search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99996"

    தன்னை சந்தித்ததை மலிவான விளம்பரத்துக்கு பயன்படுத்துவதா என கேள்வி எழுப்பிய கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். #Parrikar #RahulGandhi
    புதுடெல்லி:

    சமீபத்தில் ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தியுடன் தனிப்பட்ட பயணமாக ஓய்வுக்காக கோவா சென்றிருந்தார்.

    ரபேல் ஒப்பந்தத்தின்போது ராணுவ மந்திரியாக முன்னர் பொறுப்பு வகித்து தற்போது கோவா முதல் மந்திரியாக பதவி வகிக்கும் மனோகர் பாரிக்கர் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கோவா சென்றிருந்த ராகுல் காந்தி நேற்று திடீரென்று மனோகர் பரிக்கரை சந்தித்து நலம் விசாரித்தார்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘ரபேல் போர் விமானம் கொள்முதல் செய்வது தொடர்பான புதிய ஒப்பந்தத்தில் தனக்கு எந்த பங்கும் இல்லை. அனில் அம்பானிக்கு ஆதாயம் தேடித்தரும் வகையில் எல்லாவற்றையும் பிரதமர் மோடிதான் நடத்தினார் என்று முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தெளிவாக தெரிவித்து விட்டார்’ என்று கூறினார். ராகுலின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.



    இதற்கிடையே, ரபேல் விவகாரம் தொடர்பாக மனோகர் பாரிக்கர் தன்னிடம் தெளிவான விளக்கம் அளித்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து மனோகர் பாரிக்கர் கடிதம் எழுதியுள்ளார்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மனோகர் பாரிக்கருக்கு  கடிதம் எழுதியுள்ளார். அதில்,  உங்களை சந்தித்து பேசியது தொடர்பான எந்த தகவலையும் நான் பகிர்ந்து கொள்ளவில்லை.  சந்திப்புக்கு பிறகான உங்களது அழுத்தம் எனக்கு நன்கு புரிகிறது என தெரிவித்துள்ளார். #Parrikar #RahulGandhi
    பிரதமர் மோடி தலைமையிலான மந்திரி சபையில் முன்னர் ராணுவ மந்திரியாகவும் தற்போது கோவா முதல்-மந்திரியாகவும் உள்ள மனோகர் பாரிக்கரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து நலம் விசாரித்தார். #RahulGandhi #ManoharParrikar
    பனாஜி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி கோவாவில் ஓய்வு எடுத்து வருகிறார். இதேபோல காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், 3 நாள் பயணமாக கோவா சென்றுள்ளார்.



    இந்த நிலையில் கோவா பா.ஜனதா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரை, ராகுல் காந்தி இன்று காலை சந்தித்தார். உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் அவர் வேகமாக குணமடைவதற்காகவும், மரியாதை நிமித்தமாகவும் இந்த சந்திப்பு நடந்ததாக ராகுல்காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #RahulGandhi #ManoharParrikar


    தனது சொந்த ஊரான ராய்சன் என்ற கிராமத்திற்கு சென்ற பிரதமர் மோடி, சகோதரர் பங்கஜ் மோடியுடன் வசித்து வரும் தனது தாயார் ஹீராபென்னை நேரில் சந்தித்து பேசினார். #Modi #ModiMother #Gujarat
    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்தில் கடந்த 17-ந் தேதி முதல் 3 நாட்களாக பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உலக முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மோடி, காந்தி நகர் அருகில் உள்ள தனது சொந்த ஊரான ராய்சன் என்ற கிராமத்திற்கு நேற்று சென்றார்.

