search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    தி.மு.க. மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை ஒட்டப்பிடாரம் தொகுதியில் வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். #TNByPolls #DMK #Kanimozhi
    தூத்துக்குடி:

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினரின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அவர்கள் வீதிவீதியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க. சார்பில் போட்டியிடும் சண்முகையாவை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டார். மேலும் துரைமுருகனும் பிரசாரம் மேற்கொண்டார்.

    கோப்புப்படம்

    இந்நிலையில் தி.மு.க. மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று மாலை தனது பிரசாரத்தை தொடங்கினார். அவர் நேற்று ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் வீதிவீதியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தார்.

    இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி 2-வது வார்டு பகுதிகளான அன்னை இந்திராநகர் பிள்ளையார் கோவில் முன்பு பிரசாரத்தை தொடங்கினார். பின்பு அய்யப்பன்நகர், விஸ்வபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது கனிமொழி எம்.பி. அனைத்து வீதிகளிலும் நடந்தே சென்றார். ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக சென்று ஆதரவு திரட்டினார்.

    இன்று மாலை தூத்துக்குடி ஒன்றியம் சோரீஸ்புரம், அந்தோணியார்புரம், மறவன்மடம், சிலுக்கன்பட்டி, கீழகூட்டுடன்காடு, புதுக்கோட்டை, செந்தியம்பலம், கட்டாலங்குளம், புதூர், முடிவைத்தானேந்தல் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    நாளை மறுநாள் (11-ந் தேதி) ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய பகுதிகளிலும், 13-ந்தேதி ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய பகுதிகளிலும், 15-ந்தேதி தூத்துக்குடி ஒன்றிய பகுதிகளிலும் கனிமொழி எம்.பி. தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். #TNByPolls #DMK #Kanimozhi

    வருகிற 23-ந் தேதிக்கு பின்னர் ஸ்டாலின் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சாராக வருவார். அவரை விமர்சிக்கும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கோ, அ.தி.மு.க.வினருக்கோ இல்லை என்று கனிமொழி கூறியுள்ளார். #kanimozhimp #mkstalin #edappadipalanisamy

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் சி. சவேரியார்புரத்தில் தி.மு.க. காரியாலயத்தை இன்று கனிமொழி எம்.பி. திறந்து வைத்து நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவையில் இருந்து நேற்று 50 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தேனி தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை வேட்பாளர்களிடம் கூறிய பின்னர் மாற்றி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இதனால் தேர்தல் ஆணையம் மீது எதிர்கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் நம்பிக்கை இல்லை. நான் ஏற்கனவே கூறிய படி தேர்தல் தோல்வி பயத்தால் ஆளுங்கட்சி, தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துள்ளது. 

    தேர்தல் ஆணையம் சுகந்திரமாக செயல்படவில்லை. மக்களின் நம்பகத்தன்மையை பெறவில்லை. மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராக கனவு தான் காணமுடியும் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இதற்கு முன்பு தான் முதலமைச்சர் ஆகுவோம் என்று கனவு கண்டிருக்கமாட்டார்.

    வருகிற 23-ந் தேதிக்கு பின்னர் ஸ்டாலின் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சாராக வருவார். அதற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி தாம் முதலமைச்சர் ஆகுவோம் என்று கனவு கூட காணமுடியாது. ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கோ, அ.தி.மு.க.வினருக்கோ இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #kanimozhimp #mkstalin #edappadipalanisamy

    தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #tamilisai #electioncommission #kanimozhi
    சென்னை:

    சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன. சிலர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை திமுக கூறி உள்ளது. 

    திமுகவினரும், அமமுகவினரும் பணம் கொடுத்தார்கள் என பொதுமக்களே தெரிவித்தார்கள். 

    தூத்துக்குடியில் மக்களுக்கு ரூ.200, 300 தான் கொடுத்தனர். இது அவர்களுக்கு சிறிய தொகை தான். மக்களின் ஏழ்மையை தங்கள் லாபத்திற்காக பயன்படுத்திக்கொள்வது தவறு என்பது எனது கருத்து.

