என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 99345"
நிலச்சரிவில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். 20 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 63 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சுகபூமி மாவட்டம் சினாரேஸ்மி கிராமத்தில் மட்டும் 30 வீடுகள் நிலச்சரிவின்போது மண் மற்றும் பாறைகளால் சூழப்பட்டுள்ளன. அந்த வீடுகளில் சிக்கியுள்ளவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. #Indonesialandslide
கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்தை சுருட்டி வாரிச்சென்றது. பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களும் நாசமானது.
குறிப்பாக கொடைக்கானல் மலைப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் நகர், மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்தது. மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. மேலும் 200-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து உள்ளன.
இதனால் கடந்த 5 நாட்களாக மலை கிராமங்களில் பொதுமக்கள் கடும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். மேலும் வத்தலக்குண்டு- கொடைக்கானல் சாலையில் குருசடி, அடுக்கம் பகுதியில் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
ஆனால் 2 அரசு பஸ்கள், ஒரு தனியார் பஸ் உள்ளிட்ட 6 வாகனங்கள் மட்டுமே சென்றன. இந்த நிலையில் மயிலாடும்பாறை பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேல்மலை கிராமங்கள், பழனி சாலை உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் ஊழியர்கள் வராததால் பொதுமக்களே சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் என்பதால் சீரமைப்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கிளாவரை, கூக்கால் மற்றும் புறநகர் பகுதிகளான செண்பகனூர், அட்டகடி, கே.பி.என். பாறை, இருதயபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறிகள் விலையும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல இடங்களில் போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கொடைக்கானல் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (19-ந் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் அறிவித்துள்ளார். #CycloneGaja #Kodaikanal #Landslide
வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகப்பட்டினத்தில் கரையை கடந்தது.
தமிழகத்தின் நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சூறையாடிய கஜா புயல் நேற்று பிற்பகலுக்கு மேல் திண்டுக்கல், தேனி, போடி வழியாக கேரள மாநிலத்தில் நுழைந்து அரபிக்கடலுக்கு நகர்ந்தது.
கஜா புயலின் கண் பகுதி கேரளாவிற்குள் நுழைந்ததும் இடுக்கியில் மிக கனத்த மழை பெய்தது. இதனால் பெரியாறு, மூணாறு பகுதிகள் வெள்ளக்காடானது. ஏற்கனவே இங்கு பெருமழை பெய்ததால் சேதமான பாலங்களுக்கு பதில் தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டி ருந்தன.
இந்த பாலங்களை கஜா புயல் துவம்சம் செய்தது. இதனால் மூணாறு சென்ற சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.
இடுக்கியில் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில், பல வீடுகள் இடிந்து சேதமானது. இடுக்கி, வயநாடு பகுதிகளை சேதப்படுத்திய கஜா புயல் மெதுவாக தென்கிழக்கு அரபிக்கடலுக்குள் நகர்ந்தது.
தற்போது இப்புயல் கொச்சியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக்கொண்டுள்ளது. இன்று பிற்பகலுக்கு மேல் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அமித்தி தீவுகளை கடந்து மினிகாய் தீவு வழியாக வளைகுடா நாட்டுக்கு நகரும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.
அரபிக்கடலில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவில் இன்றும் பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக சபரிமலை, எரிமேலி, பம்பை, நிலக்கல், பத்தினம்திட்டா பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
இன்றும் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. அரபிக்கடலில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வளைகுடா நாட்டிற்கு நகர்ந்த பின்னரே கேரளாவில் மழை குறையுமென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #GajaCyclone #KeralaRain
பழனி:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது. பெருமாள் மலை, மச்சூர், வாழைகிரி, வடகரைப்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலைச் சாலையில் டம்டம் பாறை அருகே மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன.
இதனால் மலைப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சாலையின் நடுவே விழுந்த பாறை பெரியதாக இருந்ததால் அதனை வெடி வைத்து தகர்த்து அப்புறப்படுத்தினர்.
மேலும் வாழைகிரி, ஊத்து, மேல்பள்ளம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவையும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.
இதே போல் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலைப்பாதை 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட குறுகலானதும், ஆபத்தான மலைப்பாதையையும் கொண்டது. இந்த சாலை வனப்பகுதியின் நடுவே செல்வதால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது.
மேலும் இப்பகுதியில் மழைக்காலங்களில் நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழும் சம்பவம் நடப்பது உண்டு. நேற்று இச்சாலையில் சவரிக்காடு என்ற இடத்தில் பெரியபாறை உருண்டு விழுந்து மரங்களும் முறிந்து விழுந்தது. இதனால் பழனியில் இருந்து கொடைக்கானல் நோக்கி வந்த வாகனங்கள் பெருமாள் மலை வழியாக மாற்றுப்பாதையில் சென்றன. சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர் நீண்ட நேரம் போராடி தற்காலிகமாக சாலையின் நடுவே விழுந்த பாறையை அகற்றினர்.
தொடர் விடுமுறைக்காக கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இந்த சாலையில் ஏற்பட்ட நீண்ட நேரம் போக்குவரத்து நெருக்கடி ஒரு வழியாக மாலையில் சீரானது. கொடைக்கானல் செல்லும் மலைச்சாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் பரபரப்பு ஏற்பட்டது.
உகாண்டா நாட்டின் தெற்கில் அமைந்துள்ள மலைகள் சூழ்ந்த பகுதியான மவுண்ட் எல்கோன் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் படுடா மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், படுடா மாவட்டத்தின் மலையடிவாரத்தில் அமைந்துள்ள 3 கிராமங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மலையில் இருந்து மண் சரிந்ததை அடுத்து பெரும்பாலன வீடுகள் மண்ணில் புதையுண்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 31 பேர் பலியாகியுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். எனினும் மழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் மீட்புப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 3 கிராமத்தை சேர்ந்த பலரை காணவில்லை என்பதால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இடிபாடுகளுக்குள் அவர்கள் சிக்கியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. #Ugandamudslides
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்