search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Snake"

    • இமயமலை பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு புதிய பாம்பு இனத்தை கண்டுபிடித்தனர்.
    • வருடத்தில் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே வெளியில் காணப்படுகிறது.

    இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பாம்பு இனத்துக்குப் பிரபல ஹாலிவுட் நடிகர் லியார்னடோ டி காப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவிட சமயத்தில் தனது வீட்டின் பின்னால் இருந்த ஒரு அரிய பம்பை இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.

    இதனைத்தொடர்ந்து இது பேசுபொருளாக நிலையில் இதை பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதன்படி இமயமலை பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு புதிய பாம்பு இனத்தை கண்டுபிடித்தனர். நேபாள் நாட்டின் மத்திய பகுதி முதல் இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டம் வரை பரவி உள்ளதாக கண்டறியப்பட்ட பாம்பு இனத்துக்கு ஆங்குய்குலஸ் டிகாப்ரியோய் [Anguiculus dicaprioi] என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

     

    டைட்டானிக் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற லியார்னர்டோ டி காப்ரியோ காலநிலை மாற்றம் மற்றும் சூழலியல் தொடர்பாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அவரை கவுரவிக்கும் விதமாக அவரது பெயரை இந்த பாம்பு இனத்துக்கு ஆராய்ச்சியாளர்கள் சூட்டியுள்ளனர்.

    இதைத்தவிர்த்து சிக்கிம் பூடான் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றில் உள்ள இமயமலை பகுதிகளில் கண்டறியப்பட்ட மற்றொரு பாம்பு இனத்துக்கு ஆங்குய்குலஸ் ராப்பி [Anguiculus rappii] என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகை பாம்புகள் வருடத்தில் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே வெளியில் காணப்படுகிறது. அதிலும் ஆங்குய்குலஸ் ராப்பி அரிதினும் அரிதாகவே தென்படக்கூடியதாக உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயிலில் பாம்பு இருந்ததை வீடியோ எடுத்த நபர் ஒருவர் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
    • ரெயில் பாம்பு இருந்தது தொடர்பான புகாருக்கு ரெயில்வே துறை பதில் அளித்துள்ளது.

    ஜார்க்கண்டில் இருந்து கோவா நோக்கிச் சென்ற வாஸ்கோடகாமா வாராந்திர விரைவு ரெயிலின் ஏசி பெட்டியில் பாம்பு இருந்ததை கண்டு பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர் பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு ரெயிலில் இருந்து அகற்றப்பட்டது.

    ரெயிலில் பாம்பு இருந்ததை வீடியோ எடுத்த நபர் ஒருவர் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில் ரெயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை அவர் டேக் செய்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் தீர்வு காணப்படும் என்று இந்த புகாருக்கு ரெயில்வே துறை பதில் அளித்துள்ளது.

    இதே போல கடந்த மாதம் , ஜபல்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற கரீப் ரதம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பு இருந்ததை கண்டு பயணிகள் அச்சமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வனவிலங்குகளை காப்பாற்றும் சேவையை யாஷ் தத்வி என்பவர் செய்து வருகிறார்.
    • ஒரு பாம்பு இறந்து கிடப்பதாக தத்விக்கு ஒரு போன்கால் வந்துள்ளது.

    குஜராத் மாநிலத்தில் இறந்துபோன பாம்பிற்கு இளைஞர் ஒருவர் தனது மூச்சுக்காற்றை கொடுத்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வதோதரா மாவட்டத்தில் வனவிலங்குகளை காப்பாற்றும் சேவையை யாஷ் தத்வி என்பவர் செய்து வருகிறார். ஒரு அடி நீளமுள்ள ஒரு பாம்பு இறந்து கிடப்பதாக தத்விக்கு ஒரு போன்கால் வந்துள்ளது. அவரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

    அந்த இடத்தில் எவ்வித அசைவும் இல்லாமல் விசமில்லாத பாம்பு ஒன்று இருந்துள்ளது. உடனே பாம்பின் வாயில் வாய் வைத்து தத்வி மூச்சுக்காற்று கொடுத்துள்ளார். முதல் 2 முறை மூச்சுக்காற்று கொடுத்தபோதும் அசைவில்லாமல் இருந்து பாம்பு மூன்றாவது முறை மூச்சுக்காற்று கொடுத்தபின்பு உயிர் பிழைத்துள்ளது.

