என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "snakes"
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே பாட்டன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் அகிலா ண்டேஸ்வரி என்பவர் தனது வீட்டின் அருகே பாம்பு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டனர். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்
சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டின் அருகே இருந்த 4 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தனர்.
இதேபோல் நாட்டறம்பள்ளி அருகே தோழர் கவுண்டர் தெருவில் கார்த்திகேயன் என்பவரின் வீட்டின் பின்புறம் இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலை பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனை பெற்று கொண்டு வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் 2 பாம்புகளை விட்டனர்.
- வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
- காப்பு காட்டில் விடப்பட்டது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது வீட்டின் அருகில் உள்ள பள்ளத் தில் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது 2 நல்ல பாம்புகள் இருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று பள்ளத்தில் பதுங்கியிருந்த 5 அடி மற்றும் 3 அடி நீளமுள்ள 2 நல்ல பாம்புகளை பிடித்தனர்.
இதேபோல் சின்ன கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்த அகி லன் என்பவரது வீட்டில் அருகில் பாம்பு வந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் சென்று 3 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை பிடித்தனர். பிடிபட்ட பாம்புகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.
- நீதிமன்றத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திரு மங்கலம் முன்சீப் கோர்ட் சார்பு நீதிமன்றம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வட்டாட்சி யர் அலுவலகம் வளாகத்தில் பாம்பு ஒன்று சுற்றி திரிந்தது திடீரென பொது மக்களை பார்த்தவுடன் அங்கிருந்த மரத்தில் ஏறியது.
அங்கிருந்தவர்கள் பாம்பை அப்புறப்படுத்த முற்பட்டனர் ஆனால் பாம்பு மரத்தில் கிளைக்கு சென்றது. இந்நிலையில் இது தொடர்பாக திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீய ணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் கழித்து வந்தனர்.
அதன் பின் நீண்ட நேரம் தேடிப் பார்த்தனர் ஆனால் பாம்பு தென்பட வில்லை பின்பு அங்கிருந்து சென்று விட்டனர். நீதிமன்ற வளாகத்தில் கழிப்பறை போன்ற அடிப்படை வசதி ஏதும் இல்லை. மேலும் தற்போ துள்ள கழிப்பறைக்கு செல்லும் வழியில் புதர்மண்டி காணப்படு கிறது.
இதனால் இது போன்ற விஷம் தன்மை கொண்ட பாம்புக்கள் அவ்வப்போது நீதிமன்ற வளாகத்தில் தென் படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டு கின்றனர். இதுகுறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மற் றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஸ்ரீவைகுண்டம் நகரின் மையப்பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது.
- கொடிய விஷமுடைய நல்லபாம்பு, கட்டுவிரியன் உள்ளிட்ட 24 பாம்புகள் பிடிபட்டன.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நகரின் மையப்பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் அமைந்த இந்த பணிமனை வளாகத்தில் பழைய டயர்கள், டியூப்கள் அகற்றப்படாததால், அங்கு மழைநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் பணிமனையில் குவிந்து கிடக்கும் பழைய டயர்களுக்கு இடையே விஷ பாம்புகள் நடமாடுவதாக, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கிளை மேலாளரிடம் முறையிட்டு மனு வழங்கினர்.
இதையடுத்து நெல்லை பேட்டை, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாம்பாட்டிகள் 4 பேர் நேற்று ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள், பணிமனை வளாகத்தில் இருந்த பாம்புகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பாம்பாட்டிகள் மகுடி ஊதியதும் பணிமனை வளாகத்தில் பழைய டயர்கள் வைக்கப்பட்ட இடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாம்புகள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன. அவற்றை பாம்பாட்டிகள் லாவகமாக பிடித்து சாக்குப்பைகளில் போட்டனர். கொடிய விஷமுடைய நல்லபாம்பு, கட்டுவிரியன் உள்ளிட்ட 24 பாம்புகள் பிடிபட்டன.
அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 24 பாம்புகள் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வனத்துறையினர் 2 பாம்புகளை பிடித்து வனப்பகுதிக்குள் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.
- று அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு சேவைகளை பெற தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் பல்வேறு அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு சேவைகளை பெற தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய நிலையில் அலுவலக பின்புறத்தில் பாம்புகள் ஊர்ந்து சென்றது .
இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் 2 பாம்புகளை பிடித்து வனப்பகுதிக்குள் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக பின்புறம் பொக்லைன் மூலம் புதர்கள் அகற்றப்பட்டது.
- தள கற்கள் அனைத்தும் பெயர்ந்தும், மேடு-பள்ளமாகவும் காணப்படுகின்றன.
- சுவற்றில் இருந்த துவாரத்தில் பாம்பு ஒன்று இருந்துள்ளது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள மாடியனூரில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆவுடையானூர் பொடியனூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
ஜன்னல் கண்ணாடி
இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தும், போதிய கதவுகள் இன்றியும் காணப்படுகின்றன. மேலும் நடைபாதையில் போடப்பட்டிருந்த தல கற்கள் அனைத்தும் பெயர்ந்தும், மேடு-பள்ளமாகவும் காணப்படுகின்றன. இதனால் அங்கு வரும் முதியவர்கள் கால் இடறி கீழே விழும் சம்பவங்களும் அவ்வபோது நடைபெறுகிறது.
மேலும் சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டு விஷ பூச்சிகள், பாம்புகள் நுழைந்து இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. கடந்த வாரத்தில் கூட பொதுமக்கள் மருந்துகள் வாங்கும் பகுதியில் சுவற்றில் இருந்த துவாரத்தில் பாம்பு ஒன்று இருந்ததை அங்கு இருந்த நோயாளிகளும், பொதுமக்கள் கண்டு அலறி அடித்து ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
பழுதுகளை சரிசெய்ய வேண்டும்
எனவே ஆரம்ப சுகாதார நிலையம் வரும் நோயாளிகளின் நலன் கருதி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள பழுதுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும், மாடியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் சுற்றித் திரியும் பாம்புகளை வனத்துறை, தீயணைப்புதுறை அலுவலர்கள் மூலம் பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த மாதம் 12 அடி நீளத்திற்கு மலை பாம்பு போல ஒரு பாம்பு மிகப்பெரிய அளவில் வந்துள்ளது.
- உடனடியாக தூத்துக்குடி தீயணைப்பு வீரர்கள் வந்து தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டலம் 58-வது வார்டுக்கு உட்பட்ட காந்திநகரில் உள்ள 4 தெருக்களில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் 3-வது மற்றும் 4-வது தெருக்களில் கடந்த சில மாதமாக விஷ பாம்புகள் படையடுத்து வருவது அதிகரித்து வருகிறது.
இதனால் பொதுமக்கள், குழந்தைகள் அச்சம் அடைந்துள்ளனர். வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும், வீட்டுக்கு வரும்போதும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். கடந்த மாதம் 12 அடி நீளத்திற்கு மலை பாம்பு போல ஒரு பாம்பு மிகப்பெரிய அளவில் வந்துள்ளது. இதனை கண்டு அங்குள்ள பகுதியில் ஒரு வீட்டில் வசிக்கும் பச்சைக்கிளி(வயது 35) என்பவர் தனது குழந்தைகளை கையில் பிடித்துக் கொண்டு அலறியுள்ளார்.
