search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    ஒட்டன்சத்திரத்தில் கல்லூரி மாணவி மாயமானது குறித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் திடீர் நகரைச் சேர்ந்தவர் முத்துராஜ் அவரது மகள் மஞ்சுளாதேவி (வயது 18). இவர் திண்டுக்கல் அம்பாதுறையில் உள்ள தனியார் பால்டெக்னிக் கல்லூரியில் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

    சம்பவத்தன்று மதுரைக்கு வேலைக்கான நேர்காணலுக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது தாய் மற்றும் உறவினர்கள் தேடிப் பார்த்ததில் அம்மையநாயக்கனூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமியின் மகன் ஜெயபாண்டியனுடன் மஞ்சுளா தேவி மாயமாகி இருப்பது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து மஞ்சுளாதேவியின் தாயார் கோமதி ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

    புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையம் முன்பு திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல் பழனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    ராஜாக்கமங்கலம் பாம்பன் விளையைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 34). ஆட்டோ டிரைவர். இவர் குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கனவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த சரவணன் சம்பவத்தன்று வீட்டின் அருகே வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் தங்கராஜ், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அய்யம் பெருமாள் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சுசீந்திரம் அக்கரை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் வேல்(38). பி.இ. பட்டதாரி. இவருக்கு படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சரியான வேலை கிடைக்காததால் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த செந்தில்வேல் கடந்த 20-ந் தேதி வீட்டில் தூக்குபோட்டு கொண்டார்.

    இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகிறார்.

    கருங்கல்லை அடுத்த பொதுவன்விளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(44). தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி செல்வத்தை பிரிந்து சென்று விட்டார். இதில் மன வருத் தத்துடன் காணப்பட்டு வந்த அவர் வீட்டின் அருகே வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பொன்தேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அஞ்சுகிராமம் புன்னார் குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(29). இவர் ஈரோட்டில் உள்ள கல்லூரியில் பாலிடெக்னிக் படித்து முடித்து உள்ளார். இவருக்கு வேலை கிடைக்காததாலும், திடீர் உடல்நலக்குறைவு காணரமாகவும் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார்.

    நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மணக்கோலத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி பிராமணர் தெருவை சேர்ந்தவர் சோனா (வயது 19). வேலூர் அண்ணாசாலையில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.பி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சோனாவும், ஆரணியை சேர்ந்த கார் டிரைவரான வில்லவன் கோதை (24) என்பவரும் காதலித்தனர். இவர்களது காதலுக்கு பெண் வீட்டு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த சோனா திடீரென மாயமானார்.

    மகளை கண்டுபிடித்து தரக்கோரி சத்துவாச்சாரி போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். மாணவியை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில், மாயமான மாணவி சோனா காதலன் வில்லவன் கோதையை திருமணம் செய்து கொண்டு மணக்கோலத்தில் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று தஞ்சமடைந்தார்.

    போலீசாரிடம், பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி அருகே பேருந்தை விட்டு கீழே இறக்கியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் பஸ் கண்ணாடியை உடைத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் மண மேல்குடியைச் சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 21). இவரது மனைவி நந்தினி (வயது 20). நேற்று இவர்கள் இருவரும் அறந்தாங்கியில் இருந்து ஏம்பல் செல்லும் அரசு பேருந்தில், நந்தினியின் பெற்றோர் ஊரான குண்டக வயலுக்கு புறப்பட்டனர். 

    மது குடித்துவிட்டு போதையில் இருந்த நீலகண்டன் அவரது மனைவி நந்தினியை பேருந்திற்குள் வைத்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் முகம் சுளித்தனர். இதைத் தொடர்ந்து துரையரசபுரம் அருகே பேருந்து ஓட்டுனர் காளிமுத்து பேருந்தை நிறுத்தி நீலகண்டனையும், அவரது மனைவி நந்தினியையும் பேருந்தை விட்டு கீழே இறக்கி விட்டார். 