    அங்கு தனது சகோதரர் பங்கஜ் மோடியுடன் வசித்து வரும் தனது தாயார் ஹீராபென்னை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. பின்னர் நரேந்திர மோடி ஆமதாபாத் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார்.  #Modi #MotherHeeraben #Gujarat 
    அணு ஆயுத கைவிடல் தொடர்பாக அடுத்த மாதம் நடைபெறும் இரண்டாவது உச்சி மாநாட்டில் டிரம்பும், கிம் ஜாங் அன்னும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. #WhiteHouse #DonaldTrump #KimJongun
    வாஷிங்டன்:

    இரு துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் உலகமே வியக்கிற வகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

    அதில், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிப்பதற்காக உழைப்பது என டிரம்பும், கிம்மும் உறுதி எடுத்துக்கொண்டனர்.

    ஆனால் அந்த ஒப்பந்தத்தின்படி, அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு வடகொரியா உறுதியான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அமெரிக்கா கருதுகிறது.

    இருப்பினும், மீண்டும் உச்சி மாநாடு நடத்தி டிரம்பை சந்திக்க கிம்ஜாங் அன் விருப்பம் தெரிவித்தார்.

    இந்த நிலையில், அவரது சிறப்பு தூதரான கிம் யாங் சோல், நேற்று முன்தினம் வாஷிங்டன் சென்று டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அவர், டிரம்பிடம் கிம் ஜாங் அன் தந்து அனுப்பிய கடிதத்தை வழங்கினார்.

    அதைத் தொடர்ந்து, அணு ஆயுத கைவிடல் தொடர்பாக அடுத்த மாத (பிப்ரவரி) இறுதியில் இரண்டாவது உச்சி மாநாடு நடத்தி டிரம்பும், கிம் ஜாங் அன்னும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்திதொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, “அணு ஆயுத கைவிடல் விவகாரத்தில் நாங்கள் தொடர்ந்து முன்னேற்றம் காண விரும்புகிறோம். நாங்கள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்துகிறோம்” என குறிப்பிட்டார். அதே நேரத்தில் இரண்டாவது உச்சி மாநாடு எங்கே நடத்தப்படும் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. #WhiteHouse #DonaldTrump #KimJongun 
    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. #DonaldTrump #KimJongUn #Vietnam
    டோக்கியோ:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வந்ததால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சந்தித்தது. குறிப்பாக அமெரிக்கா வடகொரியாவை நேரடியாக எதிர்த்தது. அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.

    அதோடு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே வார்த்தை யுத்தம் நடந்தது. இருநாடுகளின் மோதல் போக்கு சர்வதேச நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது. இதற்கிடையில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்றதை தொடர்ந்து, வடகொரியாவின் நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் நிகழ தொடங்கியது.

    அதன் தொடர்ச்சியாக எதிர் எதிர் துருவங்களாக விளங்கி வந்த டிரம்ப், கிம் ஜாங் அன் சந்தித்து பேசுவதற்கான சூழல் உருவானது.

    அதன் படி கடந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

    அதோடு, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா செயல்படும் என கிம் ஜாங் அன் உறுதிமொழி அளித்தார். அதன்படி தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனை கூடங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை வடகொரியா மூடியது.

    எனினும் வடகொரியா மீது விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விலக்கி கொள்ளாததால், எந்த நேரத்திலும் அணு ஆயுத கொள்கைக்கு திரும்பி விடுவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.

    புத்தாண்டையொட்டி வடகொரிய மக்களிடையே உரையாற்றிய கிம் ஜாங் அன், ஒட்டுமொத்த உலகத்தின் முன்னிலையில் அளித்த வாக்குறுதிகளை அமெரிக்கா காப்பாற்றத் தவறினால் வடகொரியா புதிய நடவடிக்கைகளை கையாளும் என எச்சரிக்கை விடுத்தார்.

    அதே சமயம் சர்வதேச சமூகம் வரவேற்கும் வகையில், எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கிம் ஜாங் அன் அறிவித்தார்.

    அதே போல் டிரம்பும், கிம் ஜாங் அன்னை சந்திக்க தான் ஆவலுடன் இருப்பதாகவும், இந்த சந்திப்பு விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்தார்.