உடனடியாக தூத்துக்குடி தீயணைப்பு வீரர்கள் வந்து தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர். ஆனாலும் பாம்பு பிடிபடவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காந்திநகர் 4-வது தெருவில் உள்ள டிரைவர் சேகர்(39) என்பவரின் வீட்டில் உள்ள நாய் பாம்பு கடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் உயிரை பாதுகாத்திட வேண்டும் என்று காந்திநகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நிர்வாகிகள் பூபதி, பகவதி சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோடங்கிபாளையம் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் லலிதாம்பிகை செல்வராஜ் தலைமை வகித்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை மகிழ்வனம் பூங்காவில் பாம்புகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. கோடங்கிபாளையம் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் லலிதாம்பிகை செல்வராஜ் தலைமை வகித்தார். மகிழ்வனம் பூங்கா செயலாளர் சோமு என்ற பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதில் மழைக்காடுகள் ஆராய்ச்சியாளர் மாணிக்கம், இயற்கை ஆர்வலர் ரத்னசபாபதி,கலங்கல் வனம் ஒருங்கிணைப்பாளர் பாபு, மகிழ்வனம் நிர்வாகிகள் பூபதி, பகவதி சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சென்னை பாம்பு பூங்கா இணை இயக்குநர் மருத்துவர் அறிவழகன் பேசுகையில்,இந்தியாவில் பலவேறு வகையான பாம்புகள் இருந்தாலும் அவை குளிர்பிரதேசங்கள் வாழ்விடத்தை அமைத்து கொள்வது இல்லை. மித வெப்ப பிரதேசங்களில் தான் அவை வாழும். பாம்பு தானாக யாரையும் தீண்டாது. தன்னை மற்றவர்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ளவே பாம்பு தீண்டும். நல்லபாம்பு, கண்ணாடிவிரியன், கட்டுவிரியன், சுரட்டை விரியன் ஆகிய 4 வகை பாம்புகள் மட்டுமே கொடிய விஷம் உடையவை. இவை தான் இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகிறது. பாம்பு கடித்தால் உடலில் வேர்க்கும், படபடக்கும், தாகம் ஏற்படும். அதற்காக நாம் அச்சப்பட தேவையில்லை.
எந்த முதலுதவி சிகிச்சையும் அளிக்காமல் உடனே அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றி விடுவார்கள். எந்த பாம்பு கடித்தது என்று காண்பிக்க பாம்பை அடிக்கும் வேலையில் ஈடுபட வேண்டியது இல்லை. கண்ணாடி விரியன், மண்ணுளி பாம்பு போன்றவை குட்டிகளை நேரடியாக ஈனும், மற்றவை முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொறிக்கும். முன்பு 4 வகையான பாம்பு கடி மருந்து தனித்தனியாக இருந்தது. தற்போது பாம்புக்கடிக்கு என்று ஒரே மருந்து பவுடர் வடிவில் வந்து விட்டது.
எந்த பாம்பு கடித்தாலும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அவர்கள் விஷம் உள்ள பாம்பு கடித்ததா இல்லையா என்பதை மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடித்து விடுவார்கள். நாம் அதற்காக எந்த ஆராய்ச்சியும் செய்ய வேண்டியது இல்லை. 4 வகை பாம்புகளில் குட்டி பாம்பு கடித்தாலும் அதில் விஷம் உள்ளது. தண்ணீர் பாம்பு, பச்சை பாம்பு போன்றவை தான் விஷம் இல்லாதவை. மேலும் கடல், ஆறுகளில் பாம்பு கடித்தாலும் அதிலும் விஷம் உள்ளது. தட்ப வெப்ப சூழ்நிலை காரணமாக ஊட்டி,கொடைக்கானல் போன்ற பகுதிகளில் பாம்புகள் அதிகம் வசிக்காது. வன விலங்குகள் பாதுகாப்பு தடுப்பு சட்டத்தின்படி பாம்புகளை கொல்வது இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
- இப்பகுதியில் உள்ள ஓடையை சுற்றி முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சியில் உள்ளது பட்டக்காரனூர் கிராமம். இந்த கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இக்கிராமத்தினை சுற்றி விளைநிலங்கள் உள்ளன. மேலும் இப்பகுதியில் உள்ள ஓடையை சுற்றி முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்த புதர்களில் இருந்து அவ்வப்போது அதிகளவில் பாம்புகள் குடியிருப்புகளில் நுழைந்து பொதுமக்களை பயமுறுத்தி வருகின்றன.