    இதில் ஆத்திரமடைந்த நீலகண்டன் பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், பேருந்தின் கண்ணாடியையும் உடைத்துள்ளார். இதுகுறித்து பேருந்து ஓட்டுனர் காளிமுத்து, ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக நீலகண்டனை கைது செய்தனர். 
    அஞ்சுகிராமம் அருகே டியூசனுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் மாணவரை தேடி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் சிதம்பர நாதன்நகர் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் மூர்த்தீஸ்வரன் (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 22-ந் தேதி வீட்டில் இருந்து டியூசனுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர் இல்லாததால் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை ஆகியோர் வழக்குபதிவு செய்து மாயமான மாணவரை தேடி வருகின்றனர்.

    வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டதையடுத்து நகைகளை திரும்ப கேட்ட மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்த மருமகன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் கொல்லர் தெருவைச் சேர்ந்தவர் ராஜ சேகரன். இவரது மகள் அனிதாவுக்கும், சென்னை கிண்டியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 70 பவுன் நகை, ரூ.1½ லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை கொடுக்கப்பட்டது.

    இவர்களுக்கு ஒரு மகள் பிறந்த நிலையில் மணமகன் வீட்டார் கூடுதல் வரதட்சணை கேட்டு அனிதாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக கணவர் ராஜேஷ், அவரது பெற்றோர் போஸ்-ராஜம்மாள், சகோதரி கீதாமலர் உள்பட 6 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் அனிதாவின் தந்தை ராஜசேகரன், மகளுக்கு வரதட்சணையாக கொடுத்த 81 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் மற்றும் பேத்தியை தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுள்ளார்.

    அப்போது கிண்டி போலீஸ் நிலையத்தில் போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என ராஜேஷ் குடும்பத்தினர் மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து ராஜசேகரன் விருதுநகர் 2-வது மாஜிஸ் திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதனை விசாரித்த கோர்ட்டு நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ராஜேஷ் உள்பட 6 பேர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    மயிலாடுதுறை அருகே தர்ணா போராட்டம் நடத்திய இளம்பெண் மீது தாக்குதல் நடத்திய காதலன் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழையூரை சேர்ந்த ஜெயசுதா(வயது26).ஐடிஐ டிப்ள மோ படித்துள்ளார். சென்னையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே செம்பதனிருப்பு ராமர்கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(30). இவரும் சென்னையில் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் ஜெயசுதாவுக்கும், கார்த்திக்குக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 2012-ம் ஆண்டு முதலே இருவரும் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 10-ந் தேதி கடலூரில் காதலர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கீழையூரில் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் 10 நாட்களுக்கு முன்பு உறவினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. நான் சென்று வருகிறேன் என்று கூறிச்சென்ற கார்த்திக் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் ஜெயசுதா அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து கடந்த 18-ந் தேதி கணவரை தேடி ஜெயசுதா செம்பதனிருப்பு கிராமத்திற்கு சென்றார். அங்கு கணவர் வீட்டுக்கு சென்று விவரம் கேட்டார்.

    அப்போது இங்கு வரக்கூடாது என்று கார்த்திக்கின் தந்தை, தாயார் மற்றும் அவரது தம்பி ஆகியோர் ஜெயசுதாவை அடித்து தாக்கியதாத கூறப்படுகிறது.

    இதனால் ஆவேசம் அடைந்த ஜெயசுதா என் கணவர் வரும் வரை வீட்டை விட்டு போக மாட்டேன் என தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஜெயசுதாவின் திடீர் போராட்டத்தால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். இதையடுத்து ஜெயசுதா எங்கும் செல்லாமல் வீட்டின் முன்பு தொடர்ந்து தர்ணா இருந்து வந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கணவரின் குடும்பத்தினர் நேற்று ஜெயசுதாவை அடித்து உதைத்துள்ளனர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஜெயசுதாவை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் பற்றி பாக சாலை போலீசில் அவர் புகார் செய்தார். இதுகுறித்து பாகசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நானும் கார்த்திக்கும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டோம். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கார்த்திக் பெற்றோர் எங்களை வாழ விடாமல் தடுத்து வருகின்றனர்.