    உயிர்பிழைத்த பாம்பு பின்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பாம்புக்கு மூச்சுக்காற்று கொடுத்து தத்வி காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • அவசர சிகிச்சை பிரிவில் நின்றுக் கொண்டிருந்தவரை பார்த்து டாக்டர்கள் திகைத்தனர்.
    • வினோத காட்சியை மக்கள் பதிவு செய்து கொண்டிருந்தனர்.

    பீகார் மாநிலம் பாகல்பூரை சேர்ந்த நபரை உலகின் மிக விஷ பாம்புகளில் ஒன்று கடித்தது. பாம்பு கடிப்பட்ட நபர் அடுத்து செய்த விஷயத்தை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

    பிரகாஷ் மண்டல் என்ற நபர், தன்னை கடித்த விஷ பாம்பின் வாயை பிடித்து, கழுத்தில் சுற்றிக் கொண்டு நேரடியாக மருத்துவமனைக்குச் சென்றார். பாம்பு கடித்த நிலையில், அதனை கையில் வைத்துக் கொண்டு அவசர சிகிச்சை பிரிவில் நின்றுக் கொண்டிருந்த நபரை பார்த்து டாக்டர்களும், நோயாளிகளும் திகைத்தனர்.

    சிறிது நேரம் காத்திருந்த நபர் வலி தாங்க முடியாமல், கையில் பாம்பை வைத்துக் கொண்டு அங்கேயே படுத்துக் கொண்டு சிகிச்சைக்காக காத்திருந்தார். மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் வினோத காட்சியை மக்கள் பதிவு செய்து கொண்டிருந்தனர்.

     

     

    நோயாளிகளின் உதவியாளர்கள் அந்த நபரின் கையிலிருந்து பாம்பு தப்பித்துவிட்டால், எதுவும் நடக்கலாம் என்று பயந்து தூரத்தில் நின்று கொண்டிருந்தனர். வளாகத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அங்கிருந்த வேறொரு நபர் பிரகாஷின் கையைப் பிடித்து அவரை ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

    கையில் பாம்பை வைத்திருக்கும் நபருக்கு எப்படி சிகிச்சையளிக்க முடியும் என்ற அச்சம் கலந்த குழப்பத்தில் மருத்துவர்கள் காணப்பட்டனர். இதைத் தொடர்ந்து சிகிச்சைக்கு தொடர்ந்து தாமதமானதை அடுத்து பிரகாஷ் அந்த பாம்பை விடுவித்துள்ளார். அவருக்கு அதன்பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டதா, அவரின் தற்போதைய நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.

    • குழந்தைகள் பாம்பை பார்த்ததும் அலறி அடித்து ஓடியுள்ளார்.
    • குழந்தைகளின் அலறலை கேட்ட வளர்ப்பு நாய் ஜென்னி உடனடியாக அங்கு ஓடிவந்தது.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள சிவ கணேஷ் காலனியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்திற்குள் ராஜ நாகம் ஒன்று நுழைந்துள்ளது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் பாம்பை பார்த்ததும் அலறி அடித்து ஓடியுள்ளார்.

    குழந்தைகளின் அலறலை கேட்ட பிட்புல் வகையை சேர்ந்த வளர்ப்பு நாய் ஜென்னி உடனடியாக அங்கு ஓடிவந்து ராஜநாகத்தை கடித்து கொன்றது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

    • சிவராஜ் தனது செல்போனில் சாகசங்கள் செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானார்.
    • வீட்டில் இருந்த நாகப்பாம்பை பிடித்த சிவராஜ் பாம்பை வைத்து அப்பகுதி மக்களுக்கு சிறிது நேரம் விளையாட்டு காட்டினார்.

    தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் தேசாய் பேட்டையை சேர்ந்தவர் கங்காதர். பாம்பு பிடிக்கும் தொழிலாளி. இவரது மகன் சிவராஜ் (வயது 20).

    பாம்பு பிடிக்க செல்லும்போது சிவராஜ் தந்தையுடன் சென்று பாம்பு பிடிக்க கற்றுக் கொண்டார்.