    கனிமொழியை விட தூத்துக்குடியில் போட்டியிட எனக்கு அதிக உரிமை உள்ளது என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilisai #electioncommission #kanimozhi
    திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள், உறுப்பினர்களை தி.மு.க. தலைமை கழகம் நியமித்து அறிவித்துள்ளது. #TNBypolls #DMK
    சென்னை:

    அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த 4 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களை தி.மு.க. தலைமை கழகம் நியமித்து அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    திருப்பரங்குன்றம் தொகுதிக்கு பொறுப்பாளர்களாக- துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன்.

    திருப்பரங்குன்றம் கிழக்கு- மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ.,

    மேற்கு- தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம்.

    தெற்கு- விருதுநகர் வடக்கு மாவட்ட செயலா ளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.,

    வடக்கு- மதுரை மாநகர மாவட்டப் பொறுப்பாளர் கோ.தளபதி.

    தெற்கு பகுதி-சிவகங்கை மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ.

    அவனியாபுரம் கிழக்கு பகுதி- சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்ஏ.

    அவனியாபுரம் மேற்கு பகுதி- திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ.

    மேலும் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகர், ஜெ.அன்பழகன், கே.எஸ்.மஸ்தான், ஆண்டி அம்பலம், இன்பசேகரன், ஈஸ்வரன், வசந்தம் கார்த்திகேயன், கோவி.செழியன் மற்றும் கம்பம் ராமகிருஷ்ணன், முத்துராமலிங்கம், ஆவடி சா.மு.நாசர், நிவேதா முருகன்.

    ஒட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்கள்- திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன்.


    தூத்துக்குடி ஒன்றியம்- கனிமொழி எம்.பி., கருங்குளம் வடக்கு- ஆஸ்டின் எம்.எல்.ஏ., திருவைகுண்டம் மேற்கு- கீதாஜீவன் எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் மேற்கு- கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., முத்தையாபுரம் பகுதி- சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., போல்பேட்டை பகுதி- சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.

    மேலும் எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, கணேசன், மனோ.தங்கராஜ், எஸ்.ஆர்.ராஜா, ப.ரங்கநாதன், மு.பெ.கிரி, இ.கருணாநிதி, கே.எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் அப்துல் வகாப், பத்மநாபன்.

    அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர்கள்- விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி.

    க.பரமத்தி ஒன்றியம்- முத்துசாமி, கரூர் ஒன்றியம்- டி.எம்.செல்வகணபதி, அரவக்குறிச்சி ஒன்றியம்- சக்கரபாணி எம்.எல்.ஏ.

    மேலும் எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காந்தி, பெரியண்ணன், சுந்தர், மாதவரம் சுதர்சனம், எழிலரசன், ராமர், சவுந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார் மற்றும் காந்திசெல்வன், மூர்த்தி, அங்கயற்கண்ணி, பி.தியாகராஜன், சிவசங்கர்.

    சூலூர் தொகுதி பொறுப்பாளர்கள் - திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ்.

    சுல்தான்பேட்டை ஒன்றியம்- தா.மோ.அன்பர சன் எம்.எல்.ஏ., சூலூர் தெற்கு ஒன்றியம்- ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., சூலூர் வடக்கு ஒன்றியம்- ஆ.ராசா.

    மேலும் எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், கார்த்திக், தடங்கம் சுப்பிரமணி, செங்குட்டுவன், பிரகாஷ், ஜெயராமகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா, தாயகம் கவி, கார்த்திகேயன், நல்லதம்பி, முபாரக், ராமச்சந்திரன், செல்வராஜ், நல்லசிவம் மற்றும் சிவலிங்கம், வீரபாண்டி ராஜா, பத்மநாபன், செல்ல பாண்டியன், சிவானந்தம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNBypolls #DMK
    சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். #Vijayakanth #Loksabhaelections2019
    சென்னை:

    தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அவர்களின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோரும் வாக்களித்தனர்.