    அதன் படி இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசும் 2-வது உச்சி மாநாட்டை எங்கு? எப்போது? நடத்துவது என்பது குறித்து அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். அந்த வகையில் டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு தாய்லாந்து அல்லது வியட்நாமில் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

    அந்த இருநாட்டு அரசுகளும் இந்த சந்திப்புக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், தங்கள் தரப்பில் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை செய்துதர தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தன. அதன் படி அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஆய்வு குழு தாய்லாந்தின் பாங்காங் மற்றும் வியட்நாமின் ஹனோய் நகரங்களுக்கு சென்று ஆய்வு நடத்தின.

    வடகொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வியட்நாமின் ஹனோய் நகரில் பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தென் கொரிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

    இந்த நிலையில் வியட்நாமில் அடுத்த மாதம் (பிப்ரவரி) மத்தியில் இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யா வடகொரியாவுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளதாக புதிய தகவல் கிடைத்திருக்கிறது. ஜப்பானில் வெளிவரும் தினசரி நாளிதழ் ஒன்றில் இது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

    வியட்நாமில் உச்சி மாநட்டை நடத்தலாம் என்கிற அமெரிக்காவின் திட்டம் குறித்து வடகொரியா தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இது பற்றி அமெரிக்கா மற்றும் வடகொரியா தரப்பில் எந்த வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

    இதற்கிடையே, பாதுகாப்பு காரணங்களையொட்டி ஹனோய் நகரத்துக்கு பதிலாக டா நாங் நகரில் இந்த சந்திப்பை நடத்திட வியட்நாம் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  #DonaldTrump #KimJongUn #Vietnam
    ரபேல் போர் விமானம் தொடர்பாக டெல்லியில் ராகுல் காந்தியை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் நேற்று சந்தித்து பேசினர். #RafaleDeal #HAL #RahulGandhi
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு (எச்.ஏ.எல்.) வழங்காமல் அனில் அம்பானி நிறுவனத்துக்கு வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாகவும், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை மூடும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். மேலும் அந்த ஊழியர்களையும் அவர் சந்தித்து பேசினார்.

    இந்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தியை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் நேற்று சந்தித்தனர். அப்போது இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் குறித்தும் தங்கள் கவலையை பகிர்ந்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரபேல் போர் விமானங்களை தயாரிக்க நாங்கள் இப்போதும் தயாராக உள்ளோம். அதற்கான திறமை எங்களிடம் உள்ளது.

    போர் விமானங்களை தயாரிப்பதில் எந்த சிரமமும் எங்களுக்கு கிடையாது. உலகளாவிய தொழில்நுட்பத்தில் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் தும்கூரில் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் சார்பில் ஹெலிகாப்டர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த பணியும் அங்கு நடக்கவில்லை” என்று தெரிவித்தனர்.   #RafaleDeal #HAL #RahulGandhi 
    எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். #ChandrababuNaidu #RahulGandhi
    புதுடெல்லி:

    பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார்.

    இதேபோல பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் வரும் பாராளுன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் களமிறங்கி உள்ளார். இதற்காக அவர் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்துப் பேசிவருகிறார். 

    இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்துப் பேசினார். 

    ஆந்திராவில் காங்கிரசும், தெலுங்கு தேசமும் எதிர்துருவங்களாக இருக்கும் கட்சிகளாகும். பா.ஜ.க.வுக்கு எதிராக வலிமையான கூட்டணியை உருவாக்க இந்த இரு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சந்திப்பைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரையும் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசவுள்ளார். #ChandrababuNaidu #RahulGandhi
    தமிழக முதலமைச்சர் பழனிசாமியை மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். #TamilisaiSoundararajan #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சந்தித்துப்  பேசினார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்றது.



