search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99515"

    மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடவிட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபூரணம் கூறியுள்ளது.
    பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம், காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ரு வர்க்கம் எனப்படுவார்கள்.

    அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ரு வர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீக் வர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினனவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

    தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது. மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.

    மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும். நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய பித்ருக்களுக்கு, மகாளயபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.

    சாஸ்திரப்படி சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு உண்ணக் கூடாது. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.

    பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளை செய்ய வேண்டும்.

    சிரார்த்த உணவு சென்றடையுமா?

    ஒரே நாளில் ஏராளமான பித்ருகளுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும் போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருகளுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும் போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.

    செய்ய வேண்டிய இடங்கள்:-

    ராமேஸ்வரம், திருவாலங்காடு, கன்னியாகுமரி, திருவெண்காடு ஸ்ரீவாஞ்சியம், திருவள்ளூர், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, கயா, திருநள்ளாறு ஆகிய இடங்ககளில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

    பலன்கள்:-


    · மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடவிட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபூரணம் கூறியுள்ளது.

    · தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டுருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும் போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.

    · துவாதசி பன்னிரண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான் என நம்பப்படுகிறது.

    · மகாளாய அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்கும் போய் உரிய பலன்களை கொடுக்கும்.

    · பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களை தரும்.

    · மகாளாய பட்சத்தின் 15 நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது மிக, மிக நல்லது.
    இறைவழிபாட்டின் மூலம் கிடைக்கும் வரங்களை, பித்ரு சாபம் தடுக்கும் வல்லமையுடையது. ஆனால் நமது முன்னோர்கள் ஒரு போதும் நம்மைச் சபிக்க மாட்டார்கள்.
    சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரை-குடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள்.

    கருடபுராணம், விஷ்ணு புராணம் போன் புராணங்களில், “ ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும், முடியாதவர்கள் காகத்திற்கு அன்னம் வைக்கலாம்,. பசுவுக்கு அகத்திகீரை, பழம் கொடுக்க வேண்டும் என்கிறது.

    பித்ரு லோகத்தில் வசிப்பவர்கள், மாதப்பிறப்பு, அமாவாசை, மஹாளய பட்சம், அவரவர் மறைந்த திதி ஆகிய நாட்களில் மட்டுமே பூலோகப் பிரவேசம் செய்ய இயலும். அதில், மஹாளய பட்சம், ‘பித்ருக்களின் பிரம்மோற்சவம்‘ என்று சிறப்பிக்கப்படுகிறது.

    இந்த 15 நாட்கள் மட்டுமே அவர்கள் தொடர்ச்சியாக பூலோக வாசம் செய்ய இயலும். அவர்கள், இவ்வாறு வாசம் செய்ய பூலோகம் வரும் போது, அவர்களை நினைத்துச் செய்யப்படும் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றுக்கு அதிக பலன் உண்டு.

    இந்த பதினைந்து நாட்களும், பித்ரு லோகத்தில் வாசம் செய்யும் முன்னோர்கள், பூமிக்கு வருகை தருகிறார்கள். வாழ்வு முடிந்த பின், 9 நாட்கள், பிரேத சரீரத்துடன் இருக்கும் ஆத்மா, 10-ம் நாள் செய்யப்படும் விசேஷ கர்மாக்களைத் தொடர்ந்து, 12ம் நாள் பிரேத சரீரம் நீங்கப்பெற்று, சூட்சும சரீரத்துடன் பித்ரு லோகத்தை அடைகிறது.

    அங்கிருந்து யமப்பட்டணமாகிய ‘ஸம்யமனீபுரி’யை ஒரு வருட முடிவில் அடைகிறது. அங்கு, அந்த ஆத்மாவின் கர்மாக்களுக்கு ஏற்ப சொர்க்க வாசமோ, நரக வாசமோ கிடைக்கிறது. அதன் பின், மீண்டும் அடுத்த பிறவி எடுக்கவோ, அல்லது தகுந்த காலம் வரும் வரை பித்ரு லோகத்தில் வாசம் செய்யவோ நேரும்.