    காதல் திருமணம் செய்த நாங்கள் கடந்த 3 மாதமாக மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினோம். தற்போது மாமாவை பார்க்க போகிறேன் என்று சென்ற என் கணவரை காணவில்லை. அவரை கண்டு பிடித்தும் என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    நெய்வேலியில் நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 25 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச்கேட் அருகே பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் பேன்சிகடை நடத்தி வருபவர் ஞானராஜ். இவர் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தான். பின்பு அங்கு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.

    காலையில் ஞானராஜ் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. 

    இதுகுறித்து ஞானராஜ் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    பண்ருட்டி அருகே மனைவி இறந்த வேதனையில் வி‌ஷம் குடித்து கணவன் தற்கொலை தற்கொலை செய்து கொண்டார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மகிமை தாஸ் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சத்யாமேரி. இவர்களுக்கு 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி சத்யாமேரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மகிமைதாஸ் கவலையடைந்தார். வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். தன்னையும், குழந்தையையும் தனியாக விட்டுவிட்டு போய்விட்டாரே என நினைத்து மனம் உடைந்து காணப்பட்டார்.

    நேற்று மாலை மகிமை தாஸ் திடீரென வீட்டில் வைத்திருந்த வி‌ஷத்தை குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை மகிமைதாஸ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ் பெக்டர் ராஜசேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    கருங்கல் அருகே தோட்டத்தில் மூதாட்டி மர்மமான முறையில் இறந்த கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கருங்கல்:

    கருங்கலை அடுத்த கப்பியறை பகுதியை சேர்ந்தவர் மாதவன் பிள்ளை. இவரது மனைவி அவ்வையார் (வயது 92). இவர் சம்பவத்தன்று பருத்திக்காட்டு பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது சில வாலிபர்கள் அவரை தாக்கியதாக தெரிகிறது.

    பின்னர் வீடு திரும்பிய மூதாட்டி அவ்வையார் நேற்று வீட்டின் அருகே ஒரு தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  

    இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை கலெக்டர் அலுவலக பெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக அதிகாரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    நெல்லை:

    திருப்பூரை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மகள் சரண்யா (வயது27). இவருக்கும் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அபிநயா(8), கிருஷ்ணா(2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி கோர்ட்டில் சரண்யா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தற்போது நடந்து வருகிறது. இதையடுத்து தனது குழந்தைகளுடன் சரண்யா செங்கோட்டையில் தனியாக வசித்து வருகிறார்.

    சரண்யாவுக்கு தீக்காயத்தால் உடல் ஊனம் ஏற்பட்டது. இதையடுத்து கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்கவேண்டும் என நெல்லை கலெக்டரிடம் அவர் முறையிட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை பிரிவில் தட்டச்சராக தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் சரண்யா மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் மற்றும் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சுகுணாசிங் ஆகியோரிடம் இன்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருக்கும் போது உயர் அதிகாரி ஒருவர் அடிக்கடி என்னிடம் இரட்டை அர்த்த வசனத்தில் பேசி வந்தார். விடுமுறை நாட்களிலும் என்னை பணிக்கு வரச்சொல்லி எனது அருகே அமர்ந்து எனக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்து வந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலுவலகத்தில் இருந்து வெளியேறி மாவட்ட உயர் அதிகாரியிடம் புகார் கூறினேன். பின்னர் மன உளைச்சல் காரணமாக 2நாள் விடுமுறை எடுத்து விட்டு பணிக்கு வந்தேன். அப்போது எனக்கு பதில் மற்றொருவர் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்.

    விபரம் கேட்டதற்கு எனக்கு பணி இல்லை என மறுத்து விட்டனர். என்னிடம் ‘செக்ஸ் சில்மி‌ஷம்’ செய்த உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    அப்போது அவருடன் நெல்லை மாவட்ட ஜனநாயக மாதர் சங்க தலைவர் கற்பகம், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
    சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கவர்னர் மாளிகை எந்த நிதி வசூலும் செய்யவில்லை என்று கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார். #PondicherryGovernor #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிறுவனங்கள், சமூக சேவை அமைப்புகளிடம் இருந்து நிதி வசூல் பெற்று பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    இதற்காக முதல்- அமைச்சர் தலைமையில் தனிக்குழு செயல்படுகிறது. ஆனால், இந்த திட்டத்தை கவர்னர் கிரண்பேடி தன்னிச்சையாக உருவாக்கி ரூ.85 லட்சம் வரை வசூல் செய்து இருக்கிறார்.

