 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #RedmiGo #Smartphone
ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 28 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனுடன் ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி கோ மற்றும் Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் ஹெட்செட் யூத் எடிஷன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 7 மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டதை விட வித்தியாசமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனை தொடர்ந்து ரெட்மி கோ மற்றும் Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் ஹெட்செட் யூத் எடிஷன் இந்திய விலை இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி கோ ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு கோ மாடலாக இருக்கும் என்றும் இதன் விலை முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.3,499 முதல் துவங்கும் என கூறப்படுகிறது. Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் ஹெட்செட் யூத் எடிஷன் விலை ரூ.1,499 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ரெட்மி கோ ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு கோ சாதனம் என்பதால், இதன் வன்பொருள் அம்சங்கள் குறைந்த திறன் வழங்கும் என தெரிகிறது. இதன் விலை ரூ.3000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்றும் இது இந்தியாவில் ரெட்மியின் விலை குறைந்த ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் அதிக விற்பனையை பதிவு செய்வதால், புதிய ரெட்மி கோ விற்பனையும் அந்நிறுவன வழக்கத்தை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபற்றி ரெட்மி தரப்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
சியோமியின் ரெட்மி பிராண்டு சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனினை மூன்றே வாரங்களில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் வாங்கியிருக்கின்றனர். #RedmiNote7 #Smartphone
ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக ரெட்மி தலைமை செயல் அதிகாரி லு வெய்பிங் தனது வெய்போவில் தெரிவித்திருக்கிறார். ரெட்மி தனி பிராண்டாக உருவெடுத்த பின் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 7 இருக்கிறது.
சீனாவில் கடந்த வாரம் விற்பனைக்கு வந்த ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் ஒரு வாரத்திற்குள் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. தற்சமயம் சீனாவில் மட்டும் ரெட்மி நோட் 7 விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என மூன்று வித வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர ரெட்மி தனது நோட் 7 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியண்ட் உருவாக்கப்படுவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தது.
ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 2340x1080 பிக்சல், வாட்டர் டிராப் ரக நாட்ச், ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. யு.எஸ்.பி. டைப்-சி வசதி கொண்டிருக்கும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் குவால்காமின் க்விக் சார்ஜ் 4.0 தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8 லென்ஸ், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் போர்டிரெயிட் மோட் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் சாம்சங் எம் சீரிஸ் போன்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது. இத்துடன் அசுஸ் நிறுவனத்தின் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனும் போட்டியாக இருக்கும்.
சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி இந்தியாவில் நோட் 7 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #RedmiNote7 #Smartphone
இந்தியாவில் ரெட்மி நோட் சீரிஸ் அதிக பிரபலமாக இருக்கிறது. சமீபத்தில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவைத் தொடர்ந்து ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி எனும் தனி பிராண்டு மூலம் இந்தியா வரும் முதல் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 7 இருக்கும்.
இந்தியாவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் சாம்சங் எம் சீரிஸ் போன்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது. இத்துடன் அசுஸ் நிறுவனத்தின் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனும் போட்டியாக இருக்கும்.
இத்துடன் முந்தைய ரெட்மி நோட் 5 சீரிஸ் போன்று ப்ரோ மாடல் ஸ்மார்ட்போனையும் சியோமி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8 லென்ஸ், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் போர்டிரெயிட் மோட் வழங்கப்பட்டிருக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 2340x1080 பிக்சல், வாட்டர் டிராப் ரக நாட்ச், ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. யு.எஸ்.பி. டைப்-சி வசதி கொண்டிருக்கும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் குவால்காமின் க்விக் சார்ஜ் 4.0 தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. #RedmiNote7 #Smartphone
இந்தியாவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் சாம்சங் எம் சீரிஸ் போன்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது. இத்துடன் அசுஸ் நிறுவனத்தின் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனும் போட்டியாக இருக்கும்.