    மேலும் சிவராஜ் தனது செல்போனில் சாகசங்கள் செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் நாகப்பாம்பு புகுந்து விட்டதாக கங்காதருக்கு தகவல் தெரிவித்தனர். கங்காதர் உள்ளூரில் இல்லாததால் அவரது மகன் சிவராஜ் பாம்பு பிடிக்க சென்றார்.

    வீட்டில் இருந்த நாகப்பாம்பை பிடித்த சிவராஜ் பாம்பை வைத்து அப்பகுதி மக்களுக்கு சிறிது நேரம் விளையாட்டு காட்டினார்.

    பின்னர் பாம்புக்கு முத்தமிட்டபடி தனது செல்போனில் ரிலீஸ் எடுத்தார். அப்போது நாக பாம்பு சிவராஜின் நாக்கில் கொட்டியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் சிவராஜை மீட்டு பாண்சுவாடா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    சிவராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • ஹரி பயப்படாமல் தைரியமாக அந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.
    • தற்போது ஹரியின் உடல்நிலை சீராக உள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் பாம்பு கடித்த நபர், அந்த பாம்பை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பாலியா தாலுகாவின் சம்பூர்ணா நகர் கிராமத்தில் வசிக்கும் ராம்சந்திரா என்பவரின் மகன் ஹரி ஸ்வரூப் (40) என்பவரின் கை விரலில் பாம்பு கடித்தது. ஆனால் ஹரி பயப்படாமல் தைரியமாக அந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.

    டப்பாவில் பாம்பை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்கள் கூட பயந்து போனார்கள். ஹரி தன்னை கடித்த பாம்பு இதுதான் என காட்டி டாக்டரிடம் சிகிச்சை அளிக்க சொன்னார்.

    அவரது தைரியத்தை கண்டு டாக்டர்கள் வியந்தனர். பாம்பு கடித்த பின்னும் ஹரி நிதானமாக பேசிக் கொண்டிருந்தார்.

    தற்போது ஹரியின் உடல்நிலை சீராக உள்ளது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • வீட்டின் மாடியில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு பாம்பு வந்துள்ளது
    • குழந்தை தனது வாயில் பாம்பை வைத்து மென்று கொண்டிருப்பதை பார்த்து தாய் அதிர்த்துள்ளார்

    பீகாரில் விளையாட்டு பொம்மை என நினைத்து ஒரு வயதுக் குழந்தை பாம்பைக் கடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஜாமுகர் [Jamuhar] கிராமத்தில் கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை அங்கு வந்த பாம்பை விளையாட்டுப் பொருள் என்று கருதி கையில் எடுத்து வாயில் வைத்து கடித்துள்ளது.

    குழந்தை தனது வாயில் பாம்பை வைத்து மென்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்த தாய், குழந்தையிடம் இருந்து பாம்பைப் பிடுங்கி வீசிவிட்டு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    குழந்தை கடித்ததில் உடலின் ஒரு பகுதி நைந்த நிலையில் அந்த பாம்பு உயிரிழந்துள்ளது. பாம்புக்கு விஷத்தன்மை இல்லாததால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. அப்பகுதியில் மழைக்காலத்தில் அவ்வகை பாம்புகள் அதிகம் காணப்படுவது வழக்கமாக உள்ளது.

    • வகுப்பறைகுள் கரும்பலகையின் மேல் பாம்பு சுற்றி கொண்டிருந்ததை கண்டு மாணவர்கள் கூச்சலிட்டனர்.
    • தீயணைப்புத் துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பைக்குள் அடைத்தனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி கிழக்கு தொடக்கப்பள்ளி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள குட்டைக்குளத்தின் மேற்கு கரையில் பள்ளி செயல்பட்டு வருகின்ற நிலையில், இக்குளத்தை பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் குளத்தில் ஆகாய தாமரை உள்ளிட்ட பல்வேறு செடிகள் மண்டி புதர்போல் காட்சியளிக்கிறது.

