search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    சங்கரன்கோவிலில் இளம்பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள பெரிய கோவிலான்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் மனைவி ஆறுமுகத்தாய் (வயது 29). இதே பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் மகன் அருள்ராஜ் (20). அருள்ராஜ் ஊரில் உள்ளவர்களிடம் ஆறுமுகத்தாய் பற்றி அவதூறாக கூறி வந்துள்ளார். 

    இதனை ஆறுமுகத்தாய் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அருள்ராஜ் அவதூறாக பேசி ஆறுமுகத்தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டார். 

    இது குறித்து ஆறுமுகத்தாய் சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அருள்ராஜை கைது செய்தனர்.
    திருட்டு வழக்கில் கைதான புதுவை ஜெயில் கைதி திடீரென மரணம் அடைந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர் புதுநகரை சேர்ந்த செல்வகுமார் மகன் ஜெயமூர்த்தி (வயது 21).

    கூலி தொழிலாளியான ஜெயமூர்த்தியை கடந்த 21-ந் தேதி மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் புதுவை பாகூர் போலீசார் கைது செய்தனர். மறுநாள் புதுவை கோர்ட்டில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    ஜெயிலில் இருந்த ஜெய மூர்த்திக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஜெயிலில் உள்ள மருத்துவ மனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் புதுவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெய மூர்த்தி இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜெயமூர்த்தியின் உறவினர்கள் புதுவை அரசு மருத்துவமனை முன்பு கூடினர். அங்கு அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜெயமூர்த்தி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உடலை பரிசோத னைக்கு எடுத்து செல்ல விடாமல் தடுத்தனர். மேலும் பாகூர் போலீசார் தாக்கியதால் தான் ஜெயமூர்த்தி இறந்துள்ளார். எனவே, பாகூர் போலீசார் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

    இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட வில்லை.

    இதனிடையே தகவல் அறிந்து அங்கு வந்த தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    பாகூர் போலீசார் மீது ஜெயமூர்த்தியின் உறவினர்கள் பெரியகடை போலீசாரிடம் புகார் அளித்தனர்.

    புகாரை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதன் பேரில் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


    ஜெயமூர்த்தியின் உடல் தொடர்ந்து அரசு ஆஸ் பத்திரியிலேயே உள்ளது. புதுவையில் உள்ள கதிர் காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தான் பிரேத பரிசோதனை நடத்துவது வழக்கம்.

    ஜெயமூர்த்தி உடலை அங்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்தனர். ஆனால், அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்தால் உண்மை வெளிவராது என்று கூறி அவருடைய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பரிசோதனை நடத்த வேண்டும். நீதிபதி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் பிரேத பரி சோதனை செய்ய வேண்டும், அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டனர்.

    இது சம்பந்தமாக முடிவு எடுக்க காலதாமதம் ஆனதால் அரசு ஆஸ்பத்திரியிலேயே உடல் இருக்கிறது.

    இதற்கிடையே ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கர் காலாப்பட்டு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். காவலில் இருந்த கைதி உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். காவல் கைதி இறந்தால் நடுவர் மன்ற விசாரணை நடத்தப்படும்.

    எனவே, அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து 176-வது பிரிவு மர்ம மரணம் என்ற சட்டத்தின் கீழ் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே காலாப்பட்டு ஜெயிலில் இருந்து 14 கைதிகளை வழக்குகளில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் வேனில் அழைத்து வந்தனர்.

    ஆனால், ஜெயமூர்த்தி இறந்த தகவலை அறிந்த கைதிகள் வேனில் இருந்து இறங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வழக்குகளில் போலீசார் கைது செய்யும் போது போலீஸ் நிலையத்தில் வைத்தும் அடிக்கிறார்கள். அடுத்து ஜெயிலுக்கு வந்த பிறகு ஜெயில் காவலர்களும் அடிக்கிறார்கள்.

    அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை உடனடியாக அளிப்பதில்லை. இதனால் தான் உயிர் இழப்பு ஏற்படுகிறது என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 15 நிமிடமாக இந்த போராட்டம் நடந்தது. பின்னர் போலீசார் சமாதானப்படுத்தி அவர்களை கோர்ட்டுக்குள் அழைத்து சென்றனர்.

    பாகூர் சப்-இன்ஸ் பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் அடித்ததால்தான் ஜெயமூர்த்தி இறந்ததாக உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய குருநாதனிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்த தகவலை முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும் நீதி விசாரணையும் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

    இறந்த ஜெயமூர்த்திக்கு கவுசல்யா என்ற மனைவியும் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

    தேவதானப்பட்டியில் 2 குழந்தைகளுடன் பெண்ணை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சவரியப்பன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 27). இவர்களுக்கு பீலா (7), வீக்னா (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சவரியப்பன் கர்நாடகாவில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். பழனியம்மாள் தனது 2 குழந்தைகளுடன் தாய் முத்தம்மாள் வீட்டில் தங்கி இருந்தார்.

