search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஞ்சலி"

    ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    தமிழில் ‘கற்றது தமிழ்’ படம் மூலம் அறிமுகமான அஞ்சலி, இதையடுத்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். சமீப காலமாக தமிழில் பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

    அண்மையில் தெலுங்கில் அவர் நடித்த ‘வக்கீல் சாப்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஞ்சலி, அடுத்ததாக மேலும் ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    அஞ்சலி

    மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘நயாட்டு’ என்கிற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் அஞ்சலி ஹீரோயினாக நடிக்க உள்ளார். கருணா குமார் இப்படத்தை இயக்க உள்ளார். தெலுங்கில் பல படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள பிரியதர்ஷி என்பவர் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க உள்ளாராம்.
    அஞ்சலி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘லிசா’ படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், தனது அடுத்த படத்தை அஞ்சலி கவனமாக தேர்வு செய்து நடிக்கிறாராம்.
    நடிகை அஞ்சலி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லிசா’. பேய்க்கதையை மையமாக கொண்டு உருவாகி இருந்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. பெரும்பாலான விமர்சனங்கள் நெகட்டிவாகவே கிடைத்தன. 

    இந்நிலையில் தனக்கு பேய்க்கதை ஒத்து வராது என நினைத்தாரோ என்னவோ, அதிரடியாக ரூட்டை மாற்றியிருக்கிறார் அஞ்சலி. அடுத்ததாக தன்னை மையப்படுத்தும் காமெடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்குகிறார். இவர் 2013-ல் மிர்ச்சி சிவா மற்றும் வசுந்தராவை வைத்து ‘சொன்னா புரியாது’ என்ற படத்தை இயக்கியவர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.



    இதுதவிர, அஞ்சலியின் நடிப்பில் நாடோடிகள் 2, சிந்துபாத் ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் சிந்துபாத் படத்தின் புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாகி இருக்கும் நிலையில், படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது.
    பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து சிந்துபாத் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் புரமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கும் நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கிளாப் போர்டு புரொடக்‌ஷன் சார்பில் சத்யமூர்த்தி கைப்பற்றியிருக்கிறார்.

    இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். லிங்கா, விவேக் பிரசன்னா, சூர்யா விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜராஜன் மற்றும் வன்சன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்சன் இணைந்து தயாரித்துள்ளனர். 

    படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கும் நிலையில், படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

    சுதந்திரப் போராட்ட வீரரான வீர சவர்க்காருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    சுதந்திரப் போராட்ட வீரரான வீர சவர்க்காரின் பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது சேவையை நினைவு கூரும் வகையில் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரரான வீர சவர்க்காருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், வீர சவர்க்காரின் மன தைரியம், தேசப்பற்று மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை வலுவான இந்தியாவை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்துள்ளன. நிறைய பேருக்கு அவர் முன்னுதாரணமாக விளங்கி வருகிறார் என பதிவிட்டுள்ளார்.
    முன்னாள் பிரதமர் நேருவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    நேருவின் நினைவு தினத்தையொட்டி, சாந்திவன் பகுதியில் உள்ள நேரு நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு முன்னாள் துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நம் நாட்டிற்காக முன்னாள் பிரதமர் நேரு அளித்த பங்களிப்பு நினைவுகூரத்தக்கது’ என்று தெரிவித்துள்ளார்.




    நடிகர்கள் அஞ்சலி, சாம் ஜோன்ஸ், யோகி பாபு நடிப்பில் ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘லிசா’ படத்தின் விமர்சனம்.
    சிறுவயதிலேயே அப்பாவை இழந்த நாயகி அஞ்சலி விதவை தாயுடன் வளர்கிறாள். இளம் பெண்ணான அஞ்சலி தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் மறுப்பு தெரிவிக்கும் அம்மா, காதல் திருமணம் செய்து கொண்டதால், தனது அம்மா, அப்பாவின் தொடர்பு இல்லாமல் போய்விட்டதாகக் கூறுகிறார். 

    இதையடுத்து தாத்தா, பாட்டியை தேடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு செல்கிறார் அஞ்சலி. கூடவே தனது கல்லூரி ஜூனியர் சாம் ஜோன்சையும் அழைத்து செல்கிறார். அங்கு ஒரு வயதான தம்பதி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை தனது தாத்தா, பாட்டி என நினைத்துக் கொள்கிறார் அஞ்சலி.