    இந்த நிலையில் மாலையில் வகுப்பறைகுள் கரும்பலகையின் மேல் பாம்பு ஒன்று சுற்றி கொண்டிருந்ததை சில மாணவர்கள் கண்டு கூச்சலிட்டனர். அதனை தொடர்ந்து அங்கிருந்து மாணவ, மாணவியர்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியேறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி தீயணைப்புத் துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பைக்குள் அடைத்தனர். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தண்ணீர் பகுதியை விட்டு கதகதப்பான இடத்தை நோக்கி பாம்பு தஞ்சமடைந்துள்ளது.

    எனவே நகராட்சி கிழக்கு தொடக்கப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி குட்டைக்குளத்தை உடனடியாக தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • பாம்பும் கீரியும் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
    • தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள பாம்பு படமெடுத்து கொத்தியது.

    பாம்புக்கும் கீரிக்கும் இடையே தீராத பகை உள்ளது. பாம்புக்கும் கீரிக்கும் இடையேயான சண்டையை பற்றி நாம் பல கதைகளில் படித்திருப்போம்.

    இந்நிலையில், உண்மையிலேயே பாம்பும் கீரியும் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    பீகாரின் பாட்னா விமான நிலையத்தின் ஓடுதளப் பாதையில் இருந்த ஒரு பாம்புடன் 3 கீரிகள் சண்டையிட்டு கொண்டது.

    ஒரு பாம்பை 3 கீரிகள் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தியதால், தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள பாம்பு படமெடுத்து கொத்தியது.

    • இந்தியா முழுவதும் 30-40 லட்சம் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்படுகின்றனர் என்று சரண் எம்.பி., கேள்வி எழுப்பினார்.
    • பாம்பு கடியால் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக உயிரிழப்பு ஏற்படுவதாக பாஜக எம்.பி. கூறினார்.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அதில் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை எம்.பி.க்கள் எழுப்பினர். அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும், இந்தியா முழுவதும் 30-40 லட்சம் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்படுகின்றனர் என்று சரண் எம்.பி., விவாதத்தின் போது இந்த பிரச்சினையை எழுப்பினார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாம்பு கடியால் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக உயிரிழப்பு ஏற்படுவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இதனால் 50,000 பேர் உயிரிழக்கின்றனர் எனவும் பாஜக எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஏழ்மை மற்றும் இயற்கை பேரிடர் இரண்டையும் தாங்கி வாழும் ஏழ்மையான மாநிலம் பீகார். இந்தியா முழுவதும் 30 முதல் 40 லட்சம் பேரை பாம்பு கடிக்கிறது. அதில், 50,000 பேர் உயிரிழக்கிறார்கள். இது உலகிலேயே அதிகம். பல இறப்புகளைத் தடுக்க முடியும். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட தாக்கம், பாம்புக்கடி சம்பவங்களை அதிகரிக்கிறது. என்றார்.

    • கடந்த 2 வாரமாக சலவை எந்திரம் பழுதடைந்து இருந்ததால், பயன்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டு இருந்தது.
    • பாம்பு வடிகால் குழாய் வழியாக சலவை எந்திரத்துக்குள் புகுந்து இருக்கலாம்.

    கண்ணூர்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிபரம்பு பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 28). டெக்னீஷியனான இவர் கடம்பேரி பகுதியில் உள்ள பாபு என்பவரது வீட்டில் சலவை எந்திரத்தை பழுதுபார்க்க சென்றார். அங்கு எந்திரத்தை இயக்க முயன்றபோது, உள்ளே ஏதோ ஒன்று சுழல்வதை கண்டார். அது துணி என நினைத்து எந்திரத்திற்குள் கையை நீட்டி எடுக்க முயன்றார். அப்போது அது பாம்பு என்பது தெரியவந்தது. உடனே ஜனார்த்தனன் கையை மேலே தூக்கினார். இதை பார்த்த அவர், பாபு ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    கடந்த 2 வாரமாக சலவை எந்திரம் பழுதடைந்து இருந்ததால், பயன்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டு இருந்தது. அதற்குள் பாம்பு எப்படி புகுந்தது என்பது தெரியவில்லை என்று பாபு கூறினார்.

    தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது பிடிபட்டது நாகப்பாம்பு ஆகும். வடிகால் குழாய் வழியாக சலவை எந்திரத்துக்குள் புகுந்து இருக்கலாம் என்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    ×