என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Special lok adalat"
- 2023-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்கு களுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
- மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் அன்று காலை 10 மணிக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவ ரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சீனிவாசன் முன்னிலையில் நடைபெற உள்ளது
நெல்லை:
2023-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்கு களுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடத்த சென்னை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தர விட்டுள்ளது. அதன்படி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நெல்லை மாவட்டத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வால் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
மேற்கூறிய நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 200 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
மேலும் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் அன்று காலை 10 மணிக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவ ரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சீனிவாசன் முன்னிலையில் நடைபெற உள்ளது. மேலும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் (பொறுப்பு) கேட்டுக் கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் புதிய கோர்ட்டு வளாக கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. அதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கலந்து கொண்டு கோர்ட்டு கட்டிட வளாகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் நடந்த சிறப்பு மக்கள் கோர்ட்டு (‘ஸ்பெசல் லோக் அதாலத்’) விசாரணையில் பங்கேற்றார். அப்போது அவரிடம் ஒரு தம்பதியின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது.
அவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவர்களிடம் பேசிய பிறகு விவாகரத்துக்கு விண்ணப்பித்த கணவன்- மனைவியை அழைத்து பேசினார். அவர்களின் மனதை மாற்றி இருவரையும் மீண்டும் ஒன்று சேர்த்து வைத்தார்.
இந்த தம்பதிக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி 4 குழந்தைகளை பெற்றனர். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு 2015-ம் ஆண்டு குடும்ப நலகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இவர்களின் வழக்கு லோக் அதாலத் எனப்படும் மக்கள் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நடந்த சிறப்பு மக்கள் கோர்ட்டில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தம்பதியையும், அவர்களது குழந்தைகளையும் தனித்தனியே அழைத்து பேசிய நீதிபதி தீபக் மிஸ்ரா குடும்பத்தின் மதிப்பு என்ன என்பது குறித்து அவர்களிடம் விளக்கினார். கணவன்-மனைவி விவாகரத்து செய்வதால் குழந்தைகளின் எதிர்காலம் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்பதை எடுத்துரைத்தார்.
குழந்தைகள் நலனுக்காக அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதை ஏற்றுக் கொண்ட தம்பதி தங்களது விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்று குழந்தைகளுடன் மீண்டும் இணைந்து வாழ்வதாக உறுதி அளித்தனர். பின்னர் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
இதுபோன்று 5 வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெற்றிகரமாக முடித்து வைத்தார். விவகாரத்து குறித்து அவர் கூறும் போது, ‘‘இத்தகைய வழக்குகள் குடும்பத்தை பலவீனப்படுத்துகின்றன. இதன் தாக்கம் சமுதாயத்திலும் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
பிரிந்து வாழும் தம்பதிகள் குழந்தைகளின் எதிர்கால வாழ்வை கருத்தில் கொண்டு மீண்டும் இணைய வேண்டும்’ என கருத்து தெரிவித்தார். #DipakMisra
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்