என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "South Asia"
- உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
- சிறந்த ஊழியர்கள் சேவை விருதுக்கு விஸ்தாரா ஏர்லைன் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் தொற்று காலத்துக்குப் பிறகு வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் தற்போது சகஜ நிலைமைக்கு மீண்டு வந்துள்ளன.
இந்நிலையில், உலகின் சிறந்த விமான சேவை நிறுவனங்களுக்கு ஸ்கைட்ராக்ஸ் வேர்ல்ட் ஏர்லைன் விருதுகள் 2024 அறிவிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் வாடிக்கையாளர் கருத்துக்கணிப்பின் மூலம் வேர்ல்ட் ஏர்லைன் விருதுகள் தீர்மானிக்கப்பட்டன.
இந்தப் பட்டியலில் உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக கத்தார் ஏர்வேஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் எமிரேட்ஸ் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த டாடா நிறுவனத்தின் விமான சேவையான விஸ்தாரா பட்டியலில் 16-வது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும், சிறந்த ஊழியர்கள் சேவை விருதுக்கும் விஸ்தாரா ஏர்லைன் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவின் சிறந்த விமான சேவை நிறுவனமாகவும் விஸ்தார ஏர்லைன்ஸ் நிறுவனம் இடம்பிடித்துள்ளது.
நாட்டின் வான்பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்பை இந்தியா வாங்குகிறது. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கும் பாகிஸ்தான் தற்போது வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறது. ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு, தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் என்றும், மீண்டும் ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 1998-ல் இரு நாடுகளும் அணுகுண்டு சோதனை நடத்தியதை தொடர்ந்து, இந்த பிராந்தியத்தில் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்ற பரிந்துரையை பாகிஸ்தான் வைத்ததுடன், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பை வாங்கும் இந்தியாவின் முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இந்த பரிந்துரை நிராகரிக்கப்பட்டதால் எந்தவகையான ஏவுகணைகளையும் செயலிழக்க செய்யும் வலிமையை அடைவதற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது’ என்று கூறப்பட்டு உள்ளது.
மேலும், இந்த பிராந்தியத்தை சீர்குலைக்கும் எந்தவகையான ஆயுதங்களையும் எதிர்க்கும் வலிமை தங்களுக்கு இருப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து நம்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. #S400missiles
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்