    நம் முன்னோர்களில், யார் முக்தி அடைந்திருக்கிறார், யார் மறு பிறவி எடுத்திருக்கிறார், யார் பித்ருலோகத்தில் இன்னமும் வாசம் செய்கிறார்கள் என்பதை நாம் அறிய மாட்டோம். ஆகவே, கண்டிப்பாக, பித்ருகர்மாக்களை, முக்கியமாக, மஹாளய சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.

    நமது முன்னோர்கள் யாராவது முக்தி அடைந்திருந்தால், நமது சிரார்த்தத்தின் பலனை அந்த இறைவனே ஏற்று அருள் புரிகிறார். பொதுவாக, நாம் செய்யும் தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றின் புண்ணிய பலன், சேமித்து வைக்கப்பட்டு, தக்க நேரத்தில் நம்மை வந்தடையும்.

    ஆனால், மஹாளய பட்சத்தில், நமது முன்னோர்களின் ஆத்மாக்கள், ஒன்று சேர்ந்து, நம்மை ஆசீர்வதிக்க வருவதால், அந்த நேரத்தில் செய்யும் சிரார்த்த கர்மாக்களின் பலன்கள், உடனடியாக அவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டு, பலனும் உடனடியாக நமக்குக் கிடைத்து, நம் தீராத, நாள்பட்ட பிரச்னைகள் உடனடியாகத் தீர்வுக்கு வருவதை நம் கண்முன் காணலாம். இது மகாளய அமாவாசை வழிபாட்டின் தனிசிறப்பு.

    இந்த மஹாளய பட்சத்தில், ஒருவர், மறைந்த, தம் தாய் தந்தையர், தாத்தா,பாட்டி ஆகியோர்களுக்கு மட்டுமில்லாமல், குழந்தை இன்றி இறந்து போன தம் தாயாதிகளுக்கும் சேர்த்துத் தர்ப்பணம் செய்யலாம். அதன் பலனாக அவர்களின் ஆசிகளையும் பெறலாம். மிகுந்த தெய்வ பக்தி உடையவர்கள், வேதம், தமிழ் மறைகள் ஓதியவர்கள், நீதி நேர்மையுடன் வாழ்ந்தவர்கள், பித்ரு சரீரம் அடையும் போது, மிகுந்த நன்மை செய்பவர்கள் ஆகிறார்கள். அவர்களுடைய சரீரம் ஒளி பொருந்தியது.

    அவர்களுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றைச் சரியாகச் செய்யும் போது, குடும்பத்தில் இருக்கும் தீராத நோய், கடன், பகை, எதிர்பாராத விபத்துக்கள், குழந்தையின்மை போன்ற பல ப்ரச்னைகள் நீங்குகின்றன. மாறாக, இது தவிர்க்கப்பட்டால், தலைமுறைகள் தாண்டியும் பிரச்சினைகள் தொடரும்.

    இறைவழிபாட்டின் மூலம் கிடைக்கும் வரங்களை, பித்ரு சாபம் தடுக்கும் வல்லமையுடையது. ஆனால் நமது முன்னோர்கள் ஒரு போதும் நம்மைச் சபிக்க மாட்டார்கள். என்றாலும் இப்பூவுலகில், ஒருவர் செய்ய வேண்டிய சிரார்த்தம் தடைபட்டால், அதனால், பித்ருக்களுக்குக் கிடைக்க வேண்டிய உணவு கிடைக்காமல் போகும். அதனால் அவர்கள் அடையும் இன்னலே சாபமாக மாறி நம்மை அடைகிறது.

    மகாளய அமாவாசையான இன்று முழுவதும் உபவாசம் இருந்து முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். இதனால் முன்னோர்களுடைய பரிபூரண ஆசியும், புண்ணியமும் கிடைக்கும்.
    மகாளய அமாவாசையன்று காலையில் எழுந்து வீட்டை சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் குளித்து முடித்து அருகில் உள்ள கோவில்களில் இருக்கும் நீர்நிலைகளிலோ அல்லது கடற்கரைப் பகுதியிலோ சென்று பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும்.

    அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை நைவேத்தியமாக படைத்து இறைவனை வணங்க வேண்டும். மேலும் அன்றைய தினத்தில் இறை அடியவர்களுக்கு முடிந்தவரை அன்னதானம் வழங்குவது சிறப்பான பலனை தரும். உடல்நிலை சரி இல்லாதவர்கள் தர்ப்பணத்தை இல்லத்தில் வைத்து கொடுக்கலாம். இந்த தர்ப்பணத்தால் பித்ருக்களுக்கு பசியும், தாகமும் தீரும்.

    இந்த நாட்களில் மாட்டு தொழுவத்தில் பித்ருபூஜை செய்தால் வம்சா வழி தோஷம் நீங்கும், ஆயுள்பலம் கூடும். முன்னோர்களுடைய பரிபூரண ஆசியும், புண்ணியமும் கிடைக்கும். பசுவுக்கு அகத்திக்கீரை அளித்தாலும் பலன் உண்டு.

    பித்ருக்கள் மனம் மகிழ்ச்சி அடையும் போது அவர்கள் வழங்கும் ஆசிகள் திருமணத் தடை, குழந்தை இல்லா கவலை, நவக்கிரக தோஷங்கள் ஆகியவற்றை நீக்கி மனஅமைதியையும், நிம்மதியையும் அளிக்கும். தர்ப்பணத்துக்கு பின்னரே வீட்டில் பூஜைகள் செய்ய வேண்டும். நமது பித்ருக்களை திதி நாளில் திருப்திப்படுத்தாத காரணத்தினால் நமக்கு துன்பங்கள் வருகின்றன.

    பித்ருக்களை சாந்தப்படுத்த திலஹோமம் செய்வது அவசியம். ‘மாத்ருதேவோபவ, பித்ருதேவோபவ’ என நம் பெற்றோருக்கு நாம் நன்றிக் கடன்பட்டு இருக்கிறோம். நமக்கு நல்வாழ்வு வழங்கிய பித்ருக்களுக்கு தர்ப்பண பூஜை செய்வது அவசியம்.
    முன்னோர் வழிபாடு செய்யாவிட்டால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் கிடைக்காமலே போய் விடக்கூடும். ஆகையால் முன்னோர் வழிபாட்டை மறக்காமல், தவறாமல் செய்யுங்கள்.

    மறைந்த முன்னோர்கள் பற்றி மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில் மட்டுமே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். இந்த நாட்களில் பித்ரு தர்ப்பணம் கொடுத்து விட்டால் போதும் என மன திருப்தி கொள்கிறார்கள்.

    ஆனால் மாதந்தோறும் வரும் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் முன்னோர் வழிபாடு செய்தால், அதற்குரிய பலன்கள் உங்களுக்கு நிச்சயம் முந்தி வரும். இது பலரும் அனுபவிக்கும் யதார்த்தமான உண்மை.

    இறந்தவர்களின் திதியை தெரிந்து கொண்டு, அந்த கடமையை தவறாமல் செய்து வருபவர்களைப் பாருங்கள், அவர்கள் அனைவரும் வாழ்க்கையில் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருப்பார்கள். அவர்களுக்கு அவர்களது மறைந்த முன்னோர்களின் ஆசி நிரம்ப கிடைத்து வருவதாக உறுதியாக கருதலாம்.

    ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் விரதம் இருந்து மனம் உருகி பித்ருக்களின் ஆசியை கேட்க வேண்டும். நிச்சயம் பித்ருக்கள் உங்களை வாழ்த்துவார்கள்.

    இதன் மூலம் கிடைக்கும் முதல் பலன் என்ன தெரியுமா? உங்கள் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தவழும். உங்களுக்கு வரும் இன்னல்கள் அனைத்தையும் பித்ருக்கள் தடுத்து அருள்வார்கள். உங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள அத்தனை விஷயங்களும் விலகும்.

    நீங்கள் எந்த அளவுக்கு பித்ரு பூஜைகள் செய்கிறீர்களோ..... அந்த அளவுக்கு உங்களுக்கு பலன் கிடைக்கும். பித்ரு வழிபாடு செய்ய, செய்ய செல்வமும் சேரும். வறுமை என்பதே உங்கள் குடும்பத்தினருக்கு வராது.