    அந்த வயதான தம்பதியின் நடவடிக்கைகள் அஞ்சலிக்கு சந்தேகத்தை வரவைக்கிறது. அந்த வீட்டில் ஒரு பேயும் இருக்கிறது. ஒரு நாள் அந்த பேய் அஞ்சலி முன் வந்து பயமுறுத்துகிறது. ஆனால் எதற்கும் அஞ்சாத அஞ்சலி, அந்த பேய் குறித்து அறிய நினைக்கிறார். மேலும் வயதான தம்பதியின் பின் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க பார்க்கிறார். இறுதியில் அந்த பேய் என்பதை அஞ்சலி கண்டுபிடித்தாரா? அஞ்சலியின் உண்மையான தாத்தா, பாட்டி என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை அஞ்சலி தான் படத்தை தோளில் தாங்கியிருக்கிறார். அஞ்சலி ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும். அஞ்சலி ஒல்லியான அழகு தேவதையாக ஜொலிக்கிறார். சாம் ஜோன்ஸ் அழகாகவும் இளமையாகவும் இருக்கிறார். பயப்படும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்தால் ஒரு சுற்று வரலாம்.



    வில்லனாக மார்கரந்த் தேஷ்பாண்டே பயமுறுத்தி இருக்கிறார். பாட்டியாக வருபவரை பார்த்தாலும் பயமாக இருக்கிறது. யோகி பாபுவும், பிரம்மானந்தமும் சிரிக்க வைக்க முயன்று இருக்கிறார்கள்.

    அறிமுக இயக்குனர் ராஜூ விஸ்வநாத்தின் 3டி முயற்சிக்கு பெரிய பாராட்டு கொடுக்கலாம். முதல் பாதியில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் கதை இரண்டாம் பாதியில் ஏமாற்றத்தை தருகிறது. பிளாஷ்பேக் காட்சிகளில் அழுத்தம் இல்லாமல் இருக்கிறது. 3டி தொழில்நுட்பம் படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.



    எதிர்பாராத வேளையில் வரும் டிவிஸ்ட் கொஞ்சம் ஆர்வத்தை கூட்டுகிறது. ஆனால், முடியப்போகும் நேரத்தில் மேலும் பிளாஷ் பேக் வருவது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. அழுத்தமான கதையும் சுவாரசியமான திரைக்கதையும் அமைத்து இருந்தால் குழந்தைகளையும் குடும்ப ரசிகர்களையும் இன்னும் ஈர்த்து இருக்கலாம்.

    பிஜி.முத்தையா ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் தரம். சந்தோஷ் தயாநிதி இசை ஓரளவிற்கு மிரட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘லிசா’ மிரட்டல் குறைவு.
    லிசா படத்தில் நடித்துள்ள இளம் நடிகர் சாம் ஜோன்ஸ்-க்கு முன்னணி நடிகையாக இருக்கும் அஞ்சலி நடிப்பு பயிற்சி கொடுத்திருக்கிறார்.
    ஏமாலி படம் மூலம் அறிமுகமான சாம் ஜோன்ஸ், அந்த படத்தில் நன்றாக நடிக்க தெரிந்த இளம் நடிகர் என்று பெயர் எடுத்தார். அடுத்து தர்மபிரபு, லிசா 3டி படங்களில் நடித்துள்ளார். லிசாவில் அஞ்சலிக்கு ஜோடியாகவும், தர்மபிரபுவில் ஜனனிக்கு ஜோடியாகவும் நடிக்கிறார்.

    அஞ்சலியுடன் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:-

    லயோலா கல்லூரியில் பி.காம் படித்த எனக்கு சினிமா வாய்ப்பு வந்தது. முதல் படத்திலேயே பல தோற்றங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இப்போது லிசாவில் பிரம்மானந்தத்துக்கு மகனாக நடித்துள்ளேன்.



    பெங்களூரில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் இளம் கல்லூரி ஜோடியாக நானும் அஞ்சலியும் வருகிறோம். அவர் எனக்கு நடிப்பில் சீனியர் என்பதால் நிறைய சொல்லிக்கொடுத்தார். நடிப்பதற்கு பயிற்சி கொடுத்தார்.

    தெலுங்கிலும் நானே குரல் கொடுத்துள்ளேன். தர்மபிரபுவில் எமலோகத்தில் யோகி பாபுவும் கீழ் உலகத்தில் நானும் கதாநாயகர்களாக இருப்போம். நான் சின்ன பையனாக இருப்பதால் இளம் கதாநாயகன் வாய்ப்புகள் வருகின்றன. அடுத்து 2 படங்கள் பேசி வருகிறேன். விஜய் சேதுபதி போல் அனைத்துவித கதாபாத்திரங்களிலும் நடிக்கவேண்டும். சிவகார்த்திகேயன் போல் ரசிகர்களுக்கு நல்ல எண்டர்டெய்னராகவும் விளங்கவேண்டும் என்பதே என் ஆசை’. இவ்வாறு அவர் கூறினார்.
    ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் அஞ்சலி நடிப்பில் இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3டி படமாக உருவாகி இருக்கும் ‘லிசா’ படத்தின் முன்னோட்டம்.
    பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘லிசா’.

    அஞ்சலி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சாம் ஜோன்ஸ், மக்ராந்த் தேஷ்பாண்டே, யோகி பாபு, மைம் கோபி முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவு - பி.ஜி.முத்தையா, கலை - வினோத் ரவீந்திரன், சண்டைப்பயிற்சி - ஸ்டன்னர் சாம், பாடல்கள் - மணி அமுதவன், நடனம் - சுரேஷ், கிரியேட்டிவ் ஹெட் - யோகேஷ் கிருஷ்ணா, ஆடியோகிராபி - ஏ.எம்.ரஹமதுல்லா, தயாரிப்பு மேற்பார்வை - பாலமுருகன், இணை இயக்கம் - டி.என்.பி.ராஜேந்திரன், நிர்வாக தயாரிப்பு - சௌந்தர் பைரவி, தயாரிப்பு - பி.ஜி.முத்தையா, எம்.தீபா, எழுத்து, இயக்கம் - ராஜு விஸ்வநாத்.



    இந்த படம் 3டி டெக்னாலஜி ஸ்டீரியோஸ்கோப் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. திகில் கலந்த த்ரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. படம் வருகிற மே 24-ந் தேதி திரைக்கு வருகிறது.

    லிசா படத்தின் டிரைலர்:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் இலங்கை குண்டு வெடிப்பிற்கு கண்டனம் தெரிவித்தும், பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. #SriLankablasts
    திசையன்விளை:

    ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் 3 கிறிஸ்தவ தேவாலயத்திலும், அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் குண்டு வெடித்து 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். உலகம் முழுவதும் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் இந்த நிகழ்ச்சிக்கு கண்டனம் தெரிவித்தும், பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல், தோமையார் புரம், கூட்டப்புளி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் கடற்கரையோரம் இன்று அனைத்து படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஒருவர் கூட மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் இன்று நெல்லை மாவட்ட கடற்கரை கிராமங்களில் மீன் விற்பனையும் நடைபெறாது.

    இன்று மாலை உவரியில் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் சென்று குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். இதில் கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த சம்பவத்தை முன்னிட்டு மீனவ கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.  #SriLankablasts
    சீனு ராமசாமி இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகும் கிராமத்து கதையில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகி இருக்கிறார். #ArulnidhiTamizharasu #SeenuRamasamy
    அருள்நிதி தற்போது கே13 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பரத் நீலகண்டன் இயக்கும் இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில், அருள்நிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    கண்ணே கலைமானே படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்கிறார். டைம்லைன் சினிமாஸ் சார்பில் சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் இந்த படம் கிராமத்து பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.



    படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு மே மாதம் துவங்க இருக்கிறது.

    யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனிக்கிறார். #ArulnidhiTamizharasu #SeenuRamasamy

    அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சிந்துபாத்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Sindhubaath
    விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் `சூப்பர் டீலக்ஸ்'. இப்படத்தை தொடர்ந்து தற்போது ‘சிந்துபாத்’ என்னும் படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

    பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி இருக்கும் இப்படம் விஜய் சேதுபதியின் 26-வது படமாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.



    அருண்குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை மே 16ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். #Sindhubaath #VijaySethupathi
    தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் அஞ்சலி, எனது சினிமா பயணத்திற்கு அது ஒரு தடையாக இருக்காது என்று கூறியிருக்கிறார். #Anjali
    அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் என நடிக்க தெரிந்த நடிகை என்று பெயர் எடுத்தவர் அஞ்சலி. அஞ்சலியை சுற்றி சமீபகாலமாக நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. நடிகர் ஜெய்யை அவர் காதலிப்பதாக செய்திகள் வந்தன. இருவருமே மறுக்கவில்லை.



    தற்போது அந்த கிசுகிசுக்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் ‘நான் யாரையும் காதலிக்கவில்லை. சினிமாவைத்தான் நான் காதலிக்கிறேன். நடிகைகள் காதலிப்பது, திருமணம் செய்துகொள்வது எல்லாம் சகஜம் தான். என்னை பொறுத்த வரை திருமணம் செய்து கொண்ட பிறகும், நான் நடிப்பை தொடருவேன். எனது சினிமா பயணத்திற்கு திருமணம் ஒரு தடையாக இருக்காது”, என அவர் கூறினார்.
    ×