    வாக்களித்த பிறகு பிரேமலதா அளித்த பேட்டியில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்றார்.

    தருமபுரியில் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் வாக்களித்தார்.  திருப்பூர் மாவட்டம் மூங்கில்தொழுவு பகுதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சி. மகேந்திரன் வாக்களித்தார்.

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி. முனுசாமி, காவேரிப்பட்டினத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். கரூர் பாராளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பெரிய திருமங்கலம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.

    திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த நத்தம் வாக்குச்சாவடியில் பெரம்பலூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதி வாக்குப்பதிவு செய்தார்.

    தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், தமது குடும்பத்தினருடன் சென்னை நீலாங்கரையில் உள்ள புனித தோமையர் ஊராட்சி பள்ளியில் வாக்களித்தார்.

    திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் கரிசல்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.



    திமுக மகளிர் அணி தலைவியும், அக்கட்சியின் தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளருமான கனிமொழி, தென் சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்தார்.

    கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியின் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ், மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்தார். #Vijayakanth #Loksabhaelections2019
    கனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன்? என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். #Kanimozhi #ITRaid

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    தமிழகத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 138 கோடியே 57 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ரூ.3.16 கோடி பறிமுதலாகி இருக்கிறது. ரூ.43.5 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பிடிபட்டுள்ளன.

    தூத்துக்குடியில் கனிமொழி தங்கி இருந்த வீட்டில் திட்டமிட்டு சோதனை நடத்தப்படவில்லை. அங்குள்ள தேர்தல் அதிகாரிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் வந்ததையடுத்து பறக்கும் படையினர் அங்கு சென்றனர். வருமான வரித் துறையினருக்கும் தகவல் வந்ததால் அங்கு சென்றனர். பணம் எதுவும் அங்கு இல்லை என்பது தெரிய வந்தது. அதிகாரிகள் திரும்பி வந்து விட்டனர்.


    ஆண்டிப்பட்டியிலும் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டருக்கு தகவல் வந்ததால், பறக்கும் படையினரும், வருமான வரித் துறையினரும் சோதனை நடத்தினார்கள். இதில் ஒரு கோடிக்கு மேல் பணம் பிடிபட்டதாக தகவல் வந்துள்ளது. முழு விவரம் இனிமேல்தான் தெரிய வரும்.

    தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு வரும் தகவலையடுத்து கட்சி பாகுபாடு இல்லாமல் சோதனை நடத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது ஒரு நிருபர், ‘‘எதிர்க்கட்சியை சேர்ந்த துரைமுருகன், கனிமொழி, வசந்தகுமார் ஆகியோருடைய வீடுகளில் சோதனை நடத்தும் அதிகாரிகள் அ.தி.மு.க. கூட்டணி சம்பந்தபட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்த வில்லை. ஒருதலைபட்சமாக தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாக கூறப்படுகிறதே? என்று கேட்டார்.

    இதற்கு பதில் அளித்த தேர்தல் அதிகாரி எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து சோதனை நடத்துகிறோம். பாரபட்சம் பார்ப்பது இல்லை. விதி மீறலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார். #Kanimozhi #ITRaid

    எதிர்க்கட்சி தலைவர்களை பற்றி மட்டுமே வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எப்படி துப்பு கிடைக்கிறது? என ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார். #ITRaids #Kanimozhi #PChidambaram
    சென்னை:

    கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை, எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி. அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களை பற்றி மட்டுமே ‘துப்பு’ கிடைக்கிறது?


    2019 தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் ஏதேச்சதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே.

    வருமானவரித் துறை கார்த்தி சிதம்பரத்தின் மீது கொடுத்த புகார் சட்ட விரோதமானது, செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த வழக்கில் வருமான வரித்துறை மேல்முறையீடு செய்து இருக்கிறது. அவ்வளவு தான்.