    நோய்களை தடுத்து காக்கும் சக்தியும் பித்ருக்களுக்கு உள்ளது. அந்த வகையில் நமக்கு சிறு பாதிப்பு என்றாலும் முதலில் ஓடி வருவது பித்ருக்கள்தான்.

    சிலர் குல தெய்வ வழிபாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பித்ருக்கள் வழிபாட்டுக்கு கொடுப்பது இல்லை. குல தெய்வ வழிபாட்டுக்கு முன்பு செய்ய வேண்டியது பித்ருக்கள் வழிபாடுதான் என்பதை மறந்து விடக்கூடாது.

    பித்ருக்களை உரிய ஐதீகப்படி வழிபட்டால் உங்களின் இந்த பிறவியில் உள்ள தோஷங்கள், பாவங்கள் எல்லாம் விலகும். இதனால் உங்கள் ஆத்மா சுத்தமாகி புனிதம் பெறும். இந்த புனிதம் அதிகரித்தால்தான் நீங்கள் முக்தி பாதைக்கு செல்ல முடியும்.

    எனவே முன்னோர் வழிபாடு செய்யாவிட்டால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் கிடைக்காமலே போய் விடக்கூடும். ஆகையால் முன்னோர் வழிபாட்டை மறக்காமல், தவறாமல் செய்யுங்கள்.
    நமது பரம்பரையில், நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ, எத்தனை சந்ததிகள் இறந்துபோயிருந்தாலும், அவர்களுக்காக செய்யும் சிராத்தம் மகாளய சிராத்தமாகும்.
    மகாளய பட்சம் என்று கூறப்படும் புண்ணிய நாட்களில் பித்ருக்கள் வஸீ, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபமாக நம் இல்லம் தேடி வந்து நம்மை ஆசீர்வதிக்கிறார்கள். அவர்களுக்கு நாம் தில தர்ப்பணம் மூலமாக ப்ரீதி செய்தால் விசேஷமாகும். மகாளய பட்சத்தில் அனைத்து நாட்களிலும் நாம் மகாளய தர்ப்பணம் விதிமுறையாக செய்தல் அவசியம். முக்கியமாக பித்ருக்களின் திதியை. மகா பரணி, மத்யாஷ்டமி, வ்யபாத தினங்களில் சிலர் செய்கிறார்கள்.

    நமது பரம்பரையில், நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ, எத்தனை சந்ததிகள் இறந்துபோயிருந்தாலும், அவர்களுக்காக செய்யும் சிராத்தம் மகாளய சிராத்தமாகும். இதை தகப்பனார் இல்லாதவர்கள் மட்டுமே செய்யக்கூடும்.

    ஆண் வாரிசு இல்லாத மனைவி, கணவனுக்கு மகாளய சிராத்தம் செய்வதானால் மகாளய அமாவாசை அன்று செய்வது விசேஷமாகும். தகப்பனார், தாயாரின் வார்ஷிக சிராத்தம் மகாளய பட்சத்தில் வந்தால் அந்த சிராத்தத்தை செய்த பிறகு மட்டுமே மகாளய சிராத்தம் செய்தல் வேண்டும். அதற்கு முன்பு செய்யக்கூடாது.

    மகாளய பட்சத்தில் ஒரு நாளாவது மகாளய சிராத்தம் செய்ய வேண்டும். இதை செய்வதினால் நாம், நமது வம்சத்தில் எல்லோரும் சகல சவுபாக்யங்களுடன் வாழ நமது பித்ருக்கள் அனுக்ரகம் செய்வர் என வேதம் கூறுகிறது.
    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.
    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

    பித்ரு தோஷத்தை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

    ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.

    பித்ரு தோஷத்தக்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

    ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்ய வேண்டியதில்லை.

    பித்ரு தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

    பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு சிக்கிரம் திருமணம் நடக்காது. மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.



    கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு .இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்து கொள்வதில்லை.

    எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?

    கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மனவேதனை அடைந்தால், பித்ருதோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும்.

    ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.

    ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் பித்ரு தோஷம் வருவது ஏன்?


    ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இந்த தோஷம் வரலாம். திருமணம் ஆன பிறகும் பிறந்த வீட்டு வழியில் சில பெண்களுக்கு பித்ரு தோஷம் தொடரும்.
    இந்த தோஷம் கடுமையாக உள்ள சில குடும்பங்களில் மூளை வளர்ச்சி இல்லாத மாற்றுத் திறனாளி குழந்தை பிறக்கலாம். 
    இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட இந்த மகாளய காலத்தில் பித்ருக்களை நினைத்து வழிபட வேண்டும். ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
    முதல் நாள் - பிரதமை     பணம் சேரும்
    2--ம் நாள்    துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
    3-ம் நாள்    திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்

    4-ம் நாள்     சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
    5-ம் நாள்    பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
    6-ம் நாள்    சஷ்டி - புகழ் கிடைத்தல்
    7-ம் நாள்    சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல்

    8-ம் நாள்    அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
    9-ம் நாள்    நவமி - சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
    10-ம் நாள்    தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல்

    11-ம் நாள்    ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
    12-ம் நாள்    துவாதசி - தங்கநகை சேர்தல்
    13-ம் நாள்    திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்

    14-ம் நாள்    சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
    15-ம் நாள்    மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.
    புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினான்கு நாட்களாக விரதம் இருந்து அமாவாசை அன்று நம் மூதாதையருக்கு தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண்புகளையும் தரவல்லது.
    புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினான்கு நாட்களாக விரதம் இருந்து அமாவாசை அன்று நம் மூதாதையருக்கு தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண்புகளையும் தரவல்லது.

    எனவே தினம் தினம் ஆலயம் சென்று இறைவனை வழிபட முடியாதவர்களும் இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட இந்த மகாளய காலத்தில் பித்ருக்களை நினைத்து வழிபட வேண்டும். வீட்டில் காலம் சென்ற மூதாதையரின் படம் இருக்குமானால் அதன் முன் இக்காலத்தில் தினம் தினம் ஏதாவது ஒரு சாதம் செய்து படையல் இட்டு வழிபாடு செய்யலாம்.

    பழவகைகளில் ஏதாவது ஒன்றினை தினம் படைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தரலாம். பிடித்த பலகாரங்களை செய்து அவர்களுக்கு படைத்து எள் எண்ணெய் தீபம் தனியாக போட்டு வழிபாடு செய்ய வேண்டும். நம் முன்னோர்களை நினைத்து வயதானவர்களுக்கும் ஏழை முதியோர்களுக்கும் உணவு அளித்து அவர்களுக்கு துணிமணி தானம் தந்தால் நம் முன்னோர்கள் அதனைக் கண்டு மகிழ்ந்து நம் குலத்தவர்களை வாழ்த்துகின்றனர்.

    மூதாதயரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென் கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் மிக நன்மைகள் கிடைக்கும்.

    காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர், திதி தர ஏற்ற இடங்கள். தமிழகத்தில் ராமேஸ்வரம் சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம்., பவானி கூடுதுரை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், திருக்கோவரணம் போன்ற இடங்கள் திருவெண்காடு, உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் ஆலயம், மற்றும் ஆற்றங்கரைகளிலும் பித்ருக்களுக்காக நாம் பிண்டம் பிடித்து தர்ப்பனம் செய்வது கூடுதல் பலன் தரவல்லது.
    பட்சம் என்றால் 15 நாட்கள், மகாளயம் என்றால் மகான்களின் இருப்பிடம். இறந்து போய்விட்டாலும் கூட நமது முன்னோர்கள் மகாளய பட்சம் 15 நாட்களும் பூமிக்கு வந்து நம்முடன் தங்குவதாக சாஸ்திரம்.
    பட்சம் என்றால் 15 நாட்கள், மகாளயம் என்றால் மகான்களின் இருப்பிடம். இறந்து போய்விட்டாலும் கூட நமது முன்னோர்கள் மகாளய பட்சம் 15 நாட்களும் பூமிக்கு வந்து நம்முடன் தங்குவதாக சாஸ்திரம். ஆகவே தான் இந்த 15 நாட்களிலும் பித்ருக்களுக்கு நாம் அன்னம் அளிக்க வேண்டுமே தவிர, மற்ற விசேஷமான பூஜைகளையோ, ஹோமங்களையோ செய்யக்கூடாது என்கிறது சாஸ்திரம்.