இத்துடன் முந்தைய ரெட்மி நோட் 5 சீரிஸ் போன்று ப்ரோ மாடல் ஸ்மார்ட்போனையும் சியோமி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8 லென்ஸ், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் போர்டிரெயிட் மோட் வழங்கப்பட்டிருக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 2340x1080 பிக்சல், வாட்டர் டிராப் ரக நாட்ச், ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. யு.எஸ்.பி. டைப்-சி வசதி கொண்டிருக்கும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் குவால்காமின் க்விக் சார்ஜ் 4.0 தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. #RedmiNote7 #Smartphone
சியோமியின் துணை பிராண்டான ரெட்மி தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி கோ என அழைக்கப்படுகிறது. #RedmiGo #Smartphone
சியோமியின் துணை பிராண்டான ரெட்மி தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி கோ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு கோ தளத்தில் இயங்கும் என தெரிகிறது. இதுபற்றி ரெட்மி தரப்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி கோ ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன், குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளம் கொண்டு இயங்கும் என தெரிகிறது. அந்த வகையில் ரெட்மியின் முதல் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாக இது இருக்கும். சியோமி ஏற்கனவே ஆண்ட்ராய்டு ஒன் தளத்தில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கிறது.
ரெட்மி கோ சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன்
- குவால்காம் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
- 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 8.1
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் அம்சங்களை தவிர ரெட்மி கோ பற்றிய இதர விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. ரெட்மி கோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கும் என சியோமி பதிவிட்டிருக்கும் புகைப்படங்களில் தெரிகிறது. ரெட்மி கோ ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
ஜெர்மனியை சேர்ந்த வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெட்மி ரோ ஸ்மார்ட்போனின் இதர சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது. அதன் படி ரெட்மி கோ ஸ்மார்ட்போனில் 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது.
இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், வைபை, ப்ளூடூத், 4ஜி எல்.டி.இ. வழங்கப்படுகிறது. ஐரோப்பாவில் ரெட்மி கோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத துவக்கத்தில் விற்பனைக்கும் வரும் என்றும் இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.6,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #RedmiNote7Pro #Smartphone
ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் கடந்த வாரம் சீனாவில் அறிமுகமானதை தொடர்ந்து விரைவில் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கியுள்ளன. ரெட்மி நோட் 7 அறிமுக விழாவிலேயே ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என ரெட்மி அறிவித்திருந்தது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் ரெட்மி நோட் 7 போன்றே புதிய நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது. சமீபத்தில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் டீசர் சீனாவின் வெய்போ தளத்தில் லீக் ஆனது. அதில் நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி சென்சார் வழங்கப்படுகிறது.
ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சாம்சங் ISOCELL GM1 சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 7 ப்ரோ இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக குவால்காம் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இத்துடன் ஆக்டா-கோர் க்ரியோ 675 சி.பி.யு. மற்றும் அட்ரினோ 612 GPU வழங்கப்படுகிறது. புதிய பிராசஸர் ஸ்னாப்டிராகன் 670 சிப்செட்டின் மேம்பட்ட வடிவில் 11 என்.எம். தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கிறது.
இந்த பிராசஸரில் குவால்காமின் க்விக் சார்ஜ் 4 பிளஸ் தொழில்நுட்பத்திற்கான வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் அல்ட்ரா-ஹெச்.டி. (4K @ 30fps) தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் வசதியும் உள்ளது.
ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 1499 (இந்திய மதிப்பில் ரூ.15,800) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை CNY 999 (இந்திய மதிப்பில் ரூ.10,500) என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் CNY1199 (இந்திய மதிப்பில் ரூ.12,600) என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை CNY 1399 (இந்திய மதிப்பில் ரூ.14,700) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. #Redmi #Smartphone
சியோமி நிறுவனம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
ரெட்மி சீரிசில் அறிமுகாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சீன வலைத்தளத்தில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்கள் M1901F7C, M1901F7T மற்றும் M1901F7E மாடல் நம்பர்களை கொண்டிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் வாட்டர்டிராப் நாட்ச் கொண்ட ஸ்கிரீன், மெல்லிய பெசல்கள், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் ரெட்மி பை சியோமி பிராண்டிங் செய்யப்பட்டுள்ளது.
புகைப்படம் நன்றி: Tenaa
அந்த வகையில் போகோ போன்று ரெட்மி தனி பிராண்டாக இருக்கும் என தெரிகிறது. பின்புறம் டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் ரெட்மி ஸ்மார்ட்போனில், ஒரு கேமராவில் 48 எம்.பி. சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
ரெட்மி ஸ்மார்ட்போனில் சோனியின் IMX586 1/2-டைப் (8.0 எம்.எம். டயகோனல்) சென்சார் மற்றும் ஸ்னாப்டிராகன் 675 11 என்.எம். பிராசஸர் கொண்டிருக்கும். இதனை சியோமி ஏற்கனவே அறிவித்திருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 7 என அழைக்கப்படலாம்.
புதிய ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X