search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Solid waste works"

    • மதுரை மாநகரில் திடக்கழிவு பணிகளுக்கு புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.
    • இதனை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி அனுப்பானடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி அனுப்பானடி உயர்நிலைப்பள்ளி கட்டிடம் திறப்புவிழா, திடக்கழிவு மேலாண்மை பணிக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள புதிய இலகுரக வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் மற்றும் வண்டியூர் கண்மாய் அழகுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்கான தொடக்க விழா அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன், துணைமேயர் நாகராஜன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    அனுப்பானடியில் 100 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வரும் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனை சார்பில் ரூ.47.5 லட்சமும், அரசின் நிதியில் இருந்து ரூ.47.5 லட்சமும் சேர்த்து ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் 7 வகுப்பறைகள், 1 நவீன ஸ்மார்ட் வகுப்பறை, தலைமை ஆசிரியர் அறை, ஆசிரியர்கள் அறை ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இவற்றை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

    100-வது வார்டு பகுதி களில் சேரும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வெள்ளைக்கல் குப்பை சேகரிக்கும் மையத்திற்கு தினந்தோறும் சுமார் 800 டன் குப்பைகள் கொண்டு சென்று தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சியின் நுண்ணுயிர் செயலாக்கம் உரக்கூடங்களில் மக்கும் குப்பைகள் மட்டும் தரம் பிரித்து வாங்கப்பட்டு அந்தந்த உரக்கூடங்களில் உரமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் தூய்மை பணி களை விரைந்து மேற்கொள்ள 15-வது மத்திய நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.2.87 கோடி மதிப்பீட்டில் 40 இலகு ரக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை அமைச்சர்கள் கொடியசைத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

    மதுரை மாநகராட்சி பகுதியான வண்டியூர், கோமதிபுரம், மேலமடை, மானகிரி, தாசில்தார் நகர், அண்ணா நகர் கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரினை அதிக ரிக்கும் பொருட்டு வண்டியூர் கண்மாய் தூார்வாரப்பட்டு தண்ணீர் நிரந்தரமாக சேமித்து வைக்கப் பட்டுள்ள தால் சுற்றுப்பகுதிகள் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளது.

    இந்த நிலையில் வண்டி யூர் கண்மாயை அழகுப்படுத்தும் பணிக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜையில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிகளில் மண்டல தலைவர்கள் முகேஷ்சர்மா, வாசுகி சசிகுமார், கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன், தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் வினோத்குமார், உதவி ஆணையாளர்கள் திருமலை, காளிமுத்தன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கியசேவியர், உதவிப்பொறியாளர் ரிச்சார்டு, உதவி பொறி யாளர் அமர்தீப், தி.மு.க. பகுதி செயலாளர் சசிகுமார், கவுன்சிலர்கள் பிரேமா, முத்துமாரி ஜெயக்குமார், கவிதா செல்வம், ம.தி.மு.க. மாநகர் செயலாளர் முனிய சாமி, 88-வது வட்ட கழக செயலாளர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×