    சம்பவத்தன்று 2 குழந்தைகளுடன் வெளியே சென்ற பழனியம்மாள் மாயமானார். இது குறித்து அவரது தாய் முத்தம்மாள் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது புகாரில் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (30) என்பவர்தான் தனது மகளை கடத்தி சென்றிருக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    சேலம் அருகே 2 இளம்பெண்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் 2 பேரை தேடி வருகிறார்கள்.

    கருப்பூர்:

    சேலத்தை அடுத்த கருப்பூர் தட்டான்சாவடி பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி வெங்கடேஸ்வரி (வயது 28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சேலம் குரங்குசாவடியில் உள்ள ஒரு தனியார் கார்மெண்ட் நிறுவனத்தில் வெங்கடேஸ்வரி வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற அவர் திடீரென மாயமானார்.

    இது குறித்து கருப்பூர் போலீசார் விசாரித்த போது அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதும், அவருடன் மாயமானதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.

    இதேபோல ஓமலூர் அருகே உள்ள கெட்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் கனிராஜ். அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 24). கணவரை பிரிந்து செங்கரடு காலனியில் உள்ள பெற்றோர் வீட்டில் ஜெயலெட்சுமி வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஜெயலட்சுமி திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சியில் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்ற பெண் மாயமானார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி வயலூர் ரோடு 1-வது  கிராஸ்,கணபதி நகரைசேர்ந்த வர் ராஜசேகரன். இவரது மனைவி ஜெகதீஸ்வரி (வயது 51). இவர் கடந்த 16-ந் தேதி கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. ராஜசேகரன் அவரை பல இடங்களில் தேடினார். எங்கும் தேடியும் ஜெகதீஸ்வரி கிடைக்க வில்லை. 

    இது குறித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 
    திண்டுக்கல் அருகே உதவி தொடக்க கல்வி அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள வாழைக்காய்பட்டி முத்தமிழ்நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). இவர் வேடசந்தூர் வட்டார உதவி தொடக்க கல்வி அதிகாரியாக உள்ளார். இவருக்கு ஜெயக்குமாரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    பிரபாகரன் அதிக இடங்களில் சீட்டு போட்டு அந்த பணத்தை எடுத்து செலவு செய்து விட்டார். இதனால் அந்த பணத்தை கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

    பணம் கேட்டு அவர்கள் தொந்தரவு செய்யவே வாழ்க்கையில் வெறுப்படைந்த பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று இரவு தனது அறையில் தூக்குபோட்டுக் கொண்டார். இன்று காலையில் அவரது மனைவி எழுந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.

    ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் கள் தெரிவித்தனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலூர்:

    கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 31). இவரது மனைவி சரண்யா (28). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கவுதம் அங்குள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது பத்மாவதி (21) என்ற பெண்ணுக்கும் கவுதமுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்த தகவல் இருவரது வீட்டுக்கும் தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் விரக்தியடைந்த கள்ளக்காதல்ஜோடி நேற்று வேடசாமி கோவில் அருகே வி‌ஷம் குடித்தனர். மயங்கி கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நேற்று இரவு கவுதம் சிகிச்சை பலனின்றி இறந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் இன்று காலை பத்மாவதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் சூலூர் அமர்ஜோதி நகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 41). இவரது மனைவி பத்மாவதி (35).

    நேற்று தேவராஜ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். இரவு வீடு திரும்பியபோது பத்மாவதியை காணவில்லை. மனைவியை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தார்.

    இன்று காலை சூலூர் குளத்தில் இளம்பெண் பிணம் மிதப்பது குறித்து தகவல் கிடைத்ததும் தேவராஜ் அங்கு சென்று பார்த்தபோது இறந்து கிடப்பது தனது மனைவி பத்மாவதி என்பதை உறுதி செய்தார்.

    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர் அருகே பள்ளி-கல்லூரி மாணவிகள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி அருகே உள்ள நாகல்குழி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் .இவரது மகள் வசந்ததேவி (வயது 17). இவர் அணைக்கரையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 17-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

    இதையடுத்து அவரது பெற்றோர் இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்ததேவி எங்கு சென்றார், யாராவது அவரை கடத்தி சென்றனரா? என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

     அரியலூர் மீன்சுருட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மகள் பிரியங்கா( வயது 14), 9ம் வகுப்பு மாணவி. இந்த நிலையில் பிரியங்காவை அதே பகுதியை சேர்ந்த கலைவாணன் என்பவர் கடத்தி சென்றதாக , ரமேஷ் மீன்சுருட்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். 

    அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூரில் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் மாராபட்டு பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி இவர் வடச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் சிறுமியை கண்டு பிடிக்க முடியவில்லை.

    சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி சம்பந்திகுப்பம் பகுதியை சேர்ந்த கெங்கையன் மகன் விக்ரமன் (வயது 22). என்பவர் எனது மகளை கதாலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று இருக்கலாம் என்று ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில் நேற்று ஆம்பூர் ரெயில் நிலையத்தில் சிறுமி இருப்பதாக தகவல் கிடைத்து. 

