search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலசபாக்கம்"

    கலசபாக்கம் அருகே வெயில் கொடுமைக்கு பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இதனால் வெளியில் கூட செல்ல முடியாத நிலையில் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

    நேற்றும் கடுமையான வெயில் வாட்டியது. 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்தது. கலசபாக்கம் அருகே உள்ள கீழ்பாலூரை சேர்ந்தவர் மண்ணு இவரது மனைவி சின்னபாப்பா (வயது 45). இவர் நேற்று கீழ்பாலூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது கடுமையான வெயிலால் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதனை கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு கடலாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சின்னபாப்பா இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கலசபாக்கம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் அருகே உள்ள எள்ளுப்பாறையை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 41) செங்கல் சூளை நடத்தி வந்தார். பாடகம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (47). இவர்கள் 2 பேரும் நேற்று போளூர் செங்கம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது இதில் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட கமலக்கண்ணன், ரமேஷ் 2 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    சம்பவ இடத்திற்கு வந்த கலசபாக்கம் போலீசார் உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கலசபாக்கம் அருகே போலி டாக்டரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் தாலுகா கோவூர் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக டாக்டர் ஒருவர் கிளினிக் வைத்து கொண்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக திருவண்ணாமலை சுகாதாரப்பணிகள் அலுவலகத்துக்கு புகார் வந்தது.

    திருவண்ணாமலை சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பாண்டியன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் கோவூர் கிராமத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

    அங்கு தனியார் கட்டிடத்தில் ஒருவருக்கு ஊசி போடும்போது அவரை கையும், களவுமாக அதிகாரிகள் பிடித்தனர். பின்னர் கலசபாக்கம் போலீஸ் நிலையத்திற்கு அவரை அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஷாஜகான் (வயது 41) என்பதும், இவர் 10 ஆண்டுகளாக மருந்து கடையில் பணி செய்துவிட்டு கோவூர் கிராமத்தில் ஒரு மாதமாக தங்கி ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    மேலும் விசாரணையில், பிளஸ்-2 படித்துவிட்டு சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்ததும் தெரிந்தது.

    இதுகுறித்து சுகாதார பணிகள் இணை இயக்குனர் கொடுத்த புகாரின் பேரில் போலி டாக்டர் ஷாஜகானை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே காலூர் என்ற இடத்தில் சரக்கு ரெயில் சென்றபோது 3 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது.
    திருவண்ணாமலை:

    காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி இன்று காலை சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது.

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே காலூர் என்ற இடத்தில் சரக்கு ரெயில் சென்ற போது 3 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது. ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக சுதாரித்து ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    விழுப்புரம் ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சரிசெய்து வருகின்றனர்.

    இதனால் மன்னார் குடியில் இருந்து திருப்பதி நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கபட்டது.

    இதையடுத்து மாற்று ஏற்பாடாக மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம், காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக திருப்பதி செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.



    ×