    திருவாரூர் இடைத்தேர்தல் நிலை குறித்த அறிக்கை, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வரை தமிழிசை சவுந்திரராஜன் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. #TamilisaiSoundararajan #EdappadiPalaniswami
    முதல்வர் மற்றும் அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறிவந்த எம்எல்ஏ கருணாஸ், இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். #MLAKarunas #EdappadiPalaniswami
    சென்னை:

    சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரிய மனுவை வாபஸ் பெற்றதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எம்எல்ஏ கருணாஸ் இன்று சந்தித்தார். அப்போது, சிவகங்கையில் மருது பாண்டியர் சிலை அமைக்க இடம் ஒதுக்கக்கோரி முதலமைச்சர் பழனிசாமியிடம் கருணாஸ் மனு அளித்தார்.



    இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது அவர் கூறியதாவது:

    தோல்வியடையும் என்பதால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்பப் பெற்றேன். திருவாடானை தொகுதியில் கண்மாய்களை தூர்வாரக்கோரி முதலமைச்சரை சந்தித்தேன். தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MLAKarunas #EdappadiPalaniswami

    பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணிக்கு ஆதரவு திரட்டும் வகையில், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இன்று சந்தித்தார். #ChandrasekharRao #NaveenPatnaik
    புவனேஷ்வர்:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் இறங்கி உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிமுகம் காட்டிய காங்கிரஸ், அதே வேகத்தோடு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மீதும், ராகுல்காந்தி மீதும் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
     
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடும் நிலை உள்ளது.

    இதற்கிடையே, பா.ஜ.க அணியிலும், காங்கிரஸ் அணியிலும் சேராமல், மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து 3-வது அணி ஒன்றை அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் யோசனை தெரிவித்தார்.

    இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியையும் சந்தித்தார்.



    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்ட போதிலும், 3-வது அணி அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. பிராந்திய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் பா.ஜ.க மற்றும் காங்கிரசுக்கு எதிராக 3-வது அணி அமைத்து போட்டியிட்டால் அந்த அணியை மக்கள் ஆதரிப்பார்கள் என்று அவர் நம்புகிறார். இதுதொடர்பாக அவர் முக்கிய கட்சிகளின் தலைவர்களை சந்திக்க இருக்கிறார்.

    இந்நிலையில், தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இன்று ஒடிசாவிற்கு சென்றார். தலைநகர் புவனேஷ்வரில் ஒடிசா முதல் மந்திரியை நேரில் சந்தித்தார். அவருக்கு நினைவு பரிசு அளித்தார். அப்போது மூன்றாவது அணி தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து, மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, உ.பி.யில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #ChandrasekharRao #NaveenPatnaik
    இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி, மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை இன்று சந்தித்துப் பேசினார். #SushmaSwaraj #WangYi
    புதுடெல்லி:

    சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சீனா வெளியுறவு துறை மந்திரி வாங் யி இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்வா சுவராஜை இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

    இந்த சந்திப்பு குறித்து வாங் யி கூறுகையில், சுஷ்மா சுவராஜுடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது என தெரிவித்தார்.



    இதுகுறித்து சுஷ்மா சுவராஜ் கூறுகையில், சீன வெளியுறவு துறை மந்திரியுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது. இரு நாட்டு மக்களிடையேயான கலாசார உறவை மேம்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சீன வெளியுறவு துறை மந்திரி வாங் யி சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. #SushmaSwaraj #WangYi
    அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நம்புவதாக வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். #DonaldTrump #KimJongUn
    வாஷிங்டன்:

    வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.
     
    இதற்கிடையே, டிரம்ப் - கிம் சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி நடைபெற்றது. அப்போது இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர்.



    அப்போது, தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனைக் கூடங்களை அழித்து விடுவோம். இனி அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ள மாட்டோம் என்று வடகொரியா அறிவித்தது. அதேபோல், அமெரிக்காவும் வடகொரியா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்குவதாக அறிவித்திருந்தது.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நம்புவதாக வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அப்போது, இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். #DonaldTrump #KimJongUn
    ×