    இது, விதிமுறைகள்படி தவறானது. இதில் முறைகேடு நடந்து இருக்கிறது என்று நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

    இதற்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்து கூறியதாவது:-

    சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கவர்னர் மாளிகை எந்த நிதி வசூலும் செய்யவில்லை.

    புதுவையில் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் குறைந்தபட்சம் 6 முதல் 15 ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. நிதி தட்டுப்பாடு காரணமாக பிரதான பாசன கால்வாய், கிளை கால்வாய்களை பொதுப்பணித்துறையால் தூர்வார முடியவில்லை.

    இந்த நிலையில் “நீர்வளமிக்க புதுச்சேரி” என்ற இலக்குடன் நீர் நிலைகளை தூர் வாரும் பணியை கவர்னர் மாளிகை மேற்கொண்டு வருகிறது.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக நீர்நிலைகளையும், பாசன கால்வாய்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமுதாய சிந்தனை மிக்கவர்கள், கொடையாளர்கள், தொழில் நிறுவனங்கள் உதவியுடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    யாரையும் கட்டாயப்படுத்தி இப்பணியை மேற்கொள்ள கவர்னர் மாளிகை வலியுறுத்தவில்லை. இந்த பணி நடைபெறும்போது அரசு அல்லது அரசு முகமைகள் மூலமாக எந்வித பணபரிமாற்றமும் நடப்பதில்லை. கொடையாளர்கள், பணியை மேற்கொள்ளும் தன்னார்வ நிறுவனங்கள் இடையே மட்டுமே பணபரிமாற்றம் நடக்கிறது.

    எவ்வித நிதி பரிமாற்றமும் இல்லாமல் பொதுப்பணித்துறை நீர்நிலைகளை தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறது. சமுதாய பங்களிப்புடன் இதுவரை 25 பாசன கால்வாய்கள் சுமார் 84 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரப்பட்டுள்ளன.

    இந்த பணியை மேற்கொள்ள கவர்னர் மாளிகை ஊக்கியாக மட்டுமே செயல்படுகிறது. பணம் எதையும் கவர்னர் மாளிகை நேரடியாக பெறவில்லை.

    பணபரிமாற்றமே நடைபெறாமல் இருக்கும் போது, இதில் ஊழல் நடக்கிறது என்கிற குற்றச்சாட்டை எப்படி ஏற்க முடியும்? குற்றச்சாட்டுகள் குற்றச்சாட்டுகளாக மட்டுமே இருந்து கொண்டு இருக்கும்.

    கவர்னரின் ஆணையர் மற்றும் செயலராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான தேவநீதிதாஸ், கவர்னர் மாளிகையில் பணியை தொடர வேண்டும் என்று நான் விரும்பினேன். இதனால் மத்திய உள்துறை, மாநில நிதித்துறை ஆகியவற்றின் ஒப்புதலுடன் கவர்னரின் ஆலோசகராக அதாவது கவர்னரின் சிறப்பு அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கான ஆணையை புதுவை அரசின் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளார். இதன்படி தான் கவர்னரின் சிறப்பு அதிகாரியாக தேவநீதிதாஸ் தொடர்கிறார்.

    யூனியன் பிரதேசங்களின் சட்டம் 1963, புதுச்சேரி சட்ட விதிகள் 1963 ஆகியவற்றின்படி பணிகளை நியமிப்பதில் கவர்னர் தான் அதிகாரம் பெற்றவர். எனவே, நீர்நிலைகளை தூர் வாரியது, சிறப்பு அதிகாரியை நியமித்ததில் எவ்வித அதிகார துஷ்பிரயோகமும், முறைகேடும் நடக்கவில்லை.

    இவ்வாறு கிரண்பேடி கூறினார்.  #PondicherryGovernor #Kiranbedi #Narayanasamy
    ×