    மகாளயத்தை எப்படிச் செய்யலாம்? மகாளயத்தை 1. பார்வணம், 2. ஹிரண்யம், 3. தர்ப்பணம் என்று மூன்று வழிகளில் செய்யலாம்.

    1) பார்வணம் என்பது ஆறு பிராமணர்களை (பித்ருக்களாக) வரித்து, தந்தை, தாய், தாத்தா, பாட்டி ஆகியோருக்கு ஹோமம் செய்து, சாப்பாடு போடுவது.
    2) ஹிரண்யம் என்பது அரிசி வாழைக்காய் ஆகியவைகளை தந்து தர்ப்பணம் செய்வது.
    3) தர்ப்பணம் என்பது அமாவாசை போல் தர்ப்பணமாக செய்வது.

    இவற்றில் ஏதாவது ஒருவிதத்தில் தனது பித்ருக்களுக்கு மகாளயத்தை செய்து தங்கள் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
    ஒருநாள் மட்டும் மகாளயம் செய்பவர்கள், மகாபரணி (28-09-18 வெள்ளி), மத்யாஷ்டமீ (02-10-18 செவ்வாய்), மகாவ்யதீபாதம் (01-10-18 திங்கள்), கஜச் சாயா (06-10-18 சனி), ஆகிய நாட்களில் ஏதாவது ஒருநாளில் மகாளயம் செய்யலாம். இவை மிகச் சிறந்த நாட்கள் ஆகும்.

    சன்யாசியாக சித்தியானவர்களுக்கு 06-10-18 சனி அன்றும், விபத்தால் துர்மரணம் அடைந்தவர்களுக்கு 07-10-18 ஞாயிறு அன்றும், கணவருக்காக மனைவி செய்யும் மகாளயம் மற்றும் பிரம்மச்சாரிகளுக்கு செய்யும் மகாளயத்தை 08-10-18 திங்கள் அமாவாசை அன்றும் செய்யலாம்.

    மகாளய பட்சத்தில் தாய்- தந்தையருக்கு வருடா வருடம் செய்யும் சிராத்தம் நேர்ந்தால், சிராத்த நாளன்று சிராத்தம் செய்து விட்டு அதற்கு பிறகு மற்றொரு நாளில் மகாளயத்தை செய்ய வேண்டும்.
    பித்ரு தோஷம் உள்ளவர்கள் கருட சேவையைத் தரிசித்து வந்தால், அந்த தோஷம் நீங்கும்; சந்ததி செழிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும்.
    கருடசேவையும் முன்னோர் ஆசியும் புரட்டாசியில் எண்ணற்ற கோயில்களில் பிரம்மோற்சவம் நிகழும். அதிலும் திருப்பதி பிரம்மோற்ஸவம் மிகப் பிரசித்திப் பெற்றது. வாழ்வில் ஒருமுறையேனும் அந்த வைபவத்தைத் தரிசிப்பதை பெரும் கொடுப்பினையாகச் சொல்வார்கள் நம் பெரியவர்கள். அந்த வைபவத்தில் மற்ற சேவைகளைத் தரிசிக்காவிட்டாலும், கருடசேவையை மட்டுமாவது அவசியம் தரிசிக்கவேண்டும். ஏன் தெரியுமா?

    செய்த பாவத்தின் காரணமாக நரகத்தில் உழலும் ஆத்மாக்கள், மோட்சப் பிராப்தி இருந்தும் ஊழ்வினை காரணமாக மோட்சத்தை எட்ட இயலாத ஆத்மாக்கள், கருட சேவையைத் தரிசிக்க திரள்வார்கள் என்கின்றன புராணங்கள். அந்த ஒருநாள் மட்டும், அவர்கள் தங்களின் துயரத் தளைகளில் இருந்து விடுபடுவதற்கான அனுமதியை பெருமாளிடம் கருட பகவானே கேட்டுப் பெற்றாராம். அதேபோல், அன்று பெருமாளைத் தரிசிக்க வரும் பூலோக மாந்தர்களுக்கும் திருவருள் புரியும்படி வரம் கேட்டு வாங்கினாராம் கருடன்.

    அப்படி, கருடசேவையைத் தரிசிக்க வரும் பித்ருக்கள், தங்களின் சந்ததியினர் வந்திருக்கிறார்களா என்று தேடுவர். அவர்களை தியானிப்பதுடன், அவர்களின் விமோசனத்துக்காகவும் ஸ்வாமியிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்’ என்பது ஐதீகம். இன்றைக்கும், கருடசேவையைத் தரிசித்த கையோடு சிறிது நேரம் வானத்தை உற்று நோக்கி தியானிக்கும் வழக்கம், பக்தர்கள் சிலரிடம் உண்டு. இதனால் ஸ்வாமியின் திருவருளோடு, தங்கள் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

    பித்ரு தோஷம் உள்ளவர்கள் கருட சேவையைத் தரிசித்து வந்தால், அந்த தோஷம் நீங்கும்; சந்ததி செழிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும். வரும் அக்டோபர் 3-ம் தேதி, திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் துவங்குகிறது. அக்டோபர் 7 அன்று கருடசேவை நடைபெறும். ஏழுமலையானுக்கு உகந்த புரட்டாசியில், திருப்பதிக்குச் சென்று பிரம்மோஸ்சவத்தில் கலந்துகொள்வதுடன், கருடசேவையையும் தரிசித்து அருள்பெற்று வாருங்கள்.
    கீழே உள்ளது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும்.
    ஓம் காளிகாயை வித்மஹே
    மாதாஸ்வ ரூபாயை தீமஹி,
    தன்னோ அங்காளி ப்ரசோதயாத்

    என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திர த்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும்.

    இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அங்காளம்மன் இரட்டிப்பு பலன்களை வாரி, வாரி வழங்குவாள் என்பது ஐதீகமாகும்.
    மேல்மலையனூர் தலத்தில் மூன்று வகை பிரசாதங்களை பக்தர்கள் பெற முடியும். அதன் பின்னணியில் வரலாறு உள்ளது. அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    மேல்மலையனூர் தலத்தில் மூன்று வகை பிரசாதங்களை பக்தர்கள் பெற முடியும். அதன் பின்னணியில் வரலாறு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    தட்சனின் யாகத்தை அழிக்க புறப்பட்ட தாட்சாயினி, அகோரமாக பெரிய உருவம் எடுத்து தீயில் விழுந்து யாகத்தை அழித்தாள். அவளது உருவமற்ற அவதாரமே அங்காளி என்று அழைக்கப்படுகிறது. அதுதான் மருவி அங்காள பரமேஸ்வரி என்றானது.

    அங்காளம்மன் யாகக் குண்டத்தில் விழுந்து சாம்பலான இடமாக இத்தலம் கருதப்படுகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில் இங்கு பக்தர்களுக்கு சாம்பலை பிரசாதமாக கொடுக்கிறார்கள்.

    தாட்சாயினி தன்னை அழித்துக் கொண்ட தகவல் அறிந்ததும் சிவன், அவளை தூக்கி ஆவேசமாக ஆடினார். அப்போது தாட்சாயினியின் கை துண்டாகி இத்தலத்தில் விழுந்தது. எனவே இத்தலம் தண்ட காருண்யம் என்ற சக்தி பீடமாக மாறியது. இதை பிரதிபலிக்கும் வகையில் இத்தலத்தில் குங்குமம் பிரசாதம் கொடுக்கிறார்கள்.

    அன்னை பராசக்தி சிவ சுயம்புவாக புற்று வடிவில் அங்காள பரமேஸ்வரியாக மேல் மலையனூரில் அவதாரம் எடுத்தார். இதனால் அந்த புற்று மகத்துவம் மிகுந்ததாக மாறியது. அந்த புற்று மண்ணை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். நோய் தீர்க்கும் அற்புதங்களை செய்வதால் மேல்மலையனூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் மற்ற பிரசாதங்களை விட புற்றுமண் பிரசாதத்தை மிகவும் விரும்பி வேண்டி கேட்டு, வாங்கிச் செல்வதை காணலாம்.

    ×