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு விக்ரமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இதேபோல் பேரணாம்பட்டு அருகே உள்ள பாலூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (24) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொண்டனர்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்து சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    ஆதம்பாக்கத்தில் காலி சிலிண்டரை வாங்கி 50 பேரிடம் மோசடி செய்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #gascylinder

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ. காலனி, நியூ காலனி போன்ற பகுதியிலிருந்து வீடுகளில் சமையல் கியாஸ் போடுபவர் கியாஸ் சிலிண்டரை வாங்கிக் கொண்டு திருப்பி தரவில்லை என்று ஆதம்பாக்கம் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வீடுகளில் சிலிண்டர் போடுபவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். வெங்கடேசன் (40) பிடித்து விசாரணை செய்யும்போது அவர் வழக்கமாக போடும் வீடுகளில் சென்று காலியான சிலிண்டர் வாங்கிக் கொண்டு புது சிலிண்டர் தருவதாக கூறி ஏமாற்றியது தெரியவந்தது.

    அவர் சுமார் 50 சிலிண்டருக்கு மேல் திருடி இருக்கிறார். இதுகுறித்து அவர் வேலை செய்யும் கியாஸ் ஏஜென்சியில் விசாரித்த போது வெங்கடேசன் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பாகவே வேலையை விட்டு நின்று விட்டார் என்று கூறினர்.

    ஆனால் போலீசார் சிலிண்டரை கொடுத்த வீடுகளில் விசாரித்தபோது வெங்கடேசன் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக சிலிண்டர் போடுவதாகவும் பழக்கத்தின் பேரில் காலி சிலிண்டரை கொடுத்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் வெங்கடேசன் பில் வைத்துதான் சிலிண்டர் விநியோகித்து வந்தார் என்று தெரிய வந்திருக்கிறது.

    கியாஸ் ஏஜென்சியோ ஒன்றரை வருடத்திற்கு முன்பே வேலை விட்டு நின்று விட்டார் என்று கூறுகிறார்கள். ஒரு வருடத்திற்கு முன்பாக வேலையை விட்டு நின்ற அவருக்கு எப்படி ஒரிஜினல் பில் கிடைக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #gascylinder

    மகனுடன் ஏற்பட்ட தகராறில் மருமகள் பிரிந்து சென்றதால் மனமுடைந்த மாமியார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி அந்தோணி ஜெரால்டு கருணா (வயது50). இவர்களது மகன் ஜெயந்தன். அவரது மனைவி சுபாஷினி. இவர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் ஜெயந்தனுக்கும் அவரது மனைவி சுபாஷினிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுபாஷினி தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இது மாமியார் அந்தோணி ஜெரால்டு கருணாவுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது. 

    கடந்த சில நாட்களாக யாருடனும் பேசாமால் அமைதியாக இருந்தார். நேற்று அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் வினாத்தாளில் 2017-ம் ஆண்டு கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளும் அப்படியே கேட்கப்பட்டு இருந்ததாக புகார் எழுந்துள்ளது. #AnnaUniversity

    சென்னை:

    அண்ணாபல்கலை கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ததில் முறைகேடு நடந்த விவகாரம் பரபரப்பாகி அடங்குவதற்குள் மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது.

    இந்த ஆண்டு நடந்த செமஸ்டர் தேர்வு வினாத்தாள் 2017-ம் ஆண்டு வினாதாளில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளும் அப்படியே கேட்கப்பட்டு இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

    இ.சி.இ. பாடப்பிரிவில் 6-ம் பருவ தேர்வில் 100-க்கு 90 மதிப்பெண்கள் கடந்த ஆண்டு கேட்கப்பட்ட அதே கேள்விகள் அப்படியே இடம் பெற்று உள்ளன. புதிய வினாத்தாளில் 2 மார்க் கேள்விகள் மற்றும் எது சரியான விடை என்பது போன்ற கேள்விகள் வரிசை எண் கூட மாறாமல் கடந்த வருட வினாத்தாள் போன்றே கேட்கப்பட்டுள்ளது.

    தனியார் கல்லூரிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். வினாத்தாள் தயாரிக்கும் போது 4 மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்படும், அதில் ஒன்றை தான் தேர்வு குழுவினர் தேர்வு செய்வது வழக்கம். கடந்த வருடம் தேர்வு செய்யப்பட்ட அதே கேள்வித்தாளை எப்படி இந்த வருடம் தேர்வுக்கு பயன்படுத்தினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது தற்செயலாக நடந்ததாக கருத முடியாது. திட்டமிட்டு தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

    வினாத்தாளில் முறைகேடு நடந்திருப்பதால் மறுதேர்வு நடத்த வேண்டும் எனவும், இதனை விசாரிக்க சிறப்பு குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

    அண்ணாபல்கலைக் கழகத்தில் மீண்டும் வினாத்தாள் முறைகேடு விஸ்வரூபம் எடுக்கிறது.  #AnnaUniversity

    ×