இதனிடையே பட்டகாரனூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டின் முன்பு நேற்று மாலை 2 சாரை பாம்புகள் பின்னி பினைந்து நடனமாடியது. இதனையறிந்து அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர்.
வீட்டின் வாசல் முன்பு 2 பாம்புகளும் நடனமாடி கொண்டு இருப்பதை கண்டு அப்பகுதியினர் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர்.இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சென்று வேடிக்கை பார்த்து சப்தம் எழுப்பியும் கூட அதனை பொருட்டாக நினைக்காமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த வீட்டின் சுவர் பகுதியிலேயே நடனமாடியாது.
இதனை அந்த பகுதி மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்து சென்றனர். கடந்தாண்டும் இதே பகுதியில் சாரை பாம்புகள் நடனமாடியது. இந்த நிலையில் தற்போது பாம்புகள் நடமாடியது அப்பகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
- திடீரென நல்லபாம்பு மற்றும் சாரைப்பாம்பு ஆகிய இரண்டும் கிணற்றுக்குள் தாவி அங்கிருந்தபடியே பின்னிப்பிணைந்து நடனமாடியது.
- சுமார் 3 மணிநேரமாக நடந்த இந்த காட்சியை அப்பகுதி மக்கள் பக்திபரவசத்துடன் கண்டு வழிபட்டனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகில் உள்ள ரெட்டியபட்டியில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள கோவிலுக்கு வெள்ளி மற்றும் செவ்வாய்கிழமைகளில் அதிகளவு பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
அதன்படி வெள்ளிக்கிழமையான நேற்று மாலையில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தபோது கோவிலுக்கு சொந்தமான கிணற்றை 4 பாம்புகள் சுற்றியபடி வந்தது.
அதில் திடீரென நல்லபாம்பு மற்றும் சாரைப்பாம்பு ஆகிய இரண்டும் கிணற்றுக்குள் தாவி அங்கிருந்தபடியே பின்னிப்பிணைந்து நடனமாடியது.
சுமார் 3 மணிநேரமாக நடந்த இந்த காட்சியை அப்பகுதி மக்கள் பக்திபரவசத்துடன் கண்டு வழிபட்டனர். கிணற்று மேட்டில் தேங்காய் உடைத்தும், சூடம் ஏற்றியும் வழிபாடு செய்தனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற நிகழ்வு தங்கள் ஊரில் நடந்ததாகவும், அதன்பிறகு தற்போது அந்த காட்சியை காணமுடிந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் ரெட்டியபட்டி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குப்பத்துப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவிகள் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து படித்து கொண்டிருந்தனர். அந்த மரத்தில் மூன்று பச்சை பாம்புகள் பின்னி விளையாடி கொண்டிருந்தன.
இந்நிலையில் மரத்தடியில் இருந்த 5-ம் வகுப்பு மாணவிகள் குப்பத்துபட்டியை சேர்ந்த மணிமேகலை (வயது10). கங்காதேவி (10), பாண்டிமீனாள் (10) மகேஸ்வரி (10) சிவஜோதி (10) ஆகிய மாணவிகள் மீது அந்த பாம்புகளில் இருந்து கசிந்த திரவம் விழுந்தது. திரவம் பட்ட இடத்தில் அரிப்பு ஏற்பட்டதால் மாணவிகள் பீதியடைந்து மயக்கம் வருவதாக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மரத்தின் மீது பார்த்தபோது மூன்று பாம்புகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் பாம்புகளை கொன்று எடுத்துக்கொண்டு மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பாம்புகளை டாக்டர்களிடம் காண்பித்தனர்.
மாணவிகளுக்கு உடனடி சிகிச்சை அளித்ததுடன், ரத்த பரிசோதனைகளும் செய்யப்பட்டன. மேலும் மாணவிகளை பரிசோதித்த டாக்டர்கள் மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லையென தெரிவித்தனர். மாணவிகள் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்