search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலம்பியா"

    நரினோ மாகாணத்தில் உள்ள மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
    பொகோடா:

    கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாகாணத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில், நரினோ மாகாணத்தின் மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் தொடர் கனமழை காரணமாக நேற்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. மலையடிவாரத்தில் உள்ள வீடுகள் நிலச்சரிவில் சிக்கியதால், வீடுகளில் வசித்துவந்த பலர் மண்ணுக்குள் புதைந்தனர். 

    இந்த நிலச்சரிவு குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 20 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணிகளை மீட்புக்குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர். 
    கொலம்பியா தலைநகரான பொகோடாவில் உள்ள போலீஸ் பள்ளியில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. #ColumbiaSchoolAttack
    போகோடா:

    மத்திய அமெரிக்க கண்ட நாடான கொலம்பியாவின் தலைநகரம் போகோடா. இங்குள்ள போலீஸ் அகாடமியில் அமைந்துள்ள பள்ளியில் நேற்று விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கொலம்பியா போலீஸ் பள்ளியில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. #ColumbiaSchoolAttack
    கொலம்பியா தலைநகரான பொகோடாவில் உள்ள போலீஸ் அகாடமி அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். #ColumbiaCarBomb
    போகோடா:

    மத்திய அமெரிக்க கண்ட நாடான கொலம்பியாவின் தலைநகரம் போகோடா. இங்குள்ள போலீஸ் அகாடமி அருகே இன்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கார் வெடிகுண்டு தாக்குதலில் அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் கடும் சேதமடைந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். #ColumbiaCarBomb
    உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் பெனால்டி ஷூட் முறையில் 4-3 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து. #WorldCup2018 #COLENG #ColombiavEngland
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது. இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் 0-0 என சமனிலை வகித்துள்ளன.

    இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 57வது நிமிடத்திக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து பயன்படுத்தி கொண்டது.

    அந்த அணியின் ஹாரி கேன் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் முடிவில் 93வது நிமிடத்தில் கொலம்பிய வீரர் யெரி மினா ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.

    கூடுதல் நேரத்திலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் முறை தரப்பட்டது.
    இதில் முதல் வாய்ப்பில் கொலம்பியாவும், இங்கிலாந்தும் ஒரு கோல் அடித்தன. இரண்டாவது வாய்ப்பிலும் இரு அணிகளும் ஒரு கோல் அடித்தன.

    மூன்றாவது வாய்ப்பில் கொலம்பியா அணி ஒரு கோல் அடிக்க 3-2 என முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியின் வாய்ப்பு தடுக்கப்பட்டது.

    நான்காவதில் கொலம்பியா வாய்ப்பு தடுக்கப்பட்டது. இங்கிலாந்து ஒரு கோல் அடித்து 3-3 என சமனிலை ஆனது.

    இறுதியாக, கடைசி வாய்ப்பில் கொலம்பியா கோல் அடிக்கவில்லை. இங்கிலாந்து அணி கோல் அடித்து 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup #COLENG #ColombiavEngland #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    கொலம்பியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நாக் அவுட் ஆட்டம் முதல் 45 நிமிடத்தில் 0-0 என சமநிலையில் முடிந்துள்ளது. #WorldCup2018 #COLENG #ColombiavEngland
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.



    ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது. இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் 0-0 என சமனிலை வகித்துள்ளன. #WorldCup #COLENG #ColombiavEngland #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி வெற்றி பெற்றது. #WorldCup2018 #COLPOL
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எச் பிரிவில் இடம் பிடித்துள்ள போலந்து மற்றும் கொலம்பியா அணிகள் மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்து கொலம்பியா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் யெரி மினா ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா அணி 1-0 என முன்னிலை வகித்தது.

    இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கொலம்பியா அணியின் சார்பில் ராடமல் பால்கோ 70-வது நிமிடத்திலும், ஜுவான் குவாட்ராடோ 75-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர். இதனால் கொலம்பியா அணி 3-0 என முன்னிலை பெற்றது.

    கொலம்பியா அணியினரின் அதிரடி ஆட்டத்தின் முன்னால் போலந்து வீரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
    கூடுதலாக கிடைத்த நிமிடங்களிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் கொலம்பியா அணி 3 புள்ளிகள் பெற்றது.

    ஆனாலும், எச் பிரிவில் ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் கொலம்பியா, போலந்து அணிகள் போட்டியில் இருந்து வெளியேறின.
    ×