    இந்த மேல்முறையீட்டில் கார்த்தியின் வழக்கறிஞர்கள் பதில் சொல்வார்கள்.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார். #ITRaids #Kanimozhi #PChidambaram
    தூத்துக்குடியில் நான் தங்கியிருக்கும் வீட்டில் சோதனை செய்யப்பட்டிருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்று கனிமொழி கூறியிருக்கிறார். #Kanimozhi #ITRaid
    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இந்நிலையில், தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனைக்குப் பிறகு கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

    அவர் பேசும்போது, ‘சுமார் 8.30 மணியளவில் சோதனை செய்ய அனுமதி கேட்டார்கள். உரிய ஆவணம் இருக்கிறதா என்று கேட்டேன். நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தோம். என் வீட்டில் சோதனை செய்யப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது. 

    சோதனைக்குப் பின் ஒன்றும் இல்லை என்று அவர்களே ஒப்புக் கொண்டார்கள். தமிழிசை வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது. அங்கு சோதனை செய்ய தயாரா?. தூத்துக்குடியில் எங்களை அச்சுறுத்துவதற்காக சோதனை நடைபெற்றிருக்கிறது. தோல்வி பயத்தால் சோதனை செய்யப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். எதுவாக இருந்தாலும் நாங்கள் சந்திப்போம்’ என்றார்.
    தூத்துக்குடி, வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை மதுரை ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது. #kanimozhi
    மதுரை:

    ராமநாதபுரம் கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லா சேட், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை சட்டப்படியும், நியாயமான முறையிலும் நடத்தும் வகையில் பறக்கும் படை, சிறப்பு குழுக்களை ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது. தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பிரசார கூட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவருக்காக, தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்கிறார்கள். கடந்த மாதம் 27-ந்தேதி வேப்பலோடை கிராமத்தில் கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் வேலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பிலும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுகிறது. கதிர் ஆனந்த் வீடு, அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக கதிர் ஆனந்த், அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறையில் நம்பிக்கை வைத்துள்ளவர்களின் நம்பிக்கையை கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரின் செயல்பாடு சீர்குலைய செய்துள்ளது. எனவே அவர்களை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதியிழப்பு செய்யக்கோரி தேர்தல் கமிஷனுக்கு கடந்த 5-ந்தேதி மனு அனுப்பினேன். அந்த மனு அடிப்படையில் கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரை தகுதியிழப்பு செய்ய உத்தரவிட வேண்டும்.



    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை ஐகோர்ட்டு அமர்வில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #kanimozhi
    மத வெறியை தூண்டி விட்டு, நாட்டின் ஒற்றுமையை பா.ஜனதா சிதைக்க பார்க்கின்றது என்று சீதராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். #sitaramyechury #bjp

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.யை ஆதரித்து கோவில்பட்டி மெயின் ரோடு காமராஜர் சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசியதாவது:-

    பா.ஜனதா அரசின் உயர் பணமதிப்பு இழப்பு, சரக்கு சேவை வரி விதிப்பு போன்ற தவறான பொருளாதார கொள்கைகளால், இதுவரையிலும் இல்லாத அளவுக்கு தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. பெரு வணிக நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை மத்திய பா.ஜனதா அரசு வழங்கி விட்டு, பின்னர் அதனை வாராக்கடனாக தள்ளுபடி செய்கிறது. இதேபோன்று அந்த நிறுவனங்களுக்கு சாதகமாகவே ரபேல் உள்பட அனைத்து ஒப்பந்தங்களையும் பல ஆயிரம் கோடி மதிப்பில் வழங்குகிறது. மாறாக விவசாயிகள், தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். எனவே பா.ஜனதா அரசு தோற்கடிக்கப்பட வேண்டும், மாற்று அரசு உருவாக வேண்டும்.

    மக்களிடம் பணத்தை கொள்ளையடித்த பா.ஜனதா அரசு தற்போது அதன் தேர்தல் அறிக்கையில் பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது. அதேபோன்று பா.ஜனதாவுடன் இணைந்து தமிழகத்தில் அ.தி.மு.க. அரசும் பல ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டது. இந்த 2 அரசுகளும் அகற்றப்பட வேண்டும்.

    பா.ஜனதா அரசில் பசுகாவலர்கள், கலாசார காவலர்கள் என்ற பெயரில் சிறுபான்மை மக்கள், இஸ்லாமியர்கள், தலித் மக்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். மத வெறியை தூண்டி விட்டு, நாட்டின் ஒற்றுமையை சிதைக்க பார்க்கின்றனர். மதசார்பற்ற ஜனநாயகத்தை காக்க, மதவெறி, வகுப்புவாதம் பிடித்த பா.ஜனதா அரசை தூக்கி எறிய வேண்டும்.

    மத்திய அரசின் அனைத்து துறைகளும், அமைப்புகளும் சீரழிக்கப்பட்டு உள்ளன. எனவே பா.ஜனதாவின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடிய பிரச்சினைகளை பா.ஜனதா அரசு எழுப்பி வருகிறது. நமது நாட்டில் யாரும் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் ஆதரிக்க வில்லை.

    ஆனால் பா.ஜனதாவின் ஆட்சியில் 200 சதவீதம் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. இதனால் ஏராளமான படைவீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை தடுத்து நிறுத்தாமல், மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் பா.ஜனதா அரசு செயல்படுகிறது. எனவே புதிய மதசார்பற்ற அரசு அமைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து நாளை மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #MKStalin
    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    நேற்று அவர் நாகர்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பின்பு அங்கிருந்து புறப்பட்டு இரவில் நெல்லை வந்தார். நெல்லை தாழையூத்தில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் இரவில் ஓய்வெடுத்தார்.

    இன்று காலை நெல்லை கோர்ட்டு எதிரே உள்ள பெல் மைதானத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். மாலையில் சங்கரன் கோவிலில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டு பேசுகிறார்.

    பின்பு இரவில் நெல்லை தாழையூத்து தனியார் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கும் மு.க.ஸ்டாலின் நாளை (10-ந் தேதி) தூத்துக்குடியில் பிரசாரம் செய்கிறார். அவர் தூத்துக்குடி-நெல்லை நான்கு வழிச்சாலையில் உள்ள மங்களகிரி விலக்கு பகுதியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று பேசுகின்றனர். #LokSabhaElections2019 #MKStalin

    நாட்டில் நல்லாட்சி நடைபெற உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றிபெற செய்யுமாறு கனிமொழி எம்பி பிரசாரத்தில் பேசியுள்ளார். #kanimozi #dmk #parliamentelection
    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை  திருச்செந்தூர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். திருச்செந்தூர் பேரூராட்சி கலையரங்கம் அருகில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் ஜீவாநகர், துர்க்கையம்மன் கோவில் தெரு, நாடார் தெரு, சண்முகர் மஹால் வழியாக சன்னதி தெரு, மறக்குடி தெரு, மணல்மேடு, சபாபதிபுரம் தெரு, புளியடி தெரு, வீரராகபுரம் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு, வீரகாளியம்மன் கோவில் தெரு வண்ணாந்திரவிளை, கரம்பவிளை, தோப்பூர் தெற்கு ரதவீதி, பாரதியார் தெரு, மேல நாடார் தெரு வழியாக வந்து தீயணைப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-  

    தி.மு.க. சொன்னதைதான் செய்வோம். செய்வதை தான் சொல்வோம். மத்தியில் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆட்சி அமைந்ததும் மாணவர்களின் கல்விக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்வோம். விவசாயிகளின் வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 

    நாட்டில் நல்லாட்சி